சனி, 16 ஜனவரி, 2010

உலகின் ஆதி இசை தமிழிசைதான்!



கருத்தரங்கை துவக்கிவைத்து வரவேற்புரையாற்றும் கவிஞர் இளையபாரதி. உடன் கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் (இடமிருந்து) பி.எம்.சுந்தரம், ஆர்.வேதவல்லி, எஸ்.ஏ.க
சென்னை,ஜன.15: செம்மொழி அங்கீகாரம் தமிழுக்குக் கிடைத்த பிறகு "தமிழிசை கர்நாடக சங்கீதமான வரலாறு' என்று குறிப்பிடுவதே தவறு என்றார் திருப்பாம்புரம் சோ.சண்முகசுந்தரம்.சென்னை சங்கமம் அமைப்பு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்தில் வியாழன் அன்று நடத்திய "தமிழிசை கர்நாடக சங்கீதமான வரலாறு குறித்த ஆய்வரங்கிற்கு' தலைமையேற்று அவர் மேலும் பேசியதாவது, ""யாழ் பாலையாகி, பாலை பண்ணாகியிருப்பதுதான் தொல்காப்பியம் காட்டும் வரலாறு. 103 பண்களிலிருந்துதான் வெவ்வேறு பெயர்களில் ராகங்களை அழைத்துக் கொண்டிருக்கின்றனர். உதாரணமாக, வியாழக் குறிஞ்சியை செüராஷ்டிரம் என்று கூறுகின்றனர். உலகின் ஆதி இசை தமிழ் இசைதான். தமிழிசையை வளர்க்க இனி "டிசம்பர் மாதத்தில் நடக்கும் இசை நிகழ்ச்சிகள் அனைத்தும் சபாக்களில் நடக்காது, பூங்காக்களில்தான் நடக்கும்' என்றும், "இனி விருதுகள் யாருக்கும் கிடையாது என்றும்' அரசாங்கம் சட்டம் கொண்டுவரவேண்டும். இதை என்னுடைய கோரிக்கையாக அரசுக்கு வைக்கிறேன்'' என்றார். கருத்தரங்கில் அரிமளம் பத்மனாபன் பேசியதாவது, ""சுர இயலுக்கு அடிப்படையாக சங்கீத ரத்னாகரத்தை காட்டுவார்கள். இதன் காலம் 11 அல்லது 12-ம் நூற்றாண்டுதான். தமிழ் இசையின் சுர இயல் தொல்காப்பியத்திலிருந்தே தொடங்குகின்றது. சங்கீத ரத்னாகரத்திற்கு முற்பட்ட காலத்தில் தோன்றிய "பிங்கள நிகண்டு'வில் "நரம்பின் மறையில் காணலாம்' என்று ஒரு குறிப்பு வருகின்றது. இதற்கு அர்த்தம் நரம்பு இசைக் கருவி இந்த நிகண்டு தோன்றிய காலத்திற்கு முன்பே இருந்தது என்பதுதான். இலக்கியம் தோன்றிய பின்தான் அதற்கான இலக்கணம் வகுக்கப்படும். தமிழிசை வடிவத்தின் தொன்மையைக் குறிப்பிடவே நிகண்டுவிலிருந்து இந்த உதாரணத்தைச் சொல்கிறேன். பெரும் பண், திறப் பண் என்று தேவார காலத்திலேயே வகுத்திருக்கின்றனர். அவைதான் இன்றைக்கு சம்பூர்ண ராகம், ஜன்ய ராகம் என்றாகிவிட்டன. ஆலத்தியியல் என்று அன்றைக்கு அழைக்கப்பட்டதுதான் இன்றைக்கு ஆலாபனை ஆகியிருக்கிறது. ஆலத்தியியல் குறித்து அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டுள்ளார். அவரின் காலம் "சங்கீத ரத்னாகரம்' நூலின் காலத்திற்கு முந்தையது!'' என்றார். எஸ்.ஏ.கே.துர்கா பேசியதாவது, ""மக்கள் இசையான கிராமிய இசைதான் முதலில் தோன்றியது. அதற்குப் பிறகுதான் பண்கள். தெய்வ சன்னதிகளில், சடங்குகளில் பாடுவதற்கு ஒருமுறையும், லெüகீக விஷயங்களுக்குப் பாடுவதற்கு ஒருமுறையும் என பிரிந்தன. பண்தான் ராகமா? என்றால் "இல்லை' என்பதுதான் பதில். பண் வேறு, ராகம் வேறு. பண் என்பது வர்ண மெட்டு. சன்னதிகளில் பாடப்படுவது தேவாரப் பண்கள். சன்னதிகளில் பாடுபவர்களிடம் அர்ப்பணிப்பு உணர்வுதான் மேலோங்கியிருக்கும். இசை நிகழ்ச்சியை ஒருவர் நிகழ்த்தும் போது அதில் அவருடைய தனித் திறமையைக் கொண்டுவரவேண்டும் என்று நினைத்து பாடுவார். அந்தக்காலத்தில் கோயில்களில் ஓதுவார்களின் மூலம் காலங்காலமாக பாடப்பட்ட தேவாரத்தின் தொன்மையை நம்மால் இன்றைக்கும் உணரமுடிகிறது. அதேநேரத்தில் அந்தக்காலத்தில் அரண்மனைகளில் எப்படி இசைக் கலை நிகழ்த்தப்பட்டது என்பதற்கு ஆதாரமில்லையே... எனவே தமிழிசைக்கும் கர்நாடக இசைக்கும் அதிக வித்தியாசமில்லை என்றோ வித்தியாசமிருக்கிறது என்றோ உடனடியாக கூறிவிட முடியாது. இது ஆழமான ஆய்வுக்கு உட்பட்ட விஷயம்'' என்றார்.ஆர்.வேதவல்லி பேசியதாவது, ""தமிழிசை, கர்நாடக இசை என எந்தப் பெயரில் இருந்தாலும் அது நம்முடைய இசைதானே! நமக்கே வீட்டில், அலுவலகத்தில், நண்பர்களிடத்திலே என்று வேறு வேறு பெயர்கள் இல்லையா? ஒரு மனிதர், எத்தனை உறவுகளால் அழைக்கப்படுகிறார்? அதைப்போல்தான் இதுவும். நம்முடைய இசையின் பலமே அதன் "கமக'த்தில்தான் இருக்கிறது. தமிழ்நாட்டு நாகசுரக் கலைஞர்களாலும், ஓதுவார்களாலும்தான் நமது இசைக்கு அழகும், அசைவும் கிடைத்திருக்கின்றது என்பதை யாராலும் மறுக்கமுடியாது'' என்றார்.பி.எம்.சுந்தரம் பேசியதாவது, ""இது கருத்தரங்க மேடையே தவிர விவாத மேடை அல்ல. தொடர்ந்து ஆய்வுக்கு உட்படவேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன. தேவார காலத்திற்கு முன்பே காரைக்கால் அம்மையார் பண்களைக் கொண்டு பாடியிருக்கிறார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு முன்பு, மீனாட்சி கல்லூரி என்று ஒன்று இருந்தது. அங்கு வடமொழியும்,தெலுங்கும் கூட சொல்லிக் கொடுக்கப்பட்டன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? தஞ்சாவூரைச் சேர்ந்த நட்டுவனார் பொன்னையாப் பிள்ளையைக் கொண்டுதான் ராஜா அண்ணாமலைச் செட்டியார் தமிழிசையை வளர்ப்பதற்கு எண்ணற்ற மாநாடுகளை நடத்தினார். தமிழனுக்கு கற்பனை உணர்வு அதிகம். அதனால் கலை வடிவங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கும் தமிழனே காரணமாக இருக்கின்றான். "கர்நாடக இசை என்பதே இங்கு கிடையாது' என்றெல்லாம் நடைமுறையில் கூறமுடியாது என்பதுதான் உண்மை'' என்றார்.சோ.முத்து கந்தசாமி தேசிகர் பேசியதாவது, ""ஞானசம்பந்தரின் பாடல்கள் அத்தனையும் இசைத் தமிழ். இங்கே துர்கா அம்மையார் பேசும்போது, தேவாரப் பாடல்களில் கட்டமைக்கப்படாத வர்ண மெட்டுதான் இருக்கும் என்று சொன்னார். அதை நான் மறுக்கிறேன். தமிழிசையில் "பண்' என்பதற்கு என்னால் பொருள் சொல்ல முடிகிறது. ஆனால் கர்நாடக இசையைக் கொண்டாடுபவர்களிடம் "ராகம்' என்பதற்கு என்ன பொருள்? அது என்ன மொழி? என்று கேட்கிறேன். அவர்களால் பதில் சொல்ல முடிவதில்லையே அது ஏன்?'' என்றார். கருத்தரங்கை தொடங்கி வரவேற்றுப் பேசினார் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றச் செயலர் கவிஞர் இளைய பாரதி.
கருத்துக்கள்

இசைக்கு மொழிதேவையில்லை என்று சொலலும் அறிஞர்களே! நமக்குத் தெரிந்த மொழியில் பாடலைக் கேட்பதற்கும் பிற தெரியாத மொழியில் பாடலைக் கேட்பதற்கும் வேறுபாடு உள்ளதல்லவா?இசைக்குத்தான் மொழி தேவையில்லை என்கிறீர்களே! அவ்வாறிருக்கத் தமிழில் பாடினால் என்ன?நாட்டின் இசையான மக்களின் இசையான தமிழிசைக்கு எதிரானவர்கள்தாம் இசைக்கு மொழி தேவையில்லை என்று பிதற்றுவார்கள். பெயரில் என்ன இருக்கிறது என்னும் தத்துவ அறிஞர்களே! உங்கள் பெயரை மாற்றி அருவெறுப்பான பெயரில் அழைத்தால் ஏற்றுக் கொள்வீர்களா? பிற இசைகளைக் கற்றுக் கொள்ளுங்கள்! தவறில்லை. ஆனால் தமிழிசையைப் போற்றுங்கள்! அதுவே உங்கட்கும் நாட்டுக்கும் நல்லது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/16/2010 6:21:00 PM

WHY STUPID PEOPLE UN NECCESRILY ARGUING. MUSIC WHICH ONE MAKES PEACEPUL TO THE MIND AND GIVE ACIVINESS TO THE BODY AND MIND CAN BE ACCEPTED. THERE IS NO LANUAGE TO THE MUSIC. ARGUMENT CANNOT TO GIVE ANY POSITIVE APPAROACH TO THE PROBLEM AND THIS KIND OF ARGUMENT SHOULD BE STOPPED AS EWLL. THESSE PERSONS DONT HAVE ANY ASSIGNMENT TO BLAME AND UNNECCARY CRITISING THE WHICH ONE IS BEST,,?. IT SEEMS WHICH ONE COME FIRST? EITHER OR EGG OR HEN. SUCH TYPE OF ARGUMENTS USELESS

By MO
1/16/2010 2:28:00 PM

Music itself is a Language. If a call a rose by any other name will its fragrance get lost? Call music by any name- Tamizh isai, Carnatic music, Hindustani music, Pann, ragas -why all that stuff in the name of film, pop, rap, rock, jazz etc- if you get transported to a Divinity, or "experience" the unbound happiness or undergo blissful emotions that can not be described ( NO emotion for that matter, can be described in words adequately ) one should not bother much. It is much ado about nothing. A rose is still a ROSE.

By ASHWIN
1/16/2010 9:11:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Human Intrest detail news

கும்பகோணம் : தேப்பெருமாநல்லூர் சிவன் கோவிலில், வில்வத்தை பறித்து வந்து அர்ச்சனை செய்த நல்ல பாம்பை, பக்தர்கள் திரண்டு சென்று பார்த்து அதிசயித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் அருகே தேப்பெருமாநல்லூரில், வேதாந்தநாயகி சமேத விஸ்வநாத சுவாமி கோவில் உள்ளது. இத்தலத்தில், விஸ்வநாத சுவாமிக்கு ருத்ராட்சத்தால் மட்டுமே அர்ச்சனை நடப்பது சிறப்பு. நேற்று காலை, சூரிய கிரகணம் நடப்பதற்கு முன், 10.30 மணிக்கு, நல்லபாம்பு ஒன்று கோவிலில் விஸ்வநாத சுவாமியின் மேல் இருப்பதை, கோவில் சிவாச்சாரியார் சதீஷ் கண்டார். பாம்பு, சுவாமியின் மேலிருந்து இறங்கி, நேராக தலவிருட்சம் வில்வமரத்திடம் சென்றது. மரத்தில் ஏறி, வில்வ இலையை பறித்துக் கொண்டு, மீண்டும் சுவாமி சன்னிதிக்குள் வந்தது. பின் வந்தவர்களை பார்த்து சீறியது. சுவாமியின் மேல் ஏறி, தலையில் அமர்ந்து படம் எடுத்தவாறு, சுவாமியின் மீது வில்வ இலையை போட்டது. இது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த காட்சியாக இருந்தது. இது போல் இரண்டு, மூன்று முறை செய்தது. இத்தகவல் பரவியதும், கிராம மக்கள் கோவிலுக்கு வந்து, நல்ல பாம்பை பார்த்து சுவாமியை தரிசனம் செய்தனர்.


நகல் எடுக்க | எழுத்தின் அளவு: Decrease font Enlarge font |
மின்னஞ்சல் | RSS | Bookmark and Share


வாசகர் கருத்து
சிவ சிவ என்ன அற்புதம் அந்த அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்நின் திருவிளையாடல் தான் இது . சகல ஜீவா ரஷிகளிலும் உர்ற்றிரிகும் இச்வரனை மறவாமல் நாம் வணங்கவேண்டும். கலியுகம் முற்ற முற்ற பற்பல அதிசயங்கள் நடக்கும் , அதில் இதுவும் ஒன்று. சிவனின் கழுத்தில் ஈர்க்கும் நாகத்தை படத்தில் நாம் காண்போம் அனல் இந்த கச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. ஓம் நமசிவய ... சிவ சிதம்பரம் தில்லை அம்பலம்
by Thina தினகரன் narayanan,Penang, Malaysia,Malaysia 1/16/2010 2:20:31 AM IST
இறைவன் இருக்கின்றன் என்பதை நமக்கு கட்டும் சம்பவம் இது
by aru arumugam,penang,Malaysia 1/16/2010 1:38:56 AM IST
இந்த தெய்வீகமான செய்தி தந்த தினமலருக்கு நன்றி.ஆனால்,சில நபர்கள் இதையே வியாபாரமாக்கி விடாது இருக்க இறைவன் அருள் புரிய வேண்டும்.
by G AMMIYA,DENHELDER,Netherlands 1/16/2010 1:05:24 AM IST


++++++++++++++
எதைத்தேடிப் பாம்பு வந்ததோ! இலை பறித்து வந்ததாகக் கதையளக்கிறார்கள்.
வளர்க பகுத்தறிவு! ஓங்குக இறைநெறி! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ஊசலாடும் அரசு உதவிபெறும் பள்ளிகள்



ஒரு தாய், தன்னுடைய குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டும்போது "ஒரு கண்ணில் வெண்ணெயும் மறு கண்ணில் சுண்ணாம்பும்' என்ற பழமொழி கூறுவதுண்டு.கல்வித்துறையில் அரசு பள்ளிகளுக்குச் சற்றும் குறையாத வகையில் கல்விச் சேவையை அளித்து வரும் அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களுக்கு நிதி உதவி அளிக்க அரசு முன்வராதது குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டும் தாயின் செயலுக்கு ஒப்பானது என்கிறார்கள் அரசு உதவிபெறும் கல்வி நிலையத்தினர்.தமிழகத்தில் அரசு கல்வி நிலையங்கள், தனியார் கல்வி நிலையங்கள், அரசு உதவிபெறும் தனியார் கல்வி நிலையங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.கல்விக் கட்டண வசூல், ஆசிரியர், அலுவலர்கள் நியமனம், அவர்களுக்கான ஊதிய நிர்ணயம் ஆகியவற்றைத் தனியார் கல்வி நிலையங்கள் தாங்களே முடிவுசெய்கின்றன.ஆனால், அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் ஆசிரியர்கள், அலுவலர்கள் நியமனம் அரசு வழிகாட்டுதலிலேயே நடத்தப்படுகிறது.ஆசிரியர், அலுவலர்களுக்கு ஊதியம் வழங்குவது என்பதைத் தவிர அரசுப் பள்ளிகளுக்குக் கிடைக்கும் மற்ற சலுகைகள் எதுவும் உதவிபெறும் பள்ளிகளுக்குக் கிடைப்பதில்லை.எனவே, மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, ஆசிரியர் எண்ணிக்கையைக் கூடுதலாக்குவது ஆகியவற்றை அந்தந்தக் கல்வி நிலைய நிர்வாகங்களே செயல்படுத்த வேண்டியுள்ளது.புதிய ஆசிரியர்களை நியமித்து, அவர்களுக்கான ஊதியத்தை பெற்றோர்}ஆசிரியர் கழகத்தின் மூலம் அளிக்கும் கட்டாயமும் அரசு உதவிபெறும் பள்ளி நிர்வாகங்களுக்கு ஏற்படுகிறது.அதன்படி, பெற்றோர்}ஆசிரியர் கழகத்துக்கு மாணவ, மாணவியரிடமிருந்து வசூலிக்கப்படும் தொகையும் மிக மிகக் குறைவேயாகும். இதைவைத்து மாதா மாதம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது இயலாத காரியம் என்பதும் கல்வி நிலைய நிர்வாகிகள் கருத்து.தற்போது இலவசக் கல்வித் திட்டத்தால் மாணவர்களிடையே எவ்விதக் கல்விக் கட்டணத்தையும் அப்பள்ளி நிர்வாகங்கள் வசூலிக்க முடியாத நிலையும் உள்ளது.அரசு உதவிபெறும் கல்வி நிலையங்கள் பெரும்பாலும் சேவை நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டவையே. குறிப்பிட்ட சமூகத்தினர் சார்பிலோ அல்லது சேவை மனப்பான்மை உள்ளவர்கள் கூட்டாகச் சேர்ந்தோ, சமூக முன்னேற்றத்தில் அக்கறையுள்ள தனிப்பட்டவராலோ ஆரம்பிக்கப்பட்டு பின் அரசு உதவி பெற்றவைகளாக அவை மாறியிருப்பதே உண்மை.இதுபோன்று மாநிலத்தில் 5048 ஆரம்பப் பள்ளிகளும், 1643 தொடக்கப் பள்ளிகளும், 630 உயர்நிலைப் பள்ளிகளும், 1067 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது.இதில் விதி விலக்காக ஒரு சில பள்ளிகள் மட்டுமே தற்போது வர்த்தக நோக்கில் செயல்படுபடத் தொடங்கி உள்ளன. ஆனால், அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் பெரும்பாலானவை இன்றும் சேவை நோக்கம் குறையாமல் செயல்படுகின்றன. இவற்றில் பல, நூற்றாண்டு கடந்தவையாகவும், பாரதியார் போன்ற மகாகவிகள் பணிபுரிந்த பெருமைக்குரியதாகவும் திகழ்கின்றன.இதுபோன்ற பள்ளிகளில் தற்போது மாணவர் எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்ததைவிட 3 மடங்கு உயர்ந்துள்ளன. ஆனால், ஆசிரியர் எண்ணிக்கை மட்டும் ஆரம்பத்தில் இருந்தது போலவே உள்ளது.குறிப்பாக, நூலகர்கள், ஓவிய ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் அப்பள்ளிகளின் நூலகங்கள் சிதிலமடைந்து கிடக்கும் அவல நிலையும் உள்ளது.இவ்வகைப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர் காலியிடத்தைக் கூட அந்தந்தப் பள்ளி நிர்வாகமே சொந்த நிதியில் நிரப்ப வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் கல்வித்துறை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.இதே நிலை நீடித்தால் கல்வி நிலையத்தைத் தொடர்ந்து நடத்த நிதிப் பற்றாக்குறை ஏற்படும். அதனால் நிதி திரட்டவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, மாணவர்களிடம் மறைமுகமாக கட்டணம் வசூலிக்க வேண்டியதிருக்கும். அப்படி நிதி வசூலிக்காவிட்டால், கல்வி நிலையத்தை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள் அக்கல்வி நிலைய நிர்வாகிகள்.தற்போது இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஒவ்வோர் பள்ளிக்கும் பல லட்சம் நிதி அளிக்கப்படுகிறது.ஆனால், அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் கழிப்பறை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் போதிய அளவுக்கு இல்லை. எனினும் அதற்கான நிதியைக் கூட அரசு அளிக்க முன்வராதது துரதிருஷ்டவசமானது என்கிறார்கள் ஆசிரியர்கள்.இதனால், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும், நிர்வாகிகளும் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் அல்லது மக்களவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியைக் கோருகிற நிலை ஏற்படுகிறது.அரசியல்வாதிகளின் உதவியைக் கோரும்போது, அவர்களது சிபாரிசை ஏற்கும் கட்டாயம் ஏற்படுவதால், மாணவர் சேர்க்கையின்போது நியாயமாக நடக்கமுடியவில்லை என்பதும் ஆசிரியர்கள் கூற்று.எனவே, அரசு உதவிபெறும் பள்ளிகளது சேவை நோக்கம், அதன் பாரம்பரியப் பெருமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டாவது அரசு சிறப்பு நிதியை அளிக்கவேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரது வேண்டுகோள்.சேவை நோக்கில் முழுமையாகச் செயல்பட முடியாமலும், வர்த்தக ரீதியில் மூழ்காமலும் ஊசலாட்டத்தில் தள்ளாடும் பாரம்பரியமிக்க அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் அரசு தன் உதவிக்கரத்தை நீட்டுவது "தந்தை மகனுக்காற்றும் கடமை' போன்றதே!
கருத்துக்கள்

சரியான கட்டுரை. அரசின் கவனம் உடனடியாக இதில் திரும்ப வேண்டும். கல்வித்துறை சுறுசுறுப்பாகச் செயல்பட்டால் உடன் தீர்வு கிடைக்கும். அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/16/2010 7:58:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
நாங்கள் விட்டுச்செல்லும் பணியை ஸ்டாலின் தொடர வேண்டும்



சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் விருதுகளை முதல்வர் கருணாநிதி வழங்கினார். உடன் நிதியமைச்சர் க. அன்பழகன், நிற்பவர்கள் (இடமிருந்
சென்னை, ஜன.15: ""நானும் நிதி அமைச்சர் அன்பழகனும் விட்டுச் செல்லும் பணிகளை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர வேண்டும்'' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் அவர் பேசியது:இந்த விருது வழங்கும் விழாவுக்கு நான் வருவேன், பேசுவேன் என்று நினைக்கவில்லை. இன்று காலை எப்போதும் இல்லாத அளவுக்கு 4 மணி நேரம் அதிகமாக உறங்கியிருக்கிறேன். வீட்டில் உள்ளவர்கள் எழுப்பியும் எழுந்திருக்காததால் டாக்டர்கள் வந்து என்னை எழுப்பினார்கள்.வியாழக்கிழமை பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டதால் ஏற்பட்ட களைப்பினால் அதிக நேரம் உறங்கிவிட்டேன். அதனால் எனக்குப் பதிலாக நிதி அமைச்சர் விழாவில் கலந்து கொண்டு விருது வழங்கட்டும். அவரால் முடியாவிட்டால் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்கட்டும் என்று காலையில் சொல்லி அனுப்பினேன்.ஆனாலும் விருது பெறுபவர்களை ஏமாற்ற விரும்பாமல், அன்பழகன் வந்துவிட்டார் என்றதும் நானும் வந்துவிட்டேன். இப்போது நான் சிலருக்கு விருது வழங்கியதும் மற்றவர்களுக்கு அன்பழகன் விருதுகளை வழங்குவார். நாங்கள் இருவரும் வழங்கிய பிறகும் மிச்சம் இருப்பவர்களுக்கு துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்குவார்.அதாவது நானும், நிதி அமைச்சர் அன்பழகனும் விட்டுச் செல்லும் பணிகளை மு.க. ஸ்டாலின் தொடர வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். இவ்விழாவில் பாவேந்தர் பாரதிதாசன் விருதுபெற்ற கவிஞர் தமிழ்தாசன், நான் ஓய்வு பெறக்கூடாது என்று கோரிக்கை விடுத்தார்.நான் எங்கே விலகிச் சென்று விடுவேனோ என்ற பதற்றத்தில் ஜோதிபாசு, நெல்சன் மண்டேலா, பெரியார் போன்ற உதாரணங்களை இங்கே குறிப்பிட்டார். ஜோதிபாசு இப்போது உடல் நலிவுற்று இருக்கிறார். நெல்சன் மண்டேலா அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். பெரியார் சிறிது காலம்தான் அரசியலில் இருந்தார். நானும் அவர்களின் வழியில் செயல்படுவேன் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.காமராஜர் விருது பெற்ற இரா. சொக்கர் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தவர். அவரைப் பார்க்கும்போது சட்டப் பேரவையில் நடந்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.நாங்கள் ஆளும்கட்சி வரிசையிலும், சொக்கர் எதிர்க்கட்சி வரிசையிலும் இருந்த நேரம். எங்கள் வரிசையில் இருந்த அமைச்சர் ஒருவர் தனது துறை மானியக் கோரிக்கையின் போது எழுதிக் கொண்டு வந்ததை எவ்வித ஈர்ப்பும் இல்லாமல் படித்துக் கொண்டு வந்தார். 6 பக்கங்கள் படித்ததும் மீண்டும் முதல் பக்கத்தை படிக்க ஆரம்பித்து விட்டார்.அதனை சொக்கர் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார். நானும் அமைச்சரைக் காப்பாற்றுவதற்காக, பேரவை உறுப்பினர்களுக்குதான் படித்தது புரிந்ததா? என்பதை அறிவதற்காக அவர் மீண்டும் படித்தார் என்று சமாளித்தேன்.அப்போதெல்லாம் எழுதிக்கொண்டு வந்து படிக்கும் பழக்கம் இல்லை. இப்போது சிலர் தாங்கள் எழுதிக் கொண்டு வருவதை அவர்களே படித்துப் பார்ப்பதில்லை. அதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டினால் அர்ச்சனை செய்கிறார்கள். அதனை ஆதரிக்கும் கூட்டமும் தமிழகத்தில் இருக்கிறது என்றார் கருணாநிதி.
கருத்துக்கள்

ஓயாத உழைப்பாளியும் படைப்பாளியுமான முத்தமிழறிஞர் கட்சி வேறுபாடற்ற தமிழ் நலத் தவைராக இருந்து அனைவருக்கும் வழிகாட்ட வேண்டும். இதன் மூலம் ஒரு காலத்தில் தமிழ் பேசும் பகுதியாக இருந்த இன்றைய இந்தியா தமிழ் இந்தியா என அழைக்கும் நிலை வரவேண்டும். இந்தியாவின் ஆட்சி மொழியாக அலுவல் மொழியாகத் தமிழ் திகழல் வேண்டும். பன்னாட்டு அவைகளின் மொழிகளில் ஒன்றாகத் தமிழ் விளங்குதல் வேண்டும். அவ்வவைகளில் தமிழ் ஈழக் கொடியும் பறக்க வேண்டும். மாண்புமிகு இனமானப் பேராசிரியர் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்று கலைஞரின் பணிகளைத் தொடருவதுடன் பேரறிஞர் அண்ணாவின் கனவுகளை நனவாக்க வேண்டும். கலைஞரின் குடும்ப உறுப்பினர்கள் உட்சணடையின்றி அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். எண்ணற்றோர் எண்ணம் நிறைவேற கலைஞர் வழிவிட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/16/2010 7:49:00 AM

அடுத்தவர் துணையின்றி நடக்க இயலாத தன்னால் முதல்வராக நீடிக்க இயலவில்லை என்றால் பேராசிரியரை ஏன் இதில் சேர்க்க வேண்டும்? எப்பொழுதும் இரண்டாவதாகத்தான் இருக்க வேண்டுமா? ஒரு வேளை நிதியமைச்சரும் தன் உட் கிடக்கையைப் புரிந்துகொண்டு வராமல் இருந்து விடுவார்; அப்பொழுது துணைமுதல்வருக்கு விருதுகளை வழங்கும் வாய்ப்பு ஏற்படும் என்று எண்ணியிருந்து ஆனால், நிதியமைச்சர் வந்து ஏமாற்றிவிட்டதால் தான் வந்து விட்டாரா? ஓயாத உழைப்பாளியும் படைப்பாளியுமான முத்தமிழறிஞர் கட்சி வேறுபாடற்ற தமிழ் நலத் தவைராக இருந்து அனைவருக்கும் வழிகாட்ட வேண்டும். இதன் மூலம் ஒரு காலத்தில் தமிழ் பேசும் பகுதியாக இருந்த இன்றைய இந்தியா தமிழ் இந்தியா என அழைக்கும் நிலை வரவேண்டும். இந்தியாவின் ஆட்சி மொழியாக அலுவல் மொழியாகத் தமிழ் திகழல் வேண்டும். பன்னாட்டு அவைகளின் மொழிகளில் ஒன்றாகத் தமிழ் விளங்குதல் வேண்டும். அவ்வவைகளில் தமிழ் ஈழக் கொடியும் பறக்க வேண்டும். மாண்புமிகு இனமானப் பேராசிரியர் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்று கலைஞரின் பணிகளைத் தொடருவதுடன் பேரறிஞர் அண்ணாவின் கனவுகளை நனவாக்க வேண்டும். கலைஞரின் குடும்ப உறுப்பினர்கள் உட்சணடையின்றி அவரு

By Ilakkuvanar Thiruvalluvan
1/16/2010 7:48:00 AM

He meant cheating people by giving freebies and amassing wealth for their own families.... Weldone Mr Karunanidhi. You will enter into guinness books for cheating people continuously and yet getting votes from our people. That is a commendable achievement...I am not sure if Stalin can do it so effectively. I am sure you would have passed on your 'knowledge' of how to be in business by giving freebies and getting votes. Now it is stalin's turn to experiment it. UNLESS OUR PEOPLE WAKE UP ... These people will eat away all the wealth and will also sit on the sidelines and watch Tamils die ! 3200 crores for free TV ..stalin can do something more..he can probably give free fridge, how about supplying TASMAC stuff by direct pipeline ? Our people will vote for you. give them biriyani and tasmac coupon.

By Karthik
1/16/2010 7:40:00 AM

He meant cheating people by giving freebies and amassing wealth for their own families.... Weldone Mr Karunanidhi. You will enter into guinness books for cheating people continuously and yet getting votes from our people. That is a commendable achievement...I am not sure if Stalin can do it so effectively. I am sure you would have passed on your 'knowledge' of how to be in business by giving freebies and getting votes. Now it is stalin's turn to experiment it. UNLESS OUR PEOPLE WAKE UP ... These people will eat away all the wealth and will also sit on the sidelines and watch Tamils die ! 3200 crores for free TV ..stalin can do something more..he can probably give free fridge, how about supplying TASMAC stuff by direct pipeline ? Our people will vote for you. give them biriyani and tasmac coupon.

By Karthik
1/16/2010 6:13:00 AM

Karunanity is talking about his bribe taking, raping and back stabing Tamils; etc and he wants Stalin to continue.

By Ram Chetty
1/16/2010 6:03:00 AM

எந்த பன்னிகளை சொல்லுகிறீர்கள் அய்யா, ஸ்டாலின் முன்பு மேய்த்த பன்னிகளையா?

By Tamilan
1/16/2010 5:54:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
+++++++++++++++++++++
அற்புத சூரிய கிரகணம்



தனுஷ்கோடி அருகே முகுந்தராயர் சத்திரம் - கன்னியாகுமரி - சென்னை
சென்னை,ஜன.15: 108 ஆண்டுகளுக்கு பிறகு வானில் தோன்றிய அற்புத கங்கண சூரிய கிரகணம் மதுரை, கன்னியாகுமரி, ராமேசுவரம், தனுஷ்கோடியில் வெள்ளிக்கிழமை முழுமையாகக் காட்சி அளித்தது.பகல் 11.10 மணிக்கு சூரியனை சந்திரன் நிழல் லேசாக மறைக்கத் தொடங்கியது. பிறகு படிப்படியாக சூரியன் வலதுபுறம் மறையத் தொடங்கியது. பிற்பகல் 1.15 மணிக்கு சூரியனின் மையத்தில் சந்திரன் முழு வட்டமாக அமைந்ததைக் காண முடிந்தது. அப்போது பிரகாசமான வைர வளையல் போல சூரியன் காணப்பட்டது.மதுரையில் அப்போது வெளிச்சம் குறைந்து, வெப்பமும் குறைவாக இருந்தது. மாலை 3.15 மணிக்கு கிரகணம் முழுமையாக நீங்கியது.விசேஷக் கண்ணாடிகள் மூலமும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையினர் அமைத்திருந்த டெலஸ்கோப்புகள் மூலமும் மக்கள் இந்தக் கிரகணத்தைக் கண்டு ரசித்தனர்.ராமேசுவரம், தனுஷ்கோடி நிலப்பரப்பில் வெள்ளிக்கிழமை காலை 11.14 மணிக்கு முதல்கட்ட சூரிய கிரகணம் ஆரம்பமானது. பின்னர் சூரியனை சந்திரன் மெல்ல மெல்ல முழுமையாக மூடி மறைத்தபோது முழு வட்ட வடிவிலான கங்கண சூரிய கிரகணம் பகல் 1.16 மணிக்குத் தொடங்கி 1.26 மணி வரை நீடித்தது.இந்த முழு கங்கண சூரிய கிரகணத்தின் மத்திய கோடு தமிழகத்தில் ராமேசுவரத்தில் இருந்து 7 கி.மீ தாண்டி உள்ள தனுஷ்கோடி நிலபரப்பில் விழுவதால் மிக தெளிவாகக் காணலாம் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவித்தன்படி, தனுஷ்கோடி அருகே முகுந்தராயர்சத்திரம் கடற்கரையில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் விசேஷ கண்ணாடி அணிந்து சூரிய கிரகணத்தைப் பார்வையிட்டனர்.சூரிய கிரகணம் மாலை 3.12 மணிக்கு முடிவடைந்தது.கோயில் நடை சாத்தப்பட்டது:சூரிய கிரகணத்தையொட்டி பழனி, மதுரை, ராமேசுவரம் உள்பட எல்லா ஊர்களிலும் பெரிய கோவில்களில் நடை காலை 11 மணிக்கு சாத்தப்பட்டது. கிரகணம் முடிந்து 4 மணிக்குதான் கோவில்கள் திறக்கப்பட்டன.சென்னை கிண்டியில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் ஏராளமானோர் இந்த சூரியகிரகணத்தைக் கண்டு ரசித்தனர். சென்னையில் 82 சதவீதம் அளவுக்கு சூரிய கிரகணம் தெரிந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.டெலஸ்கோப் இல்லாமல் கிரகணத்தைப் பார்க்க உதவும் வகையில் விசேஷ கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.இதற்கு முன்பு தமிழகத்தில் 1901-ல் கங்கண சூரிய கிரகணம் தெரிந்தது என அவர்கள் கூறினர்.சூரிய கிரகணத்தை வெறுங்கண்ணால் பார்ப்பது ஆபத்து என்ற பிரசாரம் மக்களிடையே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகின் ஆதி இசை தமிழிசைதான்!

First Published : 16 Jan 2010 03:30:35 AM IST


கருத்தரங்கை துவக்கிவைத்து வரவேற்புரையாற்றும் கவிஞர் இளையபாரதி. உடன் கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் (இடமிருந்து) பி.எம்.சுந்தரம், ஆர்.வேதவல்லி, எஸ்.ஏ.க
சென்னை,ஜன.15: செம்மொழி அங்கீகாரம் தமிழுக்குக் கிடைத்த பிறகு "தமிழிசை கர்நாடக சங்கீதமான வரலாறு' என்று குறிப்பிடுவதே தவறு என்றார் திருப்பாம்புரம் சோ.சண்முகசுந்தரம்.சென்னை சங்கமம் அமைப்பு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்தில் வியாழன் அன்று நடத்திய "தமிழிசை கர்நாடக சங்கீதமான வரலாறு குறித்த ஆய்வரங்கிற்கு' தலைமையேற்று அவர் மேலும் பேசியதாவது, ""யாழ் பாலையாகி, பாலை பண்ணாகியிருப்பதுதான் தொல்காப்பியம் காட்டும் வரலாறு. 103 பண்களிலிருந்துதான் வெவ்வேறு பெயர்களில் ராகங்களை அழைத்துக் கொண்டிருக்கின்றனர். உதாரணமாக, வியாழக் குறிஞ்சியை செüராஷ்டிரம் என்று கூறுகின்றனர். உலகின் ஆதி இசை தமிழ் இசைதான். தமிழிசையை வளர்க்க இனி "டிசம்பர் மாதத்தில் நடக்கும் இசை நிகழ்ச்சிகள் அனைத்தும் சபாக்களில் நடக்காது, பூங்காக்களில்தான் நடக்கும்' என்றும், "இனி விருதுகள் யாருக்கும் கிடையாது என்றும்' அரசாங்கம் சட்டம் கொண்டுவரவேண்டும். இதை என்னுடைய கோரிக்கையாக அரசுக்கு வைக்கிறேன்'' என்றார். கருத்தரங்கில் அரிமளம் பத்மனாபன் பேசியதாவது, ""சுர இயலுக்கு அடிப்படையாக சங்கீத ரத்னாகரத்தை காட்டுவார்கள். இதன் காலம் 11 அல்லது 12-ம் நூற்றாண்டுதான். தமிழ் இசையின் சுர இயல் தொல்காப்பியத்திலிருந்தே தொடங்குகின்றது. சங்கீத ரத்னாகரத்திற்கு முற்பட்ட காலத்தில் தோன்றிய "பிங்கள நிகண்டு'வில் "நரம்பின் மறையில் காணலாம்' என்று ஒரு குறிப்பு வருகின்றது. இதற்கு அர்த்தம் நரம்பு இசைக் கருவி இந்த நிகண்டு தோன்றிய காலத்திற்கு முன்பே இருந்தது என்பதுதான். இலக்கியம் தோன்றிய பின்தான் அதற்கான இலக்கணம் வகுக்கப்படும். தமிழிசை வடிவத்தின் தொன்மையைக் குறிப்பிடவே நிகண்டுவிலிருந்து இந்த உதாரணத்தைச் சொல்கிறேன். பெரும் பண், திறப் பண் என்று தேவார காலத்திலேயே வகுத்திருக்கின்றனர். அவைதான் இன்றைக்கு சம்பூர்ண ராகம், ஜன்ய ராகம் என்றாகிவிட்டன. ஆலத்தியியல் என்று அன்றைக்கு அழைக்கப்பட்டதுதான் இன்றைக்கு ஆலாபனை ஆகியிருக்கிறது. ஆலத்தியியல் குறித்து அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டுள்ளார். அவரின் காலம் "சங்கீத ரத்னாகரம்' நூலின் காலத்திற்கு முந்தையது!'' என்றார். எஸ்.ஏ.கே.துர்கா பேசியதாவது, ""மக்கள் இசையான கிராமிய இசைதான் முதலில் தோன்றியது. அதற்குப் பிறகுதான் பண்கள். தெய்வ சன்னதிகளில், சடங்குகளில் பாடுவதற்கு ஒருமுறையும், லெüகீக விஷயங்களுக்குப் பாடுவதற்கு ஒருமுறையும் என பிரிந்தன. பண்தான் ராகமா? என்றால் "இல்லை' என்பதுதான் பதில். பண் வேறு, ராகம் வேறு. பண் என்பது வர்ண மெட்டு. சன்னதிகளில் பாடப்படுவது தேவாரப் பண்கள். சன்னதிகளில் பாடுபவர்களிடம் அர்ப்பணிப்பு உணர்வுதான் மேலோங்கியிருக்கும். இசை நிகழ்ச்சியை ஒருவர் நிகழ்த்தும் போது அதில் அவருடைய தனித் திறமையைக் கொண்டுவரவேண்டும் என்று நினைத்து பாடுவார். அந்தக்காலத்தில் கோயில்களில் ஓதுவார்களின் மூலம் காலங்காலமாக பாடப்பட்ட தேவாரத்தின் தொன்மையை நம்மால் இன்றைக்கும் உணரமுடிகிறது. அதேநேரத்தில் அந்தக்காலத்தில் அரண்மனைகளில் எப்படி இசைக் கலை நிகழ்த்தப்பட்டது என்பதற்கு ஆதாரமில்லையே... எனவே தமிழிசைக்கும் கர்நாடக இசைக்கும் அதிக வித்தியாசமில்லை என்றோ வித்தியாசமிருக்கிறது என்றோ உடனடியாக கூறிவிட முடியாது. இது ஆழமான ஆய்வுக்கு உட்பட்ட விஷயம்'' என்றார்.ஆர்.வேதவல்லி பேசியதாவது, ""தமிழிசை, கர்நாடக இசை என எந்தப் பெயரில் இருந்தாலும் அது நம்முடைய இசைதானே! நமக்கே வீட்டில், அலுவலகத்தில், நண்பர்களிடத்திலே என்று வேறு வேறு பெயர்கள் இல்லையா? ஒரு மனிதர், எத்தனை உறவுகளால் அழைக்கப்படுகிறார்? அதைப்போல்தான் இதுவும். நம்முடைய இசையின் பலமே அதன் "கமக'த்தில்தான் இருக்கிறது. தமிழ்நாட்டு நாகசுரக் கலைஞர்களாலும், ஓதுவார்களாலும்தான் நமது இசைக்கு அழகும், அசைவும் கிடைத்திருக்கின்றது என்பதை யாராலும் மறுக்கமுடியாது'' என்றார்.பி.எம்.சுந்தரம் பேசியதாவது, ""இது கருத்தரங்க மேடையே தவிர விவாத மேடை அல்ல. தொடர்ந்து ஆய்வுக்கு உட்படவேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன. தேவார காலத்திற்கு முன்பே காரைக்கால் அம்மையார் பண்களைக் கொண்டு பாடியிருக்கிறார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு முன்பு, மீனாட்சி கல்லூரி என்று ஒன்று இருந்தது. அங்கு வடமொழியும்,தெலுங்கும் கூட சொல்லிக் கொடுக்கப்பட்டன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? தஞ்சாவூரைச் சேர்ந்த நட்டுவனார் பொன்னையாப் பிள்ளையைக் கொண்டுதான் ராஜா அண்ணாமலைச் செட்டியார் தமிழிசையை வளர்ப்பதற்கு எண்ணற்ற மாநாடுகளை நடத்தினார். தமிழனுக்கு கற்பனை உணர்வு அதிகம். அதனால் கலை வடிவங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கும் தமிழனே காரணமாக இருக்கின்றான். "கர்நாடக இசை என்பதே இங்கு கிடையாது' என்றெல்லாம் நடைமுறையில் கூறமுடியாது என்பதுதான் உண்மை'' என்றார்.சோ.முத்து கந்தசாமி தேசிகர் பேசியதாவது, ""ஞானசம்பந்தரின் பாடல்கள் அத்தனையும் இசைத் தமிழ். இங்கே துர்கா அம்மையார் பேசும்போது, தேவாரப் பாடல்களில் கட்டமைக்கப்படாத வர்ண மெட்டுதான் இருக்கும் என்று சொன்னார். அதை நான் மறுக்கிறேன். தமிழிசையில் "பண்' என்பதற்கு என்னால் பொருள் சொல்ல முடிகிறது. ஆனால் கர்நாடக இசையைக் கொண்டாடுபவர்களிடம் "ராகம்' என்பதற்கு என்ன பொருள்? அது என்ன மொழி? என்று கேட்கிறேன். அவர்களால் பதில் சொல்ல முடிவதில்லையே அது ஏன்?'' என்றார். கருத்தரங்கை தொடங்கி வரவேற்றுப் பேசினார் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றச் செயலர் கவிஞர் இளைய பாரதி.
கருத்துக்கள்
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும்: சோ



சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற "துக்ளக்' வார இதழின் 40}வது ஆண்டு நிறைவு விழாவில் பேசிய (இடமிருந்து) இதழ் ஆசிரியர் "சோ', பத்திரிகையாளர் எஸ். குருமூர்
சென்னை, ஜன. 15: தமிழத்தில் அரசு நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. எனவே, ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்றார் பத்திரிகையாளர் சோ."துக்ளக்' வார இதழின் 40}வது ஆண்டு நிறைவு விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் வாசகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு சோ அளித்த பதில்கள்:தமிழகத்தில் இப்போது நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. தேர்தலில் வெற்றிபெற வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது வாடிக்கையாகிவிட்டது. இதனால் ஓட்டு போட பணத்தை எதிர்பார்க்கும் நிலைக்கு மக்களும் தள்ளப்பட்டுவிட்டனர்.சிறு, குறுந் தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதைத் தமிழக அரசு தவிர்க்கிறது. மத்திய அரசின் ஆதரவு இருக்கும் வரைதான் தமிழகத்தின் நிதி நிலை சீராக இருக்கும். திமுக ஆட்சி தொடர்ந்தால் அரசு கஜானா திவாலாகிவிடும். இதில் மாற்றம் வரவேண்டும் என்றால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரவேண்டும். திமுக}வுக்கு மாற்றுக் கட்சி அதிமுக தான். அதிமுக}வுக்கு மக்கள் ஆதரவு உள்ளது: தமிழகத்தில் ஒரு தேர்தலாவது, வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்காமல் நடத்தினால் போதும் திமுக}வுக்கு மக்கள் ஆதரவு அதிகமா அல்லது அதிமுக}வுக்கு ஆதரவு அதிகமா என்பது தெரிந்துவிடும். திமுக}வுக்கு கூட்டணி தொடர்ந்து பலமாக இருந்து வருகிறது. இந்தக் கூட்டணியை எதிர்த்து ஓட்டு வாங்கும் சக்திதான் அதிமுக}வுக்கு இல்லை. ஆனால், தனிக் கட்சியாக பார்க்கும்போது அதிமுக}வுக்கு உள்ள மக்கள் ஆதரவு திமுக}வை விட சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று பேச்சளவில்தான் காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர். காமராஜர் ஆட்சியை அமைக்கக் கூடிய காங்கிரஸôர் இந்தியாவில் இல்லை. காமராஜரைப் போன்ற நேர்மையானவர்களும் இல்லை.எனவே, இன்றைக்கு இருக்கும் ஆட்சியை விட, சிறந்த ஆட்சியை யார் தருவார்கள் என்பதைத்தான் மக்கள் சிந்திக்க வேண்டும். தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் ஆதரவு இன்றி, தனியாக தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிற்கப்போவது இல்லை. தனியாக நிற்கும் அபாயகரமான செயலை அவர்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள். இதுபோல், தேசிய அளவில் இப்போது இருக்கக் கூடிய ஒரே எதிர்க்கட்சி பாரதிய ஜனதா கட்சிதான். ஆனால், இப்போது இந்தக் கட்சி எதைச் சொன்னாலும் எடுபடாத நிலை உள்ளது. இக்கட்சிக்கு செல்வாக்கு குறைந்து வருவது உண்மைதான். கட்சிக்குள் ஜனநாயகம் அதிகரித்து விட்டது. யார் வேண்டுமானாலும் தலைவன் என்ற நிலை உருவாகிவிட்டது. மக்களுக்கு நன்கு அறிமுகமானவரை தலைவர் பொறுப்பில் அமர்த்தவேண்டும். ஒரே எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவின் செல்வாக்கு குறைவது நல்லதல்ல. கோவையில் நடைபெற உள்ள செம்மொழி மாநாட்டால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. ஒரு இடைத்தேர்தல் வந்தால் என்ன பயன் கிடைக்குமோ, அதுதான் செம்மொழி மாநாட்டால் கிடைக்கப்போகிறது. ஆனால், மக்களுக்கு பணம் மட்டும் கிடைக்காது. தன்னுடைய ஆட்சியில் செம்மொழி மாநாடு நடத்த முடியவில்லையே என்ற வருத்தம் கருணாநிதிக்கு இருந்துள்ளது. அதன் வெளிப்பாடுதான் இந்த ஏற்பாடு. பூரண மதுவிலக்கு என்பது நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று. மதுக் கடைகளை ஒழுங்குபடுத்துவது, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மது விற்பனை செய்வது உள்ளிட்ட ஒரு சில ஒழுங்கு நடவடிக்கைளை நடைமுறைப்படுத்துவதான் சாத்தியம். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு தனி இடஒதுக்கீடு என்பது வேண்டாத விவகாரம். இது நடைமுறைக்கு வந்தால், விருப்பம் இல்லாவிட்டாலும் வலுக்கட்டாயமாக பெண்கள் தேர்தலில் நிறுத்தப்படும் நிலை உருவாகும். இதனால் நல்ல ஆட்சி அமையாது. ஆண்களுக்கு சமமாக போட்டியிடுவதுதான் உகந்தது என்றார் சோ. பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி: பொருளாதாரத்தை மக்களுக்குப் புரியாத விஷயமாக மாற்றிய பெருமை, நம்முடைய பொருளாதார நிபுணர்களுக்கு உள்ளது.அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சிக்குத் தீர்வு காண, நோபல் பரிசு பெற்ற 5 பொருளாதார நிபுணர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இவர்கள் 5 பேரும் முரணான கருத்துகளை வெளிப்படுத்தினர். இறுதியில், இதற்குத் தீர்வு என்ன என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று 5 பேரும் கூறிவிட்டனர்.உலகப் பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இந்தியா விரைவாக மீண்டு விட்டது. இதற்கு, இந்தியா தன்னுடைய வங்கிகளிடமிருந்து கடன் வாங்கி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதுதான் காரணம். ஆனால், அமெரிக்காவில் மக்கள் வங்கி சேமிப்பில் ஈடுபடுவதே இல்லை. இதனால், அமெரிக்கா வெளி நாடுகளிடமிருந்து ரூ. 150 லட்சம் கோடி கடன் வாங்கும் நிலை உருவாகியுள்ளது. குடும்பங்கள் தேசியமயமாக்கப்பட்டுள்ளதால், சாலை போடுதல் உள்ளிட்ட மக்கள் பணிகளில் அமெரிக்க அரசால் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் தனியார் மயமாக்குதல் கொள்கை அங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை வங்கிகளில் சேமிப்பு உயர்வதற்கு, நாட்டின் கலாசாரமும், சமுதாய மற்றும் வாழ்க்கை முறையும்தான் காரணம். இதை நிர்வாகிகளும், அரசு அதிகாரிகளும் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்காவின் கொள்கைகளை அப்படியே பின்பற்றுவதில் அர்த்தமில்லை என்றார். எழுத்தாளர் பழ,. கருப்பையா: தமிழக அரசியலில் யோக்கியர்களே இல்லாத நிலை உருவாகி வருகிறது. காந்தியடிகள் அழைத்தபோது, நாட்டிலுள்ள உத்தமர்கள் அனைவரும் தங்களைத்தான் அவர் அழைக்கிறார் என்று எண்ணி அவர் பின் சென்றனர்.ஆனால், இப்போது யோக்கியர்கள் தலைகாட்ட முடியாத நிலைதான் இன்றைய அரசியலில் ஏற்பட்டுள்ளது என்றார். முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன்: ""கடந்த 44 மாதங்களில் தமிழகத்தின் நிர்வாகம் எப்போதும் இல்லாத அளவுக்கு, கடுமையாக சீர்குலைந்துள்ளது. எந்தத் துறை சீர்கெட்டு இருந்த போதும், நிர்வாகம் மட்டும் நன்றாக இருந்திருந்தால் தமிழகம் தப்பித்திருக்கும். வளர்ச்சித் திட்டங்கள் நிறுத்தப்பட்டு விட்டன. சிறு, குறுந் தொழில்கள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டு விட்டன. இதனால், மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் (எஸ்.டி.பி.), மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கீழிறங்கி 5.4 சதவீதமாக உள்ளது'' என்றார் முருகன்.
கருத்துக்கள்

இப்பொழுது தேவை ஆட்சி மாற்றம் அன்று; ஆட்சியாளரின் மனமாற்றம்தான்.வசதி வாய்ப்பு நலத் திட்டங்களில் கருத்து செலுத்துவது போல் தமிழ் நலத் திட்டங்களில் கருத்து செலுத்த வேண்டும். பேச்சாளர் போன்ற தமிழினப் பகைவர்கள் தலையெடுக்கா வண்ணம் தமிழ் இன உணர்ச்சியை வளர்க்க வேண்டும். தமிழ் நாட்டில் எல்லா நிலைகளிலும் தமிழே ஆட்சி செய்ய வேண்டும். முதன்மைப் பதவிகளில் தமிழர்களே அமர்த்தப்படல் வேண்டும். கொலைகாரக் காங்கிரசின் கூட்டணியை உதறித் தள்ளிவிட்டு ஈழத்தில் அரங்கேறிய படுகொலைகளுக்குக் கழுவாயாகத் தமிழ் ஈழம் விரைவில் உலகோரால் ஏற்கப்பட முயன்று வெற்றி காண வேண்டும். முதல்வர் பதவி விலகுவது உறுதியெனில் அப் பதவியில் மூத்த தலைவரான இனமானப் பேராசிரியர்தான் அமர வேண்டும்.பிராமணத் தமிழ்களில் நாடகங்கள், தொலைக்காட்சிப் படைப்புகள், திரைப்படங்கள் உருவாக்கித் தமிழ்க் கொலை புரிவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.தமிழ் சார்ந்த பணியிடங்களில் உண்மைத் தமிழறிவு உடைய தமிழார்வலர்களுக்கே வாய்ப்பு அளித்தல் வேண்டும்.சுருங்கக் கூறுவதாயின் தமிழ் நலம் நாடும் தமிழர் ஆட்சி நடைபெற வேண்டும். அன்புடன் இலக்குவனார திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/16/2010 7:23:00 AM

It is no use discussing here about admin.It has almost come to standstill and CM's legal and illegal families looting TN.Congress and Sonia shut their eyes for a few seats.Congress will certainly lose its base and mass. chitti

By chitti
1/16/2010 7:12:00 AM

CHO HAS INTEREST OF NATION AT HEART. OTHERS WHO SUPPORT DMK AND OPPOSE HIM DO IT BECAUSE THEY ARE EMOTIONALLY ATTACHED TO SOTTAIYAN. HE IS BAD AND BROUGHT DOWN ADMINISTRATION. PEOPLE LIKE AMMU ARE BLINDED BY BRAHMIN HATRED FOR NO REASON AND BLABBER HERE. THATS ALL.

By S Raj
1/16/2010 6:53:00 AM

In my view Cho speaks truth once in a blue moon day - In 1989, when Jaya boasted she is Ph.D. in politics and taunted Bhagyaraj as LKG, Cho told the truth - Yes, she is P.H.D. that is Doctor of Political Humbug. Then in 1996 election, when Cho took a wise decision to support DMK reporters asked him - How do you think MK is better when both MK and Jaya are corrupt. His wise and sensible reply : "We hired a servant (MK) for our home, he indulged in small thefts, we dismissed him. Later we hired a maid (JL), now she says the house is her house and ask us to leave the house. So naturally, we realize that servant is better than the maid.

By Puthiyavan Raj
1/16/2010 6:47:00 AM

gk and Charan, on what basis you say Cho is telling the truth? Jaya was so arrogant and abusive that abused power to harass and imprison political and personal opponents by misusing POTA, ganja case etc.. She was hell bent on demolishing an educational institute (QMC), She imposed recruitment ban for 5 years, summarily dismissed 10,000 road workers and 12000 social workers (just think about their families, their children's future, how many died, how many children had to leave schools and became child laborers). Kalaignar lifted recruitment ban, relaxed age limit for 5 years to compensate the ban (see his vision and compassionate thinking) and provided jobs to more than 3.5 lakh youth, brought industries, constructed fly-overs, introduced kalaignar kaappeettu thittam (free health insurance to the poor), can't you see anything positive?

By Puthiyavan Raj
1/16/2010 6:41:00 AM

Truth always hurts. It is the truth - Karunanidhi govt is taking the state to bankruptcy. You may not like Cho. But accept the truth. Elections are won with money and muzzle power. Small scale industry is at peril. But Karunanidhi, his family and his extended family will get rich by each passing day.

By gk
1/16/2010 6:15:00 AM

Ammu இந்த மாதிரியே தறிகெட்டதனமா சிந்தனையில் இருந்தால் தமிழகம் எப்போது முன் இருந்த பெருமையை மீட்க போறது? தமிழை தாய் மொழியாகவும், தமிழ் மொழி மட்டுமே பேசும் நீங்க குறிப்பிட்ட சமூகத்தை ஒதுக்குவதானால் தமிழகத்துக்குத்தான் இழப்பு. எல்லா தமிழ் இனமும் ஒன்று சேர்ந்து ஒத்து உழைத்தால் நாம் எல்லோரும் மேம்படுவோம். எங்கிருந்தோ வந்த இஸ்லாதையும், கிருத்துவ மதத்தினறையும் தமிழர் என்று ஏற்று கொள்ளும் போது இந்து மற்றும் இந்திய சமூகத்தின் ஒன்றான நீங்கள் குறிப்பிட்ட சமூகத்தை மற்றும் ஒதுக்குவது சரியான ஒன்றல்ல

By kannan
1/16/2010 6:14:00 AM

He is getting old. Due to that he has become insane. We should ignore it. We all know what would happen in Jaya's regime and in fact she would take Tamilnadu in the opposite direction. He said in the recent parliamentary election that the opposition combine would win all the 40 seats and we all know what happened thereafter. I am just waiting....when this jack a*s*s would kick the bucket.

By T.Gene
1/16/2010 6:13:00 AM

I really don't know on what basis he says the administration is not good. During Amma's regime, except Amma nobody has got any power to take any decision. Every body was working at her whimsies and fancies and the ministers were changed very frequently. All the ministers were always at Amma's feet. This man's (Cho) opinion is biased and indicates he is completely out of mind.

By Michael
1/16/2010 5:04:00 AM

Some people will not accept cho's openion. but his openion always correct and strong!!!

By charan
1/16/2010 3:56:00 AM

Aamama! Namma Avazh than atchi seyyanum. Aduthavar atchiylla summa. Nee oru ChOmari!

By ammu
1/16/2010 2:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *