சனி, 29 ஜனவரி, 2011

council election after assembly election - pazha.nedu.: பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் மேலவை தேர்தல்: பழ. நெடுமாறன்

இதனை வேறு வகையில் பார்க்க வேண்டும். வரும் தேர்தலில் தி.மு.க.     கூட்டணிதான்  வெற்றி பெரும் என்றால் இப்பொழுது தேர்தல் நடத்துவதால் ஒன்றும் இல்லை. ௨.) தி.மு.க.   தோல்வியை தழுவும் என்றால் எதிர்க்கட்சியாக இருக்கும். அப்பொழுது சிறப்பாக செயல்படும். எனவே எதிர்க்கட்சியாக நல்ல முறையில் செயல்பட இப்பொழுது தேர்தல் நடத்துவதால் நல்லதே. ௩.) எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நடைமுறை. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 

பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் மேலவை தேர்தல்: பழ. நெடுமாறன்


சென்னை, ஜன.28- தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்தபின்னர் மேலவைத் தேர்தல் நடத்த வேண்டும் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சட்டமன்ற மேலவைத் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியுள்ளார். பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் மேலவைத் தேர்தல் நடத்தப்படும் என்றும் தற்போது உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களே மேலவைத் தேர்தலில் வாக்களிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.தமிழக சட்ட மேலவையில் மொத்தம் உள்ள 78 உறுப்பினர்களில் சட்டமன்ற பேரவை உறுப்பினர்களின் மூலம் 26 பேரும் உள்ளாட்சிப் பேராளர்களின் மூலம் 26 பேர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். 12 பேரை ஆளுநர் நியமிப்பார். மீதமுள்ள 14 பேரில் பட்டதாரி தொகுதிகளிலிருந்து 7 பேரும் ஆசிரியர் தொகுதியிலிருந்து 7 பேரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.அதாவது இன்னும் சில மாதங்கள் மட்டுமே நீடிக்க இருக்கிற தற்போதைய சட்டமன்றப் பேரவையின் மூலம் 26 பேரும், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. எனவே தற்போதைய உள்ளாட்சி மன்றங்களின் பதவிக்காலம் விரைவில் முடிய இருக்கிறது. அவைகளிலிருந்து 26 பேரும், தற்போதைய தி.மு.க. அமைச்சரவை பரிந்துரை செய்யும் 12 பேர் ஆளுநர் நியமனத்தின் மூலமும் மேலவையில் நுழைய வழிவகுக்கப்படுகிறது. ஆக மொத்தமுள்ள 78 உறுப்பினர்களில் பெரும்பாலோரை தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட வழிவகுக்கவே அவசரக்கோலத்தில் சட்டமன்ற மேலவைத் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.புதிய சட்டமன்றம் அமைக்கப்பட்டப் பிறகும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டப் பிறகும் சட்டமன்ற மேலவைத் தேர்தல் நடத்தப்படுவதுதான் சரியாக இருக்க முடியும். ஆனால் வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் பின்புற வழியில் மேலவையில் புகுந்துகொள்ளும் இந்தச் சதித்திட்டத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயக மரபுகளுக்கும் தார்மீக நெறிமுறைகளுக்கும் இது எதிரானது.இவ்வாறு பழ. நெடுமாறன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்

அன்பன் அவர்களே, நல்ல கேள்வி கேட்டுள்ளீர்கள்! "துரோகிகளா! எதிரிகளா! யாரை ஆதரிப்பது!" என்று! மக்கள் அறிவுப் பூர்வமாக நன்கு சிந்தித்து தெளிவான முடிவெடுத்து தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த ஆர்வம் காட்டினால் நமது துரோகிகளும் எதிரிகளும் நிச்சயம் மக்களுக்குப் பயந்து தங்கள் மக்கள் விரோத போக்கை மாற்றியாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவர்! நடக்குமா! மக்கள் தங்கள் வாக்குகளின் மதிப்பை உணர்ந்து கொள்வார்களா! ... நடக்க வேண்டும்! ... உணர வேண்டும்!
By பொன்மலை ராஜா
1/28/2011 8:52:00 PM
உள்ளூர் தமிழர்களின் விலைவாசி பிரச்னை வேலை வாய்ப்பின்மை மின்சார பிரச்னை இன்னும் பிற பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து போராடாமல் இலங்கை பிரச்னை பற்றி மட்டும் பேசி வரும் நெடுமாறன் போன்றவர்கள் மேலவை தேர்தல் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
By ராமசுப்ரமணியன்
1/28/2011 3:59:00 PM
நெடுமாறன் அவர்களே கங்கிரஸும் , தி.மு.க.வும் மேலவையில் இல்லை என்றால், அ.தி.மு.க. வும் அதன் கூட்டளிகளும்தான் மேலவையில் ஆதிக்கம் செலுத்துவார்கள். முதல் அணியினர் ஈழத்தமிழரின் கொலைக்கு உதவியவர்கள், இரண்டாவது அணியினர் ஈழத் தமிழர்களைக் கொலை செய்யத் தூண்டியவர்கள். இதில் எந்தக் கொள்ளிக் கட்டை சிறந்தது.
By அன்பன்
1/28/2011 3:42:00 PM






articles about C.M. in text books: பாடப் புத்தகங்களில் முதல்வர் படம், கட்டுரை இடம்பெற தடை

எல்லா மாநிலப்   பாடப் புத்தகங்களிலும்  அந்தந்த மாநில அரசு, முதல்வர் பற்றிய பாடங்கள் இருக்கின்றன. இக்கால் வரலாற்று நோக்கில்தான் இதனைப் பார்க்க வேண்டும். கட்சி அரசியலாகப்  பார்க்கக்  கூடாது . 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 

புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் பள்ளி பாடப் புத்தகங்களில், முதல்வர் உள்ளிட்டவர்களின் படங்களோ, கட்டுரைகளோ இடம்பெறக் கூடாது' என, பாடநூல் கழகத்திற்கு, தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டம் அமலாகியுள்ளது. மீதமுள்ள வகுப்புகளுக்கு, ஜூன் மாதம் சமச்சீர் கல்வித் திட்டம் அமலுக்கு வருகிறது. இதற்காக, பள்ளிக் கல்வித்துறை புதிய பாடத் திட்டங்களை தயாரித்து, அதற்கான, "சிடி'க்களை, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.மொத்தம் 197 தலைப்புகளில் பாடப் புத்தகங்கள் தயாராக உள்ளன. இதில், தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் முக்கிய பாடங்கள் 62 தலைப்புகளிலும், மீதமுள்ள 135 தலைப்புகள், கன்னடம், மலையாளம், உருது, தெலுங்கு உள்ளிட்ட ஆறு சிறுபான்மை மொழிகளில் தயாராகின்றன. நேற்று நிலவரப்படி, சிறுபான்மை மொழி அல்லாத 62 தலைப்புகளில், 59 தலைப்புகளுக்கான, "சிடி'க்கள், பாடநூல் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மூன்று, "சிடி'க்கள், வரும் திங்கட்கிழமை ஒப்படைக்கப்பட உள்ளன.இதுவரை பெறப்பட்ட புதிய, "சிடி'க்களின் அடிப்படையில், 67 அச்சகங்களில் 5 கோடியே 35 லட்சம் பாடப் புத்தகங்கள் அச்சிட, பாடநூல் கழகம், "ஆர்டர்' வழங்கியுள்ளது. சிறுபான்மை மொழிப்பாடங்களுக்கான, "சிடி'க்களை, ஜனவரி 15க்குள் ஒப்படைக்க வேண்டும் என, பாடநூல் கழகம் தெரிவித்தபோதும், இதுவரை ஒப்படைக்கப்படவில்லை.

எனினும், இவற்றின் கீழ் அச்சிடப்படும் பாடப் புத்தகங்கள் மிகவும் குறைவு என்பதால், 35 நாட்களுக்குள் அனைத்து பாடப் புத்தகங்களையும் அச்சிட்டு முடித்து விடுவோம் என, பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன. 8 கோடி பாடப் புத்தகங்களையும் ஏப்ரலுக்குள் அச்சிட்டு முடிப்பதற்கு ஏதுவாக, அச்சக அதிபர்களிடம் இருந்து தொடர்ந்து பாடநூல் கழகம் விண்ணப்பங்களை பெற்று வருகிறது.

இதற்கிடையே, "புதிய பாடப் புத்தகங்களில் முதல்வர் உள்ளிட்ட யாருடைய புகைப்படங்களோ, அவர்களைப் பற்றிய கட்டுரைகளோ இடம்பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என குறிப்பிட்டு, பாடநூல் கழகத்திற்கு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கடிதம் அனுப்பியுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு, பாடப் புத்தகங்களில் ஆளுங்கட்சியைப் பற்றி படங்களோ, கட்டுரைகளோ இடம்பெற்றால், அது தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு எதிரானதாக இருக்கும் என்பதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

-ஏ.சங்கரன்-




: V.UU.SI. Port trust: dinamani editoriyal: குறை ஒன்று தீர்ந்தது

நல்ல தலையங்கம். வாசகர்கள் சார்பில் நன்றி தெரிவித்ததற்கும்  நன்றி. செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. பற்றிய பாடம் எல்லா மொழி வரலாற்று பாடங்களிலும் இடம் பெற வேண்டும். 
அன்புடன்  இலக்குவனார் திருவள்ளுவன் 

தலையங்கம்: குறை ஒன்று தீர்ந்தது


தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ.சிதம்பரனார் பெயரைச் சூட்டிட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்கிற செய்தி இந்திய விடுதலை வேள்வி குறித்த கேள்வி ஞானம் இல்லாதவர்களுக்கும்கூட மனங்குளிரச் செய்யும் செய்தியாக இருக்கும் என்பது உறுதி. காரணம், "கப்பலோட்டிய தமிழன்' "செக்கிழுத்த செம்மல்' வ.உ. சிதம்பரம்பிள்ளை என்பது தமிழினத்துக்கே பெருமை சேர்த்த பெயர்.  இந்தியர்களை அடிமைப்படுத்தி, ஆட்சி செய்த ஆங்கிலேயர்களை வ.உ.சி., இந்திய மண்ணில் வணிகம் செய்ய வந்த வியாபாரிகளாகத்தான் பார்த்தார். ஒரு வியாபாரியை எதிர்கொள்வது வியாபாரத்தால் மட்டுமே முடியும் என்று அந்த நேர்மையாளர் நம்பினார். அதன் விளைவுதான் சுதேசிக் கப்பல்! இந்நாளில் மட்டுமல்ல, அன்றைய நாளிலும்கூட கப்பல் என்பது மிகப்பெரும் மூலதனத்தை உள்வாங்கும் தொழில். இரண்டு கப்பல்களை வாங்கி, 1906-ம் ஆண்டில் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்கினார்.  இத்தகைய மிகவும் அசாத்தியமான துணிச்சல்தான் ஆங்கிலேயரை ஆத்திரம் கொள்ளச் செய்தது. அந்த ஆத்திரத்தின் வலி, வ.உ.சி.யின் உடல் வலிகொள்ளும் அளவுக்கு கோவைச் சிறையில் செக்கிழுக்கும்படியாகச் செய்தது.  சிறைத் தண்டனைகள் குறைக்கப்பட்டு அவர் வெளியே வந்தபோது, அவர் வழக்குரைஞர் தொழில் செய்யும் உரிமம் இல்லாதவராக இருந்தார். அந்த உரிமத்தை மீண்டும் தனக்குப் பெற்றுத் தரக் காரணமாக இருந்த ஆங்கிலேய நீதிபதி வாலஸ் பெயரை தன் மகனுக்குச் சூட்டி (வாலேஸ்வரன்) நன்றிக்கடன் செலுத்திய மகான் அவர். அத்தகைய அப்பழுக்கற்ற தியாகச் சுடரின் பெயரை, பெருந்தன்மையின் அடையாளமானவரின் பெயரை தூத்துக்குடி துறைமுகத்துக்குச் சூட்டியிருப்பது மிகப் பொருத்தமானது.  இந்த நற்செயல் எப்போதோ நிகழ்ந்திருக்க வேண்டும். தமிழகத்தை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தபோதே செய்திருக்கலாம். அதன்பின்னர் திராவிட ஆட்சிக் காலங்களிலும் இந்தப் பெயர் சூட்டல் நடக்கவில்லை. வ.உ.சி.-க்கு மணிமண்டபம் கட்டிய தமிழக அரசும்கூட, "பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம்'தான் தொடங்கியது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முந்தைய ஆட்சியில், கப்பல் போக்குவரத்துத் துறைக்கு தமிழர்தான் அமைச்சராக இருந்தார். அவர்கூட இப்படியொரு முடிவை எடுத்து அறிவிக்க முடியவில்லை. ஆனாலும், இப்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜி.கே. வாசன் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள வேளையில், அவரது முயற்சியால் இது நடைபெற்றுள்ளது. காலங்கடந்து கிடைத்த பெருமை என்றாலும், பாராட்டுவோம்.  ""வேளாளன் சிறை புகுந்தான் தமிழகத்தார் மன்னன் என மீண்டான் என்றே கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ! வருந்தலை, என் கேண்மைக் கோவே!...''பாரதியின் மெய்வாக்கு இது. ஆனால், அவர் விடுதலை பெற்று வெளியே வந்தபோது அத்தகைய நிலை உருவாகவில்லை. அதற்காக, தன் சமகால அரசியல் நண்பர்கள் பற்றியோ, தன்னை மறந்த மனிதர்களைப் பற்றியோ குறைகூறிப் பேசியதாக யாரும் சொல்லக் கேட்டதும் இல்லை. துயரங்கள் அனைத்தையும் மௌனமாக ஏற்றுக்கொண்ட மெய்ஞானி! அவர் நினைவாகச் செய்ய வேண்டியவை இன்னும் ஏராளமாக இருக்கிறது.  சிறைவாழ்வின்போது அவர் ஜேம்ஸ் ஆலன் என்ற அறிஞர் எழுதிய நூல்களை, மனம்போல வாழ்வு, வலிமைக்கு மார்க்கம் என்ற பெயரில் மிக அழகாக மொழிபெயர்த்தார். மனிதனின் உயர்வு, தாழ்வு இரண்டுக்குமே அடிப்படை அவனது எண்ணங்கள்தான். எண்ணங்களை மாற்றினால் மனிதனின் வாழ்க்கைச் சூழல் தானே மாறும் என்கிற அடிப்படையான கருத்தைக் கொண்டிருக்கும் இந்த நூல்கள் இன்றைய இளைய சமுதாயத்துக்கு மிகமிகத் தேவையானவை. மேனிலைப் பள்ளிப் பாடத்தில் தமிழ் துணைப்பாடமாக இந்த நூல்கள் இடம்பெறச் செய்தால், இளைய சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்கிட முடியும்.  கோவையில் இப்போது மத்திய சிறைச்சாலை இருக்கும் இடத்தில் செம்மொழிப் பூங்கா அமையவிருப்பதால், அங்கு வ.உ.சி. இழுத்த செக்கினை வேறு இடத்துக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர் இழுத்த செக்கு, மணிமண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டாலும், இப்போது கோவை மத்திய சிறையிலுள்ள அந்தச் சின்னம் ஓர் அடையாளம் என்பதால், அதையும் செம்மொழிப் பூங்காவின் ஒரு பகுதியாக அமைக்கலாம். தவறில்லை. அந்தச் செக்கு அங்கேயே இருக்கவும் அந்த வளாகத்தில் வ.உ.சி.யின் மிக அரிய குறள் விளக்கங்களை வைப்பதும்கூடப் பொருத்தமாக இருக்கும்.  எல்லாவற்றுக்கும் மேலாக, "தென்னாட்டுத் திலகர்' வ.உ. சிதம்பரம் பிள்ளையின் வரலாறு கட்டாயப் பாடமாக தமிழகத்தில் படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் சொல்லித் தரப்பட வேண்டும். இந்திய சரித்திரத்தில் தொழிற்சங்கம் ஒன்றை நிறுவி, தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுத்த தேசியத் தலைவர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.தான் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தூத்துக்குடி "கோரல் மில்ஸ்' என்கிற நூற்பாலையில் தொழிற்சங்கம் வ.உ.சி.யால்தான் உருவாக்கப்பட்டது.  "சுதேசி' இயக்கத்தின் முன்னோடி வ.உ.சி. நாம், நம்முடைய, நமக்காக என்கிற சிந்தனையை நமக்கு விதைக்க முற்பட்ட வ.உ.சி.யின் வழித்தோன்றல்களாகிய நாம் அந்நியப் பொருள்களுக்கும், அந்நியக் கலாசாரத்துக்கும், அடிமைப்பட்டுக் கிடக்க முற்படுகிறோமே, இது சரிதானா என்று சிந்திக்க வேண்டிய வேளை இது. "சுதேசி' என்கிற கப்பலில் வ.உ.சி. என்கிற மாலுமி காட்டிய வழியில் பயணிக்க நாம் முன்வருவதுதான் நாளைய இந்தியா வலிமையான இந்தியாவாக உருவாக ஒரே வழி.  மத்திய அரசுக்கும், அமைச்சர் ஜி.கே. வாசனுக்கும், இந்த முடிவுக்குத் தடையேதும் ஏற்படுத்தாமல் வழிமொழிந்த தமிழக அரசுக்கும் "தினமணி' வாசகர்கள் சார்பில் நன்றிகள் பல! 




 



fishermen killing: niruba goes to ilangai: தமிழக மீனவர்கள் படுகொலை: இலங்கை செல்கிறார் நிருபமா ராவ்


அவர்  பேசும் பொழுதே படுகொலை தொடரும். கொன்றது யார் எனத் தெரியவில்லை என்பார்கள். வந்த பின்னும் தொடரும். எதற்குத்தான் பேச போகிறார்களோ தெரியவில்லை. சிங்களன் அடிபட்டதற்கே அலறுகிறான் அவன். கொடுரமாக் கொள்ளப்பட்டாலும்  வேடிக்கை பார்க்கும் நம் அரசுகள். என்ன கொடுமையட இது. 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
 
 
தமிழக மீனவர்கள் படுகொலை: இலங்கை செல்கிறார் நிருபமா ராவ்

First Published : 29 Jan 2011 12:51:07 AM IST


புது தில்லி, ஜன. 28: தமிழக மீனவர்கள் படுகொலை தொடர்பாக இலங்கை அரசுடன் விவாதிக்க வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவ் ஞாயிற்றுக்கிழமை இலங்கை செல்கிறார்.  கடந்த இரண்டு வார காலத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களில் இரண்டு பேர் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலால் உயிரிழந்துள்ளனர்.  புதுக்கோட்டை ஜகதாபட்டினத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் பாக் ஜலசந்தி பகுதியில் ஜனவரி 12-ம் தேதி மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு மீனவர் உயிரிழந்தார்.  கோடியக்கரைப் பகுதியில் ஜனவரி 22-ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஒருவரை கழுத்தில் சுருக்குக் கயிறு போன்று மாட்டி கடலில் தள்ளியதில் அவர் உயிரிழந்தார்.  இந்த சம்பவங்கள் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.  இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறல்கள் எந்தவிதத்திலும் நியாயம் அல்ல என்று இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது.  இப் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஓரிரு நாள்களாக பல்வேறு மீனவர் அமைப்பினரும், கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில், வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவை இலங்கை சென்று அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளதாக அந்தத் துறை அதிகாரி ஒருவர் புது தில்லியில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்

வெள்ளி, 28 ஜனவரி, 2011

Seemaan against grantham: செந்தமிழைக் கலப்பு மொழியாக்க முயன்றால் நாம் தமிழர் கட்சி களத்தில் இறங்கிப் போராடும்! – சீமான் அறிக்கை

செந்தமிழைக் கலப்பு மொழியாக்க முயன்றால் நாம் தமிழர் கட்சி களத்தில் இறங்கிப் போராடும்! – சீமான் அறிக்கை

கணினித் தமிழ் பயன்பாடு – என்கிற போர்வையில், செந்தமிழ் மொழியில் கணினியில் சமக்கிருத ஒலிகளுக்கான தனி எழுத்து வடிவைத் திணிக்க நடக்கும் சதியை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கையில் கலப்பினம் தான் இருக்கமுடியும் என்கிற இனவெறியன் ராசபட்சேவின் பாசிசக் கருத்துக்கும், கணினியில் கலப்பு மொழி அவசியம் என்கிற  குழப்பவாதிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று நாம் தமிழர் குற்றஞ்சாட்டுகிறது. உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் உள்ள எல்லா ஒலிகளையும் உள்ளடக்கிய எழுத்து வடிவம், எந்த மொழியிலும் இல்லை. தங்கள் மொழியில் இல்லாத ஒலிகளுக்கான எழுத்துவடிவைத் தங்கள் மொழியில் உள்ள எழுத்துக்களைக் கொண்டே ஈடுசெய்வது என்பது உலகெங்கும் உள்ள வழக்கம். எடுத்துக்காட்டாக, தமிழிலுள்ள சிற்ப்பு ஒலியையே எடுத்துக் கொள்ளலாம். தமிழின் சிறப்பு ஒலியான ‘ழ’கரத்தை ஈடுசெய்ய  ஆங்கிலத்தில் கூடுதல் எழுத்தைச் சேர்க்கவில்லை. இசட் – என்கிற ஆங்கில எழுத்து ‘ழ’கரத்தைச் சுட்டப் பயன்படுத்தப் படுகிறது. தமிழில் இவ்வளவு வேறுபாடுகூட இல்லை. எந்த மொழியிலிருக்கும் எந்த தனித்த ஒலியையும் தெளிவாகச் சுட்டத் தேவையான எழுத்துக்கள் தமிழில் உள்ளன. அதற்கு ஓர் உதாரணம் தான் – இசட்.
இந்த உலக நடைமுறையை மறந்துவிட்டு, வழக்கிழந்து போன சமக்கிருத ஒலிகளுக்காக தமிழில் கூடுதல் எழுத்துக்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது இந்தியாவிலுள்ள தேசிய இனங்களின் தனித்தன்மைக்கு உலை வைக்கும் முயற்சி. இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளுக்கும் பொதுவான கிரந்தத்தை – எழுத்துருவை உருவாக்கும் எந்த முயற்சியும், இந்திய தேசிய இனங்களின் மீதும் மொழிகளின் மீதும் தொடுக்கப்படும் மறைமுகப் போர். இந்தியாவின் பெருமைக்குரிய பன்முகத் தன்மையை இது சீரழித்துவிடும்.
சமக்கிருதம் என்பது வழக்கழிந்துவிட்ட ஒரு மொழி. தேவ பாசை – என்று அதைக் குறிப்பிடுவதிலிருந்தே, அது வாழும் மனிதர்களுக்கான மொழியல்ல என்பது தெளிவாகிறது.   உலக வழக்கிலிருந்து அழிந்து ஒழிந்து சிதைந்தது சமக்கிருதம் – என்பதைத் தன்னுடைய தமிழ்த் தாய் வாழ்த்தில் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை. இந்தி எதிர்ப்பைக் காட்டியே ஆட்சியைப் பிடித்த திராவிட இயக்கம் அந்த வரியை நீக்கிவிட்டுத்தான் மறுவேலை பார்த்தது. சமக்கிருதத்துக்கு சாமரம் வீசும் அப்படியொரு வேலையில் இனிமேல் எவரும் இறங்கவேண்டாம், தமிழைக் கலப்பு மொழியாக்க முயலவேண்டாம் என்று பணிவாகக் கேட்டுக் கொள்கிறோம். வேதங்களைத் தமிழில் படிக்க விரும்புவோருக்காக தனி எழுத்துரு தேவை என்று வாதிடுவது அபத்தமானது. சமக்கிருத மொழி வேதங்களைப் படிக்க விரும்புபவர்கள் அந்த மொழியைக் கற்று அவற்றைப் படிப்பதுதான், அந்த மொழிக்கு செய்கிற மரியாதையாகவும் இருக்கும்.
தனித்த சில ஆங்கில ஒலிகளுக்கு நிகராக தமிழில் சிறப்பு எழுத்து வடிவம் தேவை என்கிற வாதம், 60 ஆண்டுகளுக்கு முன், எழுந்த வேகத்திலேயே அடங்கிவிட்டது. இப்போது கணினியை முன்னிறுத்தி வைக்கப்படும் இந்த வரட்டு வாதமும் விரைவில் அடங்கிவிடும் என்று நம்புகிறோம். முன் வாயில் வழியாக முறைப்படி நுழைய முடியாத நிலையில், பின்வாயில் வழியாக அதை நுழைக்க எவர் முயன்றாலும் நாம் தமிழர் கட்சி உறுதியுடன் எதிர்த்துப் போராடும். ஒரு இனத்தை அழிக்கவேண்டுமானால் அவர்கள் பேசும் மொழியை முதலில் அழித்துவிடு – என்பது இனவெறியர்களின் கொள்கையாகக் குறிப்பிடப்படுவதுண்டு. தமிழருக்கோ இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கிறது. கண்ணெதிரில் இனமும் அழிக்கப் படுகிறது, மறைமுகமாக மொழியையும் அழிக்க முயற்சி நடக்கிறது. இதை எல்லா நிலையிலும் கடுமையாக எதிர்ப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்,
சீமான்
நாம்தமிழர் கட்சி.

thamizh anthem: புதிய தமிழ் வாழ்த்து

Jan27,2011

  0/0  

புதிய தமிழ் வாழ்த்து

மலேசிய எழுத்தாளர் சங்கம் ஜனவரி 23ம் தேதி வெளியிட்டுள்ள புதிய தமிழ் வாழ்த்துப்பாடல்.







நிலைபெறநீ வாழியவே!
ஆக்கம்: கவிஞர் சீனி நைனா முகம்மது
இசை: ஆர்.பி.எஸ்.ராஜூ
குரல்: துருவன், பாபு லோகநாதன்

காப்பியனை ஈன்றவளே!
காப்பியங்கள் கண்டவளே!
கலைவளர்த்த தமிழகத்தின்
தலைநிலத்தில் ஆள்பவளே!
தாய்ப்புலமை யாற்புவியில்
தனிப்பெருமை கொண்டவளே!
தமிழரொடு புலம்பெயர்ந்து
தரணியெங்கும் வாழ்பவளே!

எங்களெழில் மலைசியத்தில்
சிங்கைதனில் ஈழமண்ணில்
இலக்கியமாய் வழக்கியலாய்
இனக்காவல் தருபவளே!
பொங்கிவளர் அறிவியலின்
புத்தாக்கம் அத்தனைக்கும்
பொருந்தியின்று மின்னுலகில்
புரட்சிவலம் வருபவளே!

செவ்வியலின் இலக்கியங்கள்
செழித்திருந்த பொற்காலம்
சேர்த்துவைத்த செயுள்வளத்தில்
செம்மாந்த பழையவளே!
அவ்வியலில் வேரூன்றி
அறிவுயர்ந்த தற்காலம்
அழகழகாய் உரைநடையும்
ஆளுகின்ற புதியவளே!

குலங்கடந்து நெறிகடந்து
நிலவரம்பின் தடைகடந்து
கோமகளாய்த் தமிழர்மனம்
கொலுவிருக்கும் தமிழணங்கே!
நிலவினுக்கே பெயர்ந்தாலும்
நினதாட்சி தொடருமம்மா!
நிறைகுறையாச் செம்மொழியே
நிலைபெறநீ வாழியவே!

3 comments:

நா. கணேசன் | January 27, 2011 10:11 AM
நன்றாக இருக்கிறது.
VELU.G | January 27, 2011 2:16 PM
ரொம்ப நல்ல இருக்குங்க
முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' | January 27, 2011 3:25 PM
இசை இனிமையாகவும் பொருள் அருமையாகவும், பொதுவில் பெருமையாக இருக்கிறது.

V.U.Chidhambraraar name for thuuthukudi port trust: தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ.சி. பெயர்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பாராட்டுகள். பணியாற்றும் ஒவ்வொருவரும செக்கிழுத்த செம்மல் அறிஞர் வ.உ.சிதம்பரனார் அவர்களைப் பற்றி அறியச் செய்ய வேண்டும்.  வடக்கே இருக்கும் பெரிய துறைமுகம ஒன்றிற்கும் அவர் பெயரைச் சூட்ட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்




தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ.சி. பெயர்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தூத்துக்குடி, ஜன. 27: தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ. சிதம்பரனார் பெயரைச் சூட்ட மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.  இதைத் தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகம் என்பது இனி வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகம் என்று அழைக்கப்படும்.  ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக 1906-ல் எஸ்.எஸ். காலியா என்ற சுதேசிக் கப்பலை முதன்முதலில் தூத்துக்குடியில் இருந்து இயக்கி ஆங்கிலேயர்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடியைக் கொடுத்தவர் வ.உ.சிதம்பரனார்.  ஓட்டப்பிடாரத்தில் பிறந்த வ.உ. சிதம்பரனார், அன்று இட்ட அடித்தளம்தான் இன்று தூத்துக்குடி துறைமுகம் சர்வதேச துறைமுகமாக வளர்ச்சி அடைந்துள்ளது.  இதன் நினைவாக தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ. சிதம்பரனார் பெயரைச் சூட்ட வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.  மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக ஜி.கே. வாசன் பொறுப்பேற்ற பின்பு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.  கடந்த செப்டம்பர் 5-ம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்ற வ.உ.சி. பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற ஜி.கே. வாசன், தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ.சி. பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.  கடந்த திங்கள்கிழமை (ஜனவரி 24) தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் அவர் பேசும்போது, வ.உ.சி. பெயர் சூட்டுவதற்கான நடவடிக்கையை மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் எடுத்து வருவதாகக் கூறினார்.  இந் நிலையில், தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ. சிதம்பரனார் பெயரைச் சூட்ட மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.  இதையடுத்து, தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகம் என்பது வ.உ. சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகம் என்று அழைக்கப்படும்.  இந்தத் தகவலை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்ததாக, தூத்துக்குடி துறைமுக சபை சார்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தை வ.உ. சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகம் என்று பெயர் மாற்றம் செய்ததைக் கொண்டாடும் வகையில் பெரிய விழா நடத்தப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

வியாழன், 27 ஜனவரி, 2011

Eradicate Grantham - Resolutions of Suggestions committee : கிரந்தத்தை அடியோடு அகற்றுக! கருத்துரையாளர் குழு தீர்மானம்

>>சென்னை நிகழ்வுகள்

 தமிழ்க்காப்பு அமைப்புகளின் சார்பிலான கருத்துரையாளர் குழுவின்  கூட்டம் 24.01.11 அன்று சென்னையில் திருவல்லிக்கேணியில் சிவ இளங்கோ அரங்கத்தில் நடைபெற்றது, குழுவின் தலைவர் புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரன் தலைமை தாங்கினார். கருத்துரையாளர்களும் வெளியூர்ப்பயணத்தால்  வர இயலாமல் போனவர்களின் சார்பாளர்களும் சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்றனர்.
 தொடக்கத்தில் திரு இலக்குவனார் திருவள்ளுவன், கூட்டத்தின் நோக்கம், கிரந்தத்தை அகற்றுவது தொடர்பாக மேற்கொண்டு வரும் பணி ஆகியவை பற்றி விளக்கினார்.
அடுத்துத்தலைமைதாங்கிய புலவர்மணி இரா.இளங்குமரன் அவர்கள், தொல்காப்பியர் அளித்துள்ள சட்டத்திற்கு மாறாகத் தமிழைச் சிதைப்பது அடியோடு நிறுத்தப்பட வேண்டும் என்பது குறித்து விளக்கினார்.

அன்றில் பா.இறைஎழிலன் தீர்மானங்கள் குறித்து விளக்கினார்.

மரு.கி.ஆ.பெ.மணிமேகலை கண்ணன், பேராசிரியர் இலக்குவனார் மறைமலை, கவிஞர் இளவரச அமிழ்தன், முனைவர் இரா.சேது, முனைவர் கு.பாலசுப்பிரமணியம், திரு அன்பு தென்னரசன், திரு தனித்தமிழ் வேங்கை, திரு பெ.மணியரசன் சார்பில் திரு ஆறுமுகம், வழக்குரைஞர் கரூர் இராசேந்திரன், வழக்குரைஞர் கோ.இரா.சுந்தரகாந்தம், பாவலர் மறைமலையான், திரு மூதுரை பொய்யாமொழி, திரு பூங்குன்றன், தொல்.திருமா சார்பில் வழக்குரைஞர் ஆர்வலர், திரு தமிழேந்தி, திரு தருமராசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

 கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஏற்கப்பெற்றன.

1.தமிழ்நாட்டு அரசால் அமைக்கப்பட்டுள்ள நீதியரசர் ச.மோகன் தலைமையிலான தமிழ்க்காப்பு வல்லுநர் குழுவினருக்குத் தமிழ்க்காப்புக் கருத்துரையாளர் குழு வாழ்த்துதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

2.நீதியரசர் மோகன் குழு, தமிழறிஞர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து கிரந்தத்தில் இருந்து தமிழைக் காக்கும் வகையில் அறிக்கை அளிக்குமாறு இக் குழு கேட்டுக் கொள்கிறது.

3.சீருரு அவையம் (யூனிகோடு கன்சார்ட்டியம்) 7.02.11 அன்று கூட உள்ளதால், ஆய்ந்து அறிக்கை அளிப்பதற்கான கால வாய்ப்பு வேண்டிக் கிரந்தத் சீருரு தொடர்பான பொருண்மையை ஒத்தி வைக்க ஆவன செய்ய தமிழ்நாட்டரசை இக்குழு வேண்டுகிறது.

4.தமிழ்நாட்டு அரசின் கருத்தை அறிந்த பின்பே நடுவண் அரசு கிரந்தச் சீருரு தொடர்பான முடிவை எடுக்குமாறு இக்குழு வேண்டுகிறது.

5.தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் மாணவர் அமைப்புகளும் பொதுநல அமைப்புகளும் உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகளும் கிரந்தத்தால் ஏற்படும் தீமைகளை மக்களிடையே விளக்கிப் பரப்புரை மேற்கொள்ள இக்குழு வேண்டுகிறது.

6.பாடநூல்களில் இருந்தும் அகரமுதலிகள்,  பொருள்களஞ்சியங்கள் ஆகியவற்றில் இருந்தும் அயலொழுத்துகளை அகற்றுவதுடன் ஊடகங்களில் அயலெழுத்துகளும் அயற்சொற்களும் இடம் பெறாதவாறு நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ்நாட்டரசை இக்குழு வேண்டுகிறது.

7.கணிணிவழியாகவும் சீருரு அல்லது ஒருங்குறி வாயிலாகவும் வேறு எவ்வகையிலும் கிரந்தம் நுழைவதற்கு வாய்ப்பளிக்காமலும் வரிவடிவச் சிதைப்பிற்கும் வரிவடிவச் சேர்க்கைக்கும் இடம் தராமலும் தொல்காப்பியர் வழி நின்று தமிழைக் காத்துப் பேணுமாறு தமிழ்நாட்டரசை இக்குழு வேண்டுகின்றது.

8.சட்டம், மருத்துவம், பொறியியல் முதலான தொழிற்கல்விகளில் தமிழை விருப்பப்பாடமாக வைக்குமாறும் இதில் தேர்ச்சி பெறுபவர்க்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்குமாறும் தமிழ்நாட்டு அரசை இக்குழு வேண்டுகிறது.

 அமைப்பின் சார்பாக வந்திருந்தவர்கள் தத்தம் அமைப்புகளின் சார்பில் கிரந்தம் அகற்றும் பணியில் ஈடுபட உறுதி அளித்தனர்.
 - இலக்குவனார் திருவள்ளுவன்


வானத்தினும் வையத்தினும் நனி சிறந்த தாய் நாட்டைக் காப்பாற்றப் போராடிய தமிழ் ஈழ மக்களுக்கு உதவாததும் தாய்நாட்டைப் போற்றிய-அதனைக் காக்கப் போராடிய-மக்களைக் கொன்றொழித்தவர்களைக் கண்டிக்காதததும்  ஏன்?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தாயும், தாய் நாடும் சொர்க்கத்தைவிட புனிதமானது: சரஸ்வதி சுவாமிகள்

Last Updated : 27 Jan 2011 04:35:00 AM IST

மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை புதன்கிழமை பார்வையிடும் சுவாமி தயானந்த சரஸ்வதி, க
கும்பகோணம், ஜன. 26: சொர்க்கத்தைவிடப் புனிதமானது தாயும், தாய் நாடுமே என்றார் பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள்.  திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், மஞ்சக்குடி கிராமத்தில் சுவாமி தயானந்தா கலை, அறிவியல் கல்லூரியும், மேல்நிலைப் பள்ளியும் அமைந்துள்ளன.  இந்த வளாகத்தில் ஆங்கில தொடக்கப் பள்ளியுடன், இக் கல்வி நிறுவனத்தோடு இணைந்து செம்மங்குடி மேல்நிலைப் பள்ளியும், முடிகொண்டான் உயர்நிலைப் பள்ளியும் செயல்படுகின்றன.  இப் பள்ளிகள், கல்லூரியில் மொத்தம் 6,128 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.  மாணவர்களிடம் எந்த நன்கொடையையும் எதிர்பாராமல் இலவசக் கல்வி அளித்து வரும் இந்தக் கல்வி நிறுவனம், பல்வேறு சமூகத் தொண்டுகளிலும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கிறது.  மாணவர்களுக்காக அறிவியல் ஆய்வகங்கள், கணினி வசதிகளுடன் மாநகரங்களுக்கு இணையாக கல்விச் சேவையை அளித்து வருகிறது. சுமார் 40 கி.மீ. சுற்றளவில் உள்ள 120-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இங்கு வந்து பயில்கின்றனர். இந்தக் கல்வி குழும நிறுவனர் தயானந்த சரஸ்வதி சுவாமிகள் இங்கு வரும் நாள்களை மிகப் பெரிய விழாவாக இக் கல்வி நிறுவனங்கள் கொண்டாடி வருகின்றன.  இந்நிலையில், நிகழாண்டு சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் 80-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தில் புதன்கிழமை காலை சென்னை கலாஷேத்ரா குழுவினரால் கண்ணப்பன் குறவஞ்சி நாட்டிய நாடகம் நடைபெற்றது.  தொடர்ந்து, மாலையில் இக் கல்லூரி மைதானத்தில் சுவாமி தயானந்தா கல்விக் குழும பள்ளிகள், கல்லூரி மாணவ, மாணவிகளின் உடற்பயிற்சி நிகழ்ச்சி சுவாமிகளின் முன்னிலையில் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  நிகழ்ச்சிகளுக்குப் பிறகு தயானந்த சரஸ்வதி சுவாமிகள் அருளாசி வழங்கிப் பேசியது:  குடியரசு தினத்தில் மாணவ, மாணவிகள் நடத்திய இந்த நிகழ்ச்சி மிகவும் மனதைக் கவரக் கூடியதாக இருந்தது. அதிலும் குறிப்பாக, "மாஸ் டிரில்' எனப்படும் அனைத்து மாணவ,மாணவிகளும் ஒரே நேரத்தில் சேர்ந்து பயிற்சி செய்தது மிகவும் பாராட்டக்கூடியதாகும். இங்கு நடத்தப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பானவை.  ஜனானம் ஜென்மபூமி என்ற ஸ்லோகத்திற்கு ஏற்ப தாயும், தாய்நாடும் சொர்க்கத்தைவிட மிகவும் புனிதமானவை. மாணவர்களின் இந்த அற்புத நிகழ்ச்சிகளை குடியரசு தினத்தில் நம் தாய்நாட்டிற்கே அர்ப்பணிக்கிறோம் என்றார் தயானந்த சரஸ்வதி சுவாமிகள்.  தொடர்ந்து, மகாராஜபுரம் ராமச்சந்திரனின் கர்நாடக இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாகை முரளிதரன் வயலினும், கே.ஆர். கணேஷ் மிருதங்கமும் வாசித்தனர்.

Committee for war crimes: போர்க்குற்ற ஆலோசனைக் குழு இலங்கை செல்லாது: ஐ.நா.

நல்ல முடிவு! ஏனெனில் விடுதலைப் புலிகள்தாம் போர்க்குற்றம் செய்தார்கள் என்றும் சிங்களப்படை மக்களைக் காப்பாற்றியது என்றும்சிங்கள அரசு தரும் அறிக்கையைத் தரப் போவதற்காக எதற்கு இலங்கை செல்ல வேண்டும்?
இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்


போர்க்குற்ற ஆலோசனைக் குழு இலங்கை செல்லாது: ஐ.நா.

First Published : 26 Jan 2011 02:56:38 PM IST


நியூயார்க், ஜன.26- இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. ஆலோசனைக் குழு அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளாது என்று பான் கீ மூனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும், இலங்கை அரசுடன் ஐ.நா. ஆலோசனைக் குழு தொடர்ந்து பேச்சு நடத்திவரும் என்றும் அவர் கூறியிருப்பதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.2009-ம் ஆண்டு புலிகளுடன் நடைபெற்ற போரில் இலங்கை ராணுவம் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து, அதுதொடர்பான பிரச்னையில் தமக்கு ஆலோசனை வழங்க ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் 3 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவை நியமித்தார். ஆனால், இக்குழு போர்க்குற்றம் தொடர்பாக ஆராய இலங்கைக்கு நேரில் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 26 ஜனவரி, 2011

Thamizh civilization in history of india: இந்திய வரலாற்றில் தமிழர் நாகரிகம்: முதல் கலந்துரையாடல்கூட்டம்


உலக வரலாறு என்பது குமரியில் இருந்து தொடங்கப்பெற வேண்டும் என்பது உலக அறிஞர்கள், ஆய்வாளர்கள் கருத்து. ஆனால் தமிழ்நாட்டு  வரலாற்றுப் பாடத்தில்கூட இந்திய வரலாறு என்ற போர்வையில் தமிழக வரலாற்றுச் செய்திகள் இருட்டடிப்புச் செய்யபபடுகின்றன. இந்தக் கறையை நீக்கும் வகையில் முடிவெடுத்துள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்திற்கும் துணைத்தலைவர் முனைவர் அ.இராமசாமிக்கும் பாராட்டுகள். இக்கூட்டத்தில் முதுமுனைவர் இரா.இளங்குமரன் பங்கேற்றதையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.  இவர்கள் உருவாக்கும் வரலாற்றுப் பாடங்கள் இந்தியாவிலுள்ள பிற மாநிலப் பள்ளிகளிலும் மத்தியப் பள்ளிகளிலும் இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இந்திய வரலாற்றில் தமிழர் நாகரிகம்: முதல் ஆலோசனைக் கூட்டம்


சென்னை, ஜன. 25: இந்திய வரலாற்றில் தொன்மைக் கால தமிழர் நாகரிகத்தை சேர்ப்பது தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் ராமசாமி தலைமையில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்திய வரலாற்றில் சிந்து சமவெளி நாகரிகத்தை அடுத்து, தொன்மைக்கால தமிழர் நாகரிகத்தை சேர்க்க வலியுறுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.   இதுகுறித்து கவுன்சில் துணைத் தலைவர் ராமசாமி கூறியது:  கடல் அகழாய்வு, நில அகழ் ஆய்வு, பண்டைக் கால ஓய்வு, இலக்கியச் சான்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழர் தொன்மை நாகரிகம் என்ற புத்தகம் எழுதுவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.   பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), இந்திய வரலாற்று ஆய்வு மன்றம், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பல்கலைக்கழகங்களுக்கும் இந்த பாடத் திட்டத்தை அனுப்புவது, இந்திய வரலாற்றில் சிந்து சமவெளி நாகரிகத்துக்கு அடுத்தபடியாக இந்த புதிய பாடத் திட்டத்தை சேர்க்க வலியுறுத்துவது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.இதுதொடர்பாக பல்கலைக்கழக வரலாற்று பாடத்திட்டக் குழுத் தலைவர்கள் கூட்டத்தை அடுத்த மாதம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் இந்த புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்றார்.ஆலோசனைக் கூட்டத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன், முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன், காந்தி கிராம பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி, கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் குருமூர்த்தி, சத்தியமூர்த்தி, கடல் அகழ் ஆய்வாளர்கள் அதியமான், மதிவாணன், வரலாற்று ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், கருணானந்தம், சந்திரசேகரன் உள்பட 30 பேர் பங்கேற்றனர்.
வீட்டிலேயே காய்கறி தோட்டம் அமைக்க பயிற்சி


சென்னை, ஜன. 25: சென்னை அண்ணாநகர் 6-வது அவென்யூவில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நகர்ப்புற தோட்டக்கலை வளர்ச்சி மையத்தில்  வீட்டுத் தோட்டம் அமைக்க சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில், வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் காய்கறித் தோட்டம் அமைக்க என்ன செய்ய வேண்டும், அதை பராமரிப்பது எப்படி என்பது குறித்து எளிய முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.  மாடியில் தோட்டம், வீட்டைச் சுற்றியுள்ள இடத்தில் தோட்டம், வீட்டினுள் அலங்காரச் செடி, உணவுக் காளான் வளர்ப்பு உள்ளிட்ட 23 வகையான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. பயிற்சியில் சேர விரும்புவோர் 044-26263484, 42170506 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்துக் கொள்ளலாம்.

List of the Padma awardees :பத்ம விருதாளர்கள் பட்டியல்

List of the Padma awardees

New Delhi, Jan 25 : The following is the list of 128 Padma awardees approved by President Pratibha Patil on the eve of the Republic Day Tuesday.


Govt announces Padma awards

ITGD Bureau
Tuesday, January 25, 2011

The President of India has approved the conferment of Padma Awards 2010. Padma Awards, the country's highest civilian awards, are conferred in three categories, namely - Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri. The Awards are given in all disciplines/ fields of activities, viz. art, social work, public affairs, science and engineering, trade and industry, medicine, literature and education, sports, civil service, etc.

'Padma Vibhushan' is awarded for exceptional and distinguished service, 'Padma Bhushan' for distinguished service of high order and 'Padma Shri' for distinguished service in any field. The awards are announced on the occasion of Republic Day every year. The awards are conferred by the President of India at a function held at Rashtrapati Bhawan sometime around March or April.
This year the President has approved 128 awards including one duo case (counted as one) and 12 in the category of Foreigners/ NRIs/ PIOs/ Posthumous.
These comprise 13 Padma Vibhushan, 31 Padma Bhushan and 84 Padma Shri Awards. There are 31 ladies among the awardees.

Here is the complete list:

Padma Vibhushan
1. Dr. (Smt.) Kapila Vatsyayan - Art - Art Administration and Promotion - Delhi

2. Mrs. Homai Vyarawalla - Art - Photography - Gujarat

3. Shri A Nageshwara Rao - Art - Cinema - Andhra Pradesh

4. Shri Parasaran Kesava Iyengar - Public Affairs - Delhi

5. Dr. Akhlaq-ur-Rehman Kidwai - Public Affairs - Delhi

6. Shri Vijay Kelkar - Public Affairs - Delhi

7. Shri Montek Singh Ahluwalia - Public Affairs - Delhi

8. Shri Palle Rama Rao - Science and Engineering - Andhra Pradesh

9. Shri Azim Premji - Trade and Industry - Karnataka

10. Shri Brajesh Mishra - Civil Services - Madhya Pradesh

11. Prof. (Dr.) Ottaplakkal Neelakandan Velu Kurup - Literature and Education - Kerala

12. Dr. Sitakant Mahapatra - Literature and Education - Orissa

13. Late Shri L. C. Jain - Public Affairs - Delhi *

Padma Bhushan
1. Shri Satyadev Dubey - Art - Theatre - Maharashtra

2. Shri Mohammed Zahur Khayyam Hashmi alias Khayyam - Art - Cinema - Music - Maharashtra

3. Shri Shashi Kapoor - Art - Cinema - Maharashtra

4. Shri Krishen Khanna - Art - Painting - Haryana

5. Shri Madavur Vasudevan Nair - Art - Dance - Kathakali - Kerala

6. Ms. Waheeda Rehman - Art - Cinema - Maharashtra

7. Shri Rudrapatna Krishna - Shastry Srikantan Art - Music Vocal - Karnataka

8. Ms. Arpita Singh - Art - Painting - Delhi

9. Dr. Sripathi Panditharadhyula Balasubrahmanyam - Art - Playback Singing, Music Direction & acting - Tamil Nadu

10. Shri C.V. Chandrasekhar - Art - Classical Dance-Bharatanatyam - Tamil Nadu

11. Shri Dwijen Mukherjee - Art - West Bengal

12. Smt. Rajashree Birla - Social work - Maharashtra

13. Mrs. Shobhana Ranade Social work - Maharashtra

14. Dr. Suryanarayanan Ramachandran - Science and Engineering - Tamil Nadu

15. Shri S.(Kris) Gopalakrishnan - Trade and Industry - Karnataka

16. Shri Yogesh Chander Deveshwar - Trade and Industry - West Bengal

17. Ms. Chanda Kochhar - Trade and Industry - Maharashtra

18. Dr. K. Anji Reddy Trade and Industry - Pharmacy - Andhra Pradesh

19. Shri Analjit Singh - Trade and Industry - Delhi

20. Shri Rajendra Singh Pawar - Trade and Industry - Haryana

21. Dr. Gunapati Venkata Krishna Reddy - Trade and Industry - Andhra Pradesh

22. Shri Ajai Chowdhary - Trade and Industry - Delhi

23. Shri Surendra Singh - Civil Services - Delhi

24. Shri M. N .Buch - Civil Services - Madhya Pradesh

25. Shri Shyam - Saran Civil Services - Delhi

26. Shri Thayil Jacob Sony George - Literature and Education - Karnataka

27. Dr. Ramdas Madhava Pai - Literature and Education - Karnataka

28. Shri Sankha Ghosh - Literature and Education - West Bengal

29. Late Shri K. Raghavan Thirumulpad - Medicine - Ayurveda - Kerala*

30. Late Dr. Keki Byramjee Grant - Medicine - Cardiology - Maharashtra *

31. Late Shri Dashrath Patel - Art - Gujarat *

Padma Shri

1. Ms. Neelam Mansingh Chowdhry - Art - Theatre - Chandigarh

2. Shri Makar Dhwaja Darogha Art- Chhau Dance- Jharkhand

3. Shri Shaji Neelakantan Karun - Art - Film Direction - Kerala

4. Shri Girish Kasaravalli - Art - Film making - Karnataka

5. Ms. Tabassum Hashmi Khan alias Tabu - Art - Cinema - Maharashtra

6. Shri Jivya Soma Mase - Art - Warli Painting - Maharashtra

7. Guru (Ms.) M.K. Saroja - Art - Dance- Bharatnatyam - Tamil Nadu

8. Shri Jayaram Subramaniam - Art - Cinema - Tamil Nadu

9. Pandit Ajoy Chakraborty - Art - Music-Indian Classical Vocal - West Bengal

10. Smt. Mahasundari Devi - Art - Mithilia/ Madhubani Painting - Bihar

11. Shri Gajam Govardhana - Art - Handloom Weaving - Andhra Pradesh

12. Ms. Sunayana Hazarilal - Art - Dance - Kathak - Maharashtra

13. Shri S.R. Janakiraman - Art - Carnatic Vocal Music - Tamil Nadu

14. Shri Peruvanam Kuttan Marar - Art - Chenda Melam- Drum concert - Kerala

15. Smt. Kalamandalam Kshemavathy Pavithran - Art - Dance - Mohiniattam - Kerala

16. Shri Dadi Dorab Pudumjee - Art - Puppetry - Delhi

17. Shri Khangembam Mangi Singh - Art - Traditional Music of Manipur (Pena) - Manipur

18. Shri Prahlad Singh Tipaniya - Art - Folk Music  - Madhya Pradesh

19. Smt. Usha Uthup - Art - Music - West Bengal

20. Smt. Kajol - Art- Cinema - Maharashtra

21. Shri Irfan Khan - Art- Cinema - Maharashtra

22. Shri Mamraj Agrawal - Social work - West Bengal

23. Shri Jockin Arputham - Social work - Maharashtra

24. Ms. Nomita Chandy - Social work - Karnataka

25. Ms. Sheela Patel - Social work - Maharashtra

26. Ms. Anita Reddy - Social work - Karnataka

27. Shri Kanubhai Hasmukhbhai Tailor - Social work - Gujarat

28. Shri Anant Darshan Shankar - Public Affairs - Karnataka

29. Prof. M. Annamalai - Science and Engineering - Karnataka

30. Dr. Mahesh Haribhai Mehta - Science and Engineering - Agricultural Science - Gujarat

31. Shri Coimbatore Narayana Rao Raghavendran - Science and Engineering - Tamil Nadu

32. Dr. (Mrs.) Suman Sahai - Science and Engineering - Delhi

33. Prof.(Dr.) E.A. Siddiq - Science and Engineering - Agricultural Science - Andhra Pradesh

34. Shri Gopalan Nair Shankar - Science and Engineering - Architecture - Kerala

35. Shri Mecca Rafeeque Ahmed - Trade and Industry - Tamil Nadu

36. Shri Kailasam Raghavendra Rao - Trade and Industry - Tamil Nadu

37. Shri Narayan Singh Bhati - Civil Services - Andhra Pradesh

38. Shri P K Sen - Civil Services - Bihar

39. Ms. Shital Mahajan - Sports - Adventure Sports- Para Jumping - Maharashtra

40. Ms. Nameirakpam Kunjarani Devi - Sports - Weightlifting - Manipur

41. Shri Sushil Kumar - Sports - Wrestling Delhi

42. Shri Vangipurapu Venkata Sai Laxman - Sports - Cricket - Andhra Pradesh

43. Shri Gagan Narang - Sports - Shooting - Andhra Pradesh

44. Smt. Krishna Poonia - Sports - Discus Throw - Rajasthan

45. Shri Harbhajan Singh - Sports - Mountaineering - Punjab

46. Dr. Pukhraj Bafna - Medicine - Padeatrics - Chhattisgarh

47. Prof. Mansoor Hasan - Medicine- Cardiology - Uttar Pradesh

48. Dr. Shyama Prasad Mandal - Medicine - Orthopaedic - Delhi

49. Prof. (Dr.) Sivapatham Vittal - Medicine - Endocrinology - Tamil Nadu

50. Prof. (Dr.) Madanur Ahmed Ali - Medicine - Gastroenterology - Tamil Nadu

51. Dr. Indira Hinduja - Medicine - Obstetrics and Gynaecology - Maharashtra

52. Dr. Jose Chacko Periappuram - Medicine - Cardio-Thoracic Surgery - Kerala

53. Prof. (Dr.) A. Marthanda Pillai - Medicine - Neurosurgery - Kerala

54. Shri Mahim Bora - Literature and Education - Assam

55. Prof. (Dr.) Pullella Srirama Chandrudu - Literature and Education- Sanskrit - Andhra Pradesh

56. Dr. Pravin Darji - Literature and Education - Gujarat

57. Dr. Chandra Prakash Deval - Literature and Education - Rajasthan

58. Shri Balraj Komal - Literature and Education - Delhi

59. Mrs. Rajni Kumar - Literature and Education - Delhi

60. Dr. Devanooru Mahadeva - Literature and Education - Karnataka

61. Shri Barun Mazumder - Literature and Education - West Bengal

62. Dr. Avvai Natarajan - Literature and Education - Tamil Nadu

63. Shri Bhalchandra Nemade - Literature and Education - Himachal Pradesh

64. Prof. Riyaz Punjabi - Literature and Education - Jammu and Kashmir

65. Prof. Koneru Ramakrishna Rao - Literature and Education - Andhra Pradesh

66. Ms. Buangi Sailo - Literature and Education - Mizoram

67. Prof. Devi Dutt Sharma - Literature and Education - Uttarakhand

68. Shri Nilamber Dev Sharma - Literature and Education - Jammu and Kashmir

69. Ms. Urvashi Butalia - Literature and Education Delhi #

Ms. Ritu Menon - Literature and Education - Delhi #

70. Prof. Krishna Kumar - Literature and Education - Delhi

71. Shri Deviprasad Dwivedi - Literature and Education - Uttar Pradesh

72. Ms. Mamang Dai - Literature and Education - Arunachal Pradesh

73. Dr. Om Prakash Agrawal & others - Heritage Conservation - Uttar Pradesh

74. Prof. Madhukar Keshav Dhavalikar & others - Archeology - Maharashtra

75. Ms. Shanti Teresa Lakra & others - Nursing - Andaman & Nicobar

76. Smt. Gulshan Nanda & others - Handicrafts promotion - Delhi

77. Dr. Azad Moopen - Social work - UAE *

78. Prof. Upendra Baxi Public Affairs - Legal Affairs - United Kingdom *

79. Dr. Mani Lal Bhaumik - Science and Engineering - USA *

80. Dr. Subra Suresh - Science and Engineering - USA *

81. Prof. Karl Harrington Potter - Literature and Education - USA *

82. Prof. Martha Chen - Social work - USA *

83. Shri Satpal Khattar - Trade and Industry - Singapore *

84. Shri Granville Austin - Literature and Education - USA *
Note: * indicates awardees in the category of Foreigners / NRIs/ PIOs/ Posthumous.

# indicates duo case.

தமிழக மீனவர்களைச்சுட மாட்டோம்: இலங்கைத் தூதர் உறுதி

கொலைத்தூதர் தாக்குதல்களை நடத்த வேண்டா எனத் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளாரே தவிர இனி மீனவர்களைச் சுடமாட்டடோம் என்று கூற வில்லை. அவ்வாறிருக்கத் தவறான தலைப்பைத் தினமணி தந்துள்ளது.  சுட மாட்டோம் என்றால் இதுவரை சுட்டதை ஒப்புக்கொண்டதாக ஆகும். வேறு மண்டலத்தில் இருந்து வந்தவர்களால் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்கள் நடந்திருக்கையில் சிங்களப் படை  மீது பழி வரும் வகையில் தலைப்பை அளித்துள்ளதற்காகச் சிங்கள அரசின் சினததிற்குத் தினமணி ஆகியுள்ளது. ௨) தன் நாட்டுக் குடிமக்களுக்குப் பாதுகாப்பு தர இயலாத அரசு, கொலைகாரர் கூட்டத்திற்குப் பாதுகாப்பு தருவது கொடுமையிலும் கொடுமையன்றோ? வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழக மீனவர்களை சுட மாட்டோம்: இலங்கைத் தூதர் உறுதி

சென்னை, ஜன. 25: தமிழக மீனவர்களை சுடுவது, அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம் உறுதி கூறினார். சென்னை எழும்பூரில் உள்ள இலங்கை மகாபோதி சங்கத்தின் மீது மர்ம நபர்கள் சிலர் திங்கள்கிழமை இரவு திடீரென தாக்குதல் நடத்தினர். அதில், சிலருக்கு காயம் ஏற்பட்டது.இந்தச் சம்பவம் குறித்து தமிழக அரசிடம் நேரில் வலியுறுத்த இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம் செவ்வாய்க்கிழமை சென்னை வந்தார்.தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் எஸ்.மாலதியைச் சந்தித்துப் பேசினார்.சென்னை எழும்பூரில் சுமார் 80 வருடங்களாக இயங்கி வரும் இலங்கை மகாபோதி சங்கத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக தமது ஆழ்ந்த கவலையை தலைமைச் செயலாளர் அவரிடம் தெரிவித்தார்.இலங்கை மகாபோதி சங்கத்தின் சென்னை மையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்  கண்டனத்துக்குரியது என்றும் இந்தச் சம்பவம் தொடர்பாக சுமித் பண்டார மதவேலா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தமிழக அரசின் சார்பில் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.மேலும் இலங்கை அரசு தொடர்பான நிறுவனங்கள் அனைத்துக்கும் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.கடந்த இரு வாரங்களுக்குள் தமிழக மீனவர்கள் 2 பேர் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு இறந்த சம்பவங்கள் தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதையும், வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாவண்ணம் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் இலங்கைத் தூதரிடம் வலியுறுத்தப்பட்டது.பின்னர், செய்தியாளர்களிடம் பிரசாத் கரியவாசம் கூறியதாவது:தமிழக மீனவர்கள் மீது அடுத்தடுத்து நடந்த தாக்குதல்களை இலங்கை கடற்படையினர் மேற்கொள்ளவில்லை. இது, நாங்கள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. எல்லை தாண்டி வரும் மீனவர்கள் மீது எந்தத் தாக்குதல்களையும் நடத்த வேண்டாம் என கடற்படையினர் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.தமிழகத்தைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தாக்குதல் சம்பவங்களில் பலியாகியுள்ளனர். விடுதலைப் புலிகளும் ஒடுக்கப்பட்ட நிலையில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது யார் என்பது விசாரணையில்தான் தெரியவரவேண்டும் என்றார் கரியவாசம்.2 பேரிடம் விசாரணை: சென்னை எழும்பூரில் உள்ள மகாபோதி சங்கத்தில் தாக்குதல் நடத்தியது தொடர்பாக இரண்டு பேரிடம் போலீஸôர் விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்து மகாபோதி சங்கத்தின் சார்பிலும் போலீஸôரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.விடுதலைச் சிறுத்தைகள் கைது: இதனிடையே, தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் தூதரக அலுவலகம் எதிரே உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

பயணம் மேற்கோள்வோருக்குப் பாராட்டுகள். பயணத்தின் வெற்றி ஈழ மலர்ச்சி! விரைவில் வெற்றி உண்டாகட்டும்! 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்


முத்துக்குமாரின் ஈகச்சுடர் ஊர்தி பயணம்

கன்னியாகுமரி, ஜன. 25: இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக உயிர் நீத்த முத்துக்குமாரின் இரண்டாம் ஆண்டு ஈகச்சுடர் ஊர்திப் பயணம் கன்னியாகுமரியிலிருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.இதன் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு, மள்ளர் மீட்புக்கழகத் தலைவர் கு. செந்தில் தலைமை வகித்தார். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தொடக்கிவைத்தார்.இந்த ஊர்திப் பயணம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விழுப்புரம், தாம்பரம் வழியாக சென்னை கொளத்தூரில் இம்மாதம் 29-ம் தேதி நிறைவுபெறுகிறது.அங்கு சுடரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பெற்றுக்கொள்கிறார். தொடக்க விழாவில், இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலர் ஞானசம்பந்தம், பங்குத் தந்தைகள் லியோன் எஸ். கென்சன், கிளாரட், டங்ஸ்டன் உள்ளிட்டோர் பேசினர்.

padmashree award to Scholar Dr. Avvai Natarasan: அவ்வை நடராசனுக்கு பத்மசிரீ

தமிழறிஞருக்கு விருது வழங்கப் பரிந்துரைத்த தமிழக அரசிற்கும் ஏற்ற விருதாளர் தெரிவுக் குழுவிற்கும் ஒப்புக்கொண்ட மத்திய அரசிற்கும் பாராட்டுதல்கள்.   நாவேந்தர் ஔவை நடராசனார் அவர்களுக்கு வாழ்த்துகள். 
வணக்கங்களுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அவ்வை நடராசனுக்கு பத்மஸ்ரீ

சென்னை, ஜன. 25: மூத்த தமிழ் அறிஞரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான அவ்வை நடராசன் (75) பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  தமிழ் மொழி வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பெரும் பணியை போற்றும் வகையில், 1984-ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் செயலாளராக அவரை நியமித்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்லாத ஒருவர் தமிழக அரசுத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டது அதுவே முதல் முறை. அதற்குப் பிறகும் யாரும் இவ்வாறு அரசு செயலாளராக நியமிக்கப்பட்டதில்லை.பாமரர்கள் முதல் பல்கலைக்கழக வேந்தர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் வகையில், தமிழ் இலக்கியத்தின் பெருமையைப் போற்றும் அவரது மேடைப் பேச்சு, அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்துள்ளது. தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ள அவருக்கு, இப்போது மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.

Century celebrations of national anthem: தேசிய கீதத்தின் நூற்றாண்டில் வெண்மை பாரதம்

தாகூர் போற்றுதலுக்கு உரியவர்தான். ஆனால், இந்தப்பாடல் ஆங்கிலேய அரசரை வாழ்த்திப் பாடுமாறு கேட்டதற்கு இணங்க எழுதப்பட்டது. இந்தியா ஒட்டு மொத்தமாக ஆங்கிலேய அரசரைப் போற்றுவதாகத்தான் பாடல் அமைந்துள்ளது. இந்தியாவை வாழ்த்தி அல்ல. விடுதலை நாட்டில்  இன்னும் அடிமையாக நம்மை ஆக்கும் இந்தப்பாடலை நாட்டுப்பாடலாக - தேசிய கீதமாக- வைத்திருப்பதே இழுக்கு. இதில் வேறு நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் என்பது பெரும் அவமானச் செயல்.  செம்மறியாடுகள் போல் மக்கள் நடந்து கொள்கிறார்கள் என்பது இப்பாடலைப் போற்றுவதில் இருந்தே தெரிகிறது. ஓர் அடிமை இந்தியத்தாயே தன் ஆட்சியாளனனைப் போற்றுவதாக எழுதிய பாடலை  நாட்டை வாழ்த்துவதாகக் கருதும் அறியாமைக்கு முடிவு எப்பொழுது பிறக்கும்? தேசிய  இனங்களின் கூட்டரசாக நம்நாடு அமையும் பொழுது பிறக்குமோ? 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்


தேசிய கீதத்தின் நூற்றாண்டில் வெண்மை பாரதம் பிரசார திட்டம்

First Published : 26 Jan 2011 06:25:17 AM IST


சென்னை, ஜன. 25: தேசிய கீதமான ஜன கண மன பாடல் பாடப்பட்டதன் நூற்றாண்டை முன்னிட்டு வெண்மை பாரதம் என்ற பிரசார இயக்கத்தை ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தொடங்கியுள்ளது என அந்த நிறுவனத்தின் நிறுவனர், நிர்வாக இயக்குநர் கே.ஆர். நாகராஜன் தெரிவித்தார்.இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:இன்றைய நவீன சமுதாயத்தில், நமது கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான், நாம் முழுமையானவர்களாக உருவெடுப்பதுடன், அடுத்த தலைமுறையின் முன்னேற்ற பாதைக்கு வழிகாட்ட முடியும்.இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நாளைய தலைமுறையை வெண்மையாக மாற்றுவதும் மட்டுமே 2011-ம் ஆண்டின் குறிக்கோள். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜன கண மன பாடல் 1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் கூட்டத்தில் முதன் முதலில் பாடப்பட்டது.இந்த பாடல் 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி இந்தியாவின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த தேசியகீதம் முதன் முதலில் பாடப்பட்டதன் நூறாவது ஆண்டு 2011-ம் ஆண்டாகும். இதனை முன்னிட்டு இந்த ஆண்டு முழுவதும் வெண்மை பாரதம் என்ற பெயரில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் பிரசார நிகழ்ச்சிகளை நடத்த ராம்ராஜ் காட்டன் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு மற்றும் பிரசார நிகழ்ச்சிகள் நடத்த பள்ளிகள், கல்லூரிகள் முன்வந்தன. இருப்பினும், சுதந்திரம் மற்றும் எதிர்காலத்தைப்பற்றிய ஒரு காட்சியை உருவாக்கி இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முக்கிய பிரமுகர்கள் மூலம் பிரசாரம் செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதே சமயத்தில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் விளம்பரத்தூதராக நடிகர் அர்ஜுன் அறிவிக்கப்பட்டுள்ளார் என்றார் நாகராஜன்.இது குறித்து நடிகர் அர்ஜுன் கூறியது: நாட்டுபற்றை உணர்த்தும் வகையில் செயல்பட்டு வரும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக செயல்படுவது பெருமை அளிப்பதாக உள்ளது. தேசிய கீதம் பாடப்பட்டதன் நூற்றாண்டு விழாவை நாட்டிற்கு உணர்த்தும் வகையில் இந்த நிறுவனத்தினர் உருவாக்கியுள்ள வெண்மை பாரதம் திட்டம் அனைவரின் பாராட்டுக்குரியது என்றார் அர்ஜுன்.

Malayalam :compulsary in schools - kerala cabinet approved: பள்ளிகளில் மலையாளம் கட்டாயம்: கேரள அமைச்சரவை ஒப்புதல்

தாய் மொழி வளர்ச்சிக்கு வித்திடும் கேரள அரசிற்குப் பாராட்டுகள். ஆனால், அங்கே யாரும் வழக்கு போட்டுக் குறுக்கே நிற்கமாட்டார்கள். எனவே, கேரள மக்களுக்கும் பாராட்டுகள். 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

பள்ளிகளில் மலையாளம் கட்டாயம்: கேரள அமைச்சரவை ஒப்புதல்

திருவனந்தபுரம், ஜன.25: பள்ளிகளில் மலையாளத்தை கட்டாயப் பாடமாக்கும் திட்டத்துக்கு கேரள அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்திருக்கிறது.கேரள பள்ளிகள் மலையாளத்தை கட்டாயப் பாடமாக்குவது தொடர்பாக ஆராய்வதற்காக ஆர்.வி.ஜி. மேனன் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. பள்ளிகளின் அனைத்து நிலைகளிலும் மலையாளத்தை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.இன்று நடந்த கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அச்சுதானந்தன், "இந்தத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான பணிகளை மாநில கல்வி மற்றும் பயிற்சி கவுன்சில் மேற்கொள்ளும்" என்றார்.

T.V.awards: சின்னத்திரை விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகை தேவயானி

கலைகளை வளர்ப்பதையும் கலைஞர்களைப் போற்றுவதையும் அரசின் கடமையாகக் கருத வேண்டும்.   அதே நேரம் அறிஞர்களையும் அரசு மதிக்க வேண்டும்.  எனவே, விருதுகள் வழங்கப்படுகின்றமையைக் கேலியாகக் கருதக் கூடாது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


சின்னத்திரை விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகை தேவயானி

சென்னை, ஜன.25: தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. சிறந்த நடிகையாக தேவயானியும், சிறந்த நெடுந்தொடராக கோலங்கள் தொடரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு:தமிழக அரசு வழங்கும் “சின்னத்திரை” விருதுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளுக்குரிய தொடர்கள், நடிகர் நடிகையர், மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளை தேர்வு செய்ய நீதியரசர் மு. மருதமுத்து தலைமையில் இயக்குநர்  விடுதலை, எழுத்தாளர் அஜயன் பாலா, கதாசிரியர் கண்மணி சுப்பு,  தயாரிப்பாளர் டி.வி. சங்கர், நடிகர் ராஜசேகர், தமிழ்வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறைச் செயலாளர், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குநர், எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட தேர்வுக்குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டது. இத்தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு 2007ஆம் ஆண்டுக்கான 7 விண்ணப்பங்களும், 2008 ஆம் ஆண்டுக்கான 12 விண்ணப்பங்களும் ஆக வரப்பெற்ற மொத்தம்  19 சின்னத்திரைத் தொடர்களைக் குழு பார்வையிட்டு விருதுக்கு உரியவர்களைத் தேர்வு செய்து அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. அந்தப் பரிந்துரைகளின்படி முதல்வர் கருணாநிதி விருதுக்குரிய தொடர்கள், மற்றும் கலைஞர்களின் பெயர்களை அறிவித்துள்ளார். அதன் விவரம்:2007 ஆம் ஆண்டுக்கான விருதுகள்சிறந்த நெடுந்தொடர்  1.    சிறந்த நெடுந்தொடர்   - முதல் பரிசு    கோலங்கள்(விகடன் டெலிவிஸ்டாஸ்)    ரூ. 2 லட்சம் ரொக்கம்,நினைவுப்பரிசு மற்றும்சான்றிதழ்.        2.    சிறந்த நெடுந்தொடர்- இரண்டாம் பரிசு    லட்சுமி(ஹோம் மூவி மேக்கர்ஸ்)    ரூ. 1 லட்சம் ரொக்கம்,நினைவுப்பரிசு மற்றும்சான்றிதழ்.     சிறந்த சாதனையாளர் விருது. 1.    ஆண்டின் சிறந்தசாதனையாளர்    ராதிகா    ரூ. 1 லட்சம் ரொக்கம்,நினைவுப்பரிசு மற்றும்சான்றிதழ்.       2.    ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர்    வி.எஸ். ராகவன்    ரூ. 1 லட்சம் ரொக்கம்,நினைவுப்பரிசு மற்றும்சான்றிதழ்.     சிறந்த நடிகர்கள், நடிகையர் மற்றும் தொழில்நுட்பகலைஞர்களுக்கான விருதுகள். 1.        சிறந்த கதாநாயகன்    விஜய் ஆதிராஜ்(லட்சுமி)    3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ்.       2.        சிறந்த கதாநாயகி    தேவயானி(கோலங்கள்)    3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ்.       3.        சிறந்த குணச்சித்திர நடிகர்    பிருத்விராஜ்(அரசி)    3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ்.       4.        சிறந்த குணச்சித்திர நடிகை    சத்யபிரியா(கோலங்கள்)    3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ்.       5.        சிறந்த வில்லன் நடிகர்    ராஜ்காந்த்(மேகலா)    3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ்.       6.        சிறந்த வில்லி நடிகை    நளினி(பந்தம்)    3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ்.       7.        சிறந்த குழந்தை நட்சத்திரம்    நிவேதா(அரசி)    3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ்.       8.        சிறந்த இயக்குநர்    சுந்தர் கே. விஜயன்(லட்சுமி)    3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ்.       9.        சிறந்த கதையாசிரியர்    அறிவானந்தம்(அகமும் புறமும்)    3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ்.       10.        சிறந்த திரைக்கதை ஆசிரியர்    முத்துசெல்வம்(மேகலா)    3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ்.       11.        சிறந்த உரையாடல் ஆசிரியர்    பாஸ்கர் சக்தி(மேகலா)    3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ்.       12.        சிறந்த ஒளிப்பதிவாளர்    வசீகரன்(அரசி)    3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ்.       13.        சிறந்த படத் தொகுப்பாளர்    ரமேஷ்(அரசி)    3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்.       14.        சிறந்த பின்னணி இசையமைப்பாளர்    ரேகான்(பந்தம்)    3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்.       15.        சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்)    மதி(லட்சுமி)    3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்.       16.        சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்)    நித்யா (பாசம்)    3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ்.     2008 ஆம் ஆண்டுக்கான விருதுகள்சிறந்த நெடுந்தொடர்  1.    சிறந்த நெடுந்தொடர்   - முதல் பரிசு    ஆனந்தம்(சத்யஜோதி பிலிம்ஸ்)    ரூ. 2 லட்சம் ரொக்கம்,நினைவுப்பரிசு மற்றும்சான்றிதழ்.       2.    சிறந்த நெடுந்தொடர்- இரண்டாம் பரிசு    நம்ம குடும்பம்(எவர் ஸ்மைல் எண்டர்பிரைசஸ்)    ரூ. 1 லட்சம் ரொக்கம்,நினைவுப்பரிசு மற்றும்சான்றிதழ்.     சிறந்த சாதனையாளர் விருது. 1.    ஆண்டின் சிறந்தசாதனையாளர்    வ.கௌதமன்    ரூ. 1 லட்சம் ரொக்கம்,நினைவுப்பரிசு மற்றும்சான்றிதழ்.       2.    ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர்    ஒய்.ஜி.மகேந்திரா    ரூ. 1 லட்சம் ரொக்கம்,நினைவுப்பரிசு மற்றும்சான்றிதழ்.     சிறந்த நடிகர்கள், நடிகையர் மற்றும் தொழில்நுட்பகலைஞர்களுக்கான விருதுகள். 1    சிறந்த கதாநாயகன்    சஞ்சீவ்(திருமதி செல்வம்)    3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ்.       2    சிறந்த கதாநாயகி    சுகன்யா(ஆனந்தம்)    3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ்.       3    சிறந்த குணச்சித்திர நடிகர்    மோகன் வி.ராமன்(வைர நெஞ்சம்)    3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ்.       4    சிறந்த குணச்சித்திர நடிகை    அனுராதா கிருஷ்ணமூர்த்தி (அரசி)    3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ்.       5    சிறந்த வில்லன் நடிகர்    சாக்ஷி சிவா(நம்ம குடும்பம்)    3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ்.       6    சிறந்த வில்லி நடிகை    மாளவிகா (அரசி)    3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ்.       7    சிறந்த குழந்தை நட்சத்திரம்    மோனிகா (ஆனந்தம்)    3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ்.       8    சிறந்த இயக்குநர்    செய்யாறு ரவி(ஆனந்தம்)    3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ்.       9    சிறந்த கதையாசிரியர்    குமரன்(திருமதி செல்வம்)    3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்.       10    சிறந்த திரைக்கதை ஆசிரியர்    அமிர்தராஜ் மற்றும் அமல்ராஜ்(திருமதி செல்வம்)    3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ்.       11    சிறந்த உரையாடல்ஆசிரியர்    லியாகத் அலிகான்(அரசி)    3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ்.       12    சிறந்த ஒளிப்பதிவாளர்    அசோக்ராஜன்(சிவசக்தி)    3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ்.       13    சிறந்த படத் தொகுப்பாளர்    ராஜீ(மேகலா)    3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ்.       14    சிறந்த பின்னணி இசையமைப்பாளர்    ஆதித்யன்(சந்தனக்காடு)    3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ்.       15    சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்)    சங்கர்(பந்தம்)    3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ்.       16    சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்)    அனுராதா(தவம்)    3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ்.
கருத்துகள்

What are the good things happen in the society by these people.? This government must explain.... What they are thinking about us.? These serials merely are wasting the time of home making women.. This is already a open secret... The common man asks to stop these serials..
By thiyagu
1/25/2011 10:38:00 PM
அப்பாவி தமிழனின் ஆதங்கம் புரிகிறது. கூத்தாடிகளின் ஆட்சி தான் தமிழனுடைய விதி என்றாகிவிட்ட பிறகு ஆதங்கப்பட்டு என்ன பிரயோசனம்? இதை 1967 ல் உணர்ந்திருக்க வேண்டும். தவறு செய்து விட்டோம். இப்பொழுது வருந்தி என்ன செய்வது.
By Ramakrishnan
1/25/2011 8:01:00 PM
Stupid scheme
By joy
1/25/2011 6:54:00 PM
அரசாங்கத்தின் இவ்வளவு பணத்தை எதர்க்கு இப்படி விரையம் பன்ன வேண்டும். உலகளவில் இப்படி பட்ட புரொக்ராம் எல்லாம் ஏதாவது ஸ்பான்சர்கள் தான் செய்வார்கள். அரசாங்கம் அல்ல. இந்த முக சினிமாவை தவிர வேறேதும் நினைப்பது இல்லை. யாராவது சினிமாவிர்க்கு வரி விலக்கு கொடுப்பங்களா ?. முக அப்படி செய்வார் யாரும் எதிர்க்க மாட்டார்கள் ஏனென்றால் எதிர்கட்சி, மற்றகட்சிகள் எல்லோரும் சினிமா சார்ந்தவர்கள். முக இந்த பணத்தை கல்விக்கு செலவு செய்தால் ஒரு நல்ல தலைமுறையை உருவாக்கலாம். முகவை பொருத்த வரைக்கும் நல்ல சந்ததி என்றால் கூத்தாடிகள் ஆவது.
By அப்பாவி தமிழன்
1/25/2011 6:00:00 PM