வியாழன், 31 டிசம்பர், 2009

பிரபாகரன் பயங்கரவாதி என்ற கூட்டத்தின் படத்தை பார்ப்பவன் ஈனத்தமிழன்

Posted on 8:28 AM by எல்லாளன்

"பிரபாகரன் பயங்கரவாதி! ராஐபக்ச மீட்பர்!" - இசையமைப்பாளர் விஜய் அன்ரனி.

கனடா பல்கலைக்கழகப் பட்டதாரிகள்அமைப்பின் அறிக்கை

அன்பான உறவுகளே!

உங்களோடு சில நிமிடங்களை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றோம். நாம் கடந்த காலங்களில் புறக்கணிப்பு போராட்டங்களை பெருமளவில் நடத்துவதற்குத் தயக்கம் காட்டி வந்திருக்கின்றோம். எம் தயக்கத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஸ்ரீலங்கா அரசு தட்டிக் கேட்பாரற்ற நிலையில் எம் மக்களைக் கொன்றொழித்தது.

வதை முகாம்களில், சிறைகளில் அடைத்துச் சித்திரவதை செய்கின்றது. நாம் எதையும் ஆழமாக சிந்தித்துச் செயற்படுவதில்லை. பொதுநோக்கில் ஆழமான செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை. உணர்ச்சி வேகத்தால் அவ்வப்போது கூடிக் கலைந்திருக்கின்றோம். நாம் புறக்கணிப்பு போராட்டங்கள் குறித்து நிறையப் பேசுவோம். களங்களையும் குறிப்போம். ஆனால் களமிறங்கும்போது பின்வாங்கிவிடுகின்றோம். ஈடுபாடின்மை பயம் இவை போன்றவையே நாம் ஒப்புக்கொள்ள மறுக்கின்ற காரணங்கள். புறக்கணிப்புப் போராட்டம் என்பது உலகில் எல்லா நாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்ட சனநாயக உரிமை. அந்த சனநாயக உரிமையினைக் கையிலெடுத்து எம் உறவுகளைக் காப்பதற்காக போராடியிருக்க வேண்டிய நாம் காலங்கடந்தும் அதை உணராமல் இருப்பதுதான் வேதனைக்குரியது.

ஆரம்ப நாட்கள் முதல் நாம் ஸ்ரீலங்கா பொருட்களையும், சன் ரீவி (Sun TV) போன்ற தொலைக்காட்சிகளையும் பெரும் முனைப்போடு புறக்கணித்திருந்தால் சிலவேளை எம் உறவுகளை நாம் காப்பாற்றியிருக்கக் கூடும். இன்று உறவுகளை இழந்து, அழது புலம்புகின்றோம். முள்ளியவாய்க்கால் கொலைக் களத்தில் எஞ்சிய எமது மக்கள் சிறைப்பிடிக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்து விட்டன. இன்றும் தமிழர் வணிக நிறுவனங்களில் குவிந்து கிடக்கிக்கின்ற ஸ்ரீலங்கா உற்பத்திப் பொருட்கள் எதைப் புலப்படுத்துகின்றன?அந்தச் சுவைகளைத் துறக்க நாதியற்று, அவற்றை நுகர்ந்துகொண்டிருக்கின்றோமே நாம் இன்னும் புறக்கணிப்பின் உண்மையான போராட்டக்களத்துக்குள் இறங்கியிருக்கின்றோமா? இல்லை என்பதுதான் வெளிப்படையான விடை.

இதன் ஊடாக, தொடர்ச்சியான புறக்கணிப்பு போராட்டத்தால் விளைந்திருக்கக்கூடிய நன்மைகளை நாம் அறிய முயற்சிக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. சனநாயக வழிப்பட்டதும் பெரு வெற்றியைத் தரக்கூயடியதுமான புறக்கணிப்பு போராட்டத்தின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்வது, எதிர்காலத்தில் நாம் அதனைக் கையில் எடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும்.IRISH நாட்டில் ஏற்பட்ட நிலச் சண்டையில் (Land War) Captain Charles Boycott அவர்களினால் பறிக்கப்ட்ட நிலப்பிரதேசங்களும், அவருடைய தேவையற்ற பண அறவிடல்களுக்கும் எதிராக கிழந்தெழுந்த விவசாயிகளின் போராட்டமே பின்னால்Boycott என்ற போராட்ட வடிவம் உருவாகுதற்கு காரணமாக இருந்திருக்கின்றது.

ஒரு மனிதன் சுவாசிப்பதற்கும், இதர மக்களுக்கு நடக்கின்ற அநியாயங்களைத் தட்டிக்கேட்பதற்கும் புறக்கணிப்பு போராட்டம் ஒரு கருவியாக பல நாட்டு மக்களால் இற்றைவரைக்கும் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. சனநாயகத்தின் அடிப்படை உரிமையின் ஒரு அங்கமாகவே இந்தப்போராட்டம் இருப்பதை உணர வேண்டியது தமிழர்களின் முக்கிய கடமையாகும். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் சூழல், மற்றும் விலங்குகளுக்கும் தீங்கு ஏற்படுகின்ற போது, அந்த தீங்கைச் செய்கின்ற நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசாங்கங்களுக்கு எதிராக தொடர் போராட்டமாக இருக்கக்கூடியது இந்தப் போராட்டமே! தீங்கு செய்பவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும், அவர்களைச் சட்டத்தின் முன்னால் நிறுத்தவும், அவர்களின் மமதைப்போக்கை நிறுத்தவும் இந்தப் போராட்டம் மிகப்பெரும் கருவியாய் இருந்திக்கின்றது.

வெற்றியீட்டிய புறக்கணிப்புப் போராட்டங்கள் சில:

• 1830 இல் நடந்தேறிய நிக்கரோ மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத் தீர்மானம் அடிமைகளை வைத்து உருவாக்கப்படும் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டது. அத்துடன் அடிமைத்தனத்தை ஊக்கப்படுத்துவதையும் தடைசெய்யுமாறு அத் தீர்மானம் கேட்டுக்கொண்டது.

அமெரிக்காவில் நிற வேறுபாடு உச்சம் தொட்ட காலத்தில் வெள்ளை இனத்தவர்களால் நடத்தப்படும் பேருந்துகளில் கறுத்த இனத்தவர்கள் பயணிப்பதை புறக்கணிக்கும்மாறு வேண்டிக்கொள்ளப்பட்டார்கள். பேருந்துகளில் கறுப்பர்களுக்கான தனியான இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

அமெரிக்காவின் விடுதலைக் காலத்தில்; பிரித்தானியா அரசாங்கத்துக்கெதிராக போராட்டம் நடந்துகொண்டிருக்கும் போது பிரித்தானியாவில் இருந்து இறுக்குமதியாகும் அனைத்தையும் புறக்கணிக்குமாறு அமெரிக்க விடுதலைப் போராளிகள் அமெரிக்க மக்களுக்கு மிகவும் கடுமையான கட்டளையொன்றை பிறப்பித்திருந்தார்கள்.

இந்திய சுதந்திரக்காலத்தில் பிரித்தானியாவுக்கு எதிராக காந்தியடிகள் தலைமையில் பல புறக்கணிப்புப் போராட்டங்கள் நடந்தேறியது.

யூதர்களின் வன்முறை அழிவுக்கு அவர்களே காரணம் என கருத்துப்பட தெரிவித்த Henry Ford அவர்களுக்கெதிராக, அவருடைய நிறுவனம் தயாரித்த கார்களை வாங்கவேண்டாம் என யூதர்கள் புறக்கணிப்புப் போராட்டத்தில் இறங்கியிருந்தார்கள்

1980 இல் ரஸ்ஸியாவில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியினை புறக்கணிக்க வேண்டி அமெரிக்க அரசாங்கமே முன் நின்று புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தியது.

இத்தகையபோராட்டங்களூடாகவே போராடிய இனங்கள் விடுதலை பெற்றிருக்கின்றன அல்லது விடுதலைக்கு வலுவேற்றியிருக்கின்றன. புறக்கணிப்பின் தாக்கமே எம் மக்களின் சுதந்திரத்தை வெற்றியாக்கித் தரும். புறக்கணிப்புப் போராட்டத்திலே நாம் தேடும் பல விடைகள் மறைந்திருக்கின்றன. இந்தவகைப் போராட்டமே தமிழர்களில் விடிவை எடுத்துவரும் என்பதற்கு மேலே சொல்லப்பட்ட உதாரணங்கள் போதுமானவை.. இலங்கையின் பொருளாதாரத்தையும், இன்னும் புதியதாக உருவாகிக்கொண்டிருக்கும் தமிழ் விரோத சக்திகளையும் கட்டுப்பாட்டுக்குள்ளே கொண்டு வருவதற்கு தமிழர்கள் நாம் முன்வந்தால் மட்டுமே முடியும். அப்போதுதான் தேடிக்கொண்டிருக்கின்ற விடிவை நம் மக்கள் அடையலாம்.

நாளை நாங்கள் இலங்கையில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்கும் போது, செத்து மடிந்த எங்கள்; மொழி பேசுகின்ற மக்களையும், கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டு காடுகளில் வீசப்பட்ட எங்கள் உறவுகளையும், கொடுரமாகப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட எங்கள் பெண்மணிகளையும், பிஞ்சுகளிலே உயிரைக் கொடுத்த எம் பச்சிளம் பாலகர்களையும், காணாமல் போய்க் கொண்டிருப்போரையும் மனதில் கொண்டு வாருங்கள். உங்களால் முடியும்!

நீங்களும் மனிதர்கள் தான். நீங்கள் வாங்கப்போகின்ற ஒவ்வொரு பொருளிலும் எம் உறவுகளின் சோகமும் இரத்தக் கறையும் கலந்திருப்பதை உணருங்கள்.

புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது எந்தவொரு பங்களிப்பையும் விட மிக இலகுவானதாக செய்யக்கூடியது. இதைக் கூட நாம் செய்யத் தவறினால், தமிழர்களாக அல்ல, மனிதர்களாக பிறந்ததில் பயன் உண்டா என்பதை உங்கள் மனச்சாட்சியிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள்.


வேட்டைக்காரன் படப் புறக்கணிப்பு!!!

கொடுமைகளை செய்கின்ற இலங்கை இராணுவத்துக்கு இசை அமைத்தவர் இப்போது வரப்போகின்ற வேட்டைக்காரன் படத்துக்கும் இசை உதவி செய்திருக்கிறார். கொலை செய்கின்ற அரசாங்கத்தை ஊக்கப்படுத்தி, பல கொலைகளை செய்ய உதவிய இந்திய காங்கிரசு கட்சியில் உறுப்பினராகிய திரு.விஐய் அவர்கள் நடித்த படமாகிய வேட்டைக்காரனையும் நாம் புறக்கணிப்பதிலும் ஓரு ஆணித்திரமான செய்தியினை இந்தியாவில் இருப்போருக்கு நாம் அனுப்பலாம்.

நீங்கள் பணம் கொடுத்துப் பார்க்கப்போகின்ற படத்துக்குப் பின்னால் ஒரு இரத்தக் கதையொழிந்திருப்பதை உணருங்கள்.

பொழுதுபோக்குக்காக மற்றைய படங்களை பாருங்கள். ஆங்கிலப்படங்களை ஊக்கப்படுத்துங்கள். குற்றம் செய்தவர்களை இன்னும் பணம் கொடுத்து ஊக்கப்படுத்தாதீர்கள். மக்களுக்காக கண்ணீர் சிந்தும் மற்றய தமிழர்கள் நடித்த படங்களை பாருங்கள். எமக்கான ஆதரவுக் குரல்களைத் தரும் கலைஞர்களை ஆதரியுங்கள். பாசத்துக்குரிய தமிழர்களே!!!

எல்லாவகையான புறக்கணிப்பு போராட்டங்களையும் வெற்றியடைய வைப்பீர்களா? அல்லது மீண்டும் தலையைச் சுற்றி வந்து மூக்கைத் தொட முயற்சிப்பீர்களா? எம் விடிவுக்கான வாசலின் திறவுகோல் உங்கள் ஒவ்வொருவரிடமும் தான் உள்ளது!!!

தமிழ் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அமைப்பு - கனடா


ஒரு வேளை ஆணையர் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் ஈடுபாடு உள்ளவரோ! தமிழ் இனம் சிங்கள இனத்தவரால் கொடூரமாகத் தாக்கப்படும் போது எதிர்க்கும் தமிழின மக்களை மட்டும் அடிமையாக இருந்து சாகுமாறு இந்திய அரசு வலியுறுத்துகிறதே ஏன்? அயலகத்துறை அமைச்சருக்கும் செயலர் முதலான பணியாளர்களுக்கும் இவர் பாடம் நடத்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
எந்தச் செய்தியாக இருந்தாலும் படிப்பார்: கருணாநிதி குறித்து "நல்லி' குப்புசாமி



சென்னை, டிச.30: ""பத்திரிகைகளில் வரும் எந்தவொரு செய்தியாக இருந்தாலும் அதைப் படிக்க முதல்வர் தவறுவதில்லை'' என முதல்வர் கருணாநிதியை தொழிலதிபர் "நல்லி' குப்புசாமி புகழ்ந்தார்.சென்னை புத்தகக் காட்சி திறப்பு விழா நிகழ்ச்சிக்கு தலைமையேற்று புதன்கிழமை அவர் பேசியது:முதல்வர் கருணாநிதி குறித்து எனக்குத் தெரிந்த பல்வேறு சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. "தினமணி'யில் ஞாயிறுதோறும் வரும் தமிழ்மணியின் "கலாரசிகன்' பகுதியில் "திசையெட்டும்' புத்தகம் குறித்து அதன் ஆசிரியர் கே.வைத்தியநாதன் குறிப்பிட்டிருந்தார். இதைப் படித்த முதல்வர் கருணாநிதி, குறிஞ்சிப்பாடியில் உள்ள "திசையெட்டும்' ஆசிரியரை தொடர்புகொள்ள வைத்து அதன் பழைய தொகுதிகளை கேட்டுப் பெற்றார். பத்திரிகைகளில் வரும் எந்தச் செய்தியாக இருந்தாலும் அதைப் பார்க்க முதல்வர் கருணாநிதி தவறுவதில்லை'' என்றார்.கலைமாமணி விருது...நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் சேது சொக்கலிங்கம், ""ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. பதிப்பாளர்கள் இரண்டு பேருக்கு ஒவ்வொரு ஆண்டும் கலைமாமணி விருது வழங்க வேண்டும். திரைப்படத் தொழிலாளர்களுக்கு தனி நகரம் உருவாக்கியது போல, பதிப்பாளர்களுக்கு என தனியாக "பதிப்பு நகரம்' ஏற்படுத்த வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.
கருத்துக்கள்

அமைச்சர்கள் எழுந்திருக்கும் முன்பே செய்திகளைப் படித்து விட்டு அமைச்சர்களிடம் விளக்கம் கேட்டுக் கலக்கும பண்பும் கலைஞரிடம் உண்டு. செய்திகளின் அடிப்படையிலேயே உடனடி நடவடிக்கை எடுக்கும் ஆட்சித் திறமையும் உண்டு. இத்தகைய அரும் பண்பு இருப்பினும் தமிழின எதிர்ப்புச் செயல்பாடுகள், தமிழ் ஈழத்தில் நடைபெற்ற நடைபெறும் படுகொலைகள் குறித்த செயதிகளையும் படித்து விட்டு வாளாவிருந்து விட்டாரே! அமைதி காக்கிறாரே! காங்கிரசிற்கு அடிமையாகவே இருக்கிறாரே! அடி கொடுக்க வேண்டிய இடத்தில் அறிக்கையால் சாமரம் வீசுகிறாரே! தான் சொல்லிய இன நலக் கருத்துகளைத் தானே மீறுகிறாரே! என்னும் வருத்தம் மிகுதியாய் ஏற்படுகிறது. அரியணையில் இல்லாமல் இருந்திருந்தால் ஈழ விடுதலையை உருவாக்கியிருப்பாரே! பாழும் ஆட்சியால் ஈழத தமிழர் வாழும் நிலையைத்தொலைத்து விட்டாரே! என்னும் வேதனை உண்டாகிறது. இனியாவது கலைஞர் தமிழினத்தலைவராக மாற வேண்டும்! தமிழ் நலத் தலைவராகத் திகழ ‌வ‌ேண்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/31/2009 3:28:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தமிழகம்



கருத்துக்கள்

செய்தி இடம் பெறவில்லை. கருத்துகள் மட்டும்தான் காட்சியளிக்கின்றன.காந்தியடிகள் காலத்தில் இருந்தே நிலவும் உட்கட்சி மோதல்களையும் உட்பகைக் குழுக்களையும் நினைத்து மக்களாட்சி / சனநாயகம் இருப்பதற்குக் காரணம் காங்கிரசு எனக் கருதி விட்டார் போலும். திரு சிகாமணி முதலான பலர் தெரிவித்துள்ளமை போல் நாட்டின் அனைத்துச் சீர்கேடுகளுக்கும் ஊழல்களுக்கும் இனப் படுகொலைகளுக்கும் நாட்டுப் பகுதிகள் இழப்பிற்கும் காங்கிரசுதான் காரணம் என்பதைச் சுதர்சனமும் அறிவார். (சுதர்) சனமாகிய தான் நாயகமாக (தலைமையாக)ச் செயல்படுவதால் சனநாயகம் தழைத்திருப்பதாகக் கருதி விட்டார் போலும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/31/2009 3:02:00 AM

சபாஷ்! தங்கபாலுவுக்கு சரியான போட்டி!

By N.S.Sankaran
12/30/2009 10:36:00 PM

This guy forgot about the killing of democracy, and Indira put the country under emergency, and arrested all the leaders of the opposition and put them in jail without enquiry. This guy deserves a lesson. Please send a copy of this comment, and other comments to this guy. Can he win a single MLA seat independently in Tamilnadu? The Congress party was buried by Kamaraj, and the supporters like him in Tamilnadu. He is a shameless man in making statements like this.

By justice
12/30/2009 10:26:00 PM

Hey Sucha: Best joke of the year. Is Congress still alive in T Nadu?

By mohan
12/30/2009 2:15:00 PM

Sutharsam have points. Government schools have opened in every villages in tamilnadu on congress rule. transport system is enabled for all the villages in TN on congress rule. All the dams are constructed in Congress rule in tamilnadu. Tamil has ruled in all the schools and government offices in congress rule. leaders lead a simple life like the common man in congress rule in tamilnadu. So he is correct. Some form of congress is ruled in india around 50 years. whatever development we are seeing today at India have majarity contributions from congress governments.

By B Sivanesan
12/30/2009 12:22:00 PM

after getting freedom,still 70crore poor people under poverty line because of congress.

By bparani
12/30/2009 8:22:00 AM

இந்தியாவைக் கெடுத்ததே காங்கிரஸ்தான். உங்களுக்கு ஜனநாயகத்தைப் பற்றிப்பேச எந்த அருகதையும் இல்லை.

By R.N.Sigamany
12/30/2009 6:46:00 AM

காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.சுதர்சனம் you an stupid fellow because you Indian do not have Indian born leader for India. You depend ond Itally maffias to run Indian.

By Ratha
12/30/2009 6:13:00 AM

India follow democreitcs ? It is joke for 2010 hahahahahahahahahahah, Congress party live on poor Indians who hhave no education. This statement is nonsence. Indian treat poor and low cast as slaves; it is not democritcs, it is Hitler regine kind of runing systern. Sonia Gandi has little knowledge oof Indian culture. Don't blame her because Pranab Mughargee mislead her and Manmohan Sing who is a lover of American.

By Ratha
12/30/2009 6:08:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
அரசுக் கட்டிலில் வீற்றிருக்க ஆசையில்லை: முதல்வர் கருணாநிதி



சென்னை, டிச. 30: "எழுத்துக்கு விருது வழங்கினால், முதல்வர் பதவியை விட 30 ஆயிரம் மடங்கு மகிழ்ச்சி அடைவேன். எனக்கு அரசுக் கட்டிலில் வீற்றிருக்க ஆசையில்லை' என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.33-வது சென்னை புத்தகக் காட்சியை புதன்கிழமை தொடங்கி வைத்தும், "கலைஞர் மு.கருணாநிதி' பொற்கிழி விருதுகளையும் வழங்கி அவர் பேசியதாவது:நான் ஒரு எழுத்தாளன். கடந்த 60 அல்லது 70 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருப்பவன். நாளைக்கும் எழுதப் போகிறவன். தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பேன்.எழுத்தாளன் என்பதை ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பெருமையாகக் கருதுபவன். எனக்கு அலுத்துப் போய் விட்டது. செம்மொழி மாநாடு முடிந்த பிறகு வேறொரு திக்கில் மக்களோடு நின்று எனது பயணத்தைத் தொடர்வேன். அரசில் அல்ல; அரசாங்கத்தில் அல்ல.இங்கே என் முன் அமர்ந்திருக்கக் கூடிய கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோரின் அருகில் சென்று உட்காரவே எனக்கு ஆசை. அரசுக் கட்டிலில் வீற்றிருக்க வேண்டும் என்ற ஆசை அல்ல.நான் (கருணாநிதி) அளித்த ரூ.1 கோடியில் "கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி' என்ற பெயரில் ஆண்டுதோறும் எழுத்தாளர்கள், படைப்பாளிகளுக்கு விருது வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படுவது, வழங்கியது தவறல்ல. ஆனால், விருதினைப் பெற்றவர்கள் எப்படி தவறு இழைக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் ஒரு நூலைத் தருவது வழக்கம். அதன்படி, ஒரு சந்திப்பின் போது "சென்னை வரலாறு' என்ற நூலைத் தந்தார்.அதில், 1969-ல் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த எனது பெயரையும், அதற்கு முன் முதல்வர் பொறுப்பு வகித்த அண்ணாவின் பெயரையும் குறிப்பிடவில்லை.ஆனால், 1977-ல் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தார் என்பதற்கான குறிப்பு உள்ளது."மதராஸ்' என்பதை "சென்னை' என பெயர் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தேன். அந்தச் செய்தியும் அந்தப் புத்தகத்தில் இல்லை. சட்டப் படிப்புக்கென தனியாக பல்கலைக்கழகம் 1997-ல் தொடங்கப்பட்டது. இது, யாரால் தொடங்கப்பட்டது எனக் குறிப்பிடப்படவில்லை. 1997-ல் திமுக ஆட்சியில் கோயம்பேடு சந்தை திறக்கப்பட்டது. சென்னை வரலாறு புத்தகத்தில் முக்கியமானதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதைத் திறந்து வைத்தது யார் என குறிப்பிடவில்லை. அப்படி என்ன நான் தவறு இழைத்து விட்டேன்? தமிழனாக, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவன் என்பதை விட வேறு என்ன தாழ்வு எனக்கு?அந்த நூலுக்கு கடந்த ஆண்டோ அல்லது அதற்கு முந்தைய ஆண்டோ புத்தகக் காட்சியில் விருது வழங்கப்பட்டு இருக்கிறது.விருது வழங்கும் போது: கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழியை 3 அல்லது 4 பேர் குழுவாக வழங்குகின்றனர். அப்படி வழங்கும் போது, புத்தகம் விருதுக்கு உரியதுதானா என்பதையும், அதை எழுதிய ஆசிரியரையும் எண்ணிப் பார்க்க வேண்டும். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரை மிரள வைக்கவோ, சோகத்தில் ஆழ்த்தவோ இதைச் சொல்லவில்லை. புத்தகங்களுக்கு விருதுகளை வழங்கும்போது உன்னிப்பாக, கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்றார் முதல்வர் கருணாநிதி.
கருத்துக்கள்

கலைஞர் அவர்களின் சலியா எழுத்துப் பணி தொடரட்டும். ஆனால்,ஆட்சிக் கட்டிலில் அமர இயலா அளவிற்குக் குடுமபததினர் முள் படுக்கையை விரிக்கின்றார்களோ எனக் கவலைப்பட வேண்டியுள்ளது. ஈழத் தமிழர்களுக்குக் கழுவாய் தேடி அவர்கள் விடுதலை பெற உழைப்பதற்கும் தமிழ்ஈழ அரசைக் காண்பதற்கும் நெடுநாள் வாழ வேண்டும். மேலும், வரலாற்று மறைப்புகளுக்குக் காரணம் பிற்பட்ட மன்பதையில் பிறந்ததன்று. எல்லா அரசாங்கமும் கட்சி அரசுகளாக மாறி எல்லாப் படைப்பாளர்களும் கட்சிசார் படைப்பாளர்களாக மாறியதுதான். எனவே, அண்ணா பற்றிய படைப்பாக இருந்தால் திமுக ஆட்சியில் அதிமுக, மதிமுக தலைவர்களைப் பற்றிய செய்திகளோ அதிமுக ஆட்சியில் திமுக தலைவர்களைப் பற்றிய செய்திகளோ இடம் பெறுவதில்லை. கட்சித்தலைமையைக் குளிரச் செய்ய வேண்டும் என்னும் கொத்தடிமைப் போக்கு நிலவுவதாலும் இப் போக்கு நிலைக்கவே கட்சித் தலைமைகள் செயல்படுவதாலும் இத்தகைய வரலாற்று மறைப்புகளும் திரிபுகளும் இடம்பெறத்தான் செய்யும். நடுநிலை,சகிப்புத்தன்மை, கண்ணோட்டம், சால்பு முதலிய பண்புகள் போற்றப்பட்டாலே இந்நிலை மாறும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/31/2009 2:49:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

புதன், 30 டிசம்பர், 2009

எட்டப்பர்களின் ஆட்டத்தை பார்வையிட: கேலிக் காணொளி இணைப்பு

23 December, 2009 by admin

மகிந்த, சோனியா, கருணாநிதி, கருணா(ய்), பிள்ளையான், டக்ளஸ் கேலிக் காணொளி, அருமையாக இருந்ததால் அதிர்வின் வாசகர்களுக்கு பிரசுரித்திருக்கிறோம். நன்றி புலிகள் நெட்



Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 18638


பான் கீ மூன் மகள் இந்தியரை திருமணம் முடித்திருக்கிறார்: மேலும் அதிர்சி

28 December, 2009 by admin

8 வது ஹிந்தி மாநாடு நியூயோர் நகரில் கடந்த 2007 ம் ஆண்டு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாடிய பான் கீ மூன் அவர்கள் தனது மகள் ஒரு இந்தியரைத் திருமணம் முடித்து வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் நின்றுவிடாமல் தாம் புது டெல்லியில் தூதுவராகப் பணியாற்றியபோது விஜய் நம்பியார் தனக்கு மேலதிகாரியாகக் கடைமையாற்றியதாகவும், விஜய் நம்பியாரை தனக்கு 1972 ஆண்டு முதல் தெரியும் எனவும் வெளிப்படையாகக் கூறியுள்ளார். இந்த மாநாடு சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நடந்திருந்தாலும் பான் கீ மூன் உரையாற்றியதில் பல திடுக்கிடும் தகவல்கள் மறைந்திருப்பது தமிழர்களுக்குத் தெரியவில்லை.



இவர்கள் கென்யாவில் வாழும் பல இலங்கைத் தமிழர்களுடன் நெருங்கிய உறவைப் பேணிவருவதாகவும் அச்செய்திகள் குறிப்பிடுகின்றன. கொரிய தூதரகத்தில் முதல் முதலாக ஒரு ராஜதந்திரியாக பான் கீ மூன் பதவி ஏற்றபோது, அவரது ஆசானாக விஜய் நம்பியார் விளங்கியிருக்கிறார். ஐ.நாவில் ஒரு பொறுப்பதிகாரியாக விஜய் நம்பியார் கடமையாற்றி இருந்ததும் அவருக்கு கீழ் பான் கீ மூன் கடமையாற்றியதும் நடை பெற்ற மாநாட்டிலிருந்து வெளியாகியுள்ள செய்திகள்.

இறுதிச் சமரில் விடுதலைப் புலிகளின் சில தலைவர்கள் சரணடைய முயற்சிக்கும் போது அதன் ஏற்பாட்டாளர்களாக திகழ்ந்த முக்கிய நபர் விஜய் நம்பியார் என்பது யாவரும் அறிந்ததே. சரணடைய வரும் புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்படுவார்கள் என்று தெரிந்துமே நம்பியார், அவர்களை வெள்ளைக் கொடியுடன் வருமாறு கூறியதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன. சில தகவல்களின் படி தாமே யுத்த களத்திற்குச் சென்று சரணடைவதைப் பார்வையிட இருப்பதாகவும் இவர் சிலரிடம் கூறியிருக்கிறார். இவர் தொடர்பாக பல முறைப்பாடுகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வரும் வேளையில், விஜய் நம்பியாரும், பான் கீ மூனும் பாலிய சிநேகிதர்கள் என்ற விடயம் தற்போது அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது.

இந்த நிலை தெரியாமல் பல தமிழ் அமைப்புக்கள் விஜய் நம்பியார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பான் கீ மூனை கோரிவந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏன் இதுவரை எந்த விசாரணையும் விஜய் நம்பியாருக்கு எதிராக நடத்தப்படவில்லை என்பதற்கு தற்போது தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளது. பான் கீ மூனும் ஒரு இந்தியாவின் செல்லப் பிராணியே என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அத்துடன் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் எவ்வளவு இதய சுத்தியுடன் இலங்கைத் தமிழர் பிரச்சனையை அணுகுவார் என்பது தற்போது மிகுந்த சந்தேகத்திற்கு இடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மாநாட்டில் பான் கீ மூன் பல்லிளித்து பேசிய சில ஹிந்தி வார்த்தைகள் கீழே..

ஹிந்தி தோடா தோடா மாலும் ! அப்படி என்றால் எனக்கு ஹிந்தி கொஞ்சம் கொஞ்சம் தெரியும் !

இதை விட நீண்ட வசனத்தையும் இவர் பேசிக்காட்டியிருக்கிறாராம் என்றால் பாருங்களேன் !


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 23781
பாலியல் புகார்​ ​திவா​ரியை களங்​கப்​ப​டுத்த சதி: மத்திய அமைச்சர்



பதேபூர், ​​ டிச.29: ஆந்திர மாநில முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகார் அவரை களங்கப்படுத்துவதற்காக தீட்டப்பட்ட சதி என்று மத்திய அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறினார்.இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தினால் இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து வெளியில் தெரியவரும் என்றார் அவர்.​ ​பதேபூரில் கட்சி விழாவில் ஒன்றில் பங்கேற்க வந்த அவர் இதைத் தெரிவித்தார்.
கருத்துக்கள்

தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலங்களின் ஆளுநர் மாளிகைளிலும் உசாவல் மேற்கொண்டால் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அரசியல்வாதிகளுக்குத் த்ரப்படும் பதவிகளின் மூலம் செய்த ஒழுக்கக் கேடுகள் வெளிவரும். சென்னாரெட்டி மீது புகார் சொன்னததை அரசியலாக்கி ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார்கள். ஆனால், ஆளுநர் மாளிகைகளின் ஊழியர்களும் காவல் பணி பார்க்கின்றவர்களுக்கும் உண்மைகள் தெரியும். எனவே, ஏற்கெனவே ஒரு பெண் தன் தந்தையாக அறிவிக்க வேண்டும் என்று சொன்ன வழக்கை மீள் உசாவல் மேற்கொள்வதுடன் நடு நிலையுடன் இதுவரை ஆளுநர்களாக இருந்தவர்கள் மீதும் இப்போது ஆளுநர்களாக உள்ளவர்கள் மீதும் உசாவல்கள் மேற்கொள்ள வேண்டும்.தோழியர் புடை சூழ இருந்த இருக்கும் ஆளுநர்கள் பற்றிய உசாவல்கள் ஆளுநர் மாளிகைகளில் ஒழுக்கமும் ஒழுங்கும் இருக்கத் துணை புரியும்.இதை விடுத்து திவாரிக்கு உறுதுணையாக இருப்பது நாட்டிற்கே நல்லதல்ல.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/30/2009 5:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தலையங்கம்: ஒளிப் பிறழ்வுகள்



ஒரு பக்கச் சார்புடன் அணுகப்படும் எதுவும் நடுநிலை பிறழ்ந்தே வெளிப்படும் என்பதற்கு இவ்வாசிரிய உரை சான்று. நடுநிலையாளர்போல நடித்து மக்களை ஏய்க்கும் துக்ளக் பாதையில் தினமணியும் செல்ல வேண்டா
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து தாமதம் ஏன்?: கருணாநிதி



சென்னை, ​​ டிச.​ 29: தமிழ்ச் செம்மொழி என்ற அறிவிப்பைச் செய்வதில் மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக தள்ளிப் போட்டது ​ என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்."செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்' என்ற தொடர் கட்டுரையில் "செம்மொழி சிறந்திட;​ தொடர் செயல்பாடுகள்' என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை அவர் எழுதியுள்ளதாவது:தமிழைச் செம்மொழியாக அறிவித்திடத் தேவைப்படும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என திமுக அரசின் சார்பில் தொடர்ந்து மத்திய அரசுக்கு நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டன.2000 டிசம்பர் 18}ம் தேதி அன்று முதல்வர் என்ற முறையில் பிரதமர் வாஜ்பாய்க்கு நான் அனுப்பிய கடிதத்தில்,​​ "தொன்மையும்,​​ வளமும் நிறைந்த தமிழைச் செம்மொழி எனப் பிரகடனம் செய்திட வேண்டுமென்ற தமிழக அரசின் கோரிக்கை மத்திய அரசிடம் நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வருகிறது.​ உண்மையும்,​​ நேர்மையும் வாய்ந்த மாநில அரசின் இந்தக் கோரிக்கையை பரிசீலனை செய்து மத்திய அரசு உரிய ஆணைகளைப் பிறப்பிக்க வேண்டும்' என்று கூறியிருந்தேன்.ஆட்சி அளவில் மட்டுமல்லாது,​​ கட்சி,​​ அரசியல் ரீதியாகவும் தமிழ்ச் செம்மொழிக் கோரிக்கையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசர அவசியம் என்று திமுக முடிவு செய்தது.2001}ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் அறிக்கையில்,​​ முதல்முறையாக "தமிழைச் செம்மொழியாக அறிவித்திட வேண்டுமென்று திமுக வலியுறுத்தும்' என்ற வாக்குறுதியை இடம்பெறச் செய்தது.இதன் தொடர்ச்சியாக,​​ பல்வேறு செயல் திட்டங்களை வகுத்துக் களத்தில் இறங்கியது.பாஜக ஆட்சியில்...​ தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து,​​ 2003}ல் தில்லியில் உண்ணாவிரதம் ​ நடைபெற்றது.இதைத் தொடர்ந்து,​​ அப்போதைய பிரதமர் வாஜ்பாய்,​​ குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆகியோரிடம் தமிழைச் செம்மொழியாக ஏற்றுக் கொள்ளக் கோரும் மனு கொடுக்கப்பட்டது.தமிழைச் செம்மொழியாக அறிவிப்பதில் கருத்து வேறுபாடு இன்றி அனைத்துத் தரப்பினரும் வாஜ்பாய் தலைமையிலான மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.ஆனால்,​​ தமிழைச் செம்மொழியாக அறிவிப்பது தொடர்பாக பரிந்துரை அளிக்குமாறு தனது துறை அதிகாரிகளை மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி கேட்டதாகவும்,​​ அதற்கு அவர்கள் "பயன்பாட்டில் இல்லாத இறந்த மொழியை மட்டுமே செம்மொழியாக அறிவிக்க முடியும் என்று ​ கூறியதாகவும் அதிகாரப்பூர்வமின்றி செய்திகள் வெளிவந்தன.மத்திய ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரும்பங்கு வகித்த வந்த பாஜகவில் முரளி மனோகர் ஜோஷி போன்ற முன்னணித் தலைவர்கள் சிலர்,​​ திராவிட மொழிக் குடும்பத்தின் மீது தீராத வெறுப்பு கொண்டிருந்தனர்.இதன் காரணமாக,​​ தமிழ்ச் செம்மொழியென அறிவிக்கப்பட வேண்டுமெனும் கோரிக்கை தொடர்பாகக் கொண்டிருந்த எதிர்மறையான அணுகுமுறையும்,​​ காட்டிய தாமதமும் தமிழ்ச் செம்மொழி அறிவிப்பைத் தள்ளிப்போடச் செய்தன.​ இதை வரலாறு கருத்தில் எடுத்துக் கொண்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கருத்துக்கள்

..HE..HE..HE LIVING CORPSE IS TELLING LISTEN..HE..HE..HE HIS OWN MADURAI SON CANT SPEAK IN TAMIL IN PARIMENT( IN SRI LANKA AND SINGAPORE PARLIMENTS MPS AND MINISTERS CAN SPEAK IN TAMIL)...HIS FAMILY SUN TV IS PROMOTING TAMINGILAM....HE HE HE ALL THE SHOPS BOARDS AND ROADS SIGNS ARE IN TAMINGLISH.....HE HE HE...EVEN THE SIMPLE RAILWAY SEAT BOOKING FORM IS IN HINDI AND ENGLISH..BETTER SEMMARI STATUS IS GOOD

By KOOPU
12/30/2009 3:05:00 AM

If this info is true, you should have withdrawn your support to the BJP. Why did you stuck with the central ministry.........

By B Sivanesan
12/30/2009 12:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

ஜெயங்கொண்டம் : வன்னியர்கள் வன்னியர்களுக்கே ஒட்டு போட்டால் தமிழகத்தில் 120 சட்டசபை தொகுதிகளில் பாமக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துவிடும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.



தமிழகத்தில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டும், சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி வலியுறுத்தியும் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட வன்னியர் சங்க மாநாடு நேற்று(29ம்தேதி) ஜெயங்கொண்டத்தில் நடந்தது. மாநாட்டிற்கு பாமக மாவட்ட செயலாளர் வைத்தி தலைமை வகித்தார். செந்தில்குமார், ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐகோர்ட் வக்கீல்பாலு, வன்னியர் சங்க தலைவர் குரு மற்றும் பலர் பேசினர். பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது,ஜெயங்கொண்டம் மின் திட்டத்துக்கு 20 ஆண்டுகளுக்கு முன் நிலம் கையகப்படுத்தியும் இதுவரை திட்டம்தொடங்கப்படவில்லை.



கையகப்படுத்திய நிலத்திற்கு ஒரு ஏககருக்கு ரூ.25 ஆயிரம் மட்டும் அரசு விலை வழங்கியது கண்டிக்கதக்கது. இங்கு நிலக்கரி எடுக்க வேண்டும்என்றால் ஒரு ஏக்கருக்கு ரூ.20 லட்சம் கொடுக்க வேண்டும் . இல்லாவிட்�டால் நிலக்கரிஎடுக்க அனுமதிக்க மாட்டோம். அதற்காக எந்தபோராட்டத்தையும் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். தமிழகத்தில் உள்ள 6 கோடிபேரில் 2 கோடி பேர் வன்னியர்கள் உள்ளனர். வன்னியர்கள் வன்னியர்களுக்கே ஒட்டு போட்டால் தமிழகத்தில் 120 சட்டசபை தொகுதிகளில் வெற்றிபெற்ற ஆட்சியை பிடித்துவிடலாம். இதற்கு அனைத்து வன்னியர்களும் ஒன்று சேர வேண்டும். ஐகோர்ட் நீதிபதிகள் 60 பேரில் ஒருவர் மட்டும் தான் வன்னியர் உள்ளார். இதே போல அரசு செயலாளர்கள் 36 பேரில் ஒருவர் மட்டும்தான் வன்னியர் உள்ளார்.



இந்நிலையை போக்க வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும். 1987ல் போராட்டம் நடத்தி மற்ற சாதிகளுடன் இணைந்து 20 சதவீத இடஒதுக்கீட பெற்றோம்.ஆனால் அதில் 7 சதவீதம் கூட நமக்கு பலன் கிடைக்கவில்லை. வன்னியர்களுக்கு என தனியாக 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி அறவழியில் போராட்டம் நடத்தி சிறை செல்ல 20 வயது முதல் 30 வயது வரையுள்ள ஒரு லட்சம் இளைஞர்கள் தயாராக வேண்டும். சிறையில் இருந்து வெளியில் விட்டாலும் மீண்டும் அதே போராட்டத்தை நடத்தி சிறைக்கு செல்ல வேண்டும். நான்கூட 6 மாதம் சிறைக்குசெல்ல தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் அரியலூர்,பெரம்பலூர் மாவட்டம் சார்பில் கல்வி வளர்ச்சி நிதியாக ரூ.10 லட்சம் ராமதாசிடம் வழங்கப்பட்டது. ஜெயங்கொண்டம் நகர செயலாளர் ரெங்கநாதன் நன்றி கூறினார்.



தமிழ் உணர்வு வெளிப்படும் வண்ணம் நாளிதழையும் தொலைக் காட்சியையும் நடத்தி வரும் இராமதாசு விரக்தியின் விளிம்பில் இருந்து மீள வேண்டும். அல்லது வன்னியர் சாதிக் கட்சி என்று தன் கட்சியின் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும். சாதி வெறி பிடித்து அலைந்து இருக்கின்ற வாக்கு வங்கியையும் இழக்க வேண்டா. தொடர்ந்து வன்னிய தாசனாகத்தான் இருப்பனே என்றால் அவரது அழிவை யாராலும் தடுக்க முடியாது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தீவிரவாதிகள் எந்த நாட்டிலிருந்தாலும் ஒழித்தே தீருவோம்: ஒபாமா



வாஷிங்டன், டிச.29: உலகின் எந்தப் பகுதியில் அல்-காய்தா தீவிரவாதிகள் இருந்தாலும் அவர்களை அழித்தே தீருவேன் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறினார். அமெரிக்காவுக்கு எதிராக உலகின் எந்தப் பகுதியிலிருந்துஅவர்கள் திட்டம் போட்டு அதைச் செயல்படுத்தினாலும் அதை உறுதியுடன் முறியடிப்போம் என்றும் அவர் கூறினார். அமெரிக்க விமானத்தில் நடுவானில் வெடிகுண்டு வைத்து தகர்க்க அல்-காய்தா அமைப்பைச் சேர்ந்த நைஜீரிய இளைஞர் முயற்சி மேற்கொண்டார். கிறிஸ்துமஸ் தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டது. இதன்மூலம் 270 பயணிகளுடன் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. தற்போது அந்த இளைஞரிடம் அமெரிக்க புலனாய்வு அமைப்பு (எப்பிஐ) விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஓய்வுக்காக ஹவாய் தீவில் உள்ள பராக் ஒபாமா, இச்சம்பவம் குறித்து முதல் முறையாக தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது இத்தகவலைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசியது: அமெரிக்காவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த தீவிரவாத நடவடிக்கை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எவராக இருப்பினும் அவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்கும் வரை ஓயமாட்டோம். சதிச் செயலில் ஒரு வேளை அந்த தீவிரவாதி வெற்றி பெற்றிருந்தால், விமானத்தைத் தகர்க்கும் முயற்சி ஈடேறியிருந்தால், விமானப் பணியாளர்கள் உள்பட 300 பேர் உயிரிழந்திருப்பர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக வந்த அவர்களது நிலைமை என்னவாகியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இந்த தீவிரவாத செயலை மேற்கொண்ட உமர் ஃபரூக் அப்துல் முத்தலப் (23) என்ற இளைஞர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எப்பிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவை அச்சுறுத்தும் எந்த ஒரு அமைப்பையும், தகர்த்தெறிய அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ளும். அத்தகைய தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சோமாலியா, யேமன் உள்ளிட்ட நாடுகளிலோ அல்லது உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களை விடமாட்டோம். அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த நினைக்கும் குழுக்களுக்கு நெருக்குதல் அளிக்குமாறு தேசிய பாதுகாப்பு அமைப்புக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்பாவி பொது மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் குழுவினரை அமெரிக்கா ஒருபோதும் விட்டு வைக்காது. அமெரிக்கா வெறுமனே தனது ராணுவ பலத்தை மட்டும் அதிகரித்துச் செல்வதாக இந்தக் குழுக்கள் நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. டிசம்பர் 25-ம் தேதி விமானத்தில் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தின் மூலம் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மேலும் ஆராயப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மிகவும் பரிச்சயமான தீவிரவாதிகளைக் கண்டறிந்து அவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்குத் தடை விதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. விமானத்தைத் தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்ட நைஜீரிய இளைஞர் கூட, இத்தகைய பட்டியலில் இடம்பெற்றவர்தான். ஆனால் இவரை பயணம் செய்ய அனுமதித்தது தவறு. எனவே இது தொடர்பான அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் இனி தீவிரமாக ஆராயுமாறு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இனிவரும் நாள்களில் பயணிகள் பட்டியலில் தீவிரவாதிகள் இடம்பெறுவது தவிர்க்கப்படும். அடுத்த கட்டமாக விமான பயணிகளை சோதனையிடுவதில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து நவீன கருவிகளையும் பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. விமானத்திற்குள் பயணி ஒருவர் அதி பயங்கரமான வெடிப்பொருளைக் கொண்டு வந்தது குறித்தும் ஆராய்ந்து , எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க மக்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு நிச்சயம் எடுக்கும். இதற்காக எத்தகைய பலத்தையும் பிரயோகிக்கும். அமெரிக்க மக்கள் இனி விழிப்புடன் செயலாற்றி இதுபோன்ற தீவிரவாதிகளை தனிப்படுத்த வேண்டும். நாட்டை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. ஒற்றுமையுடன் இருந்து நம்பிக்கையாக செயல்பட்டு இத்தகைய சக்திகளை ஒடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் ஒபாமா. சீருடை அணிந்த அமெரிக்க வீரர்களும் வீராங்கனைகளும் அமெரிக்க மக்களையும் நாட்டையும் பாதுகாப்பர். எனவே புத்தாண்டையும் அதைத் தொடர்ந்து வரும் நாள்களையும் எழுச்சியுடன் சந்தோஷமாக கொண்டாடுங்கள் என்று தனது புத்தாண்டு வாழ்த்தையும் பொதுமக்களுக்கு விடுத்துள்ளார் ஒபாமா.
கருத்துக்கள்

அரசாங்கம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளும் வன்முறைகளையும் அதைப் பாதுகாத்து உதவும் பிற நாட்டு அரசாங்கங்களின் வன்முறைகளையும் இத்தகைய நாட்டின் படைகள் மேற்கொள்ளும் வன்முறைகளையும் என்றும் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. எங்களின் அடக்குமுறைகளுக்கு எதிரான உரிமைக்குரல்களும் எங்களைப் பொறுத்த்வரை வன்முறையே! உரிமைக்குரல்களுக்கு எதிரான எங்களின் அடக்குமுறைகளெல்லாம் நன்முறை களே! இவ்வாறு அடக்குமுறையாளர்கள் எண்ணிச் செயல்படுவதையும நிறுத்தினால் உலகில் வன்முறைகள் அழியும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/30/2009 4:53:00 AM

Mr. Obama correctly says to destroy the terrorist in his country. We must go back that the terrorist attack our country also, at Munbay last year. During festival times they blast at New delhi and Large number of People were killed by the terrorist.We can say large number of incidences like this. Not only here but also all parts of the world. The America should take severe action against the terrorist. We should support Opama for his action. Those who are against America are sending their children to America for higher studies. They are not sending to Pakisthan , Afhganishthan, Oman etc.for higher studies. It is the duty of American president to safe guard their People. The terrorist what ever religion they belongs should be encountered. It is not the duty of Opama to compromise in Srilanka or elsewhere.It shows that the America should involve in the problems of other countries. It is not correct. He should safeguard his people.

By M.Natrayan, Guziliamparai
12/29/2009 10:34:00 PM

அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவரே! முதலில் தீவிரவாதத்திற்கான காரணம் என்ன என்பதை அறிந்து அதை ஒழிக்கப் பாடுபடுங்கள். இதற்கான உலகளவில் நிறையக் கருத்தரங்கு நடத்துங்கள். பின்னர் தீவிரவாதம் தானாகவே அமுங்கிவிடும். தான் பெரியவன், தன்னினம் பெரிது, தன்நாடுதான் உலகில் வலிமையானது, என்னால் ஆக்கிரமிக்க முடியும் என்பதுபோன்ற பிறரை குறைத்துச் செயல்படும் எண்ணத்தைக் குறைக்க வழிசெய்யுங்கள்.

By Gopal
12/29/2009 7:35:00 PM

போடா டுபுக்கு !!! வாயிக்கு வாய் 'அமெரிக்க மக்கள்' 'அமெரிக்க மக்கள்' என்கிறாயே; உலகில் எல்லா மனிதர்களுக்கும் ஆசாபாசங்கள், வலி வேதனைகள் ஒன்றுதான். நீ (உன் ராணுவம்) மட்டும் ஆப்கானிஸ்தானத்திலும் ஈராக்கிலும் தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் முதியோர்களையும் கொன்று குவிக்கலாம். கேட்டால், பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் என்பீர்கள். உன்னால் பாதிக்கப்பட்ட எவனாவது பழிவாங்க திருப்பி அடித்தால் (அல்லது அடிக்க முயற்சித்தால்) உங்களது தூக்கம் பறிபோகிறது. முதலில் நீ திருந்து, உலகம் தானாகவே அமைதியாகி விடும். இந்த பன்னாடைப் பயலுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வேறு!?

By abdul.com - dubai
12/29/2009 7:32:00 PM

அப்படின்னா இலங்கை தமிழர்களை கொலை செய்த சோனியா மன்மோஹன்சிங் கருணாநிதி ராஜபக்ஷ இவர்களை என்ன பண்ண போகுரீர்கள்? இவர்களின் மய்ரை கூட உன்னால் அசைக்க முடிஞ்சத? பேசாதடா நாயே. பொறம்போக்கு

By Nallaval velvaan
12/29/2009 6:18:00 PM

YOU ARE THE NO.1 TERRORIST. YOUR COUNTRY ONLY PRODUCING TERRORIST ALL OVER THE WORLD. IF POSSIBLE, UPROOT THE WORLD TERRORIST ORGANISATION ' MOSSAD'. YOU ARE THE WRONG SELECTION FOR NOBLE PEACE AWARD'

By Ravi Kumar
12/29/2009 5:51:00 PM

அப்படின்னா இலங்கை தமிழர்களை கொலை செய்த சோனியா மன்மோஹன்சிங் கருணாநிதி ராஜபக்ஷ இவர்களை என்ன பண்ண போகுரீர்கள்? இவர்களின் மய்ரை கூட உன்னால் அசைக்க முடிஞ்சத? பேசாதடா நாயே. பொறம்போக்கு.

By bavani
12/29/2009 5:40:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *