செவ்வாய், 22 ஜூன், 2010

என்ன செய்யலாம் இதற்காக? என்ற ஈழ மக்களின் துயர வரலாற்று ஆவணம்

EnnaSeiyalamItharkaga
என்ன செய்யலாம் இதற்காக? என்ற ஈழ மக்களின் துயர வரலாற்று ஆவணம் கருப்பு ஜூலையில் வெளியிடப்பட  உள்ளது.
*  600 ௦௦க்கும் மேற்பட்ட படங்கள்,
* 250  பக்கங்கள்(A4 ஐ விட பெரிய அளவில்),
* இனப்படுகொலை பட்டியல்,
* உலக மக்களை நோக்கிய மனித நேய முறையிடல்கள்,
* வரலாற்று நிகழ்வுகளின் அட்டவணை,
* தமிழ்,ஆங்கிலம்,பிரெஞ்சு மொழிகளில்.
உலகமக்கள்,உலக தமிழர்கள் அனைவரையும் ஈழவிடுதலைக்கு ஆதரவாக்கப்போகும் இந்த ஆவணம் ஈழவிடுதலைக்கு மௌனப் புரட்சியாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு:
ஜெ.பிரபாகரன்
praba.k865@gmail.com
கைபேசி : +91  9486486321
}
You can leave a response, or trackback from your own site.

எல்லாளன் திரைப்படம்.

4 22.10.2007 அன்று தமிழீழ விடுதலைப்புலிகள் சிறீலங்கா வான்படைத்தளத்தை தாக்கி அழித்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட எல்லாளன் திரைப்படம்.

}
You can leave a response, or trackback from your own site.


மேலதிக செய்திகள்
June 21st, 2010

மொழி ஆய்வுகள் மூலம் தமிழின் தொன்மையை நிறுவ முடியும்: அருட்செல்வர் நா.மகாலிங்கம்


கோவை, ஜூன்  21:  குமரிக் கடல் ஆய்வையும், சீன, சம்ஸ்கிருத, கிரேக்க, லத்தீன் ஆகிய பண்டைய மொழிகளின் லிபிகளோடு மொகஞ்சதாரோ எழுத்துக்களையும் ஒப்பிட்டு ஆய்வு செய்யும் நடவடிக்கைகளையும் தமிழக முதல்வர் மேற்கொண்டால் மட்டுமே தமிழின் மெய்யான தொன்மையை நிறுவ முடியும் என்று சக்தி குழுமங்களின் தலைவர் அருட்செல்வர் நா.மகாலிங்கம் கூறினார்.  கோவை பாரதீய வித்யா பவன் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற செம்மொழிக் கோவை மலர் வெளியீட்டு விழாவுக்குத் தலைமை வகித்து அவர் பேசியது:  இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியா பக்கம் லெமூரியா இருந்ததாகவும், பிரளயங்கள் காரணமாக பல்வேறு பகுதிகளாக உடைந்து நகர்ந்து சென்றதாகவும் 2006-ல் வெளியான மறைந்த லெமூரியா என்ற நூலில் அமெரிக்க ஆராய்ச்சியாளர் பிராங்க் ஜோசப் கூறியுள்ளார். இதில் லெமூரியா வேறு, குமரிக் கண்டம் வேறு எனவும் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத் தக்கது.  புதையுண்ட மொகஞ்சதாரோ நகரத்தின் எழுத்துக்கள் சம்ஸ்கிருதமாக இருக்கலாம் என்ற கருத்தை குஜராத் அறிஞர் எஸ்.ஆர்.ராவ் தெரிவித்திருந்தார். சிந்து சமவெளியில் புதையுண்ட மொகஞ்சதாரோ நகரத்தின் நாகரிகம், திராவிட நாகரிகம் தான் என்றும் அங்கிருந்த எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்கள்தான் என்றும் அண்மைக்கால ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.  மொகஞ்சதாரோ எழுத்தில் இருந்து தான் செவ்விந்திய இனத்தார், ஆன்டெக்ஸ் இனத்தார், இன்காஸ் இனத்தார் ஆகியோரின் மொழிகள் தோன்றின என்ற கருத்தை மொழியியல் அறிஞர்கள் ஆய்வு செய்து பார்க்கலாம்.  லெமூரியா கண்டம் அழியத் துவங்கியபோது ஒருசாரார் கிழக்கு நோக்கி பயணம் மேற்கொண்டனர். அப்படி கிழக்கே சென்றவர்கள் ஆன்டெக்ஸ் இன்காஸ் எனவும், வடஅமெரிக்கா சென்றவர்கள் சிவப்பிந்தியர்கள் எனவும், மெக்சிகோ சென்றவர்கள் மெக்சியர்கள் என்றும் உருவாகினர். இன்னொரு சாரார் மேற்கு நோக்கி பயணமாகி குமரிக் கண்டத்தில் குடியேறினர். குமரிக் கண்டம் மூழ்கியபோது மேற்கு நோக்கி இஸ்ரேலுக்குச் சென்றவர்கள் யூதர்கள் ஆனார்கள். எகிப்து சென்றவர்கள் சுமேரியர்கள் ஆனார்கள்.   கொல்கத்தா பக்கம் சென்றவர்கள் சோழர்கள் எனவும், சிந்து சமவெளியில் குடியேறியவர்கள் சேரர்கள் எனவும், தெற்கு பகுதியில் தங்கியவர்கள் பாண்டியர்கள் எனவும் ஆனார்கள். பின்னர் அடுத்தடுத்து நடந்த படையெடுப்புகளாலும், ஆட்சி மாற்றங்களாலும் பாண்டியர் ஆட்சிக்கு உள்பட்ட தென்பகுதிக்கே சோழர், சேரர் வந்து சேர்ந்தனர்.     இந்திய வடபகுதி முழுவதும் தமிழர்கள் இருந்துள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளன என்றார் மகாலிங்கம்.  செம்மொழிக் கோவை மலரை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.ராசேந்திரன் வெளியிட முதல் பிரதியை பாரதியார் பல்கலை. துணைவேந்தர் சி.சுவாமிநாதன் பெற்றுக் கொண்டார். தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் ஏற்புரையாற்றினார். தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் பொது மேலாளர் ஏ.என்.சாட்டர்ஜி விழா நினைவுப் பரிசுகளை வழங்கினார்.  ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் எம்.கிருஷ்ணன், வேளாண் பல்கலை. துணைவேந்தர் ப.முருகேசபூபதி, முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், தமிழாசிரியர் அன்வர் பாஷா உள்ளிட்டோர் பேசினர்.  ஓம் சக்தி இதழ் பொறுப்பாசிரியர் பெ.சிதம்பரநாதன் வரவேற்றார். தினமணி கோவை பதிப்பு துணை செய்தி ஆசிரியர் கே.வி.ஐயப்பன் நன்றி கூறினார்.

2/2) தமிழ் ஆர்வலர்கள் இவரைப் புறக்கணிக்கவேண்டும். தொல்காப்பிய வெளியீடு மூலம் தமிழை முன்பு அழிக்கப் பார்த்தார். இப்பொழுது உலக அறிஞர்கள் தமிழின் சிறப்பையும் தொன்மையையும் ஆய்ந்து உணர்ந்து அறிவிக்கும் வேளையில் கதை விடுகிறார். இவர் தமிழறிஞரல்லர். அருட் செல்வர் எனில் தமிழின் பால் அருள் காட்டட்டும். தமிழ்ப் பகைவர்களைத் தமிழக அரசே ஊக்கப்படுத்தும் பொழுது பொது மக்கள் இவர்களை அழைக்காமல் இருக்க மாட்டார்கள். முதலில் ஆட்சியாளர்கள் தமிழ்ப் பகைவர்களைப் புறக்கணிக்கவும் தமிழ் ஆர்வலர்களைச் சிறப்பிக்கவும் முன் வரவேண்டும். கலைஞர் அவர்கள் முன் மாதிரியாகத் திகழ வேண்டும் . அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
½) தமிழ் என்று சொல்லிக் கொண்டே சமற்கிருதத்திற்குக் காவடி தூக்கியும் வால் பிடித்தும் வருபவர் பொள்ளாச்சியார். சிந்து வெளி நாகரிக எழுத்துகள் தமிழே என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்ப்பற்றாளனாகக் காட்டிக் கொள்ள அறிஞர் மதிவாணனின் சிந்து வெளி எழுத்துகள் நூல் வெளிவர உதவியவர், தன் உண்மை முகத்தைக் காட்டுவதற்காகச்சமசுகிருதத் தோற்றம்ம இல்லாத காலத்தில் உள்ள தமிழ் எழுத்துகளைச் சமசுக்கிருத எழுத்து என்ற முறையில் தெரிவித்து ஆய்வு காணச் சொல்கிறார். மிகப் பிந்தைய காலத்தில் தமிழ் வரிவடிவத்தைப் பார்த்துத் தன் எழுத்து வடிவத்தை உருவாக்கிக் கொண்ட ஆரியனின் சமசுகிருத மொழி எவ்வாறு தமிழர் வாழ்ந்த மொகஞ்சதாரோ எழுத்துகளாக இருக்க முடியும்? குமரிக் கண்ட வரலாற்றையும் திரிக்கின்றார்.தமிழுக்குக் கேள் போல் பகைவராக விளங்கும் பொள்ளாச்சியார் திருந்த வேண்டும். அன்புடன் 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
Topic: FeTNA: ஆடுவமே பள்ளுப் பாடுவமே பழமைபேசி <pazamaipesi@gmail.com> Jun 21 12:12AM -0400 ^

FeTNA: ஆடுவமே பள்ளுப்
பாடுவமே<http://maniyinpakkam.blogspot.com/2010/06/fetna_2862.html>
*ஆடுவமே பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கூடுவமே!
*
கண்கவர் கனடியத் தேசமுதல் - தென்கோடிப்
பெருதேச மட்டும் தமிழர் கோலங் கொண்டே
ஆடுவமே பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கூடுவமே!

மானிடம் என்னுமோர் ஆதிப்பயிர் - தமிழ்
மக்களென்றே குதித்தாடுவமே!
கானிடை வாழ்ந்திட்ட மனிதர்க்கெலாம் - நல்ல
கதியினைக் காட்டினர் தமிழர் என்றே நாம்
ஆடுவமே பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கூடுவமே!

வானிடை மிதந்திடும் தென்றலிலே - மணி
மாடங்கள் கூடங்கள் மீதினிலே,
தேனிடை ஊறிய செம்பவழ - இதழ்ச்
சேயிழை யாரொடும் ஆடுவமே! நாம்
ஆடுவமே பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கூடுவமே!

கவிதைகள், காவியம், உயர்கலைகள் - உளம்
கவர்ந்திடும் சிற்பமும் சிறந்தனவாம்
குவிகின்ற பொன்பொருள் வெள்ளியெலாம் - இங்குக்
குறையிலவாம் என்றாடுவமே!பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கூடுவமே!

நாஞ்சில் ஐயனொடு பெருங்கூட்டம் இலக்கியம் செப்பிடுவர்
கவின்மிகு கவிகள் கவி பாடிடுவர், தித்திக்கும்
தீந்தமிழ்ப் பேச்சாளர் பட்டிமண்டபம் நடத்திடுவர்; நாம்
ஆடுவமே பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கூடுவமே!

ஆடுவமே பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கனெக்டிகெட்
வாட்டர்பெரியில் கூடுவமே!
*ஆடுவமே பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கனெக்டிகெட்
**வாட்டர்பெரியில் * <http://fetna.org/>*கூடுவமே! *


[image: video]

 
Topic: 6 ஆயிரம் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை!
    "எல்லைத் தமிழன்" <mathan.dxb@gmail.com> Jun 21 10:10AM +0400 ^ 6 ஆயிரம் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை!" ப.திருமாவேலன், டி.எல்.சஞ்சீவிகுமார் *கோ*டிகளைக் கொட்டி கோவையில் செம்மொழி மாநாடு நடக்க இருக்கும் நிலையில், இதற்கு முன்னால் தமிழுக்காகச் செய்யப்பட்ட காரியங்கள் எந்த அளவில் இருக்கின்றன என்று யோசிக்கலாமே! நாளிதழ்களின் ஒருநாள் தலைப்புச்செய்தி யாக மட்டுமே முடிந்துபோய் கேட்பாரற்றுக் கிடக்கும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் இதற்கு முதல் உதாரணம். ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு கோலாகல மாக நடத்தி முடிக்கப்பட்டதும் அன்றைய முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். மதுரை யில் இப்படி ஒரு சங்கம் உருவாக வேண்டும் என்று கனவு கண்டார். இடமும் ஒதுக்கினார். அதன் பிறகு அவர் கண்டுகொள்ளவில்லை. அவரால் தொடங்கப்பட்டது என்பதால், அடுத்து ஆட்சிக்கு வந்த கருணாநிதியும் கவலைப்படவில்லை. எம்.ஜி.ஆரின் அறிவிப் பைச் செய்யது முடிக்க வேண்டிய கடமை அ.தி.மு.க-வுக்கு இருக்கிறது என்ற எண்ணம் கூட இல்லாமல், ஜெயலலிதாவும் அதை மறந்துபோனார். இன்று அந்த இடத்தில் கழிவு நீர் ஓடுகிறது. இது தொடர்பாக 'தமிழ்த் தாங்கி' அமைப்பைவைத்துப் போராடி வரும் திரவிய பாண்டியனைக் கேட்டபோது, "1981-ம் ஆண்டு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் அமைக்க 14.15 ஏக்கர் நிலத்தை ஒதுக்கினார். தமிழரின் கலாசாரம், பண்பாடு, நாகரிகம் உட்பட உலகெங்கும் வாழும் தமிழரின் அனைத்துத்திறமை களையும் வெளிப்படுத்தும் ஒரு களமாக, கருவூலப் பெட்ட கமாக இந்த இடம் அமைய வேண்டும் என்பதே நோக்கம். ஆனால், 2002-ம் ஆண்டு வரை யாருமே எதையும் கிள்ளிக்கூடப் போடவில்லை. அன்றைய அ.தி.மு.க. ஆட்சி இந்த இடத்தை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழத்தின் பதிவாளர் பெயரில் பதிவு செய்தது. நாங்களும் 'சரி,வேலை துவங்கி விட்டது' என்று மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால், அதன் பின்பும் ஒன்றும் நடக்கவில்லை. 2007-ம் ஆண்டில் தொடர்ச்சியாக மதுரையில் போராட் டம், ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம். அதன் பிறகு, தமிழக அரசு இதற்கென ஓர் அதிகாரிகள் குழுவைஅமைத்து ஆய்வு நடத்தியது. தொடர்ந்து அடிக்கல் விழாவை நற்றமிழ் விழா என்ற பெயரில் நடத்த 10 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்தது. பிறகும் எதுவும் நடக்கவில்லை. திடீரென 2008-09 ஆண்டுவாக்கில் மாநகராட்சி சார்பில் அந்த இடத்தின் குறுக்கே கழிவு நீர் வாய்க்காலைக் கட்டி கழிவு நீரை உள்ளே விட்டுவிட்டார்கள். கடந்த ஆண்டு இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தோம். நீதிமன்றம், தமிழக அரசிடம் விளக்கம் கேட்டது. நிதி அமைச்சரான பேராசிரியர் அன்பழகன், 'நடப்பு ஆண்டு பட்ஜெட்டிலேயே உலகத் தமிழ்ச் சங்கம் அமைப்பதற்காக 14 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துவிட்டோம்' என்று பதில் அளித்தார். தமிழக அரசைப் பாராட்டி மதுரைமுழுவதும் சுவரொட்டி ஒட்டினோம். பிறகு, மதுரையில் அதிகாரிகள் இதற்காக ஆய்வுக் கூட்டம் நடத்தினார்கள். அதோடு சரி. இன்று அந்த இடம் சீரழிந்துகிடக்கிறது" என்கிறார். இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த அமைச்சர் அன்பழகன், மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பெயரை 'தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் சங்கம்' என்று மாற்றி, தமிழ்ப் பண்பாட்டை விளக்கும் காட்சியகம் அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். அமைக்கப்பட்ட பிறகுதான் அதை நம்ப முடியும். இப்படி, 30 ஆண்டுகளாக சுமார் 14 ஏக்கர் நிலத்தைத் தமிழின் பெயரைச் சொல்லி தரிசாகப் போட்டிருந்ததுதான் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய மூன்று முதலமைச்சர்களால் தமிழ் அடைந்த பயன்! அடுத்து நம் நினைவுக்கு வருகிறது...சென்னை யில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். இது இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடத்திய பணத்தில் மீதி இருந்த மூன்று லட்சம் ரூபாய் பணத்தை முன்தொகையாகவைத்து, முதல்வர் கருணாநிதி 1971-ல் தொடங்கினார். இன்று சென்னை தரமணியில் இதற்கான கட்டடம் இருக் கிறது. ஆனால், எப்போது இடிந்து விழுமோ என்ற பரிதாபமான நிலையில் இருக்கிறது. தமிழ்த் துறை தொடர்பான எத்தனையோ அரிய புத்தகங்கள் கொண்ட நூலகம் அங்கு இருக்கிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கின்படி 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இங்கு உள்ளன. அவற்றை மழைக் காலத்தில் காப்பாற்றுவதே பெரும்பாடாக இருக்கிறது. சரியான இடவசதி இல்லாததால் புத்த கங்களை மேலே மேலே அடுக்கி எதையும் எடுக்க முடியாத அளவுக்கு வைத்திருக்கிறார்கள். புத்தகங் களை டிஜிட்டல் ஆக்கும் வேலையும் பாதியோடு நின்றுவிட்டது. நூலகம் அமைப்பதற்காக சிவந்தி ஆதித்தன் கட்டிக் கொடுத்த இடத்தையும் சேமிப்புக் கிடங்காக மாற்றிவிட்டார்கள். ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைந்து... இதனால் ஆராய்ச்சிசெய்ய வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து, அந்த நிறுவனம் தொடங்கப்பட்ட நோக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. 'நிறுவ னத்தின் உள்கட்டமைப்பு வேலைகளுக்காக மூன்று கோடி ரூபாய்க்கு திட்டச் செலவுக் கணக்கை அரசிடம் கொடுத்துள்ளார்கள். ஆனால், இன்னும் அனுமதி வரவில்லை' என்று சொல்லப்படுகிறது. தலைநகரத்தில் இயங்கும் நிறுவனம் இப்படி இருக்கிறதென்றால்... தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் நிலை? தஞ்சை - திருச்சி சாலையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது இந்தப் பல்கலைக் கழகம். பல துறைகளிலும் கள ஆய்வு வழியாக ஆராய்ச்சி நடத்துபவர்கள் மட்டுமே இங்கு நுழைய முடியும். இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளைப் பாதுகாப்பது, மொழிபெயர்ப்பது, கல்வெட்டுக்களை ஆய்வு செய்து தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது, உலகத் தரம் வாய்ந்த படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவருவதுபோன்ற நோக்கங்களை இதன் அடிப்படையாக அறிவிக்கப்பட்டது. முனைவர், முது முனைவர் ஆய்வு மட்டுமே இருந்தது.ஆனால், இன்று அதையே பி.ஏ., எம்.ஏ., படிக்கும் கல்லூரி மாதிரி ஆக்கிவிட்டார்கள். பல்கலைக்கழகத்துக்குத் தேவை யான அளவுக்கு நிதி ஒதுக்கப்படாததால், கள ஆய்வு கள் குறைந்துவிட்டன. ஆய்வாளர்களின் ஆய்வேடுகளும் அச்சுக்கு வந்து வெளியிடும் வேலையிலும் சுணக்கம். "டாக்டர் பட்ட ஆராய்ச்சிகள்கூட இங்கு நடக் கக் கூடாது. அந்தப் பட்டம் பெற்ற பேராசிரியர்கள் கூடி தமிழ் ஆய்வுகளைத் தொடர வேண்டிய மைய மாக அது அமைய வேண்டும் என்றுதான் அறிஞர் வி.ஐ.சுப்பிரமணியம் திட்டமிட்டார். ஆனால், அது காலப்போக்கில் குறைந்து, பட்டம் வாங்கும் இடமாக மாறிப்போனது. ஒரு புத்தகம்கூட எழுதாத ஒருவர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக ஆகி மூன்று ஆண்டு கள் முடிந்து போகும் நிலை, அந்தப் பல்கலைக்கழகத்தின் தகுதி எப்படித் தரம் தாழ்ந்துவிட்டது என்பதற்கான உதாரணம்" என்று தமிழ் அறிஞர்கள் மத்தியில் நிலவும் கவலையாக இருக்கிறது. ஆய்வு நிறுவனங்களில் இருந்து பள்ளிக்கூடங்கள் குறித்து யோசித் தால்... தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சுமார் 7,000 தமிழாசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலி யாக இருக்கின்றன. ஆனால், தமிழ் படித்துவிட்டு 25 ஆயிரம் பேருக்கு மேல் முறையான வேலை கிடைக்காமல், தெருவில் அலைகிறார்கள். தமிழகத் தமிழாசிரியர் கழகத் தலைவராக இருக்கும் ஆறுமுகம் சொல்லும் புள்ளிவிவரங்கள் கவலையை அதிகப் படுத்துகின்றன. "தமிழ்நாட்டில் 772 மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலைத் தமிழ் ஆசிரியர்கள் ஒன்பது ஆண்டு களாக

ஞாயிறு, 20 ஜூன், 2010

இலங்கைத் தமிழர் பிரச்னையில் உறுதியான நிலைப்பாடு: தங்கபாலு

First Published : 20 Jun 2010 02:12:24 AM IST


சென்னை, ஜூன் 19: இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய-மாநில அரசுகள் உறுதியான நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருகின்றன என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு கூறினார்.   சென்னை சத்தியமூர்த்தி பவனில் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு கேக் வெட்டினார். தொடர்ந்து 400 பேருக்கு இலவச வேஷ்டி-சேலைகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அகில இந்திய கா்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  ராகுல் காந்தி பதவி ஆசை இல்லாதவர். காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி வழியில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக அவர் உழைத்து வருகிறார். அவருக்கு தமிழக மக்கள் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய-மாநில அரசுகள் உறுதியான நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருகின்றன. அவர்களின் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை மத்திய அரசுதான் செய்து வருகிறது. இந்த விஷயத்தில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் எடுக்கும் முயற்சிதான் உறுதியானதாகும். ஜெயலலிதா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தவறாக கூறுவதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மேலும் இவர்களால் இலங்கைத் தமிழர்களுக்கு எதுவும் செய்துவிட முடியாது. சீனக் கைதிகள் இலங்கையில் குடியமர்த்தப்படுவதாக ஜெயலலிதா கூறுகிறார். இதனால் இந்தியாவுக்கோ, இலங்கைத் தமிழர்களுக்கோ எந்தப் பிரச்னையும் இல்லாமல் மத்திய அரசு பார்த்துக் கொள்ளும் என்றார் தங்கபாலு. இந்த விழாவில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், எம்.எல்.ஏ.க்கள் கோபிநாத், விஷ்ணு பிரசாத், யசோதா, காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆர். தாமோதரன், சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் ஹசீனா சம்பத் உள்பட பல்வேறு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்


உண்மைதான்.இலங்கைத் தமிழர பற்றியும் ஈழத் தமிழர் பற்றியும் உறுதியான நிலைப்பாடு காங்.கிற்கு உள்ளது. அந் நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் தமிழர்களைக் கொன்றொழித்து இடுகாட்டு அமைதியை உருவாக்க எண்ணுகிறது; தமிழ் நிலத்தைச் சிங்கள நிலமாக மாற்றும் சிங்கள அரசிற்கு வலிந்து உதவுகிறது; கொடுங்குற்றவாளியாக இருந்து கொண்டே பாதிக்கபட்டவர்கள் நலனைக் காப்பாற்றுவதாகப் பொய்யுரை கூறுகிறது;கூட்டுக் கொலையாளிக்கு வேண்டிய நிதியுதவிகளும் பரிசுகளும் அள்ளித் தருகி்ன்றது. எனவே,இந்த உறுதியான நிலைப்பாட்டிற்கான விலையைக் காலம் காங்கிரசிற்கு அளிக்கும் எனப்து மட்டும் உறுதி!உறுதி!உறுதி! இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/20/2010 2:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *