சனி, 4 செப்டம்பர், 2010

திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் 60 வயதைக் கடந்த 11 பேராசிரியர்கள் நீக்கம்


திருச்சி, செப். 3: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 60 வயதைக் கடந்த 11 பேராசிரியர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் கூட்டம் கடந்த மாதம் 13-ம் தேதி நடைபெற்றது. இதில், 60 வயதைக் கடந்த பேராசிரியர்களைப் பணியிலிருந்து விடுவிப்பது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, முனைவர்கள் ச.சு. ராமர் இளங்கோ, க. நெடுஞ்செழியன் உள்பட 11 பேராசிரியர்கள் நீக்கப்பட்டனர்.இந் நிலையில், பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில், இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குத் துணைவேந்தர் கே. மீனா அளித்த பதில்:"ஆட்சிக் குழுக் கூட்டத்தில், 60 வயதைக் கடந்த பேராசிரியர்களைப் பணியிலிருந்து விடுவிப்பது என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில்தான் செயல்படுத்தப்பட்டது. இதில், தனிப்பட்ட முறையில் எந்தவித நோக்கமும் இல்லை' என்றார் மீனா.பின்னர், இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர் பெ. கோவிந்தசாமி கூறியது:"ஆட்சிக் குழுக் கூட்டத்தில் 60 வயதைக் கடந்த பேராசிரியர்களைப் பணியிலிருந்து விடுவிப்பது தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, அவர்களுக்கு 65 வயது வரை நீட்டிப்பு அளிக்கலாம் எனத் துணைவேந்தர் தெரிவித்தார். ஆனால், அதை உயர் கல்வித் துறைச் செயலர் கணேசன் மறுத்தார். 60 வயதைக் கடந்தவர்களைப் பணியில் அமர்த்தக் கூடாது என அரசாணை உள்ளதாகவும் செயலர் குறிப்பிட்டார். மேலும், இந்தத் தீர்மானத்துக்கு ஆட்சிக் குழு உறுப்பினர்கள் எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்காக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்தத் தீர்மானம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் முன்னாள் துணைவேந்தர் பொன்னவைக்கோவின் பதவிக் காலத்தில் இறுதியாக நடைபெற்ற ஆட்சிக் குழுக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டவை. அந்தத் தீர்மானங்கள் கடந்த மாதம் 13-ம் தேதி நடைபெற்ற ஆட்சிக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டவை.ஆனால், ஆய்வுத் திட்டங்கள் மேற்கொண்டு வரும் கெüரவப் பேராசிரியர்களை நீக்கவில்லை. திறமையானவர்களைத் தக்க வைத்துள்ளோம். நீக்கப்பட்ட பேராசிரியர்களிடம் எந்தவித ஆய்வுத் திட்டங்களும் கையில் இல்லை.  என்றாலும், அவர்களுடைய திறமையைச் சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொள்வோம்' என்றார் கோவிந்தசாமி.இதைத்தொடர்ந்து, ஆட்சிக் குழு உறுப்பினர் பீ.மு. மன்சூர் கூறியது:"உயராய்வு மையங்களில் தலைமைப் பொறுப்பில் பணியமர்த்தலில் அரசின் நிதியுதவியுடனும், அனுமதி பெற்றும் நியமிக்கப்படும். மற்றொன்று, பல்கலைக்கழக ஊதியம் அளித்து நியமனம் செய்யப்படும். இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள உயராய்வு மையங்களில் பல்கலைக்கழக நிதி மூலம் ஊதியம் அளிக்கப்படுகிறது. எனவே, இந்தப் பணியிடங்களில் நியமனம் மற்றும் நீக்கம் செய்வதற்கு ஆட்சிக் குழுவுக்கு முழு அதிகாரம் உள்ளது' என்றார் மன்சூர்.பொன்னவைக்கோ மறுப்பு:இதுகுறித்து முன்னாள் துணைவேந்தர் மு. பொன்னவைக்கோவிடம் தொலைபேசி மூலம் கேட்டபோது அவர் கூறியது:"என்னுடைய பதவிக் காலத்தில் நடைபெற்ற ஆட்சிக் குழுக் கூட்டத்தில் இதுபோன்ற பொருள்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லை. அதுதொடர்பாக, ஆட்சிக் குழுக் கூட்ட நிகழ்வு புத்தகத்தில் எந்தவிதக் குறிப்பும் இல்லை. இறுதியாக நடைபெற்ற ஆட்சிக் குழுக் கூட்டத்திலும் என்னை வாழ்த்தி அனுப்புவதற்கான தீர்மானம்தான் நிறைவேற்றப்பட்டதே தவிர, எந்தப் பொருளும் கொண்டு வரப்படவில்லை.     பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு விதிமுறைப்படி, முழு நேர ஆசிரியர்கள் ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பு 60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கெüரவப் பேராசிரியர்கள், வருகைதரு பேராசிரியர்கள் ஓய்வு பெறும் வயது வரம்பு 65 எனப் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு நிர்ணயம் செய்துள்ளது. மேலும், உயராய்வு மையங்களில் அனுபவமிக்கவர்களைத்தான் நியமனம் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசின் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 60 வயதுக்கு உள்பட்டவர்களைத்தான் நியமனம் செய்ய வேண்டும் என அரசாணையில் இல்லை. இந்த விதிமுறைகள் எனக்கு நன்றாகத் தெரியும்.  மேலும், தற்போதைய பல்கலைக்கழக நிர்வாகம் செய்த தவறை மறைக்க என் பெயரைப் பயன்படுத்துகின்றனர்' என்றார் பொன்னவைக்கோ.
கருத்துக்கள்

பல்கலைக்கழக நல்கை ஆணையத்தின் விதிக்கேற்ப 65 அகவை வரை பணியில் இருக்கலாம். மத்தியப் பல்கலைக்கழகங்களில் 70 அகவை வரை பதவியில் இருக்கலாம். இந்தியா ஒரே நாடு என்றால் பணி அகவைத் தகுதியில் ஏன் பாகுபாடு? தமிழக அரசு விதிகளுக்கிணங்க ஓய்வு அகவை 58. ஆனால், இ.ஆ.ப. (/இ.கா.ப.) அலுவலர்கள் 60 வரை உள்ளனர். அப்படியாயின் 58இலேயே அவர்களுக்கும் ஓய்வு வழங்க வேண்டும்க அல்லது 2 ஆண்டுகளுக்கான செலவை மத்திய அரசில் வாங்க வேண்டும். இ.ஆ.ப. அலுவலர்கள் ஓய்விற்குப்பின் தகவல் உரிமை ஆணையம், தேர்தல் ஆணையம் முதலான பல இடங்களில் பதவியில் இருக்கலாம் என்றால் கல்வியாளர்கள் இருக்க என்ன தடை? வேண்டிய பலரை வேலையில் அமர்த்துவதற்காக 11 கல்வியாளர்களை நீக்குகின்றார்களா? தகுதியின் அடிப்படையில் பணி நியமனங்கள் இருக்க வேண்டும் என விழிப்புடன் செயல்படலாமே தவிர கல்வியாளர்களை வீட்டிற்கு அனுப்புவது முறையல்ல. 
கண்டனத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/4/2010 8:36:00 PM
ஓய்வு பெற்ற பின்னரும் எப்படியாது இவர்கள் உயர்மட்டத்திலு ள்ளவர்கள் உதவியுடன் பதவியில் ஒட்டிக் கொண்டு விடுகின்றனர். வேலைவாய்ப்பு இல்லாமல் எத்தனை இளைஞர்கள் உள்ளனர். அணைத்து பணப்பயன்களும் பதவிக் கு வந்தவர்கள் ஆனால் இவர்கள் ஒழுங்காக பணிசெய்வது கிடையாது முறையாக நியமிக்கபடாதவர்களை இவர்கள் சுரண்டி தங்கள் சாதனைகளாக காட் டிக் கொள்வார்கள். உயரதிகாரிகளுக்கும் தெரியும் இவர்கள் ஆதரவு தேவையை கருத்தில் கொண்டு அவர்களும் துணை போ கின்றனர்.
By Unmai
9/4/2010 8:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நீதிபதிகள் தேர்வுக் குழுவில் வன்னியர்களுக்கு இடம்: ராமதாஸ் கோரிக்கை

First Published : 04 Sep 2010 12:58:48 AM IST


நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் சென்னை மெமோரியல் ஹால் அருகே வெள்ளிக்கிழமை நட
சென்னை, செப். 3: நீதிபதிகளை தேர்வு செய்வதற்காக அமைக்கப்படும் மூவர் குழுவில் வன்னியர்களுக்கு இடம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.உயர்  நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமகவின் வழக்கறிஞர் அமைப்பான வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை சார்பில் சென்னை மெமோரியல் ஹால் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியது:தமிழகத்தில் 20 சதவீத வன்னியர்கள் உள்ளனர். ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரே ஒரு வன்னியர் மட்டுமே நீதிபதியாக இருக்கிறார். இதனை வன்னியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவும், அவமானமாகவும் கருதுகிறோம்.இது பற்றி பாமக, காங்கிரஸ் தவிர வேறு எந்தக் கட்சியும் பேசுவதில்லை. திமுக, அதிமுகவில் உள்ளவர்கள் இது பற்றி பேசினால் அவர்களை கட்சியை விட்டே நீக்கி விடுவார்கள். ஆனால், மற்ற சமுதாயத்துக்கு அநீதி இழைக்கப்பட்டால் அனைத்துக் கட்சியினரும் குரல் கொடுக்கிறார்கள். நாங்கள் பேசினால், இந்த காலத்தில் ஜாதி பேசுகிறீர்கள் என்று குற்றம்சாட்டுகிறார்கள்.நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை தேவை. எந்தத் தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் செய்யப்படுகின்றனர் என்பதை உயர் நீதிமன்றமும், தமிழக அரசும் தெளிவாக்க வேண்டும்.50 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட முதல்வர் கருணாநிதியின் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார். போராடி அந்தப் பதவியை பெற்றுத் தந்ததாக அவரே என்னிடம் கூறினார். 50 ஆயிரம் மக்கள் தொகை சமுதாயத்துக்கும் ஒரு நீதிபதி பதவி. சுமார் 2 கோடி மக்கள் தொகை கொண்ட சமுதாயத்துக்கும் ஒரு நீதிபதி பதவி. இது என்ன நியாயம்?நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என எத்தனை காலத்துக்குதான் கெஞ்சி கேட்பது. நீதிபதிகளைத் தேர்வு செய்ய அமைக்கப்படும் மூவர் குழுவில் வன்னியர்களையும் சேர்க்க வேண்டும். இதனைக் கேட்டால் தகுதி அடிப்படையில்தான் நியமனம் என்கிறார்கள். இப்போதுள்ள நீதிபதிகள் எல்லாம் தகுதி அடிப்படையில் வந்தவர்கள்தானா?நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும் வரை பாமகவும், வன்னியர் சங்கமும் தொடர்ந்து போராடும் என்றார் ராமதாஸ்.பாமக தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏ.கே. மூர்த்தி, என்.டி. சண்முகம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. அன்பரசன், முன்னாள் எம்.எல்.ஏ. பலராமன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

தமிழ் நல அடிப்படையில் நிலையான செயற்பாடுகளில் ஈடுபாடு கொண்டு உள்ள மரு.இராமதாசு அவர்கள், தமிழ்நாடு வன்னியர் முன்னேற்றக் கட்சி எனத் தன் கட்சியின் பெயரை மாற்றிக் கொண்டு இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுவது நல்லது. தமிழ் சார் பணிகளுக்குத் தனியாக ஓர் அமைப்பை நிறுவி அதன் மூலம் தமிழ்ப்பணியை ஆற்றலாம். அனைத்துச் சாதியினருக்குமான பொதுவான கட்சியில் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் சார்பாகப்போராடுவது கட்சியின் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கும். தமிழ்ப் பணிகளுக்குத் தடையாக அமையும். மக்கள் தொலைக்காட்சி மூலம் மக்களிடையே தமிழ் எழுச்சியை ஏற்படுத்தி வரும் அவர் தன்னைச் சாதித்தலைவராக அடையாளம் காட்டிக் கொள்வதை விட தமிழுக்காகச் சாதித்த தலைவராக அடையாளம் காட்டிக் கொள்வதே நிலையான பயனைத் தரும். அல்லது வன்னிய அமைப்பு ஒன்றைப் புதிதாக உருவாக்கி அதன் மூலம் சாதிப் பணிகளை ஆற்றிப் பாட்டாளி மக்கள் கட்சியில் சாதி வாடை வீசாமல் பார்த்துக் கொள்ளலாம். பிற சாதியினர் அவரது கோரிக்கையில் நியாயம் இருந்தாலும் புறக்கணிப்பார்கள் என்ற வருத்தத்தில் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/4/2010 8:18:00 PM
டை ராமதாஸ் எல்லாம் உனக்குன நாங்க என்ன உன் ???????????????? பண்டா கரடி ராமதாஸ்
By இந்திய நேசன்
9/4/2010 5:18:00 PM
ஐயா வழி நடப்போம். டேய் லூசு அந்நியன் , உன் பெயரை கூட உன்னால் சொல்ல முடியாத கோழை பயலே . நீ வீர வன்னியர் பற்றி பேச என்ன தகுதி இருக்கு. இன்னொரு நை கோழி னு சொந்த பெயரை போடாமல் கொக்கரிகிறது . உங்கள் இனத்திற்கு இப்படி ஒரு தலைவன் இல்லையே என்ற பொறமை உங்களுக்கு. MBC கோட்டா யார் பெற்று தந்தது . 108 ஜாதிகளுக்கும் கேடைதது யாரால், வன்னியர் உயர் தியாகத்தால் கிடைத்தது என்பதை மறக்க வேண்டாம். "சமுதாயம் காப்பது சத்ரியன் தர்மம் - வீழ்வது நாமாகிலும் வாழ்வது நம் இனமாகட்டும்!"
By vijayabhaskar
9/4/2010 1:12:00 PM
பெரும்பான்மை மக்களுக்கு சமூகநீதி கிடைக்கவேண்டும் என்றுப் போராடினால் எத்தனைப் பேருக்கு வயிறு எரியுதுப் பாருங்கள். சமூகநீதி என்பது அனைத்துத் துறைக்கும்ப் பொருந்தும். நீதித்துறைக்குப் போருந்தாததுபோல் இங்கு சிலர் கருத்து எழுதுகிறார்கள். எங்கள் வன்னிய இனம் என்றும் கிரிமினல் செயல்களில் ஈடுப்பட்டதுக் கிடையாது. நீதியை நிலைநாட்டுவதற்காக பல வழக்குகள், அடக்குமுறைகளை எம்மினம் அனுபவித்திருக்கிறது. "வன்னியன்" இந்த உலகத்தில் நீதியை நிலைநாட்ட, பண்பாட்டைக் காக்க, மக்களைக் காக்கப் பிறந்தவர்கள். ஊரை ஏமாற்றும் கூட்டம், வேஷம் போடும் கூட்டம், ஜால்ரா கூட்டம், வன்னியருக்கு எதிராகவும், "தமிழினப் போராளி" மருத்துவர் அய்யாவுக்கு எதிராகவும் கருத்து சொல்லிக்கொண்டுதான் இருக்கும். சூரியனைப் பார்த்து நாய்க் குரைத்தாலும் அதன் புகழ் மங்குவதில்லை. இங்குக் குறைத்திருக்கும் சில நாய்கள், நாம் பெற்றுத் தந்த இடஒதுக்கீட்டுப் பலனை அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள்தான். வன்னியப் பேரினமே இந்த உலகத்தைப் புரிந்துக்கொள்வோம், அய்யாவின் வழியில் போராடுவோம்!! வெற்றிப் பெறுவோம்!!!
By அழகாபுரம்.இரா.தங்கதுரை.
9/4/2010 9:48:00 AM
அந்நியன், நான் நினைத்தேன் நீங்க சொலி டீங்க
By kozhi
9/4/2010 8:25:00 AM
yes it is very ugly.How can a learned man as DR.S.R raise such demand. how can others respect him . it is mere politics for covering his JATHI votes now swing to DMK ,ADMK & DMDK
By selvaraju
9/4/2010 8:04:00 AM
although ramadoss is iritaing in many issues,in this judges issues some truth in it vellalar
By gnan
9/4/2010 7:21:00 AM
இதில் வேடிக்கை ஒன்றும் இல்லை. அதிக அளவில் தமது இனத்துக்காரர்கள் கிரிமினல் செயல்களில் ஈடுபடுவதால் அவர்களை 'வெளியே' கொண்டு வர சாதிக்காரர்களே நீதிபதிகளாக தேவை என்று எதிர்பார்க்கிறார்.
By அந்நியன்
9/4/2010 6:34:00 AM
...very dangerous and ugly Game !
By KARUNANITHI
9/4/2010 2:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
ஈழத்தமிழர்களை ஏற்ற மனித நேயம் மிக்க நியுசிலாந்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம் விரைவில் அகல்வதாக!
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்




சிங்கள-இநதிய உளவுப்படையால்  பரப்பப்படும் தவறான கருத்து. இங்கிருந்து செல்பவர்கள் தமிழர் எதி்ர்ப்பு , தமிழர் அழிப்புப் பணிகள் தொடர்பாகத்தான் சென்று வருகிறார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை. இருப்பினும் ஒப்பிற்காகக்கூட அங்கு செல்லும் செயலர் தமிழ்த் தேசியக் கூட்டணி அமைப்பினரைச் சந்திக்க வில்லை என்பது செல்பவர்களின்நோக்கத்தை வெட்ட வெளிச்சமாக்குகின்றது. இத்தகைய சூழலில் நாட்டு மக்களுக்காகத் தங்கள உயிரையும் பொருட்படுத்தாமல் போராடும்  தேசியக் காவலர்களைத்தவறாக எழுதுவது பரதேசிகளால்தான்  முடியும் என்பது வெளியிடப்பட்டுள்ள கருத்து மூலம் தெளிவாகிறது. மொழி இனக் காவலர்களாகத் திகழும் ஈழத்தமிழர்களும் அவர்களின் வீரத்தலைவர்களும் போராளிகளும் வெல்க! வெல்க! வெல்கவே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

வியாழன், 2 செப்டம்பர், 2010

ராஜபட்சவுடன் நிருபமா ராவ் சந்திப்பு


கொழும்பு, செப்.2: இந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ், இலங்கை அதிபர் ராஜபட்சவை நேற்று மாலை சந்தித்துப் பேசினார். சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது.இந்தச் சந்திப்பின்போது இடம்பெயர்ந்த மக்களுக்கான குடியிருப்புத் திட்டம், வடக்கில் ரயில் பாதை புனரமைப்பு உள்ளிட்ட இந்தியா உதவுவதாகக் குறிப்பிட்ட திட்டங்கள் விரைவில் செய்துதரப்படும் என ராஜபட்சவிடம் நிருபமா உறுதியளித்ததாக இலங்கை அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.இலங்கையில் இந்திய முதலீட்டு ஆர்வம் அதிகரித்து வருவதாகவும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களும், கைத்தொழில் அதிபர்களும், இதர துறைகளைச் சேர்ந்தவர்களும் இலங்கையில் வர்த்தகம் செய்ய ஆர்வம் காட்டி வருவதாக ராஜபட்ச தெரிவித்தார்.ராஜபட்சவுடனான நிருபமா ராவின் இந்தச் சந்திப்பின்போது, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ராஜபட்சவின் செயலர் லலித் வீரதுங்க உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உடனிருந்ததாக இலங்கை அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

அடக் கடவுளே! தமிழர் வாழ்விடங்களில் சிஙகளர்களைக் குடியமர்த்துவது தொடர்பான இந்தியாவின் சார்பான உதவிகளைத் தொடர்ந்து அளிப்பதற்கான உறுதியைத் தெரிவித்து நாங்கள் என்றும் உங்கள் கொத்தடிமையே! சீனா அல்லது பாக். பக்கம் சாய வேண்டா! என வேண்டுகோள் விடுத்து -மன்னிக்கவும்- மண்டியிட்டு இறைஞ்சி தெரிவிக்கச் சென்றதற்குத்தான் இதோ போகிறார்! அதோ போகிறார்! நாளை மறுநாள் போகிறார்!நாளை போகிறார் ! இன்றே போகிறார்! போயே போய்விட்டார்! சுற்றிப்பார்த்தார்! பாராட்டினார்! என்ற பகட்டுரைகளா! பெண் மனம் கனிந்திருந்தால் அங்குள்ள அவலங்கள் கண்டு கரைந்து உருகியிருக்க வேண்டாமா? என் செய்வது? தலைவி எவ்வழி! அதிகாரியும் அவ்வழி! 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/2/2010 4:56:00 PM
..SHE WILL TELL HIM HOW TO FINISH TE REST OF THE SL TAMILS...
By KOOPU
9/2/2010 4:28:00 PM
thank you so much Mr. President !.....தமிழர்கள் எல்லாம் ரொம்ப சௌக்கியமா இருக்குறாங்க ! நல்ல மனோ தைரியமா சந்தோசமா இருக்குறாங்க ! அவுங்களுக்கு ஒரு குறையும் இல்லை ! நான் இந்தியா திரும்பியதும் Mr கருணாநிதி கிட்டச் சொல்லி உங்களுக்கு நன்றி கடிதம் எழுதச் சொல்லுறேன் ! வேறு ஏதாவது ரகசிய செய்தி இருக்கா Mr கருணாநிதிக்கு ! Once again i thank you for the nice meal dinner coffee and etc.......see you soon .....Buy buy........@ rajasji
By நிருபமா
9/2/2010 2:44:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்
 
 
 
 



பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2010,23:29 IST

சிட்னி : பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை, தாயின் கத, கதப்பான அரவணைப்பாலும், மெல்லிய விசும்பலாலும் உயிர் பிழைத்த அதிசயம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி கேட், ஏழுமாத கர்ப்பமாக இருந்தார். தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு ஜேமி என, பெயர் சூட்டவும் முடிவு செய்தனர். கேட்டுக்கு சமீபத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தையிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. டாக்டர்கள் சில சிகிச்சைகளை அளித்தனர். குழந்தையின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதைக் கேட்ட டேவிட்டும், கேட்டும் அழுது புலம்பினர். தன் பச்சிளம் குழந்தை இறந்துவிட்டதை நம்ப முடியாத கேட், குழந்தையை மார்போடு கட்டி அணைத்துக் கொண்டு, முகத்தோடு முகம் வைத்து கொஞ்சியபடி கண்ணீர் வடித்தார். டேவிட்டும் அழுது கொண்டே, குழந்தையின் தலையை மென்மையாக தடவிக் கொடுத்தார். இரண்டு மணி நேரமாக இந்த பாசப் போராட்டம் நீடித்தது.

குழந்தையை இரண்டு மணி நேரமாக மார்போடு அணைத்தபடி, அழுதுகொண்டிருந்த கேட், குழந்தையின் காதுக்கருகே சென்று மெல்லிய குரலில் விசும்பலுடன் பேசினார். அப்போது தான், யாரும் எதிர்பாராத அந்த அதிசயம் நடந்தது. இறந்து விட்டதாக கூறப்பட்ட அந்த குழந்தையின் உடலில் சிறிய அசைவு காணப்பட்டது. அந்த பச்சிளம் குழந்தையின் கைகள் மெதுவாக நீண்டு, தன் தாயின் கரங்களை இறுக பற்றியது. இந்த ஆச்சரிய நிகழ்வை நம்ப முடியாமல் கேட், சில நிமிடங்கள் திகைத்துப் போனார். அவரது கணவர் டேவிட், உடனடியாக ஓடிச் சென்று டாக்டரை அழைத்து வந்தார். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், "இது வழக்கமாக நடப்பது தான். இறந்து விட்ட குழந்தை, மீண்டும் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை'என, உறுதியாக தெரிவித்து விட்டனர்.

தன் குழந்தையை விட்டுக் கொடுக்க விரும்பாத கேட், மார்போடு அணைத்துக் கொண்டு, அந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டினார். அதை குழந்தை, ஆர்வத்துடன் குடித்தது. அங்கு நின்றிருந்த டாக்டர், இதை நம்ப முடியாமல் மீண்டும் குழந்தையை பரிசோதித்தார். அப்போது அவர், குழந்தையின் இருதயத் துடிப்பு சீராக இருப்பதையும், குழந்தை சரியாக மூச்சு விடுவதையும் உறுதி செய்தார். பின்னர் அவர்,"என்னால் நம்பவே முடியவில்லை. ஆச்சரியத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.குழந்தை பிழைத்து விட்டது என்பது உண்மை'என்றார்.

ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் திக்கு முக்காடிப் போன கேட், இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியதை அடுத்து, அதை மார்போடு அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டேன். என் வாயில் என்ன தோன்றியதோ அதை குழந்தையின் காதருகே, அழுகையுடன் கிசு, கிசுத்தேன். "உனக்கு ஜேமி என பெயர் வைத்திருக்கிறோம்; உனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள் தெரியுமா? நீ எங்களுக்கு வேண்டும்; உன்னை விட்டு எங்களால் பிரிந்து இருக்க முடியாது' என, கூறினேன். இரண்டு மணி நேரமாக, குழந்தையை மார்பில் வைத்துக் கொண்டு, அழுதபடி இருந்தேன். அப்போது திடீரென குழந்தையிடம் அசைவு தெரிந்தது. மெல்ல கண் திறந்து பார்த்தது. அதன் பிஞ்சுக் கரங்கள், என் கை விரல்களை மென்மையாக பற்றியபோது, எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த நேரத்தில் இந்த உலகத்திலேயே மிக மகிழ்ச்சியான தாய், தந்தையர்கள் நானும், என் கணவரும் தான். இவ்வாறு கேட் உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.
தலையங்கம்: சதை ஆடுகிறதே...!

பாகிஸ்தானில் சிந்து நதியின் பெருவெள்ளத்தால் கடந்த ஒரு மாதத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். ஆனாலும், போதுமான நிவாரணங்கள் இவர்களுக்குக் கிடைத்தபாடில்லை. இதற்கெல்லாம் காரணம், பாகிஸ்தான் அரசுதான்.வெள்ளத்தால் மக்கள் செத்துக்கொண்டிருந்தபோது பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி ஐரோப்பா பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார் என்பதே, இந்த வெள்ளத்தையும் மக்கள் துயரத்தையும் பாகிஸ்தான் அரசு எப்படி அணுகி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளப் போதுமானது.இப்போது பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள துயரினைப் போக்க குறைந்தபட்சம் 700 மில்லியன் டாலர் நிதி தேவை. இதில் பாதியை ஐக்கிய நாடுகள் மன்றம் உறுப்பு நாடுகளிடம் பெற்றுத்தரும். அமெரிக்கா 200 மில்லியன் டாலர் அளிக்கவுள்ளது. இந்தியா முதல்கட்டமாக 5 மில்லியன் டாலர் அறிவித்தாலும், இப்போது மீண்டும் 20 மில்லியன் டாலர்களை அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்தமுறை ஏனைய உலக நாடுகளிலிருந்து பாகிஸ்தானுக்கு நிதியுதவி அதிகம் கிடைக்காது எனப்படுகிறது. இதற்குக் காரணம், பாகிஸ்தான் மிக மோசமான ஊழல் நாடு, கொடுத்த பணம் மக்களுக்குப் போய்ச்சேராது என்கிற கருத்தாக்கமும்,  தீவிரவாதத்தை பாகிஸ்தான் வளர்க்கிறது என்கிற எண்ணமும் உலகம் முழுவதும் போய்ச் சேர்ந்திருப்பதுதான். பல நாடுகளும், தானம் செய்வதற்கென ஒதுக்கிய தொகையை ஆண்டுத் தொடக்கத்தில் ஹைதி நிலநடுக்கத்தின்போது செலவிட்டுவிட்டன என்பதும், உலகப் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இன்னமும் மீளாத நாடுகள் பல உள்ளன என்பதும் கூடக் காரணங்கள்.ஆனால், பாகிஸ்தான் இதைப் பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. அப்படி கவலைப்பட்டிருந்தால், இந்தியா தானே முன்வந்து 5 மில்லியன் அமெரிக்க டாலரை நிதியுதவியாக அளித்தபோது, நன்றியுடன் பெற்றுக்கொண்டிருக்கும். பாகிஸ்தான் அப்படிச் செய்யாமல் இன்னொரு ஏழு நாள்கள் கழித்து, இதனை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மூலமாகக் கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்கிறது. இருப்பினும் இந்தியா இதைப் பெரிதுபடுத்தாமல், ஐநா மன்றத்தின் மூலமாக வழங்கும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது. அடம்பிடித்து பாகப்பிரிவினை கேட்டுப் பிரிந்தாலும், ஒரு வயிற்றுப் பிள்ளைகள் எனும்போது "தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும்' என்கிற ரத்தபாசம் பாகிஸ்தானுக்கு இருக்கிறதோ, இல்லையோ, நமக்கு நிச்சயமாக இருக்கிறது. கடந்த 60 ஆண்டுகளில் ஏற்படாத பெருவெள்ளம் சிந்து நதியில் பெருகியோடியுள்ளது. நகரங்களே மூழ்கிக் கொண்டிருக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் நிரம்பி வழிவதாகவும், போதுமான உணவோ உடையோ கிடைக்கவில்லை என்றும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. போதுமான மருத்துவர்களும் இல்லை. வெள்ளத்தைத் தொடர்ந்து வரக்கூடிய தொற்றுநோயைச் சமாளிக்க தடுப்பு மாத்திரைகள், தடுப்பூசிகள் எதுவுமே அந்நாட்டில் போதுமான அளவு இல்லை. இப்போது வெள்ளம் ஏற்பட்டிருக்கும் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் அனைவருமே விவசாயம் சார்ந்து வாழ்ந்தவர்கள். பணக்காரர்கள் அல்லர் என்றாலும் தங்கள் சொந்த உழைப்பில் வாழ்ந்துவந்தவர்கள். இப்போது இவர்களது வீடு, உடைமை, மாற்றுடைகள், மாடு, ஆடு, கோழி என அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள்.முகாம்களில் மாற்று உடைகூட இல்லாமல் தவிப்போர் பல ஆயிரம் பேர். இங்கே  பெண்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. முகத்திரை அணிந்து, தங்கள் குடும்ப அங்கத்தினர்களை மட்டுமே அறிந்திருந்த பெண்களும் சிறுமியரும் இந்த முகாம்களில் கலாசார அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்கிறது பிபிசி செய்தி நிறுவனம். இந்தப் பெண்கள் மாற்றுடைகூட இல்லாமல், பொதுஇடத்தில் தங்கள் பெண் குழந்தைகளைப் பாதுகாக்க பெரும்பாடுபடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பகுதிகளில் பள்ளிகள் அனைத்துமே வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகள் திறக்கவும், குழந்தைகளுக்கு மீண்டும் பாடநூல்கள் கிடைக்கவும் குறைந்தது ஒருமாத காலம் ஆகும் என்கிறார்கள்.இந்தத் துன்பங்கள் புனித மாதமாகிய ரமலான் நோன்பு காலத்தில் நிகழ்ந்துள்ளது என்பதுதான் வேதனையை மேலும் அதிகரிக்கிறது. மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்காவிட்டால் அவர்களை தலிபான் தன் பக்கம் ஈர்த்துக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது என்று பலரும் சொல்லிவிட்டார்கள். இதன் காரணமாகவே, நிவாரண சேவையில் ஈடுபட வரும் வெளிநாட்டு அமைப்புகளை தலிபான் தாக்கக்கூடும் என்கிற செய்தியைப் பரப்பி, யாரையும் வரவிடாமல் செய்து, மக்களைத் தங்கள் பக்கம் திருப்புகிறார்களோ என்றும்கூட எண்ணத் தோன்றுகிறது. நிவாரணம் கிடைக்காத மக்கள் துயரத்தின் விளிம்பிற்குப் போய், தீவிரவாதிகளின் கைகளில் சிக்கி, மூளைச்சலவைக்கு ஆளாகாமல் தடுக்க வேண்டிய பெருங்கடமை பாகிஸ்தானுக்கு உள்ளது. இதைப் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் உணர்ந்ததாகவே தெரியவில்லையே... இதைப் பார்க்கும்போது நமது இந்திய அரசும், நிர்வாகமும் எவ்வளவோ தேவலாம் போலிருக்கிறது!
கருத்துக்கள்

வளர்மதி அவர்களே! thiru2050.blogspot.com வலைப்பூவின் தலைப்பில் எவ்வாறு தமிழில் கணியச்சிட வேண்டும் என்ற குறிப்பு உள்ளது. படித்துப் பின்பற்றிப் பயனுறுக! 2) மனித நேயத்துடன் எழுதப்பெற்ற ஆசிரியவுரை. சதை என்று சொல்வதை விடத் தசை என்பதே சரியானது. அதே நேரம் ஈழத்தில் மட்டும் ஏன் தான் ஆடாவிட்டாலும் இந்தியத்திற்குத் தன் தசை ஆட வில்லை? அவ்வாறு ஆடித் துடிக்கும் தமிழர்களையும் ஒடுக்குகிறார்கள். எனவே, உங்களது உரைதான் மனித நேயத்தில் அமைந்ததே தவிர இந்தியத்தின் நோக்கம் உதவி யல்ல. நாடகம். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/2/2010 7:15:00 AM
MANITHANEYAM , PAKKATHU VEETUKARAN THUNBA PATTAL IYO ENRU VARUNTHI UTHAVA VENDUM ENRA NABIGALARIN PONMOZHI NIRUBIKKAPADAVENDUM.
By J.ANBARASU
9/2/2010 7:05:00 AM
மதச் சார்பின்மை என்ற போர்வையில் இந்தியா ஒரு முழுமையான இஸ்லாமிய நாடாக உருவாகும் வரை நமது அரசியல்வாதிகள் ஓயப் போவது இல்லை. இது நடக்கும் போது ஐயோ என அலறுவதைவிட இப்பொழுதாவது விழித்துக்கொள்ளுங்கள்.
By SIRAKU
9/2/2010 5:48:00 AM
Dear PA Valarmathi, You can download Azhagi software and u can use it by invoking Unicode editor available in it. It is a free download(azhagi.com)
By Indian Nation
9/2/2010 5:00:00 AM
//ஒரு வயிற்றுப் பிள்ளைகள் எனும்போது "தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும்' என்கிற ரத்தபாசம் பாகிஸ்தானுக்கு இருக்கிறதோ, இல்லையோ, நமக்கு நிச்சயமாக இருக்கிறது.// ஆஹா... சே.. இந்த மனிதப்பிறவி எத்தனை துயரமானது.என் மனம் நெக்குருகி கண்கள் பனித்தனவே. அங்கே நமது பங்காளிகளின்பால் எல்லாம் வல்ல எம்பெருமான் கருணை கொள்ளட்டும்
By Indian Nation
9/2/2010 4:57:00 AM
How to write in tamil, here?
By PA Valarmathi
9/2/2010 4:26:00 AM
How to write in tamil, here?
By PA Valarmathi
9/2/2010 4:25:00 AM
அவர்களது எண்ணிக்கை இருபது சதவிகிதத்தை தாண்டி விட்டால் வன்முறைகளையும், கலவரங்களையும் உருவாக்குவார்கள் எதியோபியா 33 % லெபனான் 59 %, அறுபது சதவிகிதத்தை தாண்டி விட்டால் , பிற இன மக்களை தண்டிப்பது, மிரட்டி இஸ்லாமிய மதத்திற்கு மாற்றச் செய்வது போன்ற செயல்கள் மூலம் முழுமையான இஸ்லாமிய நாடாக அதை மாற்ற கடுமையாக பாடுபடுவார்கள். கத்தார் 78 % மலேசியா 61 % சூடான் 70 % . இது தான் உலக அளவில் இஸ்லாமியர்கள் பின்பற்றி வரும் நிலைப்பாடு. இப்படிப்பட்ட சமுதாயத்திடம் இருந்து தீவிரவாதத்தை தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும். மதச் சார்பின்மை என்ற போர்வையில் இந்தியா ஒரு முழுமையான இஸ்லாமிய நாடாக உருவாகும் வரை நமது அரசியல்வாதிகள் ஓயப் போவது இல்லை.
By akkinikkunju dindigul
9/2/2010 3:59:00 AM
உலகில் எந்த ஒரு நாட்டிலும் அதன் ஜனத்தொகையில் 2 சதவிகிதத்திற்கும் குறைவாக இஸ்லாமியர்கள் இருக்கும் வரை அமைதியானவர்களாக , இதர சமுதாயத்துடன் இணக்கத்துடன் செயல்படுபவர்களாக இருப்பார்கள். .உதாரணம் அமெரிக்கா ௦.6 % , ஆஸ்திரேலியா - 1 .5 % கனடா - 1 .9 % , சீனா 1 . 8 %. அவர்கள் மூன்று முதல் ஐந்து சதவிகிதமாக இருக்கும் போது குழுக்களாக சேர்வார்கள், உரிமைகள் குறித்து பேசத் தொடங்குவார்கள் தாய்லாந்த் 4 .6 %, ஜேர்மனி 3 .7 %. ஐந்து முதல் பத்து சதவிகிதமாக இருக்கும் போது அசாரதமான முறையில் மற்றவர்கள் மீது அதிகம் செலுத்தவும், சிறப்பு உரிமைகள் கோரி அரசை நிர்பந்திக்கவும் முயற்சி செய்வார்கள் பிரான்ஸ் 8 %, நெதர்லாண்ட்ஸ் 6 %. . பத்து சதவிகிதத்தை தாண்டி விட்டால் இதர சமுதாயத்தினரை ஓரம் கட்டவும் , தங்கள் மதத்தை நிலை நாட்டத் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறவும் முயரசிகளை மேற்கொள்வார்கள். இந்திய 14 %, இஸ்ரல் 16 %,, ரஷ்யா 15 %, . அவர்களது எண்ணிக்கை இருபது சதவிகிதத்தை தாண்டி விட்டால் வன்முறைகளையும், கலவரங்களையும் உருவாக்குவார்கள் எதியோபியா
By akkinikunju
9/2/2010 3:57:00 AM
அது ஒரு நாடு அங்கு இருபவர்கள் மானிடர்கள் இல்லை மிருகங்கள் ஒரு நல்லவன் கூட பாகிஸ்தாநில் இல்லை
By சவுதில்இருந்து இந்திய நேசன்
9/2/2010 2:11:00 AM
Kudumi Dinamani paarppans advising other people is like devil talking about good things.
By ahamed
9/2/2010 2:10:00 AM
யாழ்.பொது நூலகத்தில் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் முன்னிலையில் இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தலை மீறி தனது உயிரையும் பொருட்படுத்தாமல் ஈழ தமிழரின் உணர்வுகளை உடைத்தெறிந்தார் பேராசிரியர் சிற்றம்பலம்.
By kuru
9/2/2010 1:25:00 AM
யுத்தத்திற்குப் பின்னராவது இந்தியா ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கும் என்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை எனக் குறிப்பிட்ட அவர் இந்தியா, இந்திய-இலங்கை உடன்பாட்டை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றியது. ஆனாலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக இருக்கவில்லை. அதில் தமிழர் தரப்பிற்கு எந்தவிதமான நன்மையும் விளையவில்லை. யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா செயற்பட்ட விதம் குறித்து மக்கள் கடும் அதிருப்தியும் ஏமாற்றமும் கொண்டுள்ளனர். இந்தியா யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும், பொது மக்களைக் காப்பாற்றும் என்றே மக்கள் நினைத்தனர். எனினும் இந்தியா அதனைச் செய்யவில்லை. தமிழரை கொல்வதிலையே குறியாகவிருந்தது. இந்தியா யுத்தத்தின் இறுதித் தருணங்களில் ஆயுதங்களை வழங்கியது. பொதுமக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்தது என்று தமிழ் மக்கள் இன்னமும் வெறுப்புற்றுள்ளனர்.
By kuru
9/2/2010 1:21:00 AM
யுத்தத்திற்குப் பின்னர் இந்தியா முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புச் செய்யும் என்று சில‌ தமிழ் குழுக்கள் கட்சிகள் மக்கள் நியாயபூர்வமான தீர்வொன்றை வழங்குமாறு இலங்கை அரசை வலியுறுத்தும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர். அதனை இந்தியா செய்யவில்லை. தமிழரை ஒடுக்குவதிலையே ஆர்வம் காட்டுகிறது. ஒன்றரை வருடத்திற்குப் பின்னர் தமிழ் மக்களின் இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை. நியாயபூர்வமான தீர்வு ஒன்றை முன்வைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதில் இந்தியா தோல்வியடைந்ததுள்ளது. இந்தியா வெறுமனே கண்களை மூடிக் கொண்டிருக்கிறது. அக்கறை இல்லாமல் இருக்கிறது. உரிய தீர்வுகளை முன்வைக்குமாறு இலங்கை அரசை வலியுறுத்தத் தவறிவிட்டது. யுத்தம் முடிவடைந்துவிட்டது. ஆனால், வடக்கில் இராணுவ குடியிருப்புகள், குடியேற்றங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இன சமநிலை பாதிப்படைகிறது. மீள்குடியேற்றம், எமது எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவதாக இல்லை எனவும் இந்தியாவின் பாதுகாப்பையும் இந்திய ஆளும் வர்க்கம் பாதுகாக்க தவறிவிட்டதாக கவலையடைவதாகவும் தெரிவித்தார்.
By kuru
9/2/2010 1:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *