சனி, 12 மார்ச், 2011

prapakaran is the best leader: சேகுவேராவிற்கடுத்த சிறந்த கெரில்லா தலைவர் பிரபாகரன்: அனிதா ப்ரதாப்

சேகுவேராவிற்கடுத்த சிறந்த கெரில்லா தலைவர் பிரபாகரன்: அனிதா ப்ரதாப்

கடந்த 30 வருடகாலத்தில் பிரபாகரந்தான் ஒரே ஒரு சிறந்த கெரில்லா தலைவர். அதைவிட சேகுவேராவிற்கு பின்னர் அவரைத்தான் சிறந்த உலகில் கெரில்லா தலைவராக என்னால் பார்க்க முடியும் என கூறியுள்ளார் பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப். இந்திய ஊடகம் ஒன்றிற்கான செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தான் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றினை எழுத தனக்கு பிரபாகரன் அனுமதி தந்ததாகவும் ஆனால் கடைசிவரை நேரம் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் இன்று இராஜபக்‌ஷவின் தயவில்தான் வாழவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பிரபாகரனிற்கு பின்னர் தமிழர்களுக்கு தலைமைத்துவம் இல்லை. அப்படி இருந்தாலும் பிரபாகரன் போல் கிடைக்காது. தமிழ் மக்களை கடந்த 30 வருடமாக வழி நடத்தி வந்த தலைவர் திடீரென விட்டுவிட்டு சென்று விட்டார் எனவும் அதனால் தமிழர்கள் துயரங்களை அனுபவித்து வருகின்றனர் என்றும் கூறியுள்ள அனிதா பிரதாப்; அதற்கு பிரபாகரனை மட்டும் குறை சொல்ல முடியாது பூகோள அரசியலே காரணம் என்கின்றார். சீனா, இந்தியா உதவி இருக்காவிட்டால் பிரபாகரனை தோற்கடித்திருக்க முடியாது எனவும் கூறியுள்ளார் அனித்தா பிரதாப்.
Popularity: 19% [?]

stunami in arivaalayam- cartoon of dinamalar

Cong.demands d.m.k.seats: தி.மு.க., அமைச்சர்கள் நான்கு பேர் போட்டியிடும் தொகுதிகளை இளைஞர் காங்கிரசு கேட்பதால் குழப்பம்

தான் போட்டியிட்ட தொகுதிகள் தனக்கு வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கும் காங். பிற கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளைக் கேட்பதில் என்ன நயன்மையை (நியாயத்தை) எதிர்பார்க்கிறது? ஆணவத்தாலாவது அழியட்டும் காங். . இத் தேர்தலுடன் காங. காணாமல் போய் ஒழியட்டு்ம்!  ஊழலற்ற மனித நேயம் மிக்க மக்களாட்சி மலரட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! /   
 


Tsunami in Japan and arivaalayam: ஜப்பானை புரட்டி போட்டது; தி.மு.க.,வை கலங்கடித்தது


சென்னை : ஜப்பான் நாட்டில் நேற்று சுனாமி தாக்கிய அதே நேரத்தில், சென்னையில் தி.மு.க., தலைமை அலுவலகம் அமைந்துள்ள அறிவாலயத்துக்குள் சி.பி.ஐ., அதிகாரிகள் புகுந்தனர். "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், "கலைஞர் டிவி'யின் பங்குதாரர்களான தயாளு, கனிமொழி எம்.பி., ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கீழ்தளத்தில் கட்சியிருடன் அப்போது நேர்காணல் நடத்திக் கொண்டிருந்தார் தி.மு.க., தலைவர் கருணாநிதி. தி.மு.க., அலுவலகத்துக்குள்ளேயே சி.பி.ஐ., இரண்டாவது முறையாக புகுந்தது, தி.மு.க., வட்டாரத்தை கலங்கடித்துள்ளது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை தொடர்பான ஏலத்தில், 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி, மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, அத்துறையின் மத்திய அமைச்சராக இருந்த தி.மு.க.,வின் ராஜா, சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.ராஜாவிடம் நடத்திய விசாரணையில், "டி.பி. ரியாலிட்டி' நிறுவனத்தின் உரிமையாளரான சாகித் உஸ்மான் பல்வாவை கைது செய்தனர்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழக ஆளுங்கட்சி தி.மு.க.,வின், "கலைஞர் டிவி'யில் 214 கோடி ரூபாய் முதலீடு செய்த தகவல் கிடைத்தது. "கலைஞர் டிவி'யைப் பொறுத்தவரை, முதல்வரின் மனைவி தயாளுவுக்கு 60 சதவீத பங்குகளும், மகள் கனிமொழிக்கு 20 சதவீத பங்குகளும், அதன் மேலாண் இயக்குனரான சரத் ரெட்டிக்கு 20 சதவீத பங்குகளும் உள்ளன. "கலைஞர் டிவி'க்கு எந்த வகையில் முதலீடு செய்யப்பட்டது என்பது தொடர்பாக கேள்விகள் எழுந்தன.இந்நிலையில், அந்த தொகையை கடனாக பெற்றதாகவும், 30 கோடி ரூபாய் வட்டியுடன் திருப்பி செலுத்தி விட்டதாகவும், எப்போது வேண்டுமானாலும் அலுவலகத்தில் வந்து சோதனையிடலாம் என்றும், "டிவி' நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக இம்மாதம் 31ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதை அடுத்து, தற்போது சி.பி.ஐ.,யின் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

"கலைஞர் டிவி' விவகாரத்தை தாண்டி, கனிமொழிக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க சி.பி.ஐ., முடிவெடுத்து, அதற்கான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தது. இதே சூழலில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி தொடர்பான பிரச்னைகளும் எழுந்தன.இப்பிரச்னை அடங்கிய நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், "கலைஞர் டிவி' பங்குதாரர்களுக்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பியது. அதில், நேற்று காலை "கலைஞர் டிவி' அலுவலகத்தில் விசாரணை நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலய வளாகத்தில், "கலைஞர் டிவி' அலுவலகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் தி.மு.க., வேட்பாளர்கள் நேர்காணல், கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் வேளையில், நேற்று காலை 8.45 மணிக்கு திடீரென, டில்லி சி.பி.ஐ., பெண் அதிகாரி ஒருவர் உள்ளிட்ட மூன்று அதிகாரிகள், சென்னை சி.பி.ஐ., அதிகாரி ஒருவர் உதவியுடன் நுழைந்தனர்.அப்போது, "டிவி'யின் மேலாண் இயக்குனர் சரத் ரெட்டி இருந்தார். கனிமொழி, தயாளு இருவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, 10.15 மணிக்கு கனிமொழியும், 10.30 மணிக்கு தயாளுவும், "டிவி' அலுவலகத்திற்குள் நுழைந்தனர். திட்டமிட்டபடி, காலை 11 மணிக்கு, தயாளுவிடம் விசாரணை துவங்கியது. ஒரு மணி நேரம் நடந்த விசாரணையில், "டிவி'க்கு முதலீடு பெற்ற விதம், செலுத்தப்பட்ட வட்டித் தொகை எங்கிருந்து வந்தது என்பதற்கான விளக்கங்கள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. பிற்பகல் 12.15 மணிக்கு விசாரணை முடிந்து, தயாளு புறப்பட்டார். அடுத்ததாக, கனிமொழியிடமும், தொடர்ந்து சரத் ரெட்டியிடமும் விசாரணை நடந்தது. பகல் 2.10 மணிக்கு விசாரணையை முடித்த சி.பி.ஐ., அதிகாரிகள், 2.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். விசாரணையில், ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சில முக்கிய தகவல்கள் சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தாலும், தொகுதி ஒதுக்கீடு விஷயத்தில் இன்னும் தி.மு.க., - காங்கிரஸ் இடையில் முடிவு ஏற்படாமல் இழுபறி நீடிக்கும் நிலையில், சி.பி.ஐ.,யின் இந்த விசாரணை நடவடிக்கை, தி.மு.க.,வினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சி.பி.ஐ.,யின் அடுத்த கட்ட, "மூவ்' என்ன என்பது, யாருக்கும் தெரியாத நிலையில், என்ன நடக்குமோ என அனைத்து தரப்பும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. சுனாமி போல் "2ஜி' விவ காரம் தி.மு.க.,வை தாக்குவதால், கட்சியினர் கலக்கமடைந்துள்ளனர்.

ஜப்பானை புரட்டி போட்டது:
டோக்கியோ : ஜப்பானின் சமீபத்திய வரலாற்றில், இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று மிக பயங்கரமான நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரழிவில், அந்நாட்டின் வட கிழக்குப் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாயினர். தொடர்ந்து மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நிலநடுக்கப் பகுதியில் தான் ஜப்பான் அமைந்துள்ளது. பூமிக்கடியில் உள்ள யூரேஷியன், பசிபிக் மற்றும் பிலிப்பைன்ஸ் கண்டத் திட்டுகள் ஒன்று சேரும் இடத்தில் அமைந்துள்ளது ஜப்பான் தலைநகர் டோக்கியோ. இதனால், நிலநடுக்கம் ஜப்பானுக்கு வழக்கமானதே. மேலும் அங்கு எரிமலைகளும் அதிகம்.டோக்கியோ உள்ளிட்ட ஏழு பகுதிகள் அடங்கிய கான்ட்டூ பிராந்தியம், ரிக்டர் அளவில் 8 புள்ளிகள் அளவிலான நிலநடுக்கத்திற்கு ஆளாகும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்ட பகுதி.பயங்கர நிலநடுக்கம்: கடந்த இரண்டு நாட்களாக ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. முதல் நாளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து கடலில் இரண்டடி உயரமுள்ள சுனாமி ஏற்பட்டது. இரண் டாவது நாளில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.அதே நேரம், ஜப்பானின் வடகிழக்குப் பகுதி, சீனாவின் தென்பகுதி, பாப்புவா நியூகினியா நாடு ஆகியவற்றில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், டோக்கியோவில் இருந்து 400 கி.மீ., தொலைவில் வடகிழக்குப் பகுதியில் கடலில் நேற்று, இந்திய நேரப்படி முற்பகல் 11.16 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையோர நகரான செண்டாயில் இருந்து 81 மைல் தொலைவில் கடலில், 15 மைல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது. ரிக்டர் அளவுகோலில் பின்னர் 8.9 புள்ளிகள் பதிவானது.செண்டாய், புக்குஷிமா பகுதிகள் துவங்கி தென்பகுதியில் டோக்கியோ மற்றும் வடபகுதியில், ஐவேட் மாகாணம் வரை நிலநடுக்கம் உணரப்பட்டது.

மக்கள் அலறல்: டோக்கியோவில் கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் ஏற்பட்டதும், மக்கள் வீடுகளை விட்டு தெருக்களுக்கு வந்தனர். அவசரமாக எச்சரிக்கை சங்கும் ஒலித்தன. டோக்கியோ தெருக்களில் உள்ள 24 மணி நேர கடைகளில் சாண்ட் விச், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், குளிர்பானங்களை அவசரமாக வாங்கி கடையை காலி செய்தனர். கடைகளில் ஏற்பட்ட அதிர்ச்சியில் அங்கிருந்த பீங்கான் பொருட்கள் உடைந்து சிதறி குவியலாக இருந்தது. அவசர அவசரமாக அரசு அறிவிப்புகள் ஒலிபரப்பப்பட்டன. அலுவலகத்தில் இருந்து எல்லாரும் வீடுகளுக்கு செல்ல வேண்டாம். நெரிசலை தவிருங்கள். இரவு நேரம் வந்து விடும் என்பதால், பாதுகாப்பான இடங்களில் அல்லது அலுவலகத்தில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

சுனாமி பேரழிவு: இந்நிலநடுக்கத்தால் கடலில் சுனாமி உருவானது. 10 மீ., (33 அடி) உயரத்துக்கு உருவான அலை, ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையை கடும் வேகத்தில் வந்து தாக்கியது. தொடர்ந்து செண்டாய், புக்குஷிமா பகுதிகளுக்குள் அலை சீறிப் பாய்ந்தது.கார்கள், லாரிகள், படகுகள், கப்பல்கள், கட்டடப் பகுதிகள் என அனைத்தும் பொம்மைகளைப் போல சுனாமியில் அடித்துக் கொண்டு செல்லப்பட்டன. இந்தப் பயங்கரக் காட்சியை, "டிவி'யில் பார்த்த பலரும் மிரண்டனர். செண்டாய் மற்றும் டோக்கியோவின் புறநகர்ப் பகுதி உட்பட 80 பகுதிகளில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.செண்டாய் நகரின் புறநகர்ப் பகுதியில் இருந்த பண்ணைகள் அனைத்தும் சுனாமி வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டன. சுனாமி ஏற்பட்ட பின்னும் நிலநடுக்கம் பல முறை நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாயின. சுனாமி மற்றும் நிலநடுக்கத்தில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் இன்னும் முழு வீச்சில் துவங்காத நிலையில், பலி எண்ணிக்கை குறித்த முழு தகவல்கள் வெளிவரவில்லை.

அணு உலைகள் மூடல்: தொடர்ந்து நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் உள்ள அணு உலைகள் அனைத்தும் மூடப்பட்டதாக அரசு அறிவித்தது. அவற்றில் இருந்து கதிர்வீச்சு வெளியாகவில்லை என்று பிரதமர் நவோட்டா கான் தெரிவித்துள்ளார். எனினும், அணு உலைகள் இருக்கும் பகுதிகளில் அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மெட்ரோ ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. டோக்கியோ விமான நிலையம் மூடப்பட்டதால் விமானப் போக்குவரத்து தடைபட்டது.இந்நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஜப்பானின் அதே பகுதியை தாக்கக் கூடும் என்று நிலவியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியர்களுக்கு ஆபத்து இல்லை : சுனாமியால் இந்தியாவுக்கும், ஜப்பானில் வாழும் இந்தியர்களுக்கும் ஆபத்து எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஐதராபாத்தைச் சேர்ந்த இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவைகள் மையம் தெரிவித்துள்ள தகவல்களின்படி, இந்தியாவுக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை. இருந்தாலும், அந்த மையம் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறது. ஜப்பானை பூகம்பம் மற்றும் சுனாமி தாக்கியது, 2004ல் இந்தியாவின் பல பகுதிகளை சுனாமி ஆழிப் பேரலை தாக்கியதை நினைவுபடுத்தியுள்ளது.டோக்கியோ அருகில் உள்ள கான்டூ மற்றும் கான்சாய் பகுதிகளில் வசிக்கும் 25 ஆயிரம் இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை. இந்த பேரிடர் பாதிப்பில் இந்தியா உதவிக்கரம் நீட்ட தயார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணைத் தலைவர் சசிதர் ரெட்டி கூறுகையில், ""இந்தியாவுக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை. இந்திய கடலோரப் பகுதிகளை சுனாமி தாக்கும் என்ற அச்சமும் தேவையில்லை. அதேநேரத்தில், பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளன,'' என்றார்.கடந்த 2004ம் ஆண்டில் சுனாமி தாக்கிய போது, இந்தோனேசியா, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

cong. c.m. for thamizhnadu - a worst dream: தமிழ்நாட்டுக்கு காங்கிரசு முதலமைச்சர்!

தேர்தல் முடிவிற்குப் பின்னர், தி.மு.க.விற்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காது. இதனைப் பயன்படுத்தி, அ.தி.மு.க. ஆதரவுடன் ஆட்சிக்கு வரக் காங்கிரசு முயலும் என்னும் எண்ணத்தில் அருண்நேரு எழுதி உள்ளார். எவ்வாறு இருப்பினும் காங். ஆட்சிக்கு வரும் அவலமும் தலைக்குனிவும் தமிழ்நாட்டிற்கு வராது என்று நம்பலாம்.  காங்.கின் கனவுகள் நீர்மேல் எழுத்தாகும்.  அறமும் மனித நேயமும் இறுதியிலாவது வெற்றி பெறும் என்பது உண்மையானால்,தமிழினப்படுகொலைகளுக்கான தண்டனையைக் காங். பெற்றே தீரும். (தலைப்பு தினமணியின் சித்து வேலை. அவர்அறியார்.)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /
தமிழே விழி! தமிழா விழி! /   

தமிழ்நாட்டுக்கு காங்கிரஸ் முதலமைச்சர்!

First Published : 12 Mar 2011 12:32:36 AM IST


பரபரப்புக்கு நம்முடைய நாட்டில் பஞ்சமே இல்லை; இப்போது நம்முடைய கவனத்தைக் கவர்வதில் முதலிடம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குத்தான். அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளை அடுத்தடுத்து வெற்றி கொண்டிருந்தாலும் வரும் சனிக்கிழமை நாகபுரியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ளும்போதுதான் உண்மையான சவால் காத்திருக்கிறது.இந்தியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கிடையே அதிக வேறுபாடு இல்லை. கிறிஸ் கெயில் பேட்டிங்கில் மின்னல் வேகத்தில் ரன் எடுத்து செஞ்சுரி அடித்தால் அந்த அணி எந்த அணியையும் கவிழ்த்துவிடும்.இந்திய அணி விளையாடும்போதெல்லாம் பதற்றம் கூடுவது இயற்கை; லட்சக்கணக்கானவர்கள் இந்திய அணி விளையாடுவதைத் தொலைக்காட்சிகளில் பார்க்கின்றனர். இந்திய அணி எப்படி விளையாட வேண்டும், யாரெல்லாம் அணியில் இடம் பெற வேண்டும், டாஸில் வென்றால் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் தோனிக்கு ஆலோசனை கூற ஒவ்வொருவரும் தயாராக இருக்கின்றனர்.நம்முடைய அணிதான் பெரும்பாலானவர்களால் விரும்பப்படும் அணி. நம்முடைய பேட்டிங் வரிசை வலுவாக இருக்கிறது. ஆனால் பந்து வீச்சுதான் சந்தேகத்தைத் தரும் வகையில் இருக்கிறது. உலகக் கோப்பையை வெல்லக்கூடிய அணி இது என்று உணர்த்தும்வகையில் இதுவரை ஒரு வெற்றியும் ஆழமாக, அழுத்தமாக அமையவில்லை.உலகக் கோப்பை முடிந்த பிறகு சிறிய இடைவெளிக்குப் பிறகு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன. இதற்கிடையே நாம் சற்று ஓய்வெடுத்துக் கொண்டு 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல்களைக் கவனிக்க வேண்டியிருக்கும்.2011-ம் ஆண்டு பிரச்னைகள் மிகுந்த ஆண்டாக இருக்கப் போகிறது. பருவநிலை எதிர்பார்த்தபடி இல்லாமல் அடிக்கடி மாறக்கூடும். உணவுப் பண்டங்களின் விலை கடுமையாக அதிகரிக்கும். மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சி காரணமாக சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியத்தின் விலை உயர்ந்துவிடும். அத்துடன் பெட்ரோல் உற்பத்தி, போக்குவரத்து ஆகியவையும் பாதிக்கப்படக்கூடும்.சர்வாதிகார ஆட்சியிலிருந்து விடுதலைகோரி அப்பாவி மக்கள் நடத்தும் கிளர்ச்சியை ஒடுக்க அரசுகள் தயாராகிவருவது துரதிருஷ்டவசமானது. அதிலும் ஆட்சியாளர்களின் அடக்குமுறை காரணமாக உயிரிழப்புகளும் கைதுகளும் அதிகரிப்பது வேதனையை ஏற்படுத்துகின்றன. டுனீசியா, எகிப்து ஆகிய நாடுகளில் தோன்றிய சுதந்திரப் போராட்டக் கிளர்ச்சி அடுத்து ஏமன், லிபியா ஆகிய நாடுகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிகிறது. அப் பகுதிகளில் இப்போது எந்த நாடும் அமைதியாக இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகிவருகிறது.இந்த நெருக்கடி உலகின் எல்லா நாடுகளையுமே ஏதோ ஒரு வகையில் பாதித்து வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த சுமார் 50 லட்சம் பேர் இந்த நாடுகளில்தான் இப்போது குடியிருந்து வருகின்றனர்.இந்த நாடுகளில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் அது நம்முடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. அத்துடன் அவை நம்முடைய முதலீடுகளுக்கும் அச்சுறுத்தலாக முடியும்.நம் நாட்டில் உயிர்த்துடிப்புள்ள, வெற்றிகரமாகச் செயல்படக்கூடிய ஜனநாயகம் நிலவுகிறது. நம்முடைய அரசியல் மோதல்களும் அமைதியாகவே நடந்து முடிகின்றன. தற்செயலாக ஏற்படும் அரசியல் விபத்துகள்கூட அமைதியாகவே நடந்தேறுகின்றன.இந்த முறை அரசியல் திருவிழா திமுகவினரின் ஆக்ரோஷமான தாக்குதலுடன் தொடங்கியிருக்கிறது. தேவையே இல்லாமல் இப்படி ஆத்திரப்பட்டதால் அதன் பலனை இப்போது திமுக அனுபவித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 63 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கேட்டதுமே கருணாநிதி கோபம் கொண்டு மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்து, மத்திய அரசில் இடம் பெற்றுள்ள திமுக அமைச்சர்கள் தங்களுடைய பதவி விலகல் கடிதங்களை பிரதமரிடம் நேரில் தில்லியில் அளிப்பார்கள் என்று அறிவித்தார். இறுதியில் அதே 63 தொகுதிகளுக்கு உடன்பாடு ஏற்பட்டது. திமுக தந்த நெருக்குதலுக்கு மசிந்துவிடாமல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தன்னுடைய முடிவிலேயே உறுதியாக நின்று காரியத்தைச் சாதித்துவிட்டார். இவற்றையெல்லாம் திமுக தொண்டர்களால் புரிந்துகொள்ள முடியாது.அதிமுகவும் தேமுதிகவும் இணைந்திருப்பதால் இந்தத் தேர்தலில் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும். மக்களுடைய ஆதரவு யாருக்கு என்பதைக் கணிப்பது எளிதாக இருக்காது. ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொருவிதமான உள்ளூர் காரணங்களால் மக்களுடைய ஆதரவு மாறக்கூடும்.திமுகவின் நடவடிக்கை காங்கிரஸ் கட்சிக்குப் பல வழிகளிலும் உதவிகரமாகவே மாறக்கூடும். தேர்தலுக்குப் பிறகு திமுக, அதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர் மட்டும் அல்லாது காங்கிரûஸச் சேர்ந்தவரும் முதலமைச்சராகும் வாய்ப்பை இது ஏற்படுத்தியிருக்கிறது.அடுத்த மாதத்தில் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் மேலும் பல திருப்பங்களையும் திடீர் முடிவுகளையும் நாம் பார்க்கப் போகிறோம். 2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தாலும் ஆ. ராசா கைதாலும் செல்வாக்கு இழந்துள்ள திமுக, இப்போது தங்களுக்குள் கோஷ்டிச் சண்டை எதிலும் ஈடுபடாமல் ஒற்றுமையாகவே தேர்தலைச் சந்திக்கக்கூடும்.இந்தத் தேர்தலில் திமுகவுக்கு அதிக இடங்களைப் பெறவும், ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தங்களுக்கே கிடைக்கவும் திமுக தலைவர் கையாண்ட அரசியல் தந்திரம் எனக்கு பெரும் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியது. திமுக இன்னமும் அவர் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா அல்லது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அதிகார மையங்கள் பொறுப்பைத் தங்கள்வசம் எடுத்துக்கொண்டுவிட்டனவா என்ற ஐயம் ஏற்படுகிறது.அதிகத் தொகுதிகளை விட்டுக்கொடுக்காவிட்டால் காங்கிரஸ் அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று திமுக கூறியதற்கு தன்னுடைய பதில் என்ன என்று மத்திய அமைச்சர்கள் மு.க. அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோரிடம் தெள்ளத் தெளிவாகக் கூறிவிட்டார் சோனியா காந்தி. 2ஜி அலைக்கற்றை விவகாரம் பூதத்தைப் பிடித்த நிழல்போல திமுகவைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் இந்த முறை தேர்தல் களத்தில் மிகவும் தீவிரமான அரசியல் போராட்டத்தைக் காணலாம். மம்தா பானர்ஜியும் அவருடைய திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் வெற்றி வாகை சூடுவது நிச்சயம். காங்கிரஸ் கூட்டணிக்கும் இடதுசாரி முன்னணிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம், தொகுதிகள் வித்தியாசம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று கணிக்கிறேன்.தொகுதிப்பங்கீடு விஷயத்தில் காங்கிரஸýக்கும் திரிணமூலுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சலசலப்பு ஏற்படுவது நிச்சயம். காங்கிரஸ் 98 கேட்கிறது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியோ அதற்கு 58 மட்டுமே தர முடியும் என்கிறது. இது ஒரு பெரிய விவகாரமாக மாறாது. இடதுசாரிகளை தன்னந்தனியராக எதிர்க்கும் மம்தா பானர்ஜி, அவர்களைத் தோற்கடிப்பதற்குக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பை இந்தத் தருணத்தில் கோட்டைவிட மாட்டார் என்று எனக்குத் தெரியும். எனவே, இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டுவிடும்.1984-85 மக்களவைப் பொதுத் தேர்தலின்போது நடந்த ஒரு நிகழ்ச்சியை இங்கே நினைவுகூர விரும்புகிறேன். பிரதமர் ராஜீவ் காந்தியும் நாங்களும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் தீவிரமாக இருந்தோம். நாடு முழுக்க எதிர்க்கட்சிகள் வலுவாக இருந்த சுமார் 30 தொகுதிகளுக்கு தகுந்த வேட்பாளர்களைத் தேர்வு செய்ய முடியாமல் ஆலோசித்துக் கொண்டிருந்தோம். மேற்கு வங்கம் எங்களுக்கு மிகவும் பலவீனமான மாநிலமாக இருந்தது. அப்போது மம்தா பானர்ஜி தன்னுடைய ஆதரவாளர்களுடன் வந்ததால் ஏற்பட்ட ஆரவாரத்தில் நாங்கள் இருந்த நெம்பர் 1 அக்பர் ரோடு வீடே அதிர்ந்தது. உடனே ராஜீவ் காந்தி துள்ளி எழுந்து, இதுவரை தேர்தலில் தோல்வியையே சந்தித்திராத மார்க்சிஸ்ட் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியை எதிர்க்க மம்தாதான் சரியான வேட்பாளர் என்று உற்சாகமாகக் கூவினார். மம்தாவாவது சோம்நாத்தைத் தோற்கடிப்பதாவது என்றே எங்களில் பலர் நினைத்தோம். ஆனால் அவர் சோம்நாத்தை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.1985 மக்களவை பொதுத் தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ். அந்த நேரத்தில்கூட மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 16 தொகுதிகளில் மட்டும்தான் காங்கிரஸôல் வெற்றிபெற முடிந்தது.அதற்குப் பிறகு 2009 பொதுத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸýடன் காங்கிரஸ் கூட்டு வைத்ததால்தான் மொத்தம் 28 இடங்களை இரண்டு கட்சிகளாலும் சேர்ந்து பெற முடிந்தது.மேற்குவங்கத்தில் ஆங்காங்கே தேர்தல் மோதலை நிச்சயம் எதிர்பார்க்கலாம். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமப்புற பொருளாதாரத்தை இடதுசாரி தொண்டர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். எனவே அவர்களுடைய செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதும் நேர்மையான, சுதந்திரமான தேர்தலை நடத்துவதும் தேர்தல் கமிஷனுக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் பெருத்த சவாலாகவே இருக்கும்.மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் சம்பவங்கள் மீது நாம் எப்போதும் ஒரு கண்ணை வைத்திருக்க வேண்டும். லிபியாவில் இப்போது உள்நாட்டுப் போர் நடக்கிறது.மேற்கத்திய நாடுகளும் சர்வதேசச் சமூகமும் ஜனநாயக உரிமைகள் குறித்தும் மனித உரிமைகள் குறித்தும் போதனைகளாக நடத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில், லிபிய சர்வாதிகாரி மம்மர் கடாஃபி தன்னுடைய சொந்த நாட்டு மக்கள் மீதே போர் விமானங்களையும் குண்டு வீச்சு விமானங்களையும் ஏவிவிட்டு ஆயிரக்கணக்கில் மனித உயிர்களைப் பலிவாங்கிக் கொண்டிருக்கிறார்.சர்வதேச அரசியல் அரங்கில் கடாஃபி ஒன்றும் கத்துக்குட்டி தலைவர் அல்ல; பெட்ரோலிய எண்ணெயை வைத்துக்கொண்டு எப்படியெல்லாம் அரசியல் வித்தாரம் காட்ட முடியும் என்று நன்கு தெரிந்தவர். சர்வதேசத் தலைவர்களுக்கு உள்ள பணத்தாசை பற்றியும் இதர பலவீனங்கள் குறித்தும் அவருக்கு நன்றாகத் தெரியும். எனவே வல்லரசுகள் நிலையான அரசுக்காக கடாஃபியை ஆதரிப்பதற்கு முடிவு செய்யுமா அல்லது மக்களின் ஜனநாயக உரிமைகளுக்குத் துணை போகுமா என்பதைக் காலம்தான் முடிவு செய்யும்.லிபியாவில் கடாஃபியால் மக்களை ஒடுக்க முடிந்தால் அது பிற நாடுகளுக்கும் பரவி, மக்களின் தன்னெழுச்சியான ஜனநாயகப் போராட்டங்கள் கொடூரமாக ஒடுக்கப்படும். கடாஃபி நல்லாட்சி தருகிறார் என்று ஒரு சிலரால்தான் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு பகிரங்கமாகக் கூற முடியும்.எந்தவகை அரசியலிலும் அந்தரங்கம் என்று ஏதும் இல்லாமல் தோல் உரிக்கவே 24 மணி நேர செய்திச் சேனல்கள் செயல்படுகின்றன. இந்த நிலையில் போராடும் மக்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதைத் தவிர நம்மால் வேறு என்ன செய்ய முடியும்? இதுதான் இப்போதைய சோகம்.காலனியாதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், அது வேறு வடிவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் உலக அரசியல் அரங்கில் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன என்று யாராவது நினைக்கிறீர்களா?


Dinamani editorial about Libiya: தலையங்கம்: அந்நியர் புகலென்ன நீதி?

சரியான மறு கோணத்தை வெளிப்படுத்தி உள்ளீர்கள். பாராட்டுகள். ஆனால், அதே நேரம், போராட்டங்களை ஒடுக்க கடாஃபி மேற்கொள்ளும் அடக்கு முயற்சிகள் கொடுமை வாய்ந்தவை என்பதையும் சுட்டிக் காட்டி இருகக வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /

தலையங்கம்: அந்நியர் புகலென்ன நீதி?

First Published : 12 Mar 2011 12:31:00 AM IST

Last Updated : 12 Mar 2011 03:53:09 AM IST

லிபிய அதிபர் மும்மார் கடாஃபி ஒரு சர்வாதிகாரி என்பதிலும், அவரது ஆட்சி பொற்கால ஆட்சியொன்றும் அல்ல என்பதிலும் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அதேநேரத்தில், உலக சர்வாதிகாரிகளில் மிகவும் மோசமான சர்வாதிகாரி என்றோ, ஏனைய ஆட்சியாளர்களைவிட அவரது தலைமையிலான ஆட்சி மோசமானதென்றோ வர்ணிக்கவும் முடியாது என்பதுதான் நிஜம்.லிபிய அரசியலையும், லிபியாவின் கடந்த நூற்றாண்டு சரித்திரத்தையும் புரிந்து கொள்ளாமல் எழுதும் பல மேலைநாட்டுப் பத்திரிகைகளும், கடாஃபியை ஒரு கொடுங்கோலனாக வர்ணிப்பதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்த முயலும் தொலைக்காட்சிச் சேனல்களும், குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுபோல லிபியாவில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தைப் பயன்படுத்தி அந்த நாட்டின் எண்ணெய் வளத்துக்குக் குறிவைக்கும் ஏகாதிபத்திய சக்திகளும், பிரச்னையை வளர்க்க முயற்சிக்கின்றனவே தவிர, முறையான தீர்வுக்கு வித்திடவில்லை என்பதை யாருமே சொல்லத் தயாராக இல்லை. இதற்குக் காரணம், அதிபர் மும்மார் கடாஃபியை வீழ்த்தியாக வேண்டும் என்று மேலைநாடுகள் கடந்த 30 ஆண்டுகளாகவே திட்டமிட்டு வருவதுதான்.உலக எண்ணெய் வளத்தில் 2% லிபியாவில்தான் கிடைக்கிறது. இன்னும் பல எண்ணெய்க் கிணறுகள் கண்டுபிடிக்கப்படக் கூடும் என்பதுதான் எதிர்பார்ப்பு. ஆனால், எல்லா எண்ணெய்க் கிணறுகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தாமல், நீண்ட காலத்துக்கு லிபியாவின் எண்ணெய் வளத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அதிபர் மும்மார் கடாஃபியின் பிடிவாதம், அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளுக்கு எரிச்சல் ஊட்டுவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?1951-ல் இத்தாலியக் காலனியாக இருந்த லிபியா விடுதலை பெற்று சுதந்திர நாடானது. லிபியாவின் கிழக்குப் பகுதியான சைரனைக்காவின் முக்கியமான செனூசி ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த ஒன்றாவது இத்ரிஸ் என்கிற ராஜா, லிபியாவின் மன்னரானார். லிபியாவின் மேற்குப் பாதியில் கதத்ஃபா, மாக்ரஹா, வர்ஃபல்லா என்கிற மூன்று முக்கியமான ஆதிவாசி இனங்களும் கதத்ஃபா இனத்தவரான மும்மார் கடாஃபியின் தலைமையில் உள்நாட்டுக் கலகத்தில் ஈடுபட்டு, மன்னராக இருந்த முதலாம் இத்ரிசைப் பதவியிலிருந்து துரத்தி 1969-ல் ஆட்சியைக் கைப்பற்றின.1969-ல் பதவியைக் கைப்பற்றியது முதலே, ஆதிவாசி இனக் குழுக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து வைத்திருக்கும் அதிபர் மும்மார் கடாஃபி மேற்கு லிபியாவின் முக்கியமான இனங்களான கதத்ஃபா, மாக்ரஹா, வர்ஃபல்லா, ஃபெஸ்ஸன், திரிபோலித்தானியா போன்றவற்றின் முழுமையான ஆதரவையும், நம்பிக்கையையும் தக்க வைத்திருப்பதால்தான் இன்றுவரை அதிபராகத் தொடர முடிகிறது. எகிப்து, டுனீசியா போன்ற நாடுகளின் அதிபர்களைப்போல அல்லாமல் மும்மார் கடாஃபி தனது பெயரில் வெளிநாட்டு வங்கிகளின் பணம் சேர்த்து வைத்திருக்கிறார் என்றோ, அளவுக்கு அதிகமான ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததாகவோ அவர்மீது குற்றச்சாட்டுகளும் கிடையாது. தன்னைச் சுற்றி பெண்களைக் காவலர்களாக வைத்திருக்கிறார் என்கிற ஒரே ஒரு குற்றச்சாட்டுதான் மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது.மேற்கு லிபியாவைச் சேர்ந்த அதிபர் மும்மார் கடாஃபி புத்திசாலித்தனமாக கிழக்கு லிபியாவைச் சேர்ந்த ஆதிவாசி இனக்குழுக்களை பொருளாதார ரீதியாக வளர விடாமலும், அவர்கள் பெரிய அளவில் ஆயுதங்கள் வைத்துக் கொள்ளாமலும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது உண்மை. மேலும், தனது ராணுவத்தையே முழுமையாக நம்பாமல் பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதும் நிஜம்.கிழக்கு லிபியாவைச் சேர்ந்த இனக்குழுக்கள்தான் இப்போது அதிபர் மும்மார் கடாஃபிக்கு எதிராகக் கிளம்பி இருக்கிறார்கள். ஆனால், மேற்கு லிபியாவிலுள்ள எல்லா இனக்குழுக்களும் அவருக்கு ஆதரவாக இருப்பதால்தான், எகிப்திலும் டுனீசியாவிலும் ஏற்பட்டதுபோல, லிபியாவில் உள்நாட்டுக் கலகம் இன்னும் தொடர்கிறதே தவிர, ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், லிபியாவின் உள்நாட்டுப் பிரச்னையில் தலையிட்டுப் புரட்சியாளர்களுக்கு உதவ வேண்டும் என்கிற முனைப்புடன் வல்லரசு நாடுகள் செயல்படத் துடிக்கின்றன.பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், புரட்சியாளர்களுக்கு ஆயுதங்களைப் பாராசூட் மூலம் விநியோகம் செய்தால் என்ன என்று யோசனை கூறுகிறார். சவூதி அரேபியா மூலம் ஆயுதங்களைத் தந்து உதவினால் என்ன என்று அமெரிக்கா யோசிக்கிறது. புரட்சியாளர்களுக்கு எதிராக விமானத் தாக்குதல் நடத்தும் லிபிய அரசும் படைகளை முடக்க, அந்த நாட்டிலுள்ள விமானநிலையங்களின் மீது குண்டு வீசித் தகர்த்தால் என்ன என்று யோசனை கூறுகிறார் அமெரிக்க செனட்டர் ஜான் கெர்ரி. இன்னொரு செனட்டரான ஜான் மெக்கெய்ன், இராக்கில் நடத்தியதுபோல நேசப்படைகள் நுழைந்து, அதிபர் மும்மார் கடாஃபியைப் பதவியிலிருந்து அகற்றிப் புதிய ஆட்சியை நிறுவினால் தவறில்லை என்கிறார்.லிபியாவில் உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டிருப்பது உண்மை. அதிபர் கடாஃபியின் அரசு, ஆட்சியை எதிர்த்துப் போராடும் புரட்சியாளர்களுக்கு எதிராகத் தனது முழு ராணுவ பலத்தையும் பிரயோகித்துக் கலகத்தை அடக்க முயற்சிக்கிறது என்பதும் உண்மை. அதற்காக, எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத மேலைநாட்டு ராணுவம் இன்னொரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்னையில் வலியப்போய் தலையிட்டு நியாயப் பஞ்சாயத்து நடத்த முயற்சிப்பதை எப்படி அனுமதிப்பது, அங்கீகரிப்பது?நமது காஷ்மீரிலும்தான் பிரச்னை இருக்கிறது. நமது ராணுவமும், எல்லைப் பாதுகாப்புப் படையும் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு எதிராக அடக்குமுறையில் ஈடுபடுகிறது. இது தவறு என்று கூறி நாளை அமெரிக்காவோ, சீனாவோ தனது ராணுவத்தை அந்தத் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக அனுப்பினால், இந்திய எல்லைக்குள் நுழைந்தால் அதை நாம் அனுமதிக்க முடியுமா?அதிபர் மும்மார் கடாஃபி அரசின் ராணுவத்தின் கை ஓங்கி வருவதாகவும், புரட்சியாளர்களின் எதிர்ப்புக் குறைந்து வருவதாகவும் தெரிகிறது. உள்நாட்டுக் கலகத்துக்கு மேற்கு லிபிய ஆதிவாசி இனக்குழுக்களுக்கும், கிழக்கு லிபிய இனக்குழுக்களுக்குமான பதவிப் போட்டிதான் காரணம். ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாட்டினரின் அக்கறைக்குக் காரணம் லிபியாவின் எண்ணெய் வளம். 2003-ல் இராக். 2011-ல் லிபியா. என்றுதான் தணியும் இந்த ஏகாதிபத்திய மோகம், தெரியவில்லையே!


Tsunami in Japan: ஜப்பானில் சுனாமி: 1000 பேர் சாவு

ஜப்பானில் சுனாமி: 1000 பேர் சாவு

First Published : 12 Mar 2011 01:46:48 AM IST


மியாகி மாகாணம் நடோரியில் சுனாமியின் சீற்றம்.
டோக்கியோ, மார்ச் 11: ஜப்பானில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.தலைநகர் டோக்கியோவின் வடமேற்குப் பகுதியில் சுமார் 400 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 8.9 அலகுகளாகப் பதிவானது. 33 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன. கார்கள், பஸ்கள், ரயில், வீடுகள் என ஒரு நகரையே கடல் நீர் அடித்துச் சென்றுவிட்டது.கடலோரப் பகுதிகளில் மின்சாரமும் தொலைத் தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டன. மியாகி மாநிலத்தில் உள்ள செண்டாய் நகர விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக விமானங்களையும், கார்களையும் கடல்நீர் அடித்துச் சென்றது.நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் குடியிருப்புகள் தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கின்றன. எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை ஒன்றிலும் கட்டுக்கடங்காமல் தீ எரிந்து கொண்டிருக்கிறது.செண்டாய் நகரின் ஒரு பகுதியில் மட்டும் 200 முதல் 300 உடல்கள் கிடைத்திருக்கின்றன. நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்றும், நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.அணுமின் நிலையம் எரிந்தது:கடலோரப் பகுதியில் இருக்கும் ஓனகவா அணுமின் நிலையம் தீப்பற்றி எரிவதாகவும், இதையடுத்து அந்தப் பகுதியில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அங்கு கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், இதை ஜப்பான் அரசு மறுத்திருக்கிறது. கதிர்வீச்சு ஆபத்தில்லை என சர்வதேச அணுசக்தி முகமையும் அறிவித்தது.ஆனால், ஃபுகுஷிமா பகுதியில் உள்ள மற்றொரு அணு உலையில் குறைந்த அளவு கதிர்வீச்சு ஏற்பட்டிருக்கலாம் என ஜப்பான் வர்த்தக அமைச்சர் தெரிவித்தார். இந்த அணு உலையைக் குளிர்விப்பதற்கான கருவிகளை அமெரிக்கா அனுப்பி வைத்திருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்திருக்கிறார்.அணை உடைந்தது:ஃபுகுஷிமா பகுதியில் உள்ள அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்துவிட்டதாக கியோடா செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதில் சுமார் 1800 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிகிறது.50 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை:ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்கா, சீனா, ரஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மெக்சிகோ, கனடா, சிலி, பிலிப்பின்ஸ், மெக்சிகோ உள்ளிட்ட பசிபிக் கடலோர நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. எல்லா நாடுகளிலும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணி துரிதமாக நடந்து வருகிறது. மணிக்கு 500 கி.மீ. வேகத்தில் ஆழிப் பேரலை கடலோரப் பகுதிகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.அமெரிக்காவில்...ஜப்பானை அடுத்து அமெரிக்காவையும் சுனாமி தாக்கியது. கலிபோர்னியாவில் உள்ள ஓரிகன் பகுதியில் 7 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்ததாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் அந்தப் பகுதியிலிருந்த மக்கள் முன்னரே வெளியேற்றப்பட்டுவிட்டனர். இதனால் அங்கு உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. முன்னதாக ஹவாய் தீவுகளையும் சுனாமி தாக்கியது. அங்கு சேதம் ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது.


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 11 மார்ச், 2011

tamildict.com

புதிய சொற்களைச் சேர்க்கத்தான் வாய்ப்பு உள்ளதே தவிர, வேறு பொருளைச்  சேர்க்கவோ, திருத்தவோ வழியில்லை. பல தவறுகள் சொற்பொருள்களில் உள்ளன. சான்றாக joint secretaryஎன்பதற்கு இணைச் செயலர் என்றுதான் பொருள். ஆனால் deputy secretaryஎன்பதற்கான துணைச் செயலர் எனப் பொருள் உள்ளது. மற்றொரு பொருளும் தவறு. எனவே, அமைப்பு முறையை மாற்றுக. பொருள்களை  இடும் முன்னர் முந்தைய அகராதிப் பொருள்களை ஒப்பு நோக்கி வெளியிடுக.அன்புடன் இலக்குவனார்
திருவள்ளுவன்/ தமிழே விழி ! தமிழா விழி! /
 
to tamildict.com


cartoon of dinamalar-seat sharing


தொண்டர்களை மதிக்காத தலைமை

காங்கிரசுக்காரனைப் போல் கட்டுரை எழுதியுள்ளார். காங்.தலைவர்கள் பலர் கல்வி நிலையம் நடத்திக் கொள்ளை அடிக்கவிலலையா?  ஒப்பந்தம் எடுத்து ஊழல் செய்யவில்லையா? அமைச்சர்பதவிகள் வழங்கப்படவில்லையே தவிர ஊ ழலுக்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டு அவை செம்மையாக முடிக்கப்பட்டுப் பணப் பெட்டிகள் நிரம்பி வருகின்றன. அடித்தளமே  இல்லாத காங்.ஐப் பிறர் சுமந்து வருகையில் காங். பிற கட்சியைச் சுமந்து வருவதாகவும் கூறுகிறார்.
காங். தலைவர்கள் மத்திய அரசால் அடைந்த நன்மைகளைவிடத் தமிழக அரசால் அடைந்த நன்மைகள்தான் மிகுதி.  இத்தகைய  காங். ஐச் சுமக்கும்படிக் கலைஞர் கட்டளை  இட்டுவிட்டாரே எனத் தி.மு.க. வினருக்கு  இருக்கும் வருத்தம்தான் சரியானது. நடுநிலையான கட்டுரை  இல்லாவிட்டாலும் அது போல் பாவனை செய்யக்கூடிய கட்டுரைகளையாவது போடுங்கள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /


தொண்டர்களை மதிக்காத தலைமை


ஓருவழியாக தமிழக சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்திக்க திமுகவும், காங்கிரஸýம் கூட்டணி அமைத்துவிட்டன. ஆனால், இந்தக் கூட்டணியை வெற்றி பெறச்செய்ய திமுக தொண்டர்களும், காங்கிரஸ் தொண்டர்களும் மனத்தளவில் தயாராக உள்ளனரா என்பது கேள்விக்குறியே. சென்றமுறை சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி பெருவாரியாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போதே ஆட்சியில் பங்கு கிடைக்கும் என காங்கிரஸ் அடிமட்டத் தொண்டர்கள் பலரும் எண்ணினர். ஆனால், காங்கிரஸின் தில்லி தலைமையும், தமிழக காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்காமல் மெüனம் சாதித்தனர். இதனால் திமுகவும் காங்கிரûஸக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.இதுமட்டுமல்லாமல் அரசுப் பணியிடங்கள் நியமனம், இடமாற்றம் உள்ளிட்டவைகளில் இருந்து, ஒப்பந்தப் பணிகள், டாஸ்மாக் மதுக்கூடம் அமைப்பதுவரை அனைத்தும் திமுகவினரே வைத்துக் கொண்டனர். கூட்டணிக் கட்சியான காங்கிரஸôருக்கு எந்த வாய்ப்பும் வழங்கவில்லை எனவும் மாறாக அதிமுகவினர் பலர் திமுக ஆட்சியில் பயனடைந்துள்ளனர் எனவும், அரசு விழாக்களில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் காங்கிரஸôர் புலம்பி வந்தனர்.இந்நிலையில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் மத்திய அரசுக்குப் பெரும் நெருக்கடியைத் தந்தது. இதற்குக் காரணம் திமுகதான் என்பதை காங்கிரஸ் தொண்டர்கள் புரிந்துள்ளனர். இவ்வளவு நெருக்கடியிலும் திமுகவுடன் மீண்டும் கூட்டணி தேவையா? எனக் குரல் கொடுத்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்றவர்களின் கருத்துகளை காங்கிரஸ் தொண்டர்கள் பெருவாரியாக வரவேற்றனர்.மேலும், சட்டப் பேரவைத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சு வார்த்தையில் திமுக-காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டதும், ஆட்சியில் பங்கு தரமுடியாது என திமுக கூறியதும் காங்கிரஸ் தொண்டர்களைப் பெரிதும் பாதித்தது.இச்சூழலில் மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக விலகும் என திமுக தலைமை அறிவித்ததும் தமிழகத்தின் பல இடங்களில் காங்கிரஸ் தொண்டர்களும், திமுக வினரும் கூட பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.இவர்களுக்கு இடையே தேர்தல் களத்தில் தலைவர்கள் எப்படி ஒற்றுமையை ஏற்படுத்தப் போகிறார்கள். மொத்தத்தில் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு கட்சியை முதுகில் தூக்கிச் சுமப்பதை காங்கிரஸ் தொண்டர்கள் விரும்பவில்லை. மூன்றாவது அணி அமைப்பது அல்லது தனித்து நிற்பது என்ற முடிவையே அவர்கள் விரும்புகின்றனர். திமுக தலைமையிலான கூட்டணியை அறவே வெறுக்கின்றனர். ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர்களும், தில்லி தலைமையும் தங்களது சுயலாபத்துக்காக காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை மதிப்பதில்லை.இதன் தாக்கம் பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்கின்றனர் காங்கிரஸ் அடிமட்டத் தொண்டர்கள்.



வியாழன், 10 மார்ச், 2011

meenakam views

Thiruvalluvan. I. ஒரு கருத்துரை எழுதியுள்ளார் - "கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே தமிழ்த்தேசிய உணர்வாளர்களை ஒன்றுபடுத்தித் தனி அணியாகத் தேர்தலைச் ச...
 
Thiruvalluvan. I. ஒரு கருத்துரை எழுதியுள்ளார் - "போர்க்குற்ற விசாரணைக் குழுவன்று. ஐ.நா.விற்கே போர்க்குற்றங்களும் இன அழிப்புகளும் நடைபெற்றது நன்கு...
 
பொற்கோ ஒரு கருத்துரை எழுதியுள்ளார் - "அய்யா! தூங்குறவன உசுப்பலாம், வாழ்க்கையே தொழிலாக கொண்டோரிடம் எப்படி அய்யா எதிர்பார்க்கிறீகள்."
 
Thiruvalluvan. I. ஒரு கருத்துரை எழுதியுள்ளார் - "தி.மு.க.விற்குத் தோல்வியாக இருக்கலாம். ஆனால், கலைஞருக்கு வெற்றிதான். பிளவிற்குக் காரணம் தொகுதி எ...
 
Thiruvalluvan. I. ஒரு கருத்துரை எழுதியுள்ளார் - "உடன்பாட்டுப் பேச்சு: கா. 63; தி 60; கா 62; தி 61; கா 63; தி 60; . . . . . பின்னார் இருவர் உரை: 1...
 
Thiruvalluvan. I. ஒரு கருத்துரை எழுதியுள்ளார் - "வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று அறிந்தும் மோதி அவமானப்பட்டது ஏன் என்று எண்ணக்கூடாது. திரைமறைவி...
 
Thiruvalluvan. I. ஒரு கருத்துரை எழுதியுள்ளார் - "தமிழினப்படுகொலையாளியான பேராயக்கட்சி- காங். - மண்ணைக் கவ்வும். பிறகு எந்தக்கட்சிக்கும் அதன் தயவு ...
 
Thiruvalluvan. I. ஒரு கருத்துரை எழுதியுள்ளார் - "காங்.-தி.மு.க. கூட்டணி உடையும் என எண்ணியவரகள் கனவு தகர்ந்தது.இடையிலே புகுந்து சால் ஓட்ட எண்ணியவர...
 
Thiruvalluvan. I. ஒரு கருத்துரை எழுதியுள்ளார் - "இந்தியம் தமிழுக்குப் பகை. எனவே, தமிழ் ஈழத்திற்கும் பகை. ஆதலின் ஈழத்திற்கு உதவாது. ஆனால், தமிழ்த்...
 
Thiruvalluvan. I. ஒரு கருத்துரை எழுதியுள்ளார் - "யாரொருவர் இறந்தாலும் கடந்த கால நிகழ்வுகளைப் புறந்தள்ளி மதிப்பும் பரிவும் காட்டுவதே உலக இயற்கை. ந...
 
-  
 

Jaya about d.m.k. drama: திமுகவின் நாடகம் ஆச்சரியத்தை அளிக்கவில்லை: ஜெயலலிதா

பாம்பின் கால் பாம்பு அறியும்.  
இங்ஙனம்
இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /

திமுகவின் நாடகம் ஆச்சரியத்தை அளிக்கவில்லை: ஜெயலலிதா

சென்னை, மார்ச் 10: காங்கிரஸ்- திமுக கூட்டணி தர்மசங்கடக் கூட்டணி என்றும், அவர்கள் நடத்திய நாடகம் தனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என்றும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:தி.மு.க. - காங்கிரசுக்கு இடையே கடந்த சில நாட்களாக நடந்த நாடகங்கள் ஊடகங்களுக்கும், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் வியப்பை அளித்து இருக்கலாம். தொகுதி எண்ணிக்கை தொடர்பான காங்கிரஸ் கோரிக்கை குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது அதிருப்தியை தெரிவித்தார். பின்னர், மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து தனது கட்சி அமைச்சர்கள் விலகிக் கொள்வதாக மிரட்டினார். ராஜினாமா கடிதங்களை கொடுக்கப் போகிறோம் என்ற பாசாங்கு நாடகத்தினை முன்னிறுத்தி, தி.மு.க. மத்திய அமைச்சர்கள் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டனர். ஆனால், ராஜினாமாக் கடிதங்கள் அவர்களுடைய சட்டைப் பைகளிலிருந்து வெளி வரவில்லை. இதற்குப் பதிலாக மீண்டும் இணைந்து செயல்படுவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டது. ... ஊடகங்களும், மக்களும் ஒரு முழு வாரத்திற்கு ஸ்பெக்ட்ரம் புலன் விசாரணையை மறக்கும் நிலைக்கு இந்த நடவடிக்கை தள்ளுவதாக அமைந்துவிட்டது. இது மட்டுமல்லாமல், விலைவாசி மற்றும் எண்ணிலடங்கா இதர பிரச்சினைகளை மறக்கும் நிலைக்கும் அவர்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள். அது தான் கருணாநிதியின் தந்திரம்! இந்த கபட நாடகம் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. மத்திய அமைச்சரவை 2009-ல் அமைக்கப்படும் போதே இது போன்ற கண்துடைப்பு நாடகம் நடத்தப்பட்டதை நாம் பார்த்து இருக்கிறோம். கருணாநிதி டெல்லிக்கு பறந்தார். தன்னுடைய கோரிக்கைகளை வைத்தார். கருணாநிதியின் கோரிக்கைகளுக்கு காங்கிரஸ் தலைமை எதிர்ப்பு தெரிவித்தவுடன், கடுங்கோபம் கொள்வது போல் பாசாங்கு நடவடிக்கையில் ஈடுபட்டார். தனக்குள்ள மனக்கசப்பை வெளிப்படுத்தும் விதமாக, பாரதப் பிரதமரின் பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு, தனது கட்சியைச் சார்ந்த மக்களவை உறுப்பினர்களுடன் சென்னைக்குத் திரும்பினார் கருணாநிதி. கருணாநிதியின் நாடகம் அவருக்கு பலனைத் தந்தது. தனது மகன் அழகிரி, பேரன் தயாநிதி மாறன், ஆ. ராசா ஆகியோருக்கு வளமான இலாக்காக்கள் கிடைத்தன! இது போன்ற அச்சுறுத்தல் சம்பவம் அனைத்தும் வெறும் நாடகமே. இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போதும், காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கினை கர்நாடகா தர மறுத்த போதும், முல்லைப் பெரியாறில் உச்ச நீதிமன்ற ஆணையை செயல்படுத்த கேரளா மறுத்த போதும், அனைத்துப் பொருட்களின் விலைகள் உயர்வதற்கு வழிவகுக்கின்ற பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை மத்திய அரசு திரும்பத் திரும்ப உயர்த்திய போதும், தமிழக மீனவர்கள் நடுக் கடலில் படுகொலை செய்யப்பட்ட போதும், வறுமையில் சிக்கி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்ட போதும், மத்திய அரசிலிருந்து விலகப் போகிறோம் என்று மத்திய அரசை கருணாநிதி மிரட்டவில்லை. வழக்கம் போல, பாரதப் பிரதமருக்கு கடிதங்களை அனுப்பினார். தனது மகன்கள், மகள்கள் மற்றும் உறவினர்களுக்கு வளம் கொழிக்கும் இலாக்காக்களை பெற வேண்டும் என்று விரும்பினாலோ, தேசத்தின் சொத்தை சுரண்டிய தனக்கு பிரியமானவர்களும், நெருக்கமானவர்களும் மத்திய புலனாய்வுத் துறையினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட போகிறார்கள் என்றாலோ, வேறு ஏதாவது காரணத்தைச் சொல்லி வீராப்புடன் மத்திய அரசை மிரட்டுவார். காங்கிரஸ் தலைமையும் அப்பாவி காங்கிரஸ் தொண்டர்களை ஏமாற்றும் வகையில் தி.மு.க.வின் கட்டளைக்கு அடிபணிய மறுப்பது போன்று நாடகமாடும். பின்னர் இரண்டு - மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்காகத் தான் ஒரு வார கால போராட்டம் நடைபெற்றது என்ற தோற்றத்தை உருவாக்கி சரணடைந்து விடும்! காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. அங்கம் வகிப்பது காங்கிரசுக்கு மிகப் பெரிய சங்கடம் ஆகும். உலகத்தின் மிகப் பெரிய ஊழலான ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஊழலை தலைமையேற்று நடத்தியவர் ஆ. ராசா. இந்த ஊழல் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் சென்றடைந்த இடத்தை ஆராய்ந்தால், தி.மு.க. தலைவர் கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் வீட்டுக் கதவுகளை சென்று அடைகிறது. தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு, கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது மாபெரும் முழக்கத்துடன் துவக்கப்பட்ட 2400 கோடி ரூபாய் மதிப்பிலான சேதுசமுத்திரத் திட்டம் இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை. இந்தப் பணம் எல்லாம் தி.மு.க. தலைமைக்கு சென்று, மதுபானத் தொழிற்சாலைகள், வரியில்லாத கடைகள், விடுதிகள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் இன்று முதலீடு செய்யப்பட்டு இருக்கின்றது. தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதி மாறன், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது தனது செல்வாக்கினை பயன்படுத்தி, தன்னுடைய மூத்த சகோதரனின் வணிக சாம்ராஜ்யத்தில் அபரிமிதமான முதலீடுகள் சென்றடைவதை உறுதி செய்யக் காரணமாக இருந்தார். இந்த நிறுவனம், தொலைக்காட்சியை தாண்டி திரைப்படத் துறை, விமானத் துறை போன்றவற்றிலும் தற்போது விரிவடைந்து இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் இருந்து கண்டனங்கள் வரக் காரணமாக இருந்த சர்ச்சைக்குரிய மத்திய கண்காணிப்புத் துறை ஆணையர் திரு. பி.ஜெ. தாமஸ் நியமனமும் தி.மு.க. தலைமையின் வேண்டுகோளின்படி நடைபெற்று இருக்கிறது. இந்த அளவுக்கு காங்கிரசுக்கும், காங்கிரஸ் தலைமைக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திய இவர்களுக்கு வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டியவர்கள் இந்த மாநிலத்தில் உள்ள பாவப்பட்ட காங்கிரஸ் தொண்டர்களே... - இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்

POR ENDRAL POTHU MAKKAL KOLLAPADUVATHU SAGAJAM THAN ENDRU JAYA SOLLU VATHU UNMAI.ATHE NERTHIL PORAI NANTHAN NIRUTHINEN ENDRU KARUNANITHI POLA NADAKAM PODA VILLAI EN PATHAI KAVANATHIL KOLLA VENDUM
By karthik
3/10/2011 2:04:00 PM
needed statement from madam
By Elango
3/10/2011 2:03:00 PM

பேரறிஞர் அண்ணா தமிழனை அடிமைப்படுத்த இருந்த இந்தி மொழியை தமிழகத்திலிருந்து விரட்டினார் ! தமிழ் மொழியின் விரோதி பாவி கருணாநிதி இந்தி மொழியை சட்டசபைக்கு அழைத்து வந்து மகுடம் சூட்டினார் ! பேரறிஞர் அண்ணா காங்கிரசை ஆட்சிக் கட்டிலிலிருந்து விரட்டினார் ! இன்றைக்கு தமிழ் இனத்தின் துரோகி படு பாவி கருணாநிதி காங்கிரசை தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்த்த கழகத்தின் உடன் பிறப்புக்களை அடிமைப் படுத்தி திராவிட முன்னேற்ற கழகத்தை சுயலாபத்திற்க்காக விற்றுவிட்டார் ! இந்த அநீதியை திராவிட பாரம்பரியத்தில் வந்த ஒவ்வொருவரும் உணர்ந்து தெளிந்து காங்கிரஸ் தி மு க கூட்டணிகளை நிராகப்பது மிக அவசியமானதாகும் ! திராவிட இயக்கத்தின் உண்மையான வாரிசான புரட்சித் தலைவியின் தலைமையில் உள்ள அ தி மு க விற்கு உடன் பிறப்புக்கள் அனைவரும் கட்சி பேதம் இன்றி ஆதரவு நல்கி தந்தை பெரியாரின் சேவைகள் பேரறிஞர் அண்ணாவின் தியாகங்கள் வீண் போகாத படி அவர்களின் புகழினை நிலைத்திருக்கச் செய்வது கடமையாகும் ! இந்த முறை உடன்பிறப்புக்கள் புரட்சித் தலைவிக்கு வாக்களிப்பது தந்தை பெரியாருக்கும் பேரறிஞர் அண்ணாவுக்கும் வாக்களிப்பது போல ! கருணாநிதி உன்னை அடகு
By rajasji
3/10/2011 1:50:00 PM
இழவு காத்த கிளிபோல காங்கிரஸ் வரும் வரும் என்று காத்திருந்து அம்மாவுக்கு கண் பூத்துவிட்டது....பாவம் புலம்புகிறார்...அடுத்த கட்ச்சியை வசைபாடுவதை விட்டுட்டு மக்களாட்ச்சிக்கு சிறந்த அரசு நிர்வாகம் இதற்க்கு உங்கள் திட்டம் என்று மக்களுக்கு கூறுங்கள். அடுத்தவர்களை வசைபாடியே பொழப்பு நடத்தலாம் என்றால் மக்கள் ஏமாறமாட்டார்கள். அவர்களிடமிருந்து நீங்கள் எந்தளவுக்கு சிறந்தவர் (?!) என்பதை மக்களுக்கு சொல்லுங்கள். மக்கள் ஒட்டு போட யோசிப்பார்கள்..
By கோவிந்த்
3/10/2011 1:49:00 PM
காக்கையிடம் இருந்து எப்படா வடை கீழே விழும் என்று காத்திருந்து ஏமாந்ததனால், வந்த அறிக்கை இது. திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி இல்லையென்றதும், மதிமுகவையும் கம்யூனிஸ்டுகளையும் காக்க வைத்தது ஏனோ?. நம்பிக்கை துரோகம் பண்ணுவதில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒருவருக்கு ஒருவர் இளைத்தவர் அல்ல. தமிழ்நாடு உங்கள் இருவரிடமும் மாறி மாறி படும் பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல.
By மதுரைக்காரன்
3/10/2011 1:44:00 PM
கொடுங்கோல் ஆட்சியாம் தி. மு. க. வின் ஆட்சியை அகற்ற வேண்டுமென்று செல்வி ஜெயலலிதா அவர்கள் நினைத்தது தப்பு ஒன்றுமில்லை. அதற்காக அவர் எந்த உக்தியையும் கையாள வேண்டும், காங்கிரஸ் கூட்டணி உட்பட. நாட்டின் நலனை கருதுவோர்கள் அனைவருக்கும் ஏற்ற நடவடிக்கை இது. எனவே, செல்வி ஜெயலலிதா அவர்கள் காங்கிரஸ் கூட்டணிக்காக முயற்சி செய்ததில் தவறு ஒன்றுமில்லை.
By நாதன், Bangalore
3/10/2011 1:38:00 PM
நீங்கள் சொல்வது சரி நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள். நல்லாட்சி கொடுத்தால் நீங்கள் தான் நிரந்தர முதல் அமைச்சர். இந்த TMMK போன்ற கட்சிகளை விரட்டி விடுங்கள். அது உங்களுக்கு தான் நல்லது. முஹமது உஸ்மான் சவுதி அரேபியா
By முஹமது USMAN
3/10/2011 1:35:00 PM
அம்மான்னா அம்மாதாண்டா !. சீக்கிரம் மத்த கட்சிக்கு எல்லாம் தொகுதியை ஒதுக்கிட்டு பிரச்சாரத்தை ஸ்டார்ட் பண்ணுங்க..
By சன்னியாசி
3/10/2011 1:18:00 PM
அம்மான்னா அம்மாதாண்டா !. சீக்கிரம் மத்த கட்சிக்கு எல்லாம் தொகுதியை ஒதுக்கிட்டு பிரச்சாரத்தை ஸ்டார்ட் பண்ணுங்க..
By சன்னியாசி
3/10/2011 1:16:00 PM
THE FACT IS THAT JAYA TRYED HER LEVEL BEST TO HAVE ALLIENCE WITH CONGRESS! BUT THAT WAS NOT HAPPENED !THAT IS WHY SHE HAS NOT DISCUSSED THE ALLIENCE WITH COMMUNISTS AND MDMK SO FAR!
By RAGHURAMMOHAN
3/10/2011 1:13:00 PM
"போர் என்று வந்தால் பொது மக்கள் கொல்லப்படுவது சகஜம்தானே"? இதை வேறு யாரும் சொல்லவில்லை அம்மா. உங்கள் திரு வாய் திறந்து உதிர்த்த பொன்மொழிகள். பரவாயில்லையே? ஈழத் தமிழர்கள் பற்றி உங்களுக்கு நினைவு இருக்கத்தான் செய்கிறது. (அதை உங்கள் வசதிக்கு ஏற்றார்போல புத்திசாலித்தனமாக இலங்கை தமிழர்கள் என்று கூறுகிறீர்கள் - பரவாயில்லை) அதை தேர்தல் சமயம் பார்த்து உபயோகிக்கிறீர்களே! ரொம்ப பாசக்கார பொம்பளை அம்மா நீ!!
By Abdul Rahman - Dubai
3/10/2011 1:10:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

Seat sacrifice for the welfare of alliance- ramdoss: கூட்டணியின் நலன் கருதியே விட்டுக் கொடுத்தோம்: இராமதாசு

ஈழத்தமிழின அழிப்பில் ஈடுபட்ட- தமிழக மீனவர்கள் மரணத்திற்குக் காரணமான- ஊழல்உறைவிடமான காங்.கிற்கு விட்டுக் கொடுப்பதை நல்ல நோக்கம் என்று சொல்கிறார் என்றால்  இவரின் எப்பேச்சை நம்புவது? இனி,  இவர் தமிழர் நலன் குறித்துப் பேசாமல் இருப்பது நல்லது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.
/தமிழே விழி! தமிழா விழி! /


கூட்டணியின் நலன் கருதியே விட்டுக் கொடுத்தோம்:  இராமதாசு

ராமதாஸ்
சென்னை, மார்ச் 9: கூட்டணியின் நலன் கருதி நாங்கள் ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்தோம் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.மருத்துவப் படிப்பில் சேர அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வை நடத்துவது என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் முடிவு குறித்து விவாதிப்பதற்காக பா.ம.க.வின் மாணவர் அணிக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.பொது நுழைவுத் தேர்வு முடிவை கண்டிக்கும் வகையில் பா.ம.க. மாணவர் அமைப்பு சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை நடத்துவது என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.பின்னர் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது: தி.மு.க. கூட்டணியில் எங்கள் கட்சிக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கிடைத்த தொகுதியை எந்தக் கட்சியும் விட்டுக் கொடுத்தது என்பது இதுவரை நடந்ததில்லை.எனினும், எங்கள் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெற யேவண்டும் என்ற நல்ல நோக்கத்துக்காக பா.ம.க.வுக்கு தரப்பட்ட தொகுதிகளில் ஒன்றை விட்டுக் கொடுத்துள்ளோம்.பா.ம.க.வுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றி ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும். எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றார் ராமதாஸ். மார்ச் 14-ல் ஆர்ப்பாட்டம்: இதற்கிடையே பொது நுழைவுத் தேர்வு நடத்தும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் முடிவைக் கண்டித்து சென்னையில் மார்ச் 14-ம் தேதி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

M.D.M.K. for third front? -மூன்றாவது அணி முயற்சியில் மதிமுக?

தமிழ்த்தேசிய உணர்வாளர்களையும் மனித நேயர்களையும் ஊழலை ஒழிக்க எண்ணுபவர்களையும் முனைப்புடன்ஒன்று படுத்தி, காங். -ஐத் தோற்கடிக்கும் முயற்சியிலும் தங்கள் அணிக்கு வெற்றி தரக்கூடிய தொகுதிகளிலும் கருத்து செலுத்தினால் மாபெரும வெற்றி பெறலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன். 
/தமிழே விழி! தமிழா விழி! /

மூன்றாவது அணி முயற்சியில் மதிமுக?

சென்னை, மார்ச் 9: அதிமுக அணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. கேட்ட தொகுதிகள் கிடைக்காத நிலையில், மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிடுவது பற்றி மதிமுக தலைமை தீவிரமாக யோசித்து வருவதாகத் தெரிகிறது.தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படாத நிலையில் இடதுசாரிக் கட்சித் தலைவர்களும் அதிமுக தலைமை மீது கடும் கோபத்தில் உள்ளனர். தேவைப்பட்டால் அவர்களும் மதிமுகவின் முயற்சிக்கு தோள் கொடுப்பார்கள் எனத் தெரிகிறது. சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக அணி - அதிமுக அணி என இரு முனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக அணியில் காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்குத் தொகுதிகள் பங்கிடப்பட்டுள்ளன.ஆனால், பேச்சுவார்த்தையை முதலில் நடத்தி சிறிய கட்சிகளான புதிய தமிழகம், இந்திய குடியரசுக் கட்சி போன்றவற்றுக்கு தொகுதிகளை ஒதுக்கிய அதிமுக அணியில் இன்னும் தொகுதிப்பங்கீடு முழுமையாக முடிவடையவில்லை.மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அதிமுக தலைமையின் அழைப்புக்காக வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றன.முன்னதாகவே இடதுசாரிக் கட்சிகள், மதிமுக ஆகியவற்றுடன் அதிமுக பேச்சு நடத்தியது. ஆனால், எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதற்கிடையில் அதிமுக தலைமை, விஜயகாந்தின் தேமுதிக கட்சியுடன் கடந்த வாரம் தொகுதி உடன்பாடு செய்து கொண்டது. காங்கிரஸýடன் தேமுதிக இணைந்து மூன்றாவது அணி அமைத்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் தேமுதிகவுடன் அதிமுக தொகுதி உடன்பாட்டை உடனடியாகச் செய்து கொண்டது என்றும், இதையடுத்து தங்களுக்கும் திருப்தியான முறையில் தொகுதிகள் ஒதுக்கப்படும் எனவும் இடதுசாரிகளும், மதிமுகவும் நினைத்தன.மூன்று கட்சிகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமையே பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்படக்கூடும் என அரசியல் வட்டாரத்தில் கருத்து நிலவியது. ஆனால், எந்தக் கட்சியையும் அதிமுக தலைமை அழைக்கவில்லை. இதனால், இடதுசாரிக் கட்சிகளும் மதிமுக தலைவர்களும் எரிச்சலுக்கு உள்ளாயினர். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மட்டும் அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழு திங்கள்கிழமை அழைத்துப் பேசியது. இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஓரிரு நாள்களில் சுமுக முடிவு எட்டப்படும் என மார்க்சிஸ்ட் தலைவர்கள் தெரிவித்தனர்.அதேசமயம், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரும் என்று காத்திருந்த இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.அதிமுக அணியில் மதிமுக, இடதுசாரிக் கட்சிகள் கேட்கும் தொகுதிகள் ஒதுக்கப்படாததே இழுபறிக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. அதிமுக தலைமையின் நீண்ட கால நண்பராக இருக்கும் வைகோ, கூட்டணியில் தனது கட்சிக்கு "கௌரவமான அளவில்' இடங்களை ஒதுக்க வேண்டும் எனக் கருதுகிறார்.முதலில் 25 தொகுதிகளை வலியுறுத்திய அவர், இப்போது அதிலிருந்து இறங்கி வந்து 21 தொகுதிகள் கட்டாயம் வேண்டும் எனக் கூறி வருகிறார். ஆனால், "அதிமுக தலைமையோ 10 தொகுதிகளுக்கு மேல் மதிமுகவுக்கு ஒதுக்குவதாக இல்லை' என்று கூறப்படுகிறது.கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுகவுக்கு, அதிமுக அணியில் 35 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், அந்தக் கட்சி 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேபோல கடந்த 2009 மக்களவைத் தேர்தலிலும் மதிமுக 4 தொகுதிகளைக் கேட்டுப்பெற்று ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் வெற்றி பெறமுடிந்தது.""வீம்புக்கு அதிகத் தொகுதிகளைக் கேட்டு வாங்கிவிட்டு பெருவாரியான தொகுதிகளில் தோல்வியைத் தழுவுவது மதிமுகவின் வாடிக்கையாகிவிட்டது. வைகோ-வைத் தவிர அந்தக் கட்சியில் பெயர் சொல்லக்கூட ஒரு முக்கியமான தலைவர் கிடையாது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் மதிமுகவிலிருந்து விலகிவிட்டனர். தொகுதிகளைக் கேட்டுப் பெற்றால் மட்டும் போதுமா? அதில் போட்டியிடத் தகுதியான வேட்பாளர்கள் மதிமுகவில் இருக்கிறார்களா'' என்று கேள்வி எழுப்பும் அதிமுக தலைமை, வைகோவுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்ததாகக் கூறப்படுகிறது.உறுதியாக வெற்றி பெறக்கூடிய 20 தொகுதிகளின் பட்டியலை வைகோ தந்தால் அதில் 10 தொகுதிகளை ஒதுக்குவதாகவும் அந்த 10 தொகுதிகளிலும் மதிமுக முழுக்கவனத்தையும் செலுத்தி வெற்றியடையலாம் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவே நேரடியாக வைகோவிடம் தெரிவித்ததாகவும் கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இதைப்பற்றிக் கேட்டால் மதிமுக தரப்பு கொதித்து விடுகிறது.""184 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக மட்டும் அத்தனை தொகுதிகளிலுமா வெற்றி பெற்றுவிட்டது? வெறும் 61 தொகுதிகளில்தானே ஜெயிக்க முடிந்தது. அப்படியிருக்கும்போது எங்களை மட்டும் குறைகூறுவது என்ன நியாயம்?'' என்பது மதிமுக தரப்புவாதம்.இடதுசாரிக் கட்சிகளிடையேயும் தொகுதிகளின் எண்ணிக்கையில் பிரச்னை இருந்து வருகிறது. மார்க்சிஸ்ட் கட்சி 15 தொகுதிகளைக் கேட்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ தங்களுக்குக் குறைந்தது 11 தொகுதிகளாவது வேண்டும் என வலியுறுத்துகிறது. ஆனால், மார்க்சிஸ்ட்டுக்கு 11, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 என்ற அளவில் மட்டுமே தொகுதிகளைத் தர முடியும் என அதிமுக தெரிவித்துள்ளது. தொகுதிகளை அளிப்பதில் தேமுதிகவுக்கு அடுத்தபடியாக தங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் என நினைத்திருந்த மதிமுகவுக்கு இப்போது அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது அதிமுக. இந்த அதிர்ச்சியால் மதிமுக தலைமை உறைந்து போயுள்ளது. கட்சியின் மூத்த நிர்வாகிகளும், முன்னணித் தலைவர்களும் அதிமுக அணியை விட்டு வெளியேறித் தனியாக களத்தைச் சந்திக்கலாம் என்று கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.இடதுசாரிக் கட்சிகளுக்கு காவிரி டெல்டா மாவட்டங்களிலும், மதிமுகவுக்கு தென் மாவட்டங்களிலும் சில குறிப்பிட்ட தொகுதிகளில் செல்வாக்கு உள்ளது. அதிமுகவின் அழைப்புக்காகக் காத்திருப்பதைவிட, செல்வாக்குள்ள தொகுதிகளில் தனியாக களமிறங்கினால் ஓரளவுக்கு வெற்றிபெற முடியாவிட்டாலும் ஆட்சியைப் பிடிக்கும் அதிமுகவின் கனவைத் தகர்த்துவிட முடியும் என்று மதிமுக கருதுகிறது. மதிமுக, இடதுசாரிக் கட்சிகளைக் காத்திருக்க வைப்பது அவர்களது தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. "கடைசி வரை காத்திருக்க வைத்து, இருக்கின்ற தொகுதிகளை கொடுத்தாலே போதுமானது' என்ற நிலைக்கு தங்களைக் கொண்டு வர அதிமுக தலைமை திட்டமிடுகிறதோ என்று மதிமுக, இடதுசாரிக் கட்சித் தொண்டர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.என்ன "விலை' கொடுத்தாவது மதிமுகவையும் இடதுசாரிகளையும் அதிமுக அணியிலிருந்து பிரித்து மூன்றாவது அணி அமைக்க வைப்பதில் திமுக தலைமையும், காங்கிரஸ் மேலிடமும் சுறுசுறுப்பாகி இருப்பதாகத் தெரிகிறது. எதிர்க்கட்சி வாக்குகளில் ஏற்படும் பிளவு, ஆளும் திமுக கூட்டணிக்குச் சாதகமாக அமையும் என்று வியூகம் வகுக்க முற்பட்டிருக்கிறது திமுக தலைமை.அதிமுக அணியில் தேமுதிகவுக்கு 41 இடங்களும் ஏனைய உதிரிக் கட்சிகளுக்கு 8 இடங்களையும் ஒதுக்கி இருக்கும் நிலையில், மீதமிருப்பது 185 இடங்கள் மட்டுமே. அதில் மதிமுக மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கு 30 இடங்களை ஒதுக்கிவிட்டு மீதியுள்ள 155 இடங்களில் போட்டியிட அதிமுக திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.கடைசியில், மதிமுகவுக்கு 15 தொகுதிகளும் மார்க்சிஸ்ட்டுக்கு 13 தொகுதிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 தொகுதிகளும் தந்து அவர்களைத் தங்களது அணியில் அதிமுக தக்கவைத்துக் கொள்ளக்கூடும். கடைசிநேரத்தில் அணி மாறுவது அல்லது தனித்துப் போட்டியிடுவது என்கிற வழக்கத்தை மதிமுக 1996, 2001, 2006 தேர்தல்களைப் போலவே, இந்தத் தேர்தலிலும் கடைப்பிடிப்பது அதிமுகவின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமா என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் இப்போது பரபரப்பாக எழுப்பப்படும் கேள்வி!

Imaginary interview of kalaignar : கலைஞர் கொடுக்காத பேட்டி

23-Dec-2010

கலைஞர் கொடுக்காத பேட்டி

 



குறிப்பு: இது ஒரு மீள் பதிவு என்பதால் ஸ்பெக்ட்ரம், ராஜா போன்ற கேள்விகள் இடம்பெறவில்லை. 
அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரும், தி.மு.க- தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் மனம்திறந்து கொடுக்காத பேட்டி.

கேள்வி: உங்கள் குடும்பத்திலிருந்து அடுத்து பதவிக்கு வரப்போவது யார்?
கலைஞர்: அது துரை தயாநிதியாகவும் இருக்கலாம். அல்லது உதயநிதி ஸ்டாலின் ஆகவும் இருக்கலாம். அதை பொதுக்குழு செயற்குழு கூடி முடிவு செய்யும்.

கேள்வி: உங்கள் குடும்பத்திற்கே பதவி வழங்கப்படுகிறதே?
கலைஞர்: எம்.எல். ஏ., எம்.பி., மந்திரி என்று ஒவ்வொருவரையும் தனித்தனியே பார்க்க மக்கள் ஏன் அலையனும்?. ஒரே குடும்பத்தை சேர்ந்த எல்லோருக்கும் பதவி கொடுத்து விட்டால்...மத்திய, மாநில மந்திரிகளை ஒரே வீட்டில் சந்திக்கலாம் அல்லவா? அந்த அடிப்படையில் தான் என் குடும்பத்தினர் எல்லோருக்கும் பதவி கொடுத்துள்ளேன்.



கேள்வி:உங்களுக்கு மத்தியிலிருக்கும் செல்வாக்கை வைத்து மதுரையை தனிமாநிலமாக அறிவித்து அங்கு மு.க. அழகிரியை முதலமைச்சராக அறிவித்து விடுங்களேன்?
கலைஞர்: பன்னலாம்தான். அதன்பிறகு ராமதாஸ் அவர் மகனை முதலமைச்சராக்க வடமாவட்டத்தை பிரித்து கேக்க மாட்டார்ன்னு என்ன நிச்சயம்?

கேள்வி: மு.க.அழகிரி பாராளுமன்றத்திற்கு செல்லாமல் இருப்பதற்கு மொழி பிரச்சினைதான் காரணமா?
கலைஞர்: இதற்க்கு பதில் சொல்லும் முன்பு எதிர்கட்சியினருக்கு ஒரு சின்ன விளக்கம் சொல்லிக்க ஆசைபடுகிறேன். கருணாநிதி மட்டுதான் தமிழ் தமிழ் என்று சொல்லுறார். அவரு குடும்பத்து உறுப்பினர்கள் எல்லோரும் இங்க்லீஸ் இந்தி படிக்கறாங்கன்னு நா கூசாமல் சொல்லுகொண்டு இருக்கீங்களே, இதன் மூலமாவது ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள், என் குடும்பத்தினர் யாருக்கும் தமிழை தவிர வேறொன்றும் தெரியாது என்கிற விஷயத்தை. ஆங்...நீங்க என்ன கேட்டீங்க...
மொழி பிரச்சினையில் தான் அழகிரி பாராளுமன்றத்துக்கு போறதில்லைன்னு வடநாட்டுல அழகிரியின் வளர்ச்சி பிடிக்காதவங்க கிளப்பிவிடற புரளி . ஆனா அழகிரிக்கு இந்தியும் ஆங்கிலமும் தெரியாது என்பதை ஒத்துக்கறேன். அதுக்காக பயந்துட்டு அவரு போகாம இல்லை. நாங்களெல்லாம் இந்தியை எதிர்த்தே அரசியல் பன்னுனவுங்க. அவரு போகாத்ததுக்கு முக்கிய காரணம்.அழகிரி ஒரு இடைத்தேர்தல் ஸ்பெசலிஸ்ட் என்பதை எப்படியோ தெரிந்து கொண்ட
வடநாட்டு தலைவருல்லாம் அவருகிட்ட வந்து அங்கே இடைத்தேர்தல் நடக்குது நீங்க வந்து பிரச்சாரம் செய்யுங்க, இங்கே இடைத்தேர்தல் நடக்குது நீங்க பொறுப்பாளரா இருந்து ஜெயிக்கவைங்கன்னு தினமும் தொல்லையாம். அதான் பாராளுன்றத்துக்கு போறதில்லை.
கேள்வி: மின்வெட்டு ஒரு முக்கிய பிரச்சினையாக தெரிகிறதே?
கலைஞர்: இப்போது தமிழ்நாட்டில் மின்வெட்டு பிரச்சினையே இல்லையே? என் வீட்டிலோ அல்லது ஆற்காட்டார் வீட்டிலோ போய் பாருங்கள் உண்மை தெரியும்.

கேள்வி: உங்கள் வீட்டில் சரி பொது மக்கள் வீட்டில்?
கலைஞர்:அவ்வப்போது ஒருமணி நேரமோ ரெண்டுமணி நேரமோ.......

கேள்வி: மின்வெட்டு இருக்கும் என்கிறீர்களா?
கலைஞர்: இருங்க .... அவசரப்படாதீங்க......நான் சொல்ல வந்ததை முழுசா கேளுங்க.... ஒருமணி நேரமோ, ரெண்டு மணிநேரமோ மட்டும்தான் மின்சாரம் தலையை காட்டிவிட்டு போகும்னு சொல்ல வந்தேன்.

கேள்வி: மக்கள் கோபித்துக்கொள்ள மாட்டார்களா?
கலைஞர்: எப்படி கோபித்துக்கொள்ள முடியும்? எங்களுக்கு கலைஞர் டி.வி-யில் மானாட மயிலாட நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் மட்டும் மின்சாரம் இருந்தால் போதும். மற்ற நேரங்களில் மின்சாரமே தேவை இல்லை. இதனால் எங்களின் மின்சாரக்கட்டணம் கணிசமாக குறைகிறதுன்னு சுமார் ஒரு கோடிப்பேர் கையெழுத்திட்டு மனு ஒன்றை கொடுத்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுதானே இது.

கேள்வி: போகுமிடமெல்லாம் விஜயகாந்த் உங்களை கடுமையாக விமர்சிக்கிறாரே?
கலைஞர்: குடித்துவிட்டு பேசுகிறார் என்று சொல்லி நான் இப்போது வகிக்கும் பதவியின் மரியாதையை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை.

கேள்வி: ராமதாஸ் உங்களை கடுமையாக தாக்குகிறாரே?
கலைஞர்: உங்கள் கூட்டணியில் இருந்திருந்தால் என் மகன் மந்திரியாகி இருக்கலாம்.அந்த அம்மையாரை நம்பிப்போனது தப்புதான்.எப்படியாவது என்னை உங்கள் கூட்டணியில் சேர்த்துக்கங்க. நீங்கள்தான் அன்னை சோனியாவிடம் சொல்லி என்மகனுக்கு மந்திரிப்பதவி வாங்கிதரனும்ன்னு நேற்றுக்கூட ரகசியமாக தொலைபேசியில் பேசினார்.அதுபற்றி உங்களிடம் சொல்வது அரசியல் நாகரீகமில்லை.

கேள்வி:நடிகர் ரித்தீஸ்-க்கு சீட் கொடுத்துள்ளது பற்றி வெளியில் முணுமுணுக்கிறார்களே?
கலைஞர்: கானல் நீர், நாயகன் என்று இரண்டு திரைப்படத்தை இவ்வளவு செலவுசெய்து கலைஞர் டி.வி-க்காகவே எடுத்த வள்ளல் அவர்.ராமநாதபுரத்தில் நிற்க அவரைவிட தகுதியானவர் யார் இருக்கிறார்கள்?



கேள்வி: ரேசன் கடையில் ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் அரிசி தரமானதல்ல என்று கூறப்படுகிறதே?
கலைஞர்: இந்த அரிசியை மக்கள் யாரும் சாப்பிடுவதில்லை. புழுத்துப்போன அரிசி என்றெல்லாம் விமர்சனம் செய்யும் எதிர்கட்சியினருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். மக்கள் சாப்பிடமுடியாத அரிசியை ஏன் வெளிமாநிலங்களுக்கு கடத்தவேண்டும்? ஒரு ரூபாய்க்கு இ ங்கு விற்கப்படும் அரிசியை மற்ற மாநிலங்களுக்கு கடத்தி, மக்களே சாப்பிடவில்லையென்றால் எதற்காக பத்து ரூபாய்க்கும் பதினைந்து ரூபாய்க்கும் விற்கிறார்கள்? அந்த மாநில அரிசியை விட தமிழ்நாட்டில் விநியோகிக்கப்படும் அரிசி தரமானது என்று இப்போது தெரிகிறதல்லவா? கழக ஆட்சியில் விநியோகிக்கப்படும் அரிசி தரமானதாக இருந்து அதை தமிழ்நாட்டில் மட்டுமல்ல...வெளிமாநில மக்களும் சாப்பிட்டு பயனடைந்து இருக்கிறார்கள் என்று உங்களுக்கு பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்.


கேள்வி: இளங்கோவன் போட்டு தாக்கறாரே?
கலைஞர்: என் மகனுக்கு புத்தி பேதலித்து விட்டது என்று அவரோட சொந்த அம்மா சுலோச்சனா சம்பத் ஒரு முறை சொன்னதுபோல நானும் சொல்லி அரசியல் நாகரீகத்தை இழக்க விரும்பவில்லை.

கேள்வி: காங்கிரசுக்கு மந்திரி பதவி கொடுத்து விட்டால் அவர் வாயை மூடி விடலாமே ?
கலைஞர்: நான் இவ்வளவு நாள் என் மனதில் போட்டு மூடிவைத்திருந்த ஒரு ரகசியத்தை இந்தக்கேள்வியின் முக்கியத்துவம் கருதி சொல்கிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே சொக்கத்தங்கம் சோனியாவிடம் தொலைபேசியில் காங்கிரசுக்கு அமைச்சரவையில் இடம் தருகிறேன்னு சொன்னேன். அதுக்கு சோனியா அம்மையார் அமைச்சரைவையில் இடம் தருகிறேன் என்பதற்கு நன்றி. ஆனால் எந்த கோஷ்டி ஆளுகளுக்கு மந்திரி பதவி கொடுப்பது. ஒரு கோஷ்டிக்கு கொடுத்தால் இன்னொரு கோஷ்டியினர் அடித்துக்கொள்வார்கள். நீங்கள் அப்படி கொடுப்பதாக இருந்தால் ஐம்பது பேருக்கு அமைச்சர் பதவி தரவேண்டியிருக்கும்" என்றார். உடனே நான் அதிர்ச்சியாகி உங்கள் கட்சி எம்.எல். எ-க்கள் அவ்வளவு பேர் இல்லையேன்னு கேட்டேன். அதுக்கு சொக்கத்தங்கம் சோனியா "நிஜம்தான், அவ்வளவு பேர் இல்லைதான். ஆனால் அதைவிட அதிகமாக தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு கோஷ்டி இருக்கு. அதனால் மந்திரி சபையில் இடம் வேண்டாம்" என்று சொல்லிட்டார். இதற்க்கு நண்பர் தங்க பாலுவும் சாட்சி.




கேள்வி: ஜெயலலிதா போகுமிடமெல்லாம் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறதே?

கலைஞர்: இருக்கலாம்...நாடாளுமன்றத்தேர்தல் முடிந்து இந்த ஒன்றரை வருடத்தில் முதன்முதலாக மக்களை சந்திக்க வருவதால்..ஜெயலலிதா எப்படி இருக்கார் என்று பார்க்க வந்த கூட்டம்தானே தவிர, அவர் பேச்சை கேக்க வந்த கூட்டமல்ல...


கேள்வி: உங்கள் கட்சியில் காலங்காலமாக இருப்பவர்களை விட்டுவிட்டு மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவருக்கே பதவி வழங்குகிறீர்களே.?

கலைஞர்: அதான் நீங்களே சொல்லிட்டீங்களே...எங்கள் கட்சியில் காலம்காலமாக இருப்பவர்கள் என்று. அவர்கள் எங்கே போகப்போகிறார்கள்? பதவி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் எங்களுடனே இருப்பார்கள். ஆனால், மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு பதவி கொடுத்தால்தான் இன்னும் நிறைய பேர் எங்க கட்சிக்கு வருவாங்க. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு என்று அண்ணா சொல்லியிருக்காரே...நாங்கள் அண்ணா வழி வந்தவர்கள்.


கேள்வி: அப்படியானால் ம.தி.மு.க-விலிருந்து வந்தவர்களுக்கு ஏன் கொடுக்கவில்லை?

கலைஞர்: நாங்கள் ம.தி.மு.க-வை ஒரு கட்சியாக நினைக்கவில்லை. ம.தி.மு.க-என்றால் மறுபடியும் தி.மு.க. என்று தானே அர்த்தம்.(சிரிப்பு)...


கேள்வி:ம.தி.மு.க-வின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது பற்றி?...

கலைஞர்: தம்பி வைகோ அண்ணா தி.மு.க-வின் கிளை செயலாளர் போல செயல்படுவதால் அவருக்கு எதற்கு தனியாக ஒரு கட்சியென்று தேர்தல் கமிஷன் நினைத்திருக்கலாம்(மறுபடியும் சிரிப்பு)

கேள்வி: கடந்த ஒருமாதமாக எந்த ஒரு பாராட்டு விழாவிலும் கலந்து கொள்ளவில்லையே?

கலைஞர்: அதை ஏன் கேட்கறீங்க...ஒரு மாசமா பாராட்டு விழாவே இல்லையென்பதால், அதைக்கூட பாராட்டி, பாராட்டுவிழா இல்லாத பாசத்தலைவன்னு ஒரு பாராட்டு விழா எடுக்கணும்ன்னு தம்பி ஜெகத் ரட்சகன் ஒரே அடம். நான்தான் மறுத்துட்டேன்.


கேள்வி: பம்பு செட் கொடுக்கறதா சொல்லியிருக்கீங்களே?

கலைஞர்:
ஆமாம். ஆளுக்கொரு டிராக்டர் கொடுக்கலாம்ன்னு தான் முதலில் நினைத்தேன், ஆனால், இப்ப நிதிநிலைமை சரியில்லாததால பாம்பு செட்டோட நிறுத்திக்கிட்டேன். அதில் கூட பாருங்க, பாம்பு செட் கொடுத்த பர்மனென்ட் தலைவன்னு ஒரு பாராட்டு விழா அடுத்தவாரம்
ஜெகத் ரட்சகன் தலைமையில துரைமுருகன் முன்னிலையில நடக்குது . தம்பி ரஜினி, கமல், வாலி, வைரமுத்து எல்லாம் கலந்துக்கறாங்க.

கேள்வி: இலங்கை பிரச்சினை பற்றி?

கலைஞர்: அதுபற்றி நேற்றுக்கூட சொக்கத்தங்கம் சோனியாவுக்கும், பிரதமர் ராகுல்காந்தி மன்னிக்கவும் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கும் ஒரு தந்தி அடிச்சாச்சே..உடன்பிறப்புகளையும் தந்தி அடிக்க சொல்லி முரசொலியில் ஒரு கடிதம் எழுதிட்டேனே,நீங்கள் படிக்கலையா?



கேள்வி: இலங்கை பிரச்சினைக்காக தந்தி அடிக்க சொல்லும் நீங்கள் மந்திரி பதவிக்காக டெல்லி செல்கிறீர்களே?
கலைஞர்: அப்படியல்ல..இப்போது ஆளாளுக்கு செல்போன் வச்சுக்கு எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்ன்னு அடிச்சுடறாங்க... அதனால தந்தி அடிப்பது குறைந்து போயி தபால் துறை நட்டத்தில் இயங்குதுன்னு அந்த துறைக்கு அமைச்சரா இருக்க தம்பி ராஜா கேட்டுக்கிட்டதால நான் தந்தி அடிக்க சொன்னேன். அன்னைக்கு மட்டும் தபால்துறைக்கு எவ்வளவு வருமானம்ன்னு கேட்டுப்பாருங்க.

கேள்வி: அப்படியென்றால் மந்திரிப்பதவி கேட்டும் ஒரு தந்தி அடிக்க வேண்டியதுதானே?
கலைஞர்: அடிக்கலாம்தான். ஆனால் நான் ஒருவன் தந்தி அடிப்பதாலென்ன பெரிய வருமானம் வந்துடப்போகுது? அதான் விமானத்துக்கு வருமானம் கொடுப்பமேன்னு கிளம்பிட்டேன். மக்களுக்கு நல்லது நடக்கனும்ன்னா உடல் நிலையைக்கூட கணக்கில் வைத்துக்கொள்ளாமல் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போகலாம்.

கேள்வி: யாரோட மக்களுக்கு? அழகிரி, கனிமொழி போன்ற உங்களின் மக்களுக்கா?
கலைஞர்: யார் நீ? ஜெயா டி.வி. நிருபரா? முதல்ல வெளியபோய்யா. சரி பேட்டியை முடித்துக்கொள்வோம். . எனக்கு பொன்னர் சங்கர் படத்துக்கு கதை வசனம் எழுதும் வேலை இருக்கு.