சனி, 25 செப்டம்பர், 2010

62-வயது முதியவர் எந்நாட்டைச் சேர்ந்தவர்?


கோழிக்கோடு, செப்.24: 62 வயதுடைய குனியில் இப்ராஹிம் என்பவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவரல்ல, இந்தியர்தான் என்பதை கேரளத்தின் வடகரா நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து முதியவர் குனியில் இப்ராஹிம், 7 ஆண்டுகால பிரச்னையில் இருந்து விடுபட்டுள்ளார். நீதிமன்றத்தின் தீர்ப்பால் அவர் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார். கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளிகுல்லங்கராவில் மீன் விற்பனை செய்து வந்த குனியில் இப்ராஹிமை அந்த மாநில போலீஸார் 2003-ல் கைது செய்தனர். அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும், சட்டவிரோதமாக கால அவகாசத்தை மீறி  இந்தியாவில் தங்கியிருப்பதாகவும் கூறி, அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் நிறுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குனியில் இப்ராஹிமை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க ஆணைப் பிறப்பித்தது. இதையடுத்து குனியில் இப்ராஹிமை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க வாகா எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவரை தங்களது நாட்டுக்குள் நுழைய பாகிஸ்தான் அரசு அனுமதிக்கவில்லை. குனியில் இப்ராஹிமிடம் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என்று கூறி, அவரை தங்களது நாட்டுக்குள் அனுமதிக்க பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டது. இதையடுத்து குனியில் இப்ராஹிம் மீண்டும் கேரளத்துக்கு அழைத்துவரப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு போலீஸார் அவரை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்றது. குனியில் இப்ராஹிம் இந்தியாவைச் சேர்ந்தவர்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் பள்ளிச் சான்றிதழ், வாக்காளர் புகைப்பட அட்டை உள்ளிட்ட சில ஆவணங்களை அவரது வழக்கறிஞர் சமீபத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதை ஆய்வு செய்ய நீதிமன்றம், குனியில் இப்ராஹிம் இந்தியர்தான் என்பதை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்தது.
கருத்துக்கள்

நம் நாட்டவரா? அயல் நாட்டவரா? என அறிய இத்தனை ஆண்டுகளா? என்ன நாடோ? நீதி மன்றமோ? இத்தனை ஆண்டுகள் அவர் பட்ட பாட்டிற்கும் இழப்பிற்கும் அரசு என்ன இழப்பீடு தரப் போகிறது? 
வெட்கத்துடனும் வேதனையுடனும் 
இலக்குவனார் திருவள்ளுவன்
By ilakkuvanar thiruvalluvan
9/25/2010 3:28:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
மலையாள இலக்கியவாதி குரூப்புக்கு ஞானபீட விருது


புது தில்லி, செப். 24: பிரபல மலையாள இலக்கியவாதி ஓ.என்.வி.குரூப் (79) மற்றும் உருது கவிஞர் அக்லக் கான் ஷாரியார் (74) ஆகிய இருவரும் முறையே 2007 மற்றும் 2008-ம் ஆண்டுக்கான ஞானபீட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இலக்கியத் துறையில் அவர்கள் ஆற்றிய சிறப்பான பணிக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.இலக்கியத்துக்கான நாட்டின் உயரிய விருதான ஞானபீட விருதுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன. பிரபல ஒரியா எழுத்தாளரும், ஞானபீட விருது பெற்றவருமான சீதாகாந்த் மஹாபாத்ரா தலைமையிலான ஞானபீட தேர்வு கமிட்டி இதற்கான அறிவிப்பை வெளியிட்டது.ஓ.என்.வி. குரூப்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த குரூப், 20க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அவரது உஜ்ஜயினி, ஸ்வயம்வரம் ஆகிய பாடல் தொகுப்புகள் மிகவும் பிரபலமானவை. சமூக தத்துவார்த்தப் பாடல்களில் இவர் மிகவும் பிரபலமானவர்.கேரள சாகித்ய அகாதெமி விருது, சாகித்ய அகாதெமி விருது, வயலார் விருது, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.அக்லக் கான் ஷாரியார்: உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலியில் முஸ்லிம் ராஜ்புத் குடும்பத்தில் பிறந்த ஷாரியார், அறிவுஜீவி கவிஞராக வர்ணிக்கப்பட்டவர். தனது கவிதைகளில் கொள்கை, கோட்பாடுகளை விட்டுக்கொடுக்காதவர்.தற்கால உருது கவிதைகளுக்கு வடிவம் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநில உருது அகாதெமி விருது, சாகித்ய அகாதெமி விருது, தில்லி உருது அகாதெமி விருது மற்றும் ஃபிராக் சம்மான் விருதுகளைப் பெற்றுள்ளார்.
கருத்துக்கள்

உரிய காலங்களில் விருதுகளை வழங்கக் கூடாதா? இனி 2009, 2010 ஆண்டிற்குரிய விருதுகளை 2012 இல் வழங்குவார்களா? அகவை முதிர்ந்த பின் காலங் கடந்து தருவதை முன்னரே தரலாம் அல்லவா? விருதாளர்களுக்குப் பாராட்டுகள். 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By ilakkuvanar thiruvalluvan
9/25/2010 3:21:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
திராவிட கட்டடக் கலையின் சிகரம் பெரிய கோயில்: மு.க. ஸ்டாலின் புகழாரம்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வரங்கைத் தொடக்கிவைத்து, சோழர் கால ஓவியங்கள் நூலை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட, அதைப்
தஞ்சாவூர், செப். 24: திராவிடக் கட்டடக் கலைக்குச் சிகரமாக தஞ்சாவூர் பெரிய கோயில் விளங்குகிறது என்றார் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்.  தஞ்சாவூர் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பெருமைக்கு தஞ்சையின் பங்களிப்பு என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை ஆய்வரங்கம் நடைபெற்றது.  ஆய்வரங்கைத் தொடக்கி வைத்து மு.க. ஸ்டாலின் மேலும் பேசியது: பிற்காலச் சோழர்களில் மிகச் சிறந்த மன்னராகவும், உலக வரலாற்றில் பேரரசன் என்னும் அடைமொழியைப் பெற்றவராகவும் விளங்கிய தமிழ் மன்னர் முதலாம் ராஜராஜன். இவரது ஆட்சியில் தமிழகம் பல புதுமைகளைக் கண்டது.  அரசு நிர்வாகம், வேளாண்மை, கலைகள் சிறக்க பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை ராஜராஜன் மேற்கொண்டார். இவரது ஆட்சியில் சைவ, வைணவ சமயங்கள் மட்டுமன்றி, அனைத்து சமயங்களுக்கும் முக்கியவத்துவம் அளிக்கப்பட்டது.   ராஜராஜன் கட்டிய பெரிய கோயில் அவருக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க புகழைத் தேடித் தந்தது. கி.பி. 1003-ம் ஆண்டில் தொடங்கி, கி.பி. 1010-ம் ஆண்டில் இக்கோயில் கட்டுமானப் பணி நிறைவடைந்தது. இக்கோயில் கருவறை, இடைசுழி, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முன் மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு விளங்குகிறது. இத்தகைய அமைப்புடன் 1,000 ஆண்டுகளுக்குப் பின்னும் நிலைத்து நின்று, தமிழனின் கட்டடக் கலை மாண்பை பறைசாற்றும் இந்த பெரிய கோயிலுக்கு இணையான ஒரு முழுமையான கட்டமைப்பை இந்தியாவில், ஏன், உலகிலேயே வேறெங்கும் காண முடியாது என்பது தஞ்சை பெரிய கோயிலுக்குரிய தனிச் சிறப்பாகும்.  சோழ மன்னர்கள் ஆட்சியின் சிற்பக் கலை வல்லமையைக் காட்டும் அரிய பல சிற்பங்களும் இக்கோயிலில் இடம் பெற்றுள்ளன. முழுவதும் கற்றளியாக விளங்கும் இக் கோயிலின் கருவறையைச் சுற்றி அமைந்துள்ள திருச்சுற்று மாளிகையில் சோழர்கால ஓவியங்கள் காணப்படுகின்றன. முதல் தளச் சுற்றிலும் 81 நாட்டியச் சிற்பங்களுடன் ஓவியங்கள் இருந்ததற்கான சுவடுகள் காணப்படுகின்றன. இப்படி கட்டடக்கலை, நாட்டியக் கலை, சிற்பக் கலை, இசைக் கலை, ஓவியக்கலை உள்ளிட்ட அனைத்துக் கலைகளுக்கும் நிலைக்களனாக அமைந்த ஒரு பல்கலைக்கூடமாக ராஜராஜன் இத் திருக்கோயிலைக் கட்டியுள்ளார்.  பெரிய கோயிலைக் கட்டி, அதில் நாள்தோறும் தமிழில் வழிபாடு நடத்த வேண்டுமென கருதி, தமிழ் வழிபாட்டுக்காக திருமுறைகளை இசையோடு பாட ஓதுவார்களை நியமித்து, அவர்களுக்கு ஊதியம் வழங்கவும் செய்தவர் ராஜராஜன். காலப்போக்கில் தமிழ் வழிபாடு முறை மறைந்து, வடமொழியில் வழிபாடுகள் செய்யும் நிலை ஏற்பட்டு, நிரந்தரமாகி, ராஜராஜன் விரும்பிய தமிழ் வழிபாட்டு முறை தடைபட்டு விட்டது.  அதன் பின்னர், 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்தில் எழுந்த மொழி இனமான உணர்வுகள் காரணமாகத்தான், திருக்கோயில்களில் தமிழிலும் வழிபாடு செய்யப்படும் என ஓர் அட்டையை மட்டும் தொங்கவிட்டனர்.  அந்த நிலையில், கருணாநிதி தலைமையில் திமுக அரசு தமிழிலும் என்பதில் உள்ள "உம்' என்பதை நீக்கி, தமிழில் வழிபாடு நடத்தப்படும் என ஆணை பிறப்பித்து, தமிழில் போற்றி நூல்களை வெளியிட்டது. இது தேவாரத் திருமுறைகளுடன் இந்தப் பெரிய கோயிலிலும், தமிழகத்தில் உள்ள ஏனைய திருக்கோயில்களிலும் தமிழில் வழிபாடு நடைபெற வழிவகுத்தது. எனவே, இதுபோன்ற ஆய்வரங்களில் பங்கேற்கும் அறிஞர்கள், ராஜராஜ சோழன் ஊட்டிய தமிழ்மொழி உணர்வை தெளிவுபடுத்த வேண்டும் என்றார் ஸ்டாலின். ஆய்வரங்கத்துக்கு மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி தலைமை வகித்தார்.  தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில், சோழர் கால ஓவியங்கள் என்னும் நூலை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட, தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியை இரா. ஜம்பகலட்சுமி பெற்றுக் கொண்டார்.  நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, திமுக தில்லி பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன்,  மத்திய இணையமைச்சர்கள் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், காந்திசெல்வன், மாநில அமைச்சர்கள் பூங்கோதை ஆலடி அருணா, தங்கம் தென்னரசு, மைதீன்கான், செல்வராஜ், ரவிக்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. ராசேந்திரன் வரவேற்றார். பல்கலைக்கழகப் பதிவாளர் ச.பி. சரவணன் நன்றி கூறினார்.
கருத்துக்கள்

தமிழனின் கட்டடக்கலை மாண்பைப் பறைசாற்றும் எனத் தாலின் பேசியுள்ளார். அவ்வாறே தலைப்பு அளித்திருக்கலாமே! தமிழ் என்பது தவறுதலாகத் திராவிடம் என உச்சரிக்கப்பட்டது. அந்த அளவில் முன்பு திராவிடம் எனக் குறிக்கப்பட்டதை நாம் தமிழ் என்றே குறிப்பதுதான் வரலாற்று உண்மையாக இருக்கும். தமிழ்ப்பணி ஆற்றும் தினமணி தமிழுணர்வுடன் தலைப்பு வெளியிட வேண்டும். அதே நேரம் தமிழ் வழிபாட்டுக்கு வழி வகுத்துள்ளதாகக் கூறியுள்ளதெல்லாம் நடைமுறைக்கு மாறானவையே. தமிழ் வழிபாடு கேட்டாலும் ஆரிய மொழியில் பல சொல்லியபின்பே சில தமிழில் சொல்லப்படுகிறது. தமிழில் மட்டுமே வழிபாடு என்னும் நிலை வரவேண்டும். அவ்வாறு கொண்டு வரும் எண்ணம் அரசிற்கு இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, ஓயாமல் இதனைப் பெருமையாகப் பேச வேண்டா. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By ilakkuvanar thiruvalluvan
9/25/2010 3:11:00 AM
திராவிட கட்டடக் கலையின் சிகரம் தஞ்சை பெரிய கோவில் என நினைந்து தஞ்சையும் திராவிட இனமும் பெருமை கொள்ளும் வேளையில் ...உலகமகா ஊழலின் சிகரம் உன் அப்பன் என நினைந்து தஞ்சையும் திராவிட இனமும் வெட்கப் படுகிறது ! @ rajasji
By rajasji
9/25/2010 3:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிக்க மத்திய அரசு கூறிய காரணங்கள் உண்மைக்குப் புறம்பானவை: வைகோ

சென்னை, செப். 24: விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டிக்க நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறிய காரணங்கள் உண்மைக்கு புறம்பானவை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக தில்லி உயர் நீதிமன்ற தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் வழக்கில் வெள்ளிக்கிழமை ஆஜரான வைகோ எடுத்துவைத்த வாதம்:விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டிப்பதற்கு மத்திய அரசு கூறியுள்ள காரணங்கள் உண்மைக்கு புறம்பானவை. உலகெங்கும் உள்ள தமிழர்களுக்காகவும், இந்தியாவில் உள்ள தமிழர்களுக்காகவும் சேர்த்து தனி தமிழ் ஈழ நாடு கோருவதால், அது இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தாக முடியும் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. தனி ஈழம் என்பது இலங்கைத் தீவில் உள்ள வடக்கு, கிழக்குப் பகுதி. அது அவர்களின் தாயகம். வரலாற்றின் தொடக்கத்திலிருந்து அவர்கள் அரசாண்ட பூமி. தமிழகத்தின் ஒரு அங்குல இடத்தைக்கூட அவர்கள் தனி ஈழத்தோடு சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை. இதற்கு மத்திய அரசு ஆதாரத்தை காட்ட முடியுமா? புலிகள் பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்த மத்திய அரசு செய்யும் திட்டமிட்ட பிரசாரமாகும். நான் இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிரானவன் அல்ல. நாட்டுப்பற்றில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. தனித்தமிழ் ஈழ நாட்டை ஆதரிக்கிறோம். அதை அமைப்பதுதான் எங்களின் குறிக்கோள். புலிகள் மீது தடை இருப்பதால் அகதிகளாக தமிழகத்துக்கு வரும் தமிழர்களை புலிகள் என்று முத்திரை குத்தி சிறை முகாமுக்கு அனுப்புகிறார்கள் அல்லது இலங்கைக்கே திருப்பி அனுப்புகிறார்கள். இதற்காகவே தடையை நீட்டிக்க கூடாது என்கிறேன்.உலகம் முழுவதும் இணையதளத்தில் புலிகளுக்கு ஆதரவாக, இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் செய்யப்படுவதாக மத்திய அரசு ஆணையில் குறிப்பிட்டுள்ளார்கள். மனித உரிமைகளைக் காக்க உலகில் எழுகின்ற குரல் அது. தமிழர்களுக்கு துன்பம் விளைவிப்பதற்காகவே புலிகள் மீதான தடையை அரசு பயன்படுத்துகிறது. எனவே, புலிகள் மீதான தடையை நீட்டிக்க அனுமதிக்கக் கூடாது என்றார் வைகோ.
கருத்துக்கள்

மிக மிக மிகச் சரியாக வைக்கோ அவர்கள் தெரிவித்தார்கள். எனினும் என்ன பயன்? நடுவுநிலைமையுடன் தீர்ப்பு கூறினால் அறம் வெல்லும்.முன்னரே எழுதி வைத்த தீர்ப்பை வாசிப்பதாக இருந்தால் பயன் இல்லை. எனினும் கொடுங்கோன்மை ஒடுக்கு முறையில் இருந்து மீட்கத் தம் உயிரையும் இழ்நத இழக்க ஆயத்தமாக உள்ள அமைப்பை எதிர்ப்போர் விரைவில் தக்க விலை செலுத்துவர். ஆம்! அவர்களின் மோசடிகள் வெளியாகித் தண்டனை பெறுவர். வெல்க தமிழ் ஈழம்! வளர்க தமிழீழ இந்திய உறவு! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By ilakkuvanar thiruvalluvan
9/25/2010 3:00:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
"பெரிய கோயிலை கட்டியது யார்?'

தஞ்சாவூர், செப். 24: தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியது யார் என்று முன்பு நிலவிய பல்வேறு உண்மைக்குப் புறம்பான கருத்துகளுக்கு துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கமளித்தார்.தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 'இந்தியப் பெருமைக்குத் தஞ்சையின் பங்களிப்பு' என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை ஆய்வரங்கம் நடைபெற்றது.ஆய்வரங்கத்தைத் தொடக்கிவைத்து மு.க. ஸ்டாலின் பேசியது:நாம், நம்மவர், நம்முடையவை என்ற உணர்வுகள் குறைவதால், நம்முடைய உரிமைகளை நமக்கு உரிமையுள்ள உடைமைகளையெல்லாம் இழந்துவிடுகிறோம். மறந்துவிடுகிறோம் என்பதற்கு இந்தப் பெரிய கோயில் தொடர்பான ஒரு செய்தியே சான்றாக அமைந்துள்ளது.இந்தப் பிரம்மாண்ட பெரிய கோயிலைக் கட்டியது யார் என்பது குறித்து பல்வேறு கதைகள் கூறப்பட்டுள்ளன. கிருமி கண்ட சோழன் என்னும் கரிகாலனால் கட்டப்பட்டது என்றும், அவனுக்கு இருந்த குட்ட நோய் இங்குள்ள சிவகங்கை குளத்தில் நீராடியதால் நீங்கியது என்றும், ப்ரஹதீஸ்வர மஹாத்மியம் என்னும் வடமொழிப் புராணமும், தஞ்சாபுரி மஹாத்மியம் என்னும் மராட்டிய மொழி நூலும் கூறியுள்ளன.ஜி.யு. போப்கூட, காடுவெட்டிச் சோழன் என்பவர் கட்டியதாக எழுதுகிறார். இதுகுறித்து மேலும் சிலர் இந்தப் பெரிய கோயில் குறித்த உண்மைக்குப் புறம்பான பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.இக் கோயில் கண்ணில்படாமல் மறைக்கப்படக் கூடிய அளவுக்குச் சிறியதல்ல. மறக்கப்படக் கூடிய சாதாரணத் தோற்றம் கொண்டதும் அல்ல. இத் திருக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் இதைக் கட்டியது யார் என அறிந்திருப்பார்கள். அவர்களால் பிரம்மாண்டமான இத் திருக்கோயில் பற்றிய செய்திகள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச் செவிவழியாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கும். என்ன காரணத்தாலோ அது தடைப்பட்டுவிட்டது.இந்நிலையில், 1886-ம் ஆண்டில், அந்த நாளைய சென்னை ஆங்கிலேய அரசாங்கம், ஹூல்ஸ் என்ற ஜெர்மன் அறிஞரைக் கல்வெட்டு ஆய்வாளராக நியமித்தது. அவர் பெரிய கோயில் கல்வெட்டுகளைப் படியெடுத்து படித்து, இதைக் கட்டியவர் ராஜராஜனே என முதல் முதலாக கூறினார். என்றாலும் 1892-ல் வெங்கையா என்பவரால் பதிப்பிக்கப் பெற்ற தென்னிந்தியக் கல்வெட்டுகள் என்னும் நூலின் இரண்டாம் தொகுதியில் உள்ள முதல் கல்வெட்டில், "பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜீஸ்வரம்' என்னும் தொடர்தான் இக் கோயிலைக் கட்டியவர் மாமன்னர் ராஜராஜன்தான் என்பதைச் சற்றும் ஐயமின்றி உறுதி செய்திருக்கிறது என்றார் மு.க. ஸ்டாலின்.
கருத்துக்கள்

குறிப்பை எடுத்துத்தந்தவர்க்குப் பாராட்டுகள். கருத்தரங்கத்தைக் கருத்தரங்கமாக ஆக்கியுள்ள துணை முதல்வருக்கும் பாராட்டுகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By ilakkuvanar thiruvalluvan
9/25/2010 2:47:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

சர்வேசனே சத்தியம் தொலைந்து போகுமா???

சர்வேசனே சத்தியம் தொலைந்து போகுமா???

முள்ளிவாய்க்காலில் நான் தொலைத்துவிட்ட சூரியப்புதல்வனே
உனைக்  காணாது தேடினேன் தேடினேன் ஓடினேன் அலைந்து திரிந்து
அழுது புலம்பினேன் தனயனே தாய் முகம் நான் காணவில்லை
தந்தையெனக்குத் தேவையில்லை
எனக்குமட்டும் தரிசனம் தருவாயா  அருமை அண்ணனே
வைகறையிலெழுந்து வல்லைவெளியிலும் தேடினேன்
எல்லாலமைந்தனே எட்டுத்திக்கிலும் தேடினேன் ஓடினேன்
தேடினேன் முல்லைக்கடலிடம் கேட்டேன் கததியழுகிறது
தம்பியின் படகைக்காணோமெண்று கண்ணீர்வடிக்கிறாள்
பாக்குநீரிணையைப்பாய்ந்து செண்று பார்த்தேன்
அண்ணணின் காலடியைக்காணவில்லை கலங்கினேன்
புலம்பித்தவித்து புயலாய் மாறி ப் பறந்து சென்று சூரியனிடம்
கேட்டேன் மைந்தனைக்காணோமென்று அவனும் மனுத்தந்தான்
வெண்ணிலவுக்குப்பறந்துசென்று பார்த்துவந்தேன்
பார்த்திபன் வந்ததாய் தடயமேதுமில்லை
பச்சைவயலெங்கும் இச்சையுடன்தேடித்திரிந்து கூப்பிட்டுப் பார்த்தேன்
பயனேதும் இல்லையே சர்வேசனிடம் சத்தியத்தைக்கண்டாயா என
-ஆவேசமாய்க் கேட்டேன் அவ்வளவுசக்தி எனக்கில்லையென்றவன் கூறிவிட்டான்
ஈண்றெடுத்த ஈழத்தாயிடம் இறுக்கமாய்க்கேட்டேன்
இல்லையடா இல்லையென இரக்கமாய் சொல்லிவிட்டாள்
உப்புநீரில் நனைந்து உலகெங்கும் தேடினேன் உண்மையாகக்காணவில்லை
அண்ணா என அண்ணார்ந்து வானத்தைப்பார்த்துக் கதறினேன்
கார்மேகம் கூடிக் கும்மாளமடித்துக் குதூகலித்துக்கொண்டிருந்தது
வாளெடுத்துப்பறந்து சென்று பச்சைத்தமிழனை பார்த்தாயா என
-ஆத்திரமாகக் கேட்டேன் அய்யகோ அபயமென்று காலடியில் வீழ்கிறது
கார்மேகத்தைக்கலைத்து விட்டு கரிகாலனைத்தேடினேன்
உலகத்தமிழினமே உறங்கிக்கிடவாமல் உக்கிரமாய் விரைந்து வா
ஈழவரலாற்றில் சூழ்ந்துவிட்ட இருளைவிரட்டியடித்து
விடியலை வரவழைத்தால் நிச்சயமாய்  நாளைஉதயத்தில்
கதிரவனைக் காணலாம் ………………………….
(Visited 11 times, 2 visits today)
பத்திரிகை ஆசிரியர் கொலையில் பொன்சேகாவுக்கு தொடர்பு: அமைச்சர்


கொழும்பு, செப்.24- இலங்கையில் வெளியாகும் "சண்டே லீடர்" பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலையில் ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவுக்கு தொடர்பு உள்ளது என்று அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும், மேர்வின் சில்வா நாடாளுமன்றத்தில் பேசுகையில் குறிப்பிட்டதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், உபாலி தென்னக்கோன், கீத் நோயர் ஆகிய பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திலும் பொன்சேகாவுக்கு தொடர்பு உள்ளது என்றும் அமைச்சர் மேர்வின் கூறியிருப்பதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

இதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அடுத்து பக்சே யார் யார் கொலைகளில் தொடர்பு கொண்டுள்ளார் என்பதைப் பொன்சேகா தரப்பு தெரிவிக்கட்டும். அடுத்துப் போர்க் குற்றங்களில் இருவர் பங்களிப்பையும் மாறி மாறி வெளிப்படுத்தட்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படட்டும். இப்பொழுதேனும் அறம் வெல்லட்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/24/2010 6:15:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

தமிழ்வழிக் கல்வியும் வேலைவாய்ப்பும் - சங்கப்பலகை 26.09.2010

அன்பிற்குரிய நண்பர்களே! வணக்கம். தமிழ் வழிப் பயின்றவர்களுக்குப் பணிமர்த்தததில் முன்னுரிமை வழங்கி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதை அறிவீர்கள். இதன் அடிப்படையில் தமிழ்வழிக் கல்வியும் வேலைவாய்ப்பும் என்னும் தலைப்பில் வரும் ஞாயிறு 26.09.2010 இரவு 10.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியின் சங்கப்பலகை நிகழ்ச்சியில் தோழர் தியாகுவுடன் நான் உரையாடுகிறேன். காணவும் பிற அன்பர்களைக் காணச் செய்யவும் கருத்தினைத் தெரிவிக்கவும் அன்புடன் வேண்டுகின்றேன். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்

தஞ்சைக் கோவில் : கொண்டாட்டத்திற்கு இடையில் சில கேள்விகள்

(within the last minute) Ilakkuvanar Thiruvalluvan said:
<<பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவின் தென்பகுதியில் விரிந்திருந்த சோழர் ஆட்சியில் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட அற்புதம் இந்தக் கோவில் >>அருமையான கட்டுரையில் எப்படி இந்தத் தவறு நேர்ந்தது. உடனே பத்தாம் நூற்றாண்டில் எனத் திருத்துங்கள். உங்கள் கடைசி வினாவிற்கு விடை: இப்பொழுது உள்ள பலரின் பெயர்கள் வரலாற்றில் இருந்தே துடைத்து எறியப்படும். சிலரின் பெயர்கள் எட்டப்பர்களாகவும் ஊழல் பேரரசர்களாகவும் கறை படிந்து நிலைத்து நிற்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
++++++++++++++++++++++

முகப்புக் கட்டுரை

தஞ்சைக் கோவில் : கொண்டாட்டத்திற்கு இடையில் சில கேள்விகள்

-மணா  
natpu ''தற்காலத்தில் கட்டப்படுகிற கட்டிடங்கள் எவ்வளவு காலத்துக்குத் தாங்கும் ?'' - இன்று இந்தக்கேள்வி கேட்கப் பட்டால் இதையொட்டிப் பல துணைக்கேள்விகள் எழும்.
''கட்டியவர்கள் யார்?'''' காண்டிராக்டரா? அவர் எந்த அளவுக்குக் கட்டியிருப்பார்?'' '' குறைந்தபட்சம் இருபது ஆண்டுகளுக்காவது தாங்குமா?'' - இப்போதுள்ள உழைப்பின் மதிப்பு அவ்வளவு தான்.
ஆனால் இதே காலத்தை எதிர்கொண்டு -ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இயற்கை இடையூறுகளை எல்லாம் தாண்டி இன்றைக்கும் பிரமாண்டமாக தஞ்சை பெரிய கோவில் நிலைத்து நிற்கிறது என்றால் - அன்றைக்கு அவர்கள் கோவில் கட்டுமானத்தில் காட்டிய அர்ப்பணிப்புணர்வு மிக்க உழைப்பு கெட்டிதட்டி இப்படி வானத்தை நோக்கி நிமிர்ந்து நிற்கிறது.
natpuபிரகதீஸ்வரர் கோவில் என்றழைக்கப்படும் தஞ்சைக்கோவில் பழந்தமிழில் பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்பட்டாலும் -மக்கள் மொழியில் அதை '' பெரியகோவில்'' என்றே அழைக்கிறார்கள்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவின் தென்பகுதியில் விரிந்திருந்த சோழர் ஆட்சியில் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட அற்புதம் இந்தக் கோவில். கோவில் கட்டுமானத்தில் காலத்தை மிஞ்சி நிற்க என்னென்ன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடியுமோ அவற்றை அன்றே பயன்படுத்தி இருக்கிறார்கள். கருங்கற்கள் அவ்வளவு நுட்பமாக இணைக்கப்பட்டிருக்கின்றன. கோவிலைத் தாங்கிய அடித்தளம் கூட நிலநடுக்கத்தைத் தாங்கும் விதத்தில் சிறு பாறைகளைத் தாங்கியபடி கட்டப்பட்டிருக்கிறது.
வெகு தூரத்திலிருந்து கற்களை வரவழைத்து -13 அடுக்குகளைக் கொண்ட கோவில் கோபுரத்தைத்தாங்கும் சுவர் இரண்டு பகுதிகளாக இருப்பதால் கூடுதல் கனத்தைத் தாங்கக்கூடியதாக இருக்கிறது.
கி.பி 1004 ஆம் ஆண்டு துவங்கி 1010 ஆம் ஆண்டு நிறைவு பெற்றுள்ள கூம்பு வடிவில் குவிந்த கோபுரத்தை வெகு கவனமாகக் கட்டி முடித்திருக்கிறார்கள். குஞ்சரமல்லன் தலைமையிலான சிற்பிகள் குழு இந்த அற்புதத்தைச் சாதித்திருக்கிறது. அப்போது கோவில் கலசத்திற்குப் பொற்கூரை வேய்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நூற்றுக்கணக்கான கல்வெட்டுக்கள் இறைந்து கிடக்கும் கோவிலில் வேலைபார்த்த சிற்பிகளின் பெயர்கள் எல்லாம் செதுக்கப்பட்டிருப்பது ராஜராஜ சோழனுக்கும் பெருமை. பணியாற்றிய சிற்பிகளுக்கும் பெருமை.
கோவிலுக்குள் உயர்ந்து நிற்கும் லிங்கத்தின் உயரம் 13 அடி. கோவிலுக்கு ராஜராஜன் வழங்கியிருக்கிற நகைகளை எல்லாம் பார்க்கும்போது அடுத்தடுத்த படையெடுப்புகளின் போது அவை கொள்ளை போய்விட்டாலும் கோவிலில் இருக்கும் ஒவ்வொரு பதிவும் மன்னரான ராஜராஜன் தான் கட்டிய கோவிலின் மீதிருந்த அளவு கடந்த மதிப்பை வெளிப்படுத்துகின்றன.
natpuஅவருக்கு விசாலமான மனம் இல்லாவிட்டால் இப்படியொரு சாதனை நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் அன்றைக்கு இருந்த தமிழர்களிடம் இருந்த அளப்பரிய கட்டடக் கலை வெளியுலகிற்குத் தெரிய வந்திருக்கிறது. உழைப்பின் வீர்யத்தைக் காட்டும் இந்த ஈடுபாடு இன்றைக்கு ஏன் தொடரவில்லை ?
அருண்மொழித்தேவன் என்ற இயற்பெயர்கொண்ட ராஜராஜசோழன் இந்தக் கோவிலைக் கட்டி முடித்த போது - அதற்குச் சூட்டப்பட்ட பெயர் ராஜராஜேஸ்வரம். கோவிலில் உள்ள இரண்டாம் கோபுர வாசலின் பெயரே ராஜராஜன் வாசல் தான்.
எத்தனையோ தியாகங்களும்,அர்ப்பணிப்புகளும் நிறைந்து கிடக்கிற கோவிலுக்குள் இருக்கும் '' உணர்வுவயப்பட்ட தன்மை''க்கு ஓர் உதாரணம் -இந்தக் கோவிலில் இருக்கும் ஒரு கல்வெட்டு. ராஜராஜ சோழனின் தந்தையான சுந்தரச் சோழன் உயிர்துறந்த போது அரசியான வானவன்மாதேவியும் உடன்கட்டை ஏறி உயிர் நீத்தத்தாகவும் ,அவருக்கு ராஜராஜனின் தமக்கையான குந்தவை கோவிலுக்குள் சிலை எழுப்பியிருப்பதாகவும் அந்தக் கல்வெட்டு சொல்கிறது.
இனி அந்த நினைவுகளை விட்டு நிகழ்கால வெக்கைக்குள் வருவோம்.
natpu காலத்தை மிஞ்சி இன்னொரு கரைக்கு வந்து சேர்ந்திருக்கிற கோவிலின் சிறப்பைத் தாமதமாக 1987 ல் உணர்ந்து உலகப்பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக தஞ்சைக் கோவில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதே ராஜராஜனுக்கு ஒரு சிலையைச் செய்து - கோவிலுக்கு முன்னால் ஒரு ஓரத்தில் அவரை இழிவு படுத்துகிற மாதிரி ராஜராஜன் சிலையை வைத்தது ஒன்று தான் காலங்கடந்து செய்த கைங்கர்யம். அந்தச் சிலையைக் கோவிலுக்குள் வைக்கக்கூடாதா என்கிற கேள்விகள் எழுந்தபிறகு சென்ற ஏப்ரலில் கூட கோவிலுக்குள் சிலையை நிறுவ இருப்பதாக அறிவித்தவர்கள் - ஆயிரமாண்டு விழா கொண்டாடப்படும் நேரத்தில் ஏன் சௌகர்யமாக மறந்து போனார்கள்?
ராஜராஜனின் பிறந்த தினமாகிய ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று இன்றும் கோவிலுக்குள் சதயவிழா கொண்டாடப்படும் போது , அவர் புகழ்பாடும் கல்வெட்டுக்கள் கோவில் முழுக்க நிறைந்திருக்கும் போது - உருவாக்கிய மன்னர் சிலையை கோவிலுக்குள் கொண்டு போவதில் என்ன பாரபட்சம் ?
இதற்குப் பின்னும் ஒரு மூடநம்பிக்கை புதைந்து கிடப்பது தான் ராஜராஜ சோழன் சிலை நகராமல் அதே இடத்தில் இருப்பதற்கும் காரணம்.
natpu ராஜராஜன் சிலையை கோவிலுக்குள் நகர்த்தினாலோ,கோவிலுக்குள் ஆட்சி செய்பவர்கள் போனாலோ - ஆட்சிக்குப் பிரச்சினை ஏற்பட்டுவிடும் என்று நிலவுகிற மூட நம்பிக்கையை சிலர் நம்பலாம். அது வேறு. ஆனால் பகுத்தறிவுவாதிகளாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் இன்றைய ஆட்சியாளர்களுக்கும் இந்த சந்தேகமும்,தயக்கமும் வரலாமா?
இல்லையென்றால் ,மத்தியில் தி.மு.க வும் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இருந்து கொண்டு இதைக்கூடச் செய்யவில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம் ?
ஆயிரமாண்டுக்கு முந்திய ஆட்சியில் தலைநிமிர்ந்த ஒரு மன்னரை நம்முடைய மிகக் குறுகிய கால அரசியலுக்குள் புகுத்திப்பார்க்கலாமா?
natpuஇதே ராஜராஜனின் செப்புச் சிலையும்,அவருடைய மனைவி சிலையும் குஜராத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது தெரிய வந்தும் அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? எப்படி இங்கிருந்து அந்தச் சிலைகள் குஜராத் மியூசியத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டன என்பது குறித்த விசாரணையாவது முறையாக நடந்ததா? இந்தியாவில் இன்னொரு மாநிலத்திற்குள் இருக்கும் ஒரு தமிழ் மன்னரின் சிலையைக் கூட ஆயிரமாண்டு விழாவின் போதுகூட ஏன் கொண்டுவர முடியவில்லை?
கும்புகோணத்திற்கு அருகில் உள்ள உடையாளுருக்கு அருகில் சோழர்களின் பழைய தலைநகரம் இருந்ததாக தஞ்சையில் செய்திகள் அடிபடுகின்றன.அங்கு ராஜராஜ சோழனின் சமாதி பாழடைந்த நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தாலும் அவற்றைப்பற்றி அரசு எந்த பதிலையும் தரவில்லை. அதேசமயம் மறுக்கவும் இல்லை.
அந்த இடத்திற்கு அருகில் கிரந்த எழுத்துக்கள் அடங்கிய தூண்கள் எல்லாம் இருந்தும் அவை இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை. அதைப்போல அமெரிக்காவைச் சேர்ந்த ரொனால்ட் என்பவர் கோவிலுக்கு வழங்கிய அபூர்வமான ருத்ராட்ச மாலை காணாமல் போனது பற்றியும் இப்போது சில விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
தஞ்சையில் உள்ள தஞ்சை உரிமை மீட்புக்குழுவைச் சேர்ந்தவர்களால் இப்போது முன் வைக்கப்படும் ஒரு கேள்வி.'' தஞ்சைப் பெரிய கோவில் கட்டப்பட்டது 1010 இல். அதைக்கட்டிய ராஜராஜன் தமிழ் மன்னர். சோழர் ஆட்சி முடிவுக்கு வந்தது கி.பி.1535ல். அதன் பிறகு நாயக்க மன்னர்கள் ஆண்டு அதன்பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் மராட்டிய மன்னர்கள்.தமிழர்கள் கட்டிய கோவிலை மராட்டிய வாரிசுகள் நிர்வகிக்கலாமா? '' என்ற கேள்வியும் கேட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் அரசு நிர்வாகத்தில் உள்ள அறநிலையத்துறையே தஞ்சைக் கோவிலின் நிர்வாகத்தையும் எடுத்துக் கொண்டால் என்ன என்கிற கேள்வியும் இதையொட்டி எழுந்திருக்கிறது.
ஒருபக்கம் - காவிரியில் கூடுதலாக நீரைவிடச் சொல்லி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கூட நிறைவேற்ற மத்தியக்கூட்டணி அரசில் இருந்தும் சரிவர முயலாத தமிழக அரசு மேலே எழுப்பியுள்ள கேள்விகளுக்கு என்ன பதில் அளிக்கப் போகிறது?
natpu25 கோடி ரூயாயை மத்தியஅரசு செலவழிக்க -தமிழக அரசு அதைவிடக்கூடுதலான பணத்தைச் செலவழிக்கத்தயார் ஆன நிலையில் தஞ்சைக் கோவிலுக்கு ஆயிரமாண்டு விழா நடக்கலாம்.தஞ்சை மாவட்ட மக்களும் சில நாட்கள் கேளிக்கைகளை வேடிக்கை பார்க்கலாம்.
ஆயிரமாண்டுகளுக்கு முன்பு ஆட்சி செய்த ராஜராஜசோழனுக்குத் தன்னுடைய சாதனை என்று சொல்லிக்கொள்ள காலம் கடந்தும் எத்தனையோ அம்சங்கள் மிஞ்சியிருக்கின்றன.
இப்போது உள்ளவர்களுக்கு அப்படி என்ன மிஞ்சும் ?


இப்படியோர் அற்புதம் எப்படி கட்டப்பட்டிருக்கும்?


ஜராஜேச்சரத்தின் நெடிதுயர்ந்த ஸ்ரீ விமானத்தைப் பார்க்க நேரும்போதெல்லாம் இந்தக் கேள்வி எழும்: இப்படியோர் அற்புதம் எப்படி கட்டப்பட்டிருக்கும்?  இந்தக் கேள்விக்கு ஒரே மாதிரியான பதில்தான் கிடைக்கிறது: ஸ்ரீ விமானத்தைச் சுற்றி மண் சாய்வுத்தளம் அமைக்கப்பட்டு, அதன் வழியாக யானைகள் துணையுடன் கற்கள் கொண்டுசெல்லப்பட்டு கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.  இது தொடர்பாக தஞ்சாவூர்ப் பகுதியில் சரளமாகப் புழங்கும் இரு கதைகள் உண்டு. ஒன்று, பெரிய கோயிலைச் சுற்றி குளங்கள் வெட்டப்பட்டு, அவற்றின் மூலம் பெறப்பட்ட மண்ணால் சாய்வுத்தளம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கதைக்கு சாட்சியாக குளங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. மற்றொன்று, தஞ்சாவூருக்கு வடகிழக்கேயுள்ள சாரப்பள்ளம் என்னும் ஊரிலிருந்து மண் குவிக்கப்பட்டு சாய்வுத்தளம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கதைக்கு சாட்சியாக சாரப்பள்ளம் ஊர் சுட்டிக்காட்டப்படுகிறது.  ஆனால், இந்த விளக்கங்கள் போதுமானவையாக இல்லை. நாம் நம் முன்னோரின் திறனைக் குறைத்து மதிப்பிடுகிறோமோ என்று தோன்றுகிறது.  இதைக் கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள். ராஜராஜேச்சரத்தில் ஸ்ரீ விமானத்தின் மையத்தில் இருக்கிறது சுமார் 13 அடி உயரத்திலுள்ள பெருவுடையார் திருமேனி. இதிலிருந்து ஏறத்தாழ 191 அடி உயர இடைவெளிக்கு அப்பால் உச்சத்தில் இருக்கிறது ஸ்ரீ விமானத்தின் சிகரக் கலசம். பெருவுடையார் திருமேனியின் மையமும் சிகரக் கலசத்தின் மையமும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கின்றன. இந்த நேர்க்கோட்டைக் கற்பனை செய்தவாறே சுற்றியுள்ள ஸ்ரீ விமானக் கட்டுமானத்தைக் கற்பனைசெய்யுங்கள். எப்பேர்ப்பட்ட மகத்துவமான கட்டமைப்பு இது?!  நவீனங்கள் எழுச்சிபெற்ற ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். நாம் வசிக்கும் இந்தப் புவிக் கோளத்தின் எந்த ஒரு பகுதியையும் நினைத்த மாத்திரத்தில் அணுகவும் மாற்றியமைக்கவும் அழிக்கவுமான தொழில்நுட்பத்தை, சாதனங்களை, வல்லமையை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால், இன்றைக்கு நாம் கொண்டிருக்கும் இந்த நவீன வசதிகள் அனைத்தையும் பயன்படுத்தி இப்படியொரு மகத்துவத்தை விஞ்சக்கூடிய ஒரு கோயிலை இதே உன்னதத்துடன் நம்மால் கட்டியெழுப்ப முடியுமா? முடியாது என்பதை ஒத்துக்கொள்வோம் என்றால், முடியும் என்று சாத்தியமாக்கிய நம் முன்னோரின் தொழில்நுட்பம் எத்தகையதானதாக இருந்திருக்கும்? அவர்கள் பயன்படுத்திய சாதனங்கள் எத்தகையவனவாக இருந்திருக்கும்? நிச்சயம் இப்படியோர் கட்டுமானத் திறன் திடீரென ஒரு காலகட்டத்தில் வெளிப்படக் கூடியதல்ல. நீண்ட கால மரபின் உச்சமாகவே இந்தப் படைப்பு முகிழ்ந்திருக்க வேண்டும். அப்படியென்றால், நம்முடைய முன்னோரின் மரபு எத்தகையதாக இருந்திருக்கும்?  நீண்ட காலமாக அழுத்திக்கொண்டிருந்த கேள்வி இது: இப்படியோர் அற்புதம் எப்படி கட்டப்பட்டிருக்கும்?  அண்மையில் ஒரு தகவல் கிடைத்தது. ராஜராஜ சோழன் ஒரு நிலப்பகுதியை கீழ்முந்திரியாகப் பிரித்திருக்கிறான் என்ற தகவல் அது. கீழ்முந்திரி என்பது கீழ்கணக்கிலுள்ள ஓர் அளவு.  ஒன்றைப் பங்கு போட கையாளப்பட்ட கணக்கே கீழ்கணக்கு. முக்கால் என்ற அளவில் தொடங்கும் அந்தக் கணக்கு அதிசாரம் என்ற அளவில் முடிகிறது. முக்கால் என்பது ஒரு ரொட்டியின் நான்கில் மூன்று பங்கை குறிக்கிறது (3/4) என்றால், அதிசாரம் என்பது ஒரு ரொட்டியின் பதினெட்டு லட்சத்து முப்பத்தியெட்டாயிரத்து நானூறில் ஒரு பங்கைக் குறிக்கிறது (1/18,38,400). இதில், கீழ்முந்திரி  என்பது ஒரு ரொட்டியின் லட்சத்து இரண்டாயிரத்து நானூறு (1/1,02,400) கூறுகளில் ஒரு பங்கைக் குறிக்கும்.  நவீனத்தின் உச்சத்தில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் இந்தத் தலைமுறையைச் சேர்ந்த நமக்கு கீழ்கணக்கு தெரியாது. நமக்கு முந்தைய தலைமுறையினர் இந்தக் கணக்கை அறிந்திருக்கலாம். எனினும், அந்தக் கணக்கிலுள்ள பல்வேறு வகைமைகளில் எந்த அளவு வரை அவர்கள் கையாண்டிருக்கக் கூடும் என்று தெரியவில்லை. ஆனால், ராஜராஜன் தலைமுறையோ மிக நுட்பமான இந்தக் கீழ்கணக்கை முழுமையாக அறிந்திருக்கிறது; மிக நுட்பமான இந்தக் கீழ்கணக்கை முழுமையாகக் கையாண்டிருக்கிறது.  இப்படியோர் அற்புதம் எப்படி கட்டப்பட்டிருக்கும்?  இந்தத் தலைமுறையின் அறிவிலிருந்து அந்தத் தலைமுறையின் அறிவை அறுதியிட முனைவது அறிவீனமாகத் தோன்றுகிறது.  இப்படியோர் அற்புதம் எப்படி கட்டப்பட்டிருக்கும்?  இந்தக் கேள்விக்கான பதில் இப்போது புலப்பட்டுவிட்டதுபோல தோன்றுகிறது.
கருத்துக்கள்

இந்த அற்புதம் நம் முன்னைத் தமிழர்கள் தமிழில் எண்ணித் தமிழில் பயின்றதால்தான் முடிந்தது. இப்பொழுது அயல் மொழிகளில் படிப்பதையும் அயல்மொழிகள் வாயிலாகப் படிப்பதையும் பெருமையாகக் கருதுவதால் அறிவியல் அறிவை இழந்தோம்.
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/24/2010 2:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தனித்து போட்டியிட்டால் சாயம் வெளுக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்

தமி​ழக சட்​டப்​பே​ர​வைத் தேர்​தல் குறித்து பா.ஜ.க நிர்​வா​கி​கள் ஆலோ​ச​னைக் கூட்​டம் சென்​னை​யில் வியா​ழக்​கி​ழமை நடை​பெற்​றது.​ இதில் பங்​கேற்ற ​(வல​
சென்னை, செப். 23:  தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சியின் சாயம் வெளுக்கும் என பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து பா.ஜ.க நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழக பொறுப்பாளர் பங்காரு லட்சுமணன் தலைமை வகித்தார்.இதுகுறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் கட்சி ஆற்ற வேண்டிய பணிகள்  குறித்து மாநில பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது. வரவிருக்கும் தேர்தலில் அதிக இடங்களுடன் சட்டப்பேரவைக்குள் நுழைவோம். கூட்டணி  குறித்து இதுவரை எங்களிடம் எந்த கட்சியும் பேசவில்லை. நாங்களும் யாருடனும் பேசவில்லை. இப்போதைக்கு கட்சியை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, கோவையில் கட்சி பலமாக உள்ளது. சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படுவதைப்போல இந்து மாணவர்களுக்கும் அதிகமான கல்வி உதவித்தொகை  வழங்கப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாதயாத்திரை நடத்த உள்ளோம். விவசாயிகள் பிரச்னை, கோயில் நில மீட்பு விவகாரங்கள் குறித்தும் கவனம் செலுத்துவோம். தமிழகத்தில் எல்லா வகையிலும் நிர்வாகம் செயல் இழந்துவிட்டது. தனியார் பள்ளி கட்டணம் தொடர்பான நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியின் அறிக்கையைக்கூட சரியாக செயல்படுத்த முடியவில்லை.காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்து போட்டியிட்டால் அதன் சாயம் வெளுத்துவிடும். காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடைபெற்றுள்ள ஊழல் மூலம் இந்தியாவிற்கு சர்வதேச அரங்கில் பெரும் தலைக்குனிவு ஏற்படுள்ளது என்றார் பொன். ராதாகிருஷ்ணன். கட்சியின் அகில இந்திய அமைப்பு இணைச்செயலர் வி.சதீஸ், கட்சியின்  தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ், மாநில நிர்வாகிகள் இல.கணேசன், எச்.ராஜா மற்றும் நிர்வாகிகள் பலர் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

காங்.கிற்கும் இந்த உண்மை தெரியும். ஆனால், அதுதான் பெரும்பான்மை வலிமையுடன் இருப்பது போல் கதை அளந்து ஏமாற்றிக் கொண்டுள்ளது. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அதன் வலிமையால் பெரிய கட்சிகள் அதனுடன் கூட்டணி வைக்கப் போட்டிப் போட்டு அதைப்பெரிய கட்சியாக ஆக்குகிறார்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/24/2010 2:47:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
சோழர் காலத்தில் செழுமை பெற்ற உலோகத் திருமேனிகள்

வெண்கலத்தாலான ரிஷபவாகன தேவர், பார்வதி சிலைகள்.
தஞ்சாவூர், செப். 23: தெய்வ உலோகத் திருமேனிகள் தயாரிப்பு சோழர் காலத்தில்தான் செழுமை பெற்றுள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.தமிழகத்தை ஆண்ட பல்லவப் பேரரசு காலத்தில் திருக்கோயில்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கின. ஆயினும், அடுத்து வந்த சோழர்கள் காலத்தில்தான் கோயில்கள் கட்டுமானம் ஒரு மாபெரும் இயக்கமாகவே மேற்கொள்ளப்பட்டது.சோழ மன்னர் ராஜராஜன் தஞ்சாவூரில் பிரம்மாண்டமான கலை நுட்பத்துடன் கூடிய பெரிய கோயிலைக் கட்டிய காலத்தில், சோழப் பேரரசின் பல்வேறு பகுதிகளிலும் திருக்கோயில்கள் கட்டுமானப் பணிகள் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டன.தஞ்சாவூர் பெரிய கோயில் கல்லில் வடிக்கப்பட்ட கண்கவர் கலை பொக்கிஷம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதேகாலத்தில்தான் தெய்வ உருவங்களை உலோகத் திருமேனிகளாக, உலோகச் சிற்பங்களாக வடிக்கும் பணியும் இங்கு உருவானது. அதற்கு முந்தைய காலத்தில் செப்புத் திருமேனிகள் செய்யப்பட்டிருந்தாலும், சோழர்கள் காலத்தில்தான் இந்தத் தொழிலுக்கு மெருகேற்றப்பட்டது என்கின்றனர் ஆய்வாளர்கள்.சிறந்த அரசுக்கும், அரசியலுக்கும் பெயர் பெற்ற தஞ்சாவூர், அக்காலத்தில் இயல், இசை, நாடகம், கோயில் கலை, கட்டுமானத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு கலைகளுக்கும் ஊற்றுக்கண்ணாய் இருந்துள்ளது. உலோகத் திருமேனிகள் உருவாகும் விதம்: ஒரு திருக்கோயிலில் உள்ள மூலவரின் சிற்பத்தை உலோகத் திருமேனியாக (உத்சவராக) உருவாக்க முதலில் மூலவர் திருமேனியின் உடல் வடிவமைப்புகள் அளவீடுகள் செய்யப்பட்டு, சாஸ்திர முறைப்படி, அவை உலோகச் சிற்பங்களாக உருவாக்கப்படுகின்றன. தேன்மெழுகு எனப்படும் ஒரு வகை மெழுகில் செய்ய வேண்டிய திருமேனியை வடிக்கின்றனர் சிற்பிகள். அதில் முழு அளவில் திருப்தி ஏற்பட்டவுடன், அதன் மேல் வண்டல் மண் கொண்டு பூசி, அதை முழுவதுமாக மூடிவிட்டு, பின்னர் மிதமான சூட்டில் சுடுகின்றனர். அப்போது வெப்பத்தில் உள்ளே இருக்கும் மெழுகு உருகி, வைக்கப்பட்டுள்ள சிறு துவாரம் வழியாக வெளியேறுகிறது.அதன் பின்னர் துத்தநாகம், தாமிரம், தங்கம், வெள்ளி, வெள்ளீயம் ஆகியவற்றை குறிப்பிட்ட அளவுகளில் எடுத்துக் கொண்டு, அதனை குழம்பு போல் காய்ச்சி, அந்த குழம்பை, சுடப்பட்டு வைக்கப்பட்டுள்ள உருவ மாதிரியின் (மோல்டு) உள்ளே ஊற்றி, சூடு ஆறியதும், மெதுவாக வண்டல் மண் பூச்சை அகற்றி, உலோகத் திருமேனி வெளியே எடுக்கப்பட்டு, அதைச் சிற்பிகள் தங்களது உளியால் செதுக்கி மேலும் மெருகேற்றுகின்றனர். நிறைவாக நமக்கு அழகிய உலோகத் திருமேனிகள் கிடைக்கின்றன.சோழர் காலத்து உலோகத் திருமேனிகள்தான் சரியான அளவுகளிலும், உடல் அமைப்புகளில் அசலைப் போலவும், ஆபரணங்களால் அழகுறவும் உருவாக்கப்பட்டு, கண்களை வெகுவாக ஈர்த்து, மனதை வசீகரிக்கும் தன்மை உடையன என்கின்றனர் கலை விமர்சகர்கள்.இதுகுறித்து கலைவிமர்சகர் தேனுகா கூறியது:சோழர் காலத்தில்தான் உலோகத் திருமேனிகள் தயாரிப்பில் ஒரு புரட்சி ஏற்பட்டது என்று கூடச் சொல்லலாம். சோழ மன்னர் ராஜராஜன், நூற்றுக்கணக்கான உலோகத் திருமேனிகளை தனது சிற்பிகள் மூலம் உருவாக்கி, தனது ஆட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கோயில்களுக்கு அனுப்பி, அதற்கு உத்சவங்களை நடத்த வழிமுறைகளையும், மானியங்களையும் வழங்கினார்.தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமிமலையில்தான் அதிக அளவில் இத்தொழிலை மேற்கொள்ளும் ஸ்தபதிகள் உள்ளனர். இந்தப் பகுதியில் உள்ள அரசலாறு மற்றும் காவிரி ஆற்றில் கிடைக்கும் வண்டல் மண்தான் இந்தத் தொழிலுக்கு மிகவும் உகந்தது. வேறு எங்கும் இது கிடைப்பது அரிது என்பதால், இந்தப் பகுதியில் அதிக அளவில் ஸ்தபதிகள் உள்ளனர்.   சுவாமிமலையில் ராஜவீதியில் உள்ள ஸ்தபதிகள் ஏறத்தாழ 20-க்கும் மேற்பட்டோர் தேசிய விருதுகள் பெற்றுள்ளனர். இங்கு உருவாக்கப்படும் உலோகத் திருமேனிகள் இந்தியாவில் பல்வேறு பகுதிகளும், உலக நாடுகள் பலவற்றுக்கும் செல்கின்றன.இன்றும்  உலோகத் திருமேனிகள் என்றாலே, அது சோழர் ஆட்சி புரிந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமிமலைதான் என்ற பெரும் சிறப்பு இந்த மண்ணுக்கு உண்டு. அதற்குக் காரணம் சோழர் காலத்தில் உலோகத் திருமேனிகளுக்கு அளிக்கப்பட்ட ஊக்கமும், ஆக்கமும் என்றால் அது மிகையல்ல என்றார் அவர்.தஞ்சாவூர் பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டத்தில் சோழர்கள் உலோகத் திருமேனிகள் உருவாக்கத்தில் அளித்த பெரும் பங்களிப்பைப் போற்றும் வகையில், விழாவின் ஒரு பகுதியாக சோழர் காலத்தில் செய்யப்பட்ட உலோகத் திருமேனிகள் பலவும் சென்னை, திருவாரூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு அருங்காட்சியகங்களிலிருந்து தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள சங்கீத மகாலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதை தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வியாழன், 23 செப்டம்பர், 2010

பெரிய கோயிலின் மறு வடிவம்!


தஞ்சாவூர், ​​ செப்.​ 22:​ தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி அமைக்கப்பட்டு வரும் மேடை பெரிய கோயிலின் வடிவமோ என வியக்கும் வகையில்,​​ மரக்கட்டைகளைக் கொண்டு சிறப்பாக அமைக்கப்பட்டு வருகிறது.​ ​ ​ ​ கலைகளின் பெட்டகமாக விளங்கும் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா சோழ மண்டலத்தின் தலைநகராம் தஞ்சையில் புதன்கிழமை தொடங்கியது.​ 5 நாள் நடைபெறும் இந்த விழாவில் தமிழகம் மட்டுமல்லாது,​​ பிற மாநில மக்களும் கண்டு ரசிக்கும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.​ ​ ​ தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 750 நாட்டுப்புறக் கலைஞர்கள்,​​ பிற மாவட்டங்களைச் சேர்ந்த 100 மரபுக் கலை கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள்,​​ தமிழ்ச் சான்றோர்களின் சொற்பொழிவுகள் இடம் பெறுகின்றன.​ ​ ​ விழாவையொட்டி,​​ பெரிய கோயில்,​​ அரண்மனை வளாகம் உள்ளிட்ட விழா நடைபெறும் இடங்களில் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன.​​ ​ இந்நிலையில்,​​ ஆயுதப் படை மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் நிறைவு விழா மேடையோ பெரிய கோயிலை அப்படியே பெயர்த்து கொண்டு வந்து வைத்து போல,​​ 200 அடி நீளம்,​​ 100 அடி அகலத்தில் சுமார் 400 தச்சு மற்றும் சிற்பக் கலைஞர்களின் அயராத உழைப்பில் உருவாக்கப்பட்டு வருகிறது.​ ​ ​ மேடையின் வலதுபுறம் ராஜராஜ சோழன் யானை மீது அமர்ந்து வர,​​ அவருடன் அரசவைப் புலவர்கள்,​​ பணிப் பெண்கள் புடைசூழ விழாவுக்கு வருவது போலவும்,​​ இடதுபுறத்தில் நாட்டியக் கலைஞர்கள் விழாவில் பங்கேற்க வருவது போலவும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.​ ​ ​ கற்றளியால் எழுப்பப்பட்ட பெரிய கோயிலில் விமானத்தில் உள்ள சிற்பங்கள் போன்றே இங்கும் அமைக்கப்பட்டு வருகின்றன.​ இந்த விமானத்தில் வைப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட சிற்பங்கள்,​​ யாழி மற்றும் நாசிக் கூடுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.​ ​ ​ மாநாட்டுக்கு சிலை வடிப்பது மேடை அமைப்பது என்பது எளிது.​ ஆனால்,​​ கோயில் போன்ற ஒரு மேடை அமைப்பது பெரும் சவாலானது.​ அதுவும் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள பெரிய கோயில் வடிவில் மேடை அமைப்பதென்பது எளிதான செயல் அல்லவே.​ ​ ​ ஆனாலும்,​​ ஒரு கலைஞனின் திறமை இத்தகைய நெருக்கடியான சூழலில்தான் வெளிவரும்,​​ அப்போதுதான் அவனது முழுத் திறமையை வெளிக் காட்ட முடியும்.​ அப்படியொரு வாய்ப்பு இந்த மேடையை அமைக்கும் கலைஞர்களுக்கு தற்போது வாய்த்துள்ளது.​ ​ ​ கலைகள் மீது ஆர்வம் கொண்டு கலைஞனாகத் திகழும் தமிழக முதல்வர் மேடை அமைப்பு குறித்து ஆலோசனை வழங்கி,​​ அவர் வரைந்து கொடுத்த மாதிரி வரைபடத்தை கொண்டு பெரிய கோயில் போன்ற மேடை அமைக்கப்பட்டு வருகிறது.​ ​ ​ அவரின் ஆலோசனையின் பேரிலேயே தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.​ இந்தப் பணி வியாழக்கிழமை முடிக்கப்படும் என்கிறார் மேடை அமைக்கும் பணியை தலைமையேற்று நடத்தி வரும் கலை இயக்குநர் ஜெ.பி.​ கிருஷ்ணா.​ ​ ​ பெரிய கோயில் முன்பு 420 அடி நீளத்தில்,​​ 230 அடி அகலத்தில் சுமார் 15,000 பேர் அமரும் வகையில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.​ அரண்மனை முன்புறத் தோற்றம் போல பனை ஓலைகளில் வண்ணம் தீட்டப்பட்டு பந்தல் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது.​ பந்தல் உள் பகுதி 4 ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது.​ எவ்வளவு மழை பெய்தாலும் பாதிக்காத வகையில் பந்தல் அமைப்பு உள்ளது.​ ​ ​ ​ பந்தல் மேல் பகுதியில் ராஜஸ்தான்,​​ குஜராத் மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட வண்ணத் துணிகள் கட்டப்பட்டுள்ளன.​ தரையில் வெல்வெட் துணிகள் போடப்பட்டுள்ளன.​ ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா காணும் தஞ்சை பெரிய கோயில் பல்வேறு பாரம்பரிய நிகழ்வுகளோடு மேலும் சிறப்பு பெறுகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
கருத்துக்கள்