சனி, 31 ஜூலை, 2010

நாளை காங்கிரஸில் இணைகிறார் செல்வப்பெருந்தகை


சென்னை, ஜூலை 30: பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. காங்கிரஸில் இணைகிறார்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் விழாவில், மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளருமான குலாம்நபி ஆசாத், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியிலிருந்து தமிழக சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் கு. செல்வப்பெருந்தகை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்சித் தலைவர் திருமாவளவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் (பி.எஸ்.பி.) இணைந்தார். பி.எஸ்.பி. மாநிலத் தலைவராக இருந்த அவர் சில வாரங்களுக்கு முன்பு அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.அதனைத் தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியில் சேர முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியாகின. அதற்காக அவர் தில்லியில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களான குலாம்நபி ஆசாத், ஜனார்த்தன் துவேதி, அகமது படேல் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.செல்வப்பெருந்தகை மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதால் அவரை கட்சியில் சேர்க்க சில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் சத்தியமூர்த்தி பவனில் ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறும் விழாவில் ப. சிதம்பரம், குலாம்நபி ஆசாத், தங்கபாலு ஆகியோர் முன்னிலையில் அவர் காங்கிரஸில் இணையப் போவதாக சென்னையில் பல இடங்களில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து தங்கபாலுவிடம் கேட்டபோது, செல்வப்பெருந்தகை காங்கிரஸில் இணைய இருப்பதை உறுதி செய்தார்.காங்கிரஸில் இணைவது குறித்து செல்வப்பெருந்தகை கூறியது:ஆகஸ்ட் 1-ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் விழாவில், சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர் உமா சாசவி, பி.எஸ்.பி.யின் 26  மாவட்டத் தலைவர்கள், மாநிலப் பொதுச்செயலாளர் தளபதி, பொருளாளர் கிருபானந்தம் ஆகியோருடன் காங்கிரஸ் கட்சியில் இணைகிறேன். 1967-க்கு பிறகு எம்.எல்.ஏ. ஒருவர் காங்கிரஸில் இணைவது இதுதான் முதல் தடவை என்று கூறி தில்லியில் காங்கிரஸ் தலைவர்கள் என்னை வரவேற்றனர் என்றார்.
கருத்துக்கள்

பணம் கை மாறியிருக்குமே! ச.ம.உ. பதவியை உதற வேண்டியதுதானே! இடைத் தேர்தல் நடைபெற்றுத் தொகுதி மக்கள் பயனுறட்டுமே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/31/2010 2:53:00 AM
கட்சி தாவல் தடை சட்டத்தை பயன்படுத்தி இந்த பரதேசியின் பதவியை பறிக்க முடியாதா?
By எழில்
7/31/2010 2:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

ஆலடி அருணா கொலை வழக்கில் எஸ்.ஏ. ராஜா விடுதலை


புதுதில்லி, ஜூலை 30: முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் கல்வியாளர் எஸ்.ஏ. ராஜாவுக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.÷திருநெல்வேலி மாவட்டம், ஆலடிப்பட்டியைச் சேர்ந்த ஆலடி அருணா 31.12.2004-ல் அதே ஊரில் காலையில் நண்பருடன் நடைபயிற்சிக்கு சென்றபோது ஒரு கும்பல் வழிமறித்து இருவரையும் வெட்டிக் கொலை செய்தது.÷கல்வியாளர் எஸ்.ஏ. ராஜா உள்ளிட்டோர் இந்த வழக்கில் எதிரிகளாகச் சேர்க்கப்பட்டனர். 17.4.2008-ல் திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இருவருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. ராஜா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.÷ராஜா விடுதலையை எதிர்த்து அரசு சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதன் மீதான தீர்ப்பு 5.8.2009-ல் கூறப்பட்டது.÷இதில், எஸ்.ஏ. ராஜா, ஆறுமுகம், 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வேல்துரை ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.÷இரட்டை ஆயுள் தண்டனையை எதிர்த்து எஸ்.ஏ. ராஜா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 2009-ல் மேல் முறையீடு செய்யப்பட்டது.÷ஆலடி அருணாவை கொலை செய்வதற்கு ராஜாவுக்கு காரணங்கள் இருந்ததாக நிரூபிக்கப்படவில்லை என்பதாலும், கொலையாளிகளுக்கு ஏற்பாடு செய்தார் என்று நிரூபிக்கப்படவில்லை என்பதாலும், அவருடைய வயதைக் கருத்தில் கொண்டும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
கருத்துக்கள்


அகவையை (வயதை)க் காட்டி விடுதலை என்பதை நீதிமன்றங்கள் பல வழக்குகளி்ல் மறுத்துள்ளன. அவ்வாறாயின் எசு.ஏ.இராசாவின் அகவையும் அதற்கு மேலும் உள்ள தண்டனைவாசிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/31/2010 2:45:00 AM

ஐயகோ, இந்தியாவில் தப்பு செய்தவனுக்குத் தண்டனையா? இது எப்படி சாத்தியம்? அதுவும் கொலை, கொள்ளை போன்றவைகளுக்கு எங்கள் நாட்டிலே எந்த தண்டனையும் கிடையாதே. தப்பு செய்யாதவன் கூட தண்டிக்கப்படலாம், , ஆனால், தப்பு செய்தவன் ஒருநாளும் தண்டிக்கப்படக் கூடாது. அதனால் சர்தார் ராஜாவுக்கு இந்தா விடுதலை. ஆமா, தப்பா தீர்ப்பு சொன்ன உயர்நீதிமன்ற நீதிபதிக்கு தண்டனை ஏதும் இல்லையா?
By படிக்காத பாமரன்
7/31/2010 12:17:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
ம.தி.மு.க.வின் அங்கீகாரம் ரத்து


சென்னை, ஜூலை 30: ம.தி.மு.க.வின் மாநில கட்சி அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.  ஒரு அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்தால் மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், சட்டப்பேரவையில் உள்ள ஒவ்வொரு 30 உறுப்பினர்களுக்கும் ஒரு உறுப்பினர் என்ற வீதத்தில் அந்தக் கட்சியின் பலம் இருக்க வேண்டும். இல்லையெனில், மாநிலத்திலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு 25 உறுப்பினர்களிலும், ஒரு உறுப்பினர் சம்பந்தப்பட்ட கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும்.  இந்த விதிகளின்படி, தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், அந்தக் கட்சிக்கு சட்டப்பேரவையில் குறைந்தது 8 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இல்லையெனில், மக்களவையில் 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், கடைசியாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் பதிவான செல்லத்தக்க மொத்த வாக்குகளில், அந்தக் கட்சி குறைந்தது 6 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்.  ம.தி.மு.க.வைப் பொருத்தவரை இந்த மூன்று நிபந்தனைகளையும் நிறைவேற்ற முடியாததால், அந்தக் கட்சியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அண்மையில் தில்லி சென்ற அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, தலைமை தேர்தல் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.  இந்நிலையில், ம.தி.மு.க.வின் மாநிலக் கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.  அதேபோல், அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் மூலம் இனி ம.தி.மு.க.வால் தேர்தல் பிரசாரம் செய்ய முடியாது.  அடுத்த பொதுத்தேர்தலில் பெறும் வாக்குகளைப் பொருத்து, ம.தி.மு.க.வுக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்குவது பற்றி தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.  இதேபோல் புதுச்சேரியில் பா.ம.க. அங்கீகாரத்தை இழந்துள்ளது. அருணாசல பிரதேசத்தில் அருணாசல காங்கிரஸ், உத்தராஞ்சல், மத்தியப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி, பிகார், ஜார்க்கண்டில் ஐக்கிய ஜனதா தளக் கட்சி ஆகியவற்றின் மாநில கட்சி அங்கீகாரத்தையும் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.  எனினும், புதுச்சேரியில் அங்கீகாரத்தை இழந்துள்ள பா.ம.க., தமிழகத்தில் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக செயல்படும்.  குறைந்தது ஐந்து மாநிலங்களிலாவது மாநிலக் கட்சியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நிறைவேற்றாததன் காரணமாக, லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது."பம்பரம் நீடிக்கும்'அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் சின்னத்தை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ம.தி.மு.க.வின் பம்பரம் சின்னம் நீடிக்கும்.
கருத்துக்கள்


முட்டாள்தனமான கோட்பாடு.இதனால் ஒவ்வொரு கட்சியும் 8 சட்டமன்றத் தொகுதியிலாவதுஅல்லது 2 மக்களவைத் தொகுதியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற அளவில் தொகுதி கேட்பதும் பெருகும். கூட்டணியில் வெற்றி பெற்ற தொகுதியில் பிற கட்சிகளின் வாக்குகள் இருக்கின்றன; பிற கட்சிகளின் வெற்றியில் இக்கட்சியின் வாக்குகளும் இருக்கின்றன. எனவே, பலகட்சிமுறை அரசியல் எனில் கட்டுப்பாடு தேவையில்லை. அல்லது இரு கட்சி முறை அல்லது சில கட்சி முறை அரசியலை அறிமுகப்படுத்திச் சிறு கட்சிகளை ஒழிக்க வேண்டும்.மக்களுக்குக் குரல் கொடுக்கும் கட்சியைப் புள்ளி விவரம் அடிப்படையில் கட்சியே இல்லை என்று சொல்வது பொருந்தாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/31/2010 2:37:00 AM
Hello Sir Honorable Sivaramakrishnamoorthy, I am trying to understand what you are telling. நீங்க புத்திசாலி மட்ட்ரவங்க எல்லாம் ஒன்னும் தெயரியதவங்க, Western countries treat people escaping from unfortunate situation in their home country decently. To be a human I think We should not insult people because of their unfortunate situation that is not their fault, I know you support DMK or ADMK (both screwed up party) nothing else you know Sagathevan, Veemanagar, Pondicherry
By saga
7/31/2010 1:45:00 AM
ஹலோ Ponmalai Raja, நீ என்ன சிலோன் அகதியா? தமிழக அரசியலில் வைகோவெல்லாம் காமெடி பீஸு.
By Sivaramakrishnamoorthy
7/31/2010 1:00:00 AM
Well said Ponmalai Raja
By Tamilan
7/31/2010 12:41:00 AM
Dear Vaiko, Cheer up. The day will come very soon in which you will get the recognisation of the Tamil Nadu people and Your party will get the recognisation of the Election Commission and you will be focussed as the Chief Minister candidate.
By Ponmalai Raja
7/31/2010 12:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 30 ஜூலை, 2010





தினமலர் முதல் பக்கம் » கார்ட்டூன்ஸ்    



Hilarious political cartoon images








இடஒதுக்கீட்டுப் பிரச்னை: ஜாதிவாரி கணக்கெடுப்பே தீர்வு- கருணாநிதி


சென்னை, ஜூலை 29: ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொண்டு தமிழகத்துக்கான இடஒதுக்கீட்டு அளவை நிர்ணயம் செய்த பிறகே தனி ஒதுக்கீடு பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியிருந்தார். இதற்குப் பதிலளித்து முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:  பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதில், மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு தனியே 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதும், பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை இஸ்லாமியர்க்கு 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கியதும், அருந்ததியர்களுக்கு 3 சதவீத தனி உள்ஒதுக்கீடு வழங்கியதும், பழங்குடியினருக்கு ஒரு சதவீதம் தனி ஒதுக்கீடு வழங்கியதும் திமுக ஆட்சியில் தான்.ராமதாஸின் கோரிக்கை: அருந்ததியர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கி வருவதை முன்னுதாரணமாகக் காட்டி, வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று ராமதாஸ் கூறியிருக்கிறார். அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உள் ஒதுக்கீட்டையும், சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தனி இடஒதுக்கீட்டையும் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீட்டுடன் ஒப்பிடுவது பொருத்தமாக இருக்காது.ரூ.400 கோடி தேவை: தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கென நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று இந்திய உச்ச நீதிமன்றத்திலே 1994-ம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டு, ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பொன்றை வழங்கி இருக்கிறது.  ஒரு மாநிலம் 50 சதவீத இடஒதுக்கீட்டு அளவை விஞ்ச வேண்டுமென்றால் அதனை நியாயப்படுத்துவதற்குத் தேவையான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் முடிவு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தனது இடைக்காலத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் நாம் தேவையான புள்ளிவிவரங்களை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அளித்து அந்த ஆணையம் நாம் அளித்திடும் புள்ளிவிவரங்களை ஆராய்ந்து இடஒதுக்கீட்டு அளவை முடிவு செய்யும் வாய்ப்பை உருவாக்க வேண்டும்.  இந்தப் புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதற்கு நமக்கு ஜாதிவாரியான மக்கள் தொகை விவரங்கள் வேண்டும். அதற்கு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழகத்தில் மட்டும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டுமென்றால் அதற்கு ரூ.400 கோடி நிதி தேவைப்படுகிறது. அந்த நிதியை மத்திய அரசிடம் இருந்து கேட்டுப் பெறலாம் என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆலோசனை வழங்கி இருக்கிறது.  உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி, தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால் தான், வன்னியர்களுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு அளிக்கலாம்; ஒவ்வொரு தனிப்பட்ட ஜாதியினருக்கும் எவ்வளவு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்பதையெல்லாம் முடிவு செய்திட இயலும். அப்படியில்லை என்றால், நாம் எடுக்கும் முடிவு சட்டத்துக்குப் புறம்பானதாக ஆகிவிடக் கூடும். எனவே, வன்னியர்களுக்குத் தனி இடஒதுக்கீடு என்ற பிரச்னையில் நாம் உடனடியாக அவசர முடிவு எதையும் மேற்கொள்வதற்கு உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு இடம் தரவில்லை என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொண்டு நமது மாநிலத்துக்கான இடஒதுக்கீட்டு அளவை நிர்ணயம் செய்து அதற்குப் பிறகு தனி இடஒதுக்கீடு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது தான் சட்டப்படியான அணுகுமுறையாக அமைந்திடும். அதில், அவசரம் காட்டினால் பிரச்னை திசை திரும்பி விடக்கூடும். இதனால், இருப்பதையும் இழந்துவிடக் கூடாது என்பதாலும் தொடர்புடைய அனைவரும் இந்த இடஒதுக்கீட்டுப் பிரச்னையில் இணக்கமான ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்துக்கள்

முதல்வர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். எனவே, சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு மத்திய அரசை வலியுறுத்தி வெற்றி காண வேண்டும்.அதன்பின் ஆளாளுக்குத் தங்கள் சாதிதான் மூன்றில் ஒரு பங்கு அல்லது நான்கில் ஒரு பங்கு இருப்பதாகக் கதை விடுவது நின்று விடும். இராமதாசும் சாதித்தலைவர் என்ற நிலையில் இருந்து மாறி வர வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/30/2010 2:39:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

வியாழன், 29 ஜூலை, 2010

பாலம் கல்யாணசுந்தரத்துக்கு விருது

சென்னை,ஜூலை 28: பாலம் கல்யாணசுந்தரத்துக்கு சிறந்த சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது. அறவாணன் அறக்கட்டளையின் சார்பில் ஆகஸ்ட் 8-ம் தேதி லயோலா கல்லூரியில் நடைபெறவுள்ள விழாவில் இந்த விருது வழங்கப்படும். தமிழிலும், தமிழ் பற்றி ஆங்கிலம் முதலான மொழிகளிலும் தொண்டாற்றியவர்களுக்கு அறவாணன் அறக்கட்டளையின் சார்பில் ஆண்டு தோறும் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, விருத்தாசலத்தில் திருக்குறளுக்கு என தனி நூலகம் அமைத்துள்ள பல்லடம் மாணிக்கம், "அறிக அறிவியல்' என்ற இதழை நடத்தி வரும் காரைக்குடி செக்ரி விஞ்ஞானி நோயல் ஆகியோருக்கு விருது வழங்கப்படவுள்ளது.
கருத்துக்கள்

தக்கவர்களுக்கு விருதுகள் வழங்கப் பெறுகின்றன.விருதாளர்களுக்கும் விருது வழங்குநருக்கும் பாராட்டுகள். 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/29/2010 4:06:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
காங்கிரஸ் தலைவர்களுக்கு திமுக அரசில் கௌரவம்: கருணாநிதி


சென்னை, ஜூலை 28: காங்கிரஸ் தலைவர்கள் திமுக அரசில் கௌரவிக்கப்பட்டு  வருகின்றனர் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டது அதிமுகவுக்குக் கிடைத்த வெற்றி என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்து, முதல்வர் கருணாநிதி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:  காமராஜர் பெயரை வைக்கக் கூடாது என்று கருதுகின்ற அரசா இது? கக்கன் சிலையை வைக்கத் தயங்குகின்ற ஆட்சியா இது? காமராஜர் பிறந்த நாளை தியாகிகள் தினமாகவும், கல்வி வளர்ச்சி நாளாகவும் அறிவித்து சட்டம் நிறைவேற்றிக் கொண்டாடுகின்ற அரசல்லவா இது?  காமராஜர் மறைந்த போது அவரது உடலை அரசு மரியாதைக்காக ராஜாஜி ஹாலில் வைக்க வேண்டுமென்று சொன்னவனே நான்தானே? கடற்கரைச் சாலைக்கு காமராஜர் சாலை என்று இவர்கள் எல்லாம் கோரிக்கை வைத்த பிறகு, உண்ணாவிரதம் இருந்த பிறகா நான் பெயர் சூட்டினேன்? மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு அண்ணாவின் பெயரையும், காமராஜரின் பெயரையும் வைக்க வேண்டுமென்று அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங்கிடம் நான் கோரிக்கை வைத்து நிறைவேற்றினேன். அப்போது, ஜெயலலிதாவும், அவருடைய கட்சியினரும் எங்கே போனார்கள்? கன்னியாகுமரியில் காமராஜருக்கு மணிமண்டபம் எழுப்ப வேண்டுமென்று கோரிக்கை வந்த போது, மத்திய அரசு அதனை ஏற்க மறுத்தது. ஆனால், மத்திய அரசிடம் வாதாடி விதிவிலக்குப் பெற்று காமராஜர் மணிமண்டபத்தை எழுப்பக் காரணமாக இருந்தவன் நான். சென்னை மாநகராட்சிப் பொறுப்பில் திமுக இருந்த போது, பெரியார் பாலத்துக்கு அருகே காமராஜருக்கு சிலை அமைத்து, அன்றைய பிரதமர் நேருவைக் கொண்டு திறந்து வைக்கப்பட்டது. தியாகி கக்கன் முழு உருவ வெண்கலச் சிலை மதுரையில் கடந்த 1997-ம் ஆண்டு என்னால் திறக்கப்பட்டது. அந்த மாவட்டத்தில் உள்ள தும்பப்பட்டியில் தியாகி கக்கனுக்கு ரூ.25 லட்சத்தில் நினைவு மண்டபம் கட்டி முடித்து அதையும் நான் திறந்து வைத்தேன்.  சென்னை மாம்பலம் சி.ஐ.டி. நகரில் தியாகி கக்கனுக்கு அரசுக் குடியிருப்பை ஒதுக்கீடு செய்தது திமுக அரசு. மேலும், கக்கனின் வாரிசுகளுக்கு மாதச் செலவுக்கான நிதி உதவியையும் செய்தது திமுக ஆட்சியில் தான். கக்கனுக்கு நினைவு தபால் தலையும் வெளியிடப்பட்டது. இதையெல்லாம் ஜெயலலிதா மறைத்து விட்டார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கருத்துக்கள்

கலைஞர் சொல்வது முற்றிலும் உண்மை. தி.மு.க. அல்லது அ.தி.மு.க. கட்சிகளில் இருந்து காங்.கிற்குத் தாவிய எழுத்தாளர்கள் , நாங்கள் கட்சி மாறிய பின்பும் எங்களது புத்தகங்களை தி.மு.க., அ.தி.மு.க. தலைவர்கள் அல்லது அமைச்சர்களைச் சந்தித்துக் கொடுத்தால் ஐந்தாயிரம் அல்லது பத்தாயிரம் உருபாய் கொடுத்து ஆதரிக்கிறார்கள்; காங்.கில் அத்தகைய எண்ணமே கிடையாது. என்று சொல்லியிருக்கிறார்கள்.ஆனால், அளவிற்கு மீறிக் காங்.கிற்கு முதன்மை அளிப்பதும் தி.மு.க.வை ஒட்டுக் காங்கிரசு அல்லது பெட்டிக் காங்கிரசு எனச் சொல்லும் வகையில் மாற்றுவதும்தான் தவறு. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/29/2010 4:00:00 PM
R.Geetha !!!!!!!!!!நீ சொன்னதெல்லாம் சாதனையா? எல்லாமே வேலைஅற்ற வேலை. ஒரு முதல்வர் வேலை என்ன தெரியுமா? திறைமையான நிர்வாகம, முறையான வழிகளில் வருவாய் பெருக்கம், வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி கல்வி மேம்பாடு, மின் உற்பத்தி என்று பயனுள்ளதாக சொல்லிக்கொண்டே போகலாம். நீ சொல்லிருப்பது ஏட்டில் எழுதி அழகு பார்க்கலாம். அவ்வளவுதான். போய் சமையலை பாரு! இல்லாங்காட்டி KARUNANITHI டி வி பாரு! போ NEYELLAM???????????????
By KANIMOZERAJA
7/29/2010 3:22:00 PM
Kamarajarai Nananja Pana maram enrum peyar soottiyathu you are and you named all panchayat president as Ooratchi Onriya Perunthalaivar. You peopel spend a lot of money for Annadurai samadhi and you have no intention to modify the kamaraj memorial. Government money is misused by Dravida govt to discriminate Kamaraj not to spend money on modifying and lot of govt money was spent on those who have done looty with actress and spoiled tamilnadu politics
By tamilan
7/29/2010 3:16:00 PM
muthamil means atleats ur CM kows what it is he wrote only scripts for film how he become Muthamil vithahar. then the real muthamil vithar hal where they will go only good title is thaan matum thirudi unamal kudumbathuke, mattum sahothir kudumbathukum sethe 3 manaivihal kudumbathukum sethe thirudi sothu sertha maaa perum muthalvar entu venmanal solalal. JJ did corruption means you CM did not do corruption kya they have half the share of spice jet how they get money the money you bring to chennai 15 rupees you deposited in a bank they gave interest and in that you bought all these. atleast jj was richer by here grandfather and mother and she also acted so many films. but how you get 2 cr or 40 cr for films which do not even run 2 days god only knows i think these are the way Cm makes black money to white
By Makesh
7/29/2010 1:47:00 PM
Geetha which tamil people came and asked the government to change the new year??? to pongal day??????? no one and real tamil peopel dont follow what ur stupid CM did and even sun tv relayed programs on april 14 as tamil new year. ur stupid cm thigs he is a great man to change new year kya rowdy gundas family he has one son as rowdy and one rapist son. tamil new eyar will be celebrated on april only. people are not ready to change why You DMK idiots gettting mad
By Makesh
7/29/2010 1:29:00 PM
கக்கன்ஜி வாரிசுகள் அரசு நிதியுதவி பெற்று ஒப்பற்ற புனித வாழ்க்கை வாழுறாங்க !...ஏய் மைனாரிட்டி ! உன்வாரிசுகளைப் பாரடா ....மக்கள் வளம்களைத் திருடி விமானங்கள் விடுறாங்க !....மக்களை மொட்டையடித்து அவங்க தலையினில் சுமையாக உட்கார்ந்திருக்குறாங்க  !. காங்கிரஸ் காரனுக்கு சொரணை இல்லையென்றால் ..காமராசர் பேருல இவன் போடும் பிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டியதுதான் !!! .மக்களுக்குச் சொரணை இல்லையென்றால் ஒத்த ரூபாய்க்கு அரிசி வாங்கி கஞ்சி காய்ச்சி உப்பின்றி குடிக்க வேண்டியதுதான் !@ rajasji
By rajasji
7/29/2010 12:21:00 PM
Neenga moodunga...kadandha naalu varushmaa aachiyila pangu kudukaamaa avargala yemathittu vareenga..ungalukku aaapu ready aayiduchu ragul gandhi vadivil... Neenga congress kaarangalukku mariyadhi kudupeengalaaa.... indira gandhi maduraikku vandhappa avungalukku selai pidichu iluthu nalla mariyadhi kudutheengale.., adha unmayana endha congress kaaranum marakka maataan.., Ippa irukura ella congress kaaranum neenga kudhtha 100 yecure nelamum 10 bangalow vum vaangittu ungaloda pechukku jaaldra poduraa kootamdhaana.., So pls keep quit CM.., romba nadikaadeenga romba aadadeenga kalam padhil sollum..,neram nerungiruchu Mr.CM let us see..,Unoda kabada naadagathukku mutru pulli veikka makkal ready ok va...,
By Tamilanagiya indian
7/29/2010 12:02:00 PM
செத்தவங்களுக்கு செலை வைக்கறது, அவங்க பேர வைக்கறதுன்னு எல்லாத்தையும் நீங்க செஞ்சது, இது போல சொல்லிக் காட்டிகிறதுக்குத்தான். ஏதோ நீங்க இல்லன்னா அவங்க யாரு பேருமே வரலாறுல இருந்திருக்காதுன்ற மாதிரி இவ்ளோ கேவலமா நீங்க சொன்னதுக்கு அப்புறம், நீங்க செஞ்சதுக்கு என்ன மறியாதை இருக்கப் போவுது? தமிழனோ தமிழ் நாடோ உருப்படற மாதிரி, உலகத்தொட போட்டி போடற மாதிரி தொலை நோக்கோட நீங்க செஞ்சது ஏதாவது உண்டா? அப்பிடி செஞ்சிருந்தா, அதுக்குப் பின்னாடி குடும்ப நலன் ஒளிஞ்சிருக்கும்! எல்லா மேடையிலயும் சாதியையும், மதத்தையும் ஏத்தி சண்டையை உண்டாக்கறது நீங்கதானே? கடைசியா சொல்லனும்னா, நீங்க தலையெடுத்ததுக்குப் பிறகு தமிழகத்துல எந்த துறையிலயும், முக்கியமா கலை, இலக்கியத்துல திறமைசாலிங்க அடையாளம் காணப்படவில்லைன்றதுதான் அப்பட்டமான உண்மை. ஏன்னா, எல்லா இடத்திலயும் வேற யாரையும் விடாம நீங்கதான் திறமைசாலின்னு முன்ன நிப்பீங்க!(அட விடுப்பா. அந்த கீதா ஒரு மாநில அரசு ஊழியை!)
By Murugadoss
7/29/2010 11:31:00 AM
கீதா! நீ சொன்னதெல்லாம் சாதனையா? எல்லாமே வேலைஅற்ற வேலை. ஒரு முதல்வர் வேலை என்ன தெரியுமா? திறைமையான நிர்வாகம, முறையான வழிகளில் வருவாய் பெருக்கம், வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி கல்வி மேம்பாடு, மின் உற்பத்தி என்று பயனுள்ளதாக சொல்லிக்கொண்டே போகலாம். நீ சொல்லிருப்பது ஏட்டில் எழுதி அழகு பார்க்கலாம். அவ்வளவுதான். போய் சமையலை பாரு! இல்லாங்காட்டி டி வி பாரு! போ தாயி!
By கிராம வாசி
7/29/2010 11:14:00 AM
history is history. since chief minister is silent on present situation; it confirms that name of radhapuram bus stand was changed due to pressure.
By karpakarajan
7/29/2010 10:55:00 AM
தினபூமி பத்திரிகை ஆசிரியர் கைதானது,ஒரு 'அஞ்சா நெஞ்சவேலை. பினாமியில் குவாரி நடத்துவது வேறு யார்? அது மஞ்சதுண்டுக்கு தெரியாமல் நடந்தது என்பது நாடகம். பீலா No1 . இந்த வயதிலும், வாழ்க்கையின் கடைசிப் பகுதியிலும் பொய்யே வாழ்க்கையா? பித்தலாட்டமே மூச்சா?' .
By R.Srinivasan
7/29/2010 10:31:00 AM
rajasji என்பவருக்கு பதில் 1) அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை _ தமிழில் வழிபாட்டு உரிமை. 2) தமிழை செம்மொழியாக அங்கீகரிக்கச் செய்தது. 3) தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு சட்டம் 4) தீட்சிதர் கைகளில் சிக்குண்டு கிடந்த சிதம்பரம் நடராசன் கோயிலை அரசின் துறைக்குக் கீழ் கொண்டு வந்தது. 5) வடலூர் இராமலிங்க அடிகளார் அவர்களால் உருவாக்கப்பட்ட சத்திய ஞானசபையிலிருந்து பார்ப்பனரை வெளியேற்றி, தமிழர் கையில் நிலை நிறுத்தியது. 6) ஏற்கெனவே தம்மால் தொடங்கப்பட்ட பெரியார் நினைவு சமத்துவப்புரங்களை மேலும் விரிவாக்கி, ஒவ்வொரு சமத்துவப்புரத்திலும் தந்தை பெரியார் சிலை நிறுவியது. 7) இத்துடன் ஏழாவது அம்சமாக தமிழிசை மூவருக்குச் சீர்காழியில் 1.51 கோடி ரூபாய் செலவில் மணி மண்டபம் கட்டும் திட்டம். மொழி உணர்வும், இனவுணர்வும் கொண்டவர்கள் எந்த முகாம்களில் இருந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து, இவற்றிற்காக மானமிகு கலைஞர் அவர்களுக்கு மகத்தான நன்றியையும் மாசுமருவற்ற பாராட்டையும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
By R.Geetha
7/29/2010 10:29:00 AM
How come Nehru opned kamaraj satue ?
By Sakthi
7/29/2010 10:22:00 AM
2)ஒரு ரூபாய் மட்டமான அரிசி வாங்கி உன்னும் அளவுக்கு .5 ஆண்டு நமை அண்ட கட்சி நம்மை எதுவும் உயர்த்தவில்லை .நாம் என்ன இவளவு கீல் நிலையில் உள்ளோம் நமை அலைவார்கள் இடம் உள்ள பணம் பல லட்சம் கோடி வட்டம் குடம் இடமே பல கோடி இருக்கிறது ஒரு ரூபாய் மட்டமான அரிசி வாங்கி நம் பாசம் மிகு குழந்தைக்கு ஊட்ட விட வேண்டிய மிக பெரிய அவல நிலை ஏன்? நம்மை ஆண்டவர்கள் நமக்கு உரிய நல வாழ்வு திட்டம் எதுவும் நமக்கு பன்னவிலையே .என்ன பரிதாப நிலை இதை அலைபவர்கள் இதை சாதனையாக நம்மிடம் குறி ஒட்டு கேட்கின்றனரே .மனது அழுத்துகிறது
By ORU RUPAI ARISI
7/29/2010 9:32:00 AM
ஒரு ரூபாய் அரிசி .முன்பு நியாய விலை அங்காடி அரிசி ஒரு கிலோ ரூபாய் 3 .50 ஒரு குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி .அதில் பாதி சாததுக்கு பழக்கம் இல்லாத பச்சை அரிசி 3 .50 *20 =70 ரூபாய் . .இன்று நியாய விலை அங்காடி அரிசி ஒரு கிலோ ரூபாய் 1 . ஒரு குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி .அதில் பாதி சாததுக்கு பழக்கம் இல்லாத பச்சை அரிசி .1 *20 =20 ரூபாய் ஒரு குடுமப்டுகு லாபம் 50 ரூபாய் .இன்று வெளி சந்தில் அரிசி குறித்த அரிசி விலை 20 ரூபாய் மேல்.சுமார் 10 ரூபாய் மேல் ஏறி உள்ளது .ஒரு குடும்பம் 20 கிலோ அரிசி வங்கி ஒரு மாதம் முழுவதும் உணவு உன்ன முடியுமா .அவர்கள் வெளி சந்தை 20 ரூபாய் மேல் உள்ள அரிசி வாங்கி உண்பர் 6 கிலோ வாங்கினாலே அவர்களுக்கு அதிக செலவு மாதம் 60 .அவர்கள் நீயா விலை கடை விலை குறைப்பு முலம் சம்பாதித்த லாபம் 50 தான்.அவர்கள் 5 கிலோ மேல் வாங்கும் பொழுது நட்டம் ஆரம்பம் ஆகிறது .மற்ற விலை வாசி ஏற்றத்தி பற்றி பேசினால் தலி சுற்றி விடும் .இதை வாசிக்கும் பலர் நீயா விலை அங்காடி அரசி வாங்கமடிர்கள் என்று நினைக்கிறன் .நீங்கள் மகளுக்கு புரியும் படி எளிய மக்களுக்கு விளக்கு . ஒரு ரூபாய் மட்டமான அரிசி வாங்கி
By ORU RUPAI ARISI
7/29/2010 9:30:00 AM
ellorukkum silai vaithu nee nantraha thaan vaalkiraai
By success
7/29/2010 8:39:00 AM
Cheating the Congress for the last 4 years without giving them any post. Once you Rahul Gandhi is trying to get Deputy Chief Minister post through AIADMK, trying to appease Congress. Hope Congress do a good bargain and get into the next rule to stop the ruling party looting and stop the irresponsible free schemes throwing public money into toilet.
By C Suresh
7/29/2010 8:26:00 AM
அடுத்த ஜோக் மதுவிலக்கா? 1972 இல் 'மதுவிலக்கு நீக்கப்படவில்லை. தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுகிறது' என புதுமொழி பகர்ந்து, கழகக் கண்மணிகளுக்கு சாராயக் கடை லைசென்சுகளை தாரளமாக வழங்கியது நினைவில் நீங்காமல் உள்ளது! தாற்காலிகம் என்பது 38 வருடம்? அண்ணல் ராஜாஜி கோபாலப்புரதுக்கே வந்து கெஞ்சியும் மதுஅரக்கனுக்கு வழி செய்து கொடுத்தாகி விட்டது!மது வாசனையே அறியாத தலைமுறையை மொடாக்குடிகாரர்களாக்கி சீரழித்தாகியாயிற்று! இப்போது மதுவிலக்கு அறிக்கை மூலம் தமிழ்க்குடிதாங்கியை மகிழ்விக்க ஒரு நாடகம். மூடப்படப்போகும் டாஸ்மாக் கடைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தர அறிக்கை ஜோக் வேறு!அடுத்தது? சினிமாவை மிஞ்சும் அரசியல் கதைவசனம்!
By MANI
7/29/2010 7:41:00 AM
தினபூமி பத்திரிகை ஆசிரியர் கைதானது,ஒரு 'அஞ்சா நெஞ்சவேலை. பினாமியில் குவாரி நடத்துவது வேறு யார்? அது மஞ்சதுண்டுக்கு தெரியாமல் நடந்தது என்பது நாடகம். பீலா No1 . இந்த வயதிலும், வாழ்க்கையின் கடைசிப் பகுதியிலும் பொய்யே வாழ்க்கையா? பித்தலாட்டமே மூச்சா?' .
By Mustoch
7/29/2010 6:46:00 AM
அட போயா, போட்ட கையெழுத்தையே இல்லேன்னு கூசாம பொய் சொல்லுறப்போ...நீ காமரசருக்கும் கக்கனுக்கும் செஞ்சத சொல்றதுக்கா கட்சி நடத்துராக பச்சையம்மா? இதெல்லாம் நீ ஈவிகேஎஸ் இளங்கோ கிட்ட போய் சொல்லு!
By கூஜாஸ்ஜி
7/29/2010 6:14:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *