வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

தமிழகச் சட்ட ஒழுங்கைக் கெடுக்கச் சிங்களம் முயற்சி

தமிழக சட்ட ஒழுங்கை கெடுக்க சிங்களம் முயற்சி

சிங்களம் அடிபட்ட “பாம்பை” போல இப்போது உணர்கிறது. நாலாவது வன்னிப் போர் நடக்கும் போதுகூட, தமிழ்நாட்டில் மற்றும் இந்தியாவில் தங்களுக்கு “எதிரான” குரல் எழுப்பப்பட வில்லை என்று “இறுமாந்திருந்த” வேளையில் எல்லாமே இப்போது தங்களுக்கு எதிராக நடப்பதாக “சிங்களம்” கணக்கு போடுகிறார்கள். ” புலிகளை பயங்கரவாதிகள்” என்று முத்திரை குத்தியபோது, உலகம் ஒத்துழைத்தது. “அப்பாவி மக்களும் புலிகளுடன் சேர்ந்த போராளிகள்தான்” என்று சிங்களம் முத்திரை குத்திய போதும், உலகம் கண்டுகொள்ளவில்லை. “வெள்ளைக் கொடியுடன் சரனைந்த புலிகளை” படுகொலை செய்தபோதும், உலகம் “பெரிதாக கண்டுகொள்ளவில்லை”. இப்போது என்ன வந்துவிட்டது? “தமிழக சட்டமன்றமும், இந்திய நாடாளுமன்றமும்” சிங்களத்திற்கு எதிராக முனு, முணுக்கின்றன? இதுதான் சிங்களம் இன்று கேட்கும் கேள்வி.
உண்மைதான். அப்பாவி ஈழத் தமிழர் கொல்லப்பட்டபோதும், பகிரங்க இன அழிப்பு நடந்தபோத்யும், புலிகளை எதிர்த்து “ரசாயனக் குண்டுகளையும், கொத்துக் குண்டுகளையும்” பயோன்படுத்திய போதும, தமிழக மக்களை அடக்கி ஆள ஒரு கருணாநிதி முதல்வராக இருந்தார். அந்த சூழலின் “மௌனத்தை” உடைக்க “முத்துக் குமார்” என்ற தம்பி “உயிராயுதமாக” தன்னைத்தானே ஆக்கிக்கொண்டு, பெரும் “தீப்பொறியை” கிளப்பி விட முயன்றான். அதயும் அடக்க “ஜாபர் சேட்” போன்றோர் முயன்று வெற்றி பெற்றனர். இப்போது “பீனிக்ஸ் பறவை” போல மீண்டும் தமிழன்” எழுகிறான்.இந்த முறை “ஜெயலலிதா” முகம் “தமிழ் முகமாக” மாறி, “தமிழர் எழுச்சிக்கு” பயன்படுகிறது. இது அடுக்குமா? என்று சிங்களம் அலறுகிறது. “எத்தனையோ தேசிய இனப் பிரச்சனைகளை” எதிர்கொண்டு சமாளித்தவர்கள் நாங்கள். எங்களிடமே இந்த தமிழினம் விளையாடுகிறதா?”" என்று மத்திய உளவு நிறுவனமான “ரா’ வேலை செய்கிறது. திட்டம் தீட்டுகிறது. சூழ்ச்சி செய்கிறது.
அதன் விளைவே “திடீரென சிங்கள எம்.பி.களை ” நாடாளுமனரதிற்கு அழைப்பதும், அவர்களுக்கு “எதிர்ப்பு” கொடுத்தால், அதற்காக ” வந்தவர்களிடம் “மன்னிப்பு” கேட்பதும் , அதன்மூலம் “இந்தியாவின் மானத்தை கப்பலேட்டிரிவிடுவதும்” வட இந்திய நாடாளுமன்ற முறைகளாக இருக்கலாம். அதுவும் “திட்டமிட்டு” நடத்தப்பட்டதாக தெரிகிறது. “டில்லிக்கு சொல்லாமல் தமிழக சட்டப்பேரவை போர்க்குற்றவாளி, மற்றும் பொருளாதார தடை” என்று “தீர்மானம்” போட்டதை , மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும், வெளிவிவகாரத் துறையும், “ரசிக்கவில்லை”. அந்த “தீர்மானங்களை” வைத்து ஹிலாறி கிளிண்டன், முதல்வர் ஜெயலலிதாவை சந்த்தித்தையும், அவர்கள் வரவேற்கவில்லை. இலங்கை எம்.பி.கள் “நாடாளுமன்றம் வந்தபோது, அதிமுக உறப்பினர்கள் எதிர்ப்பு முழக்கம் இட்டதையும்” டில்லி வெறுப்பாகவே பார்க்கத் தொடங்கி உள்ளது. அவற்றிற்கு எல்லாம் பதில் கொடுக்க டில்லி நினைக்கிறது.
தமிழ்நாட்டில் “ஈழப்ப் பிரச்சனையை”‘ ஒட்டி சட்ட-ஒழுங்கை குலைத்தால், தானாகவே அதிமுக அரசு தனது ” சட்ட-ஒழுங்கை ‘பாதுகாக்க ” தமிழின உணர்வாளர்கள்” மீது “நடவடிக்கை” எடுப்பார்கள் என்று டில்லிக்கு கொழும்பு ஆலோசனை கூறியுள்ளது. இது “பழைய” அதிகாரிகள் சிலர் மூலமும் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அதை ஒட்டி, கொழும்பு தனது உளவுத் துறையான “என்.ஐ.பி.” மூலம் “ஐம்பது சிங்கள இளைஞர்களை” இந்தியா வந்திருப்பவர்களை சென்னைக்கு அனுப்பி, அவர்களை “பகிரங்க ஊர்வலமாக” வெளியே தெரியும்படி “பவனி வர” ஏற்பாடு செய்தது. புதன்கிழமை காலை அந்த திட்டம் செயலுக்கு வந்தது. சென்றல் ரயில் நிலையத்திலிருந்து “ஐம்பது சிங்கள இளைஞர்கள் சிங்கள எழுத்துக்கள் கொண்ட பனியன்களை மாட்டிக்கொண்டு” ஊர்வலம் போல நடந்துவந்தனர். அவர்களது கைகளில் “சிறிய சிங்களக் கொடிகளை” பிடித்துக் கொண்டு வந்தனர். அத்தகைய ஊர்வலத்திற்கு காவல்துறை இங்குள்ள “தமிழர்களுக்கே கூட” அனுமதி கொடுப்பதில்லை. அப்படி “காவலர் அனுமதி இல்லாமல்” அந்த சிங்கள படையெடுப்பு சென்னை நகரில் பகிரங்கமாக நடந்தது.
அந்த சிங்கள ஊர்வலம் நேராக “புரசவாக்கத்தை: அடைந்து “ஏ.ஜே.விடுதி” என்ற வட இந்தியர் விடுதிக்கு போய் சேர்ந்தது. சிங்களமும் டில்லியும் சேர்ந்து போட்ட “சதி” நடைபெறாமல், அந்த “சிங்களப் பொடியன்களுக்கு” உள்ளேயே “ஜே.வி.பி. என்றும், ராஜபக்சே ஆள்” என்றும் சண்டை அவ்ந்துவிட்டது. அந்த சண்டை “புரசைவாக்கம் கடைவீதியை” அசிங்கப்ப்டுத்தியது. அதுகண்ட “தமிழ் இளைஞர்கள்” எங்கள் ஊருக்கு வந்து என் சட்ட-ஒழுங்கை குலைகிறீர்கள் என்று கேள்வி கேட்டார்கள். கேள்வி கேட்டது குற்றமாகிப் போனதால், செய்தி அறிந்த “கொழும்பு” தலையிட்டு, “டில்லியை” உசுப்பி விட்டு, அதமூலம் “தமிழ் இளைஞர்களை” கைது செய்ய வைத்திருகிறார்கள். இது “அந்நிய சதியால்” தமிழக சட்ட’-ஒழுங்கை கெடுக்க” எடுக்க[ப்பட்ட முயற்சியே. வம்பு செய்த “சிங்கள இளைஞர்கள்” ஏன் வந்தார்கள்?, என்று வந்தார்கள்?, எதற்கு வந்தார்கள்?, என “காவல்துறை” புலனாய்வு செய்து, “தூண்டிவிட்ட” அந்நிய உளவுப்படை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-TSS MANI

இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவை நாம் நம்பலாமா?– ஈழவேந்தன்

இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவை நாம் நம்பலாமா? நம்பக்கூடாது என்பது தான் நாம் அளிக்கும் பதில்! – ஈழவேந்தன்

08 . 12 . 2004ல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் அவரோடு உரையாடியது மேதகு தலைவர். வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு 27 .12 . 2004 ல் அரசியற் துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் ஊடாக தலைவருக்கு அனுப்பிய கடிதம் இதோ தரப்படுகிறது. நிரூபமா ராவின் வெறிப் போக்குக்கு இது சான்று கூறும்.
தமிழ்த் தேசியத்தின் பார்வையில் ஈழவேந்தனின் பதிவுகள் என்ற என் நூலில் பக்கங்கள் 37 – 41
மேதகு தலைவர் வே. பிரபாகரன் அவர்கள்,
தமிழீழம்
இந்தியத் தூதுவர் திருமதி. நிரூபமா ராவ், துணைத் தூதர் திரு. மோகன் குமார் ஆகியோருடன் 08 . 12 . 2004 புதன்கிழமை அன்று முற்பகல் 10 .45 – 11 . 45 வரை நடைபெற்ற உரையாடலின் சுருக்கம்.
(தூதுவரோடு நடைபெற்ற ஆங்கில உரையாடலின் தமிழாக்கம்)
மேற்குறித்த இருவருடன் நான் நடாத்திய உரையாடலின் போது நாம் உணர்ந்த கசப்பான உண்மைகள். இந்தியா எங்களோடு இல்லை என்பது மட்டுமல்ல, எமக்கு மாறாகவும் செயற்படுகிறது என்பது வெளிப்படையாகத் தெரிய வருகிறது. இதை உங்களுக்குத் தெரிய வேண்டும் என்ற ஒரே நோக்குடன் இக் குறிப்புகள் தரப்படுகின்றன.
1 . இந்திய மாயையில் இருந்தும், ஆரிய மாயையில் இருந்தும் ஈழத் தமிழர்கள் விடுபட்டால் தான் அவர்களுக்கு வாழ்வு உண்டு என்று 2003 ஒக்டோபர் 22 ல் எனக்கு நீங்கள் கூறிய கூற்று முழுமையாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
2 . இந்தியாவில் அரசுகள் மாறினாலும் அடிப்படைச் சிந்தனை ஒன்று என்பதை நாம் உணர்ந்துள்ளோம். இந்தியாவிடம் ஈழத் தமிழர் மீது எத்தகைய பாசப் பிடிப்பும் இல்லை என்பது தெரிய வருகிறது. அதேவேளை ஆசியாக் கண்டத்தில் அது ஒரு வல்லரசாகவும் எமது பக்கத்து நாடாகவும் இருப்பதால் நாம் அதை பகைக்க முடியாது என்பது உண்மை. இதை ஒட்டி உங்கள் வழிகாட்டலை நாம் எதிர்பார்த்து நிற்கிறோம். உங்களுடனும் சு.ப. தமிழ்ச்செல்வனுடனும் வாய்ப்புள்ள போது நேராக உரையாட விரும்புகிறேன்.
3 . தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 பேரும், முதலில் தமிழகத்திற்கும், பின்பு டெல்கிக்கும் செல்வதற்காக முடிவெடுத்த நிலையில் என் (விசா) இசைவுச் சீட்டினைப் பெறுவதற்காகவே இந்தியத் தூதரகத்திடம் நியமனம் பெற்ற நிலையில் நான் அங்கு சென்றேன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
4 . இந்தியா எந்நிலையிலும் எங்களுடைய தமிழீழ கோரிக்கையை ஏற்காது என தூதுவரும் துணைத் தூதுவரும் உறுதிபடக் கூறினார்கள். “ஈழத்துக்கு ஒப்புதல் வழங்குவதில் உங்களுக்கு ஏதும் சிக்கல் இருப்பின் பொருள் பொதிந்த இணைப்பாட்சி உருவாவதற்காவது துணை நில்லுங்கள்” எனக் கேட்டேன். அவர்கள் புன்முறுவல் பூத்தார்கள், ஆனால் பதில் சொல்லவில்லை.
5 . மேலும் இறங்கி வந்த நான், ” நாம் இன்று கேட்கும் இடைக்கால அரசை அமைக்க உங்களது தார்மீக ஆதரவை வழங்குங்கள்” என்று கேட்ட போது , உங்கள் இடைக்கால அரசின் எடுத்துரைப்புகளிற் கூறப்பட்டுள்ள அதிகாரங்கள் ஏறக்குறைய தனி நாட்டுக்குரிய அதிகாரங்களாக விளங்குவதால் அதை நாம் ஏற்க முடியாது என கூறினார்கள்.
6 . “எம் மக்கள் படும் துன்பங்கள் எல்லை மீறுபவைகளாக இருக்கின்றன. உடனடியாக இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளவே நாம் இதனை வலியுறுத்தி நிற்கிறோம் ” என்று கூறிய போது ” ஏன் இடைக்கால அரசை மட்டும் கேட்கிறீர்கள், முழுத் தீர்வையும் காண முயலுங்கள்” என்றார்கள். “நிலப் பாதுகாப்பு, உள்ளகப் பாதுகாப்பு (internal security ) போன்றவற்றில் சிங்கள அரசு காட்டும் நேர்மையைப் பொறுத்து எமது முழுமையான அரசியற் தீர்வு அமையும் என்று நான் குறிப்பிட்டேன். அதற்கு அவர்கள் பதில் தரவில்லை.
7 . “குடியரசுத் தலைவர் சந்திரிகா நல்நோக்கத்தோடு செயற்படுகின்றார். அவரை நம்புங்கள்” என்று அவர் கூறிய போது முன்னுக்குப் பின் முரணான பல செய்திகளை சந்திரிக்கா தந்துகொண்டு இருக்கிறார். இடைக்கால அரசை ஒட்டி கடந்த யூன் 10ம் திகதி அவர் எமக்கு அளித்த வாக்குறுதியை சிறிதும் நிறைவேற்ற இல்லை. அவரோடு இணைந்திருக்கும் ஜே.வி. பி. யின் வெறியாட்டத்திற்கு அஞ்சி அடங்கியே அவரது அரசியற் சிந்தனை இருக்கிறது. ஆகவே நாம் அவரை நம்ப முடியாது என்று கூறினேன். இதற்கும் பதில் கூறாது புன்னகை பூத்தார்கள்.
8 . இந்திரா காந்தியை 1983 ஆகஸ்ட் 19ல் நான் கண்டு உரையாடியபோது, அவர் எமக்கு ஆதரவாக தெரிவித்த பல கருத்துக்களை, அவர்களுக்கு நான் நினைவுபடுத்தினேன். இலங்கையில் நடைபெறுவது இனப்படுகொலை ( genocide ) என்பதை இந்திரா காந்தி ஏற்று நாடாளுமன்றத்தில் இச் சொல்லை கையாண்டதையும் நான் நினைவு கூர்ந்தேன். அரச ஆதரவோடு நடைபெறுகின்ற சிங்கள குடியேற்றம் எவ்வளவு தூரம் எம்மை பாதிக்கிறது என்பதை, அவர் முழுமையாக ஏற்றுக் கொண்டார் என்பதையும் நான் வலியுறுத்திக் கூறினேன். ஜே. ஆர். இந்தியாவினது மட்டுமல்ல இந்திராவினதும் எதிரி என்று அவர் கூறியதையும் நான் நினைவுபடுத்தினேன்.
9 . இந்திரா காந்தியுடன் நான் நடாத்திய உரையாடலை ஒரு சிறு வெளியீடாக வெளியிட்டிருந்தேன். அதனை அவர்களிடம் ஒப்படைத்தேன்.
10 . மன்மோகன் சிங் ஆட்சிக்கு வந்த போது நான் அவருக்கு அனுப்பிய கடிதத்தையும் அவர் எனக்கு அனுப்பிய பதிலையும் கொண்ட படிகளையும் நான் அவர்களிடம் கொடுத்தேன். இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங், இலங்கைக்கு இணைப்பாட்சியே இனச் சிக்கலை தீர்க்கும் என்று கூறியதை இக் கடிதத்தில் நான் குறிப்பிட்டதாகவும் எடுத்துரைத்தேன்.
ஈழத் தமிழ் உள்ளங்களை புண்படுத்தும் முறையில் இரு தூதுவர்களும் கூறியவை இதோ:
11 . இலங்கை இந்திய ஒப்பந்தங்களை நாம் எதிர்த்தது தவறு என்று சிறு கோபத்துடன் கூறினார்கள். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் முன்னுரையில் இலங்கையின் வட கிழக்கு மாகாணம் வரலாற்றின் அடிப்படையில் தமிழர் தாயகம் என்பதை ஏற்றுள்ளது நீங்கலாக வேறு எதுவும் ஈழத் தமிழ் மக்களுக்கு வாழ்வு கொடுக்கும் வகையில் அமையவில்லை என்று குறிப்பிட்டேன். ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதே மதுறு ஓயா, மணலாறு பகுதிகளில் அரச ஆதரவோடு சிங்களக் குடியேற்றம் நடைபெற்றதையும் நான் குறிப்பிட்டேன்.
12 . இவ் ஒப்பந்தத்தை விடுதலைப்புலிகளோடு இலங்கை அரசு நிறைவேற்றியிருக்க வேண்டும். தமிழருக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் சிங்களவர்கள். பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள். இதில் இந்தியா நடுவராக மட்டும் தான் பணி புரிந்திருக்க முடியும். மாறாக தமிழரையும், தமிழ் உணர்வையும் புறக்கணித்த இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்வதை நாம் ஏற்பது கடினம் என்று குறிப்பிட்டேன்.
13 . திலீபனின் தியாகத்தை இந்திய அரசு மதிக்க மறுத்ததை குறிப்பிட்ட நான் காந்தீய வழியில் திலீபன் செய்த தியாகத்தை இந்தியா மதித்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டேன். ஆனால் எம் மனத்தை மிக நோகச் செய்கின்ற முறையிலும் எமக்கு ஆத்திரத்தை வருவிக்கின்ற முறையிலும் திலீபன் தொடர்ந்து உண்ணா நோன்பு இருக்கமுடியாத நிலையில் மணிக்கணக்கில் குடிப்பதற்கு நீர் கேட்டும் விடுதலைப்புலிகள் ஈவிரக்கம் அற்ற முறையில் செயற்பட்டனர் என்று இந்தியத் தூதுவர்கள் குறிப்பிட்டனர்.
இந் நிகழ்ச்சிக்கு மூவர் சாட்சி என்று அவர் குறிப்பிட்ட போது நீங்கள் மூவரை உங்கள் கூற்றுக்கு துணைக்கு அழைக்கின்றீர்கள். ஆனால் ஆயிரக்கணக்கில் மக்கள் திலீபனின் உள்ளம் உருக்கும் நிகழ்ச்சியை கண்டு கண்ணீர் விட்டதை நான் குறிப்பிட்டபோது அதை அவர்கள் ஏற்க மறுத்தனர்.
14 . படைத் தளபதிகள் குமரப்பாவும் புலேந்திரன் உட்பட ஏனைய பத்து வீரர்களும் சயனைட் அருந்தி சாவதற்கும் புலிகள் தான் காரணம் என்று ஆணவத்தோடு கூறினார்கள்.
15 . புலிகளின் வன்முறையை தாம் ஏற்க முடியாது என்றும் ஒரு காலத்தில் தமது தோழர்களாக இருந்த ஏனைய விடுதலைப் போராளிகளை விடுதலைப் புலிகள் சாகடித்ததையும் கூறினார்கள் .
16 . தூதுவர்கள் தெரிவித்த கருத்தில் இருந்து ஈ. பி. டி. பி, வரதராஜப்பெருமாள் குழு, கருணா குழு போன்றோர் இந்தியத் தூதரகத்தில் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றனர் என்பதை இந்தியத் தூதுவர்களின் பேச்சு மறைமுகமாக உணர்த்தி நிற்கிறது.
17 . கடந்த பத்து ஆண்டுகளாக தமிழர்களுக்கு பெரும் பாதிப்பு, அழிவு ஏற்படவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டதை மறுத்து 1995ல் ரத்வத்தை தலைமையில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதன் பேரில் ஏற்பட்ட அழிவை நான் குறிப்பிட்டேன்.
இதனையடுத்து 1999 – 2000 ம் ஆண்டுகளில் யாழ் குடா நாட்டு நகரங்கள் சாம்பல் மேடாக மாறும் முறையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவத் தாக்குதல்களை நான் குறிப்பிட்டேன். இப்பொழுது யாழ்ப்பாணத்தில் ஏழு இலட்சம் தமிழர்கள் வெளியேறிய நிலையில் ஐந்து லட்சம் தமிழ் மக்களே வாழ்கிறார்கள்.
இங்கு யாழ்ப்பாணத்தில் குடிகொண்டிருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கையோ 50 ,000 ஆகும். இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பூமியாகவே யாழ்ப்பாணம் திகழ்கிறது. உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தமிழ் மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல முடியாத நிலையிலும் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க முடியாத நிலையிலும் தத்தளிப்பதை நான் குறிப்பிட்டேன்.
18 . யாழ்ப்பாணம் நீங்கலாக வன்னி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் மக்களின் ஏக்கம் நிறைந்த வாழ்வை எடுத்துரைத்தேன்.
19 . திருகோணமலை திட்டமிட்டு பறிக்கப்பட்டு தமிழரின் தாயகம் துண்டிக்கப்படுவதையும் புள்ளிவிபரங்களோடு விளக்கினேன். என் கருத்துகளை அவர்கள் செவிமடுத்தார்களே அன்றி எம் துன்பம் நிறைந்த வாழ்வை ஒட்டி அவர்களுக்கு மருந்தளவு கூட அக்கறை இல்லை என்று அவர்களது உரையாடலில் இருந்து தெரிய வந்தது.
மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. ஏதோ ஈழத் தமிழருக்கு நன்மை விளைவிக்கும் என்று நாம் எதிர்பார்த்தது உண்மை. ஆனால் ஆட்சிகள் மாறினாலும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை டெல்கியின் தென் பிரிவே நிர்ணயிக்கின்றது என்பதை இந்த உரையாடலில் இருந்து அறிந்து கொண்டேன்.
ஈழத் தமிழர் சிக்கலில் இந்தியாவின் அணுகுமுறை எத்தகையது என்பது நீங்கள் நன்கறிந்த விடயம். எனினும் என் பட்டுணர்வை, அனுபவத்தை சொல்லி வைப்பது பயனளிக்கும் என்பதால் இக் கருத்துகளை சொல்லி வைக்கின்றேன்.
மா. க. ஈழவேந்தன்
நாடாளுமன்ற உறுப்பினர்
பிற்குறிப்பு:  இந்தியச் சிந்தனை பற்றி 27 . 12 .  2004 ல் தலைவருக்கு எழுதிய கடிதம் மேலே தரப்பட்டுள்ளது.  இப்பொழுது  2011 வது ஆண்டாகும்.  ஏழு ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் ஈழத் தமிழரை ஒட்டி இந்தியாவின் சிந்தனையில் எந்தவித நல்மாற்றமும்  இல்லை.  மாறாக 20  நாடுகளின் துணையோடு 2009  ல்  எமக்கு பேரழிவை ஏற்படுத்திய இந்தியாவின் வெறிப்போக்கு தொடர்கிறது.
2004  ல் நான் நிரூபமா ராவை சந்தித்த பொழுது அவர் இந்தியாவின் தூதுவர். இப்பொழுது அவர் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர். அவரின் பதவி உயர்வு ஈழத் தமிழர்களுக்கு மேலும் பாதகங்களை ஏற்படுத்தியுள்ளது. இப் பதவியில் இருந்து ஓய்வு பெறும் அவர்  இலங்கைக்குச் சென்று மகிந்தாவிற்கு பிரியாவிடை கூறி திரும்பி வந்துள்ளார். அத்தோடு ஆளும் சிங்களக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விட்டு வந்துள்ளார்.  டெல்கியில் அவர்களுக்கு  வரவேற்புரை வழங்கப்பட்டுள்ளது.  ஆனால் இவர்களுக்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொலையாளிகள் என்று கூறி காட்டிய எதிர்ப்பு எமக்கு தென்பு தருகின்ற நிகழ்ச்சியாகும். 
ஆனால் ஆபத்து தொடர்கிறது.  பதவி ஓய்வு பெரும் நிரூபமா ராவ் அமெரிக்காவிற்கு உயர் பதவி ஏற்று செல்கிறார்.  அண்மையில் அமெரிக்காவின் சிந்தனை எம் சார்பில் அமைந்துள்ளது. நாம் விழிப்போடு இல்லாவிடின் அமெரிக்காவின் சிந்தனையையும் நிரூபமா ராவ் கெடுக்கக் கூடும். என்றுமே விழிப்போடு இருப்பது தான் நாம் விடுதலைக்கு கொடுக்கின்ற விலை என்பதை உணர்ந்து இந்தியாவின் போக்கை ஒட்டி நாம் விழிப்போடு இருப்போமாக.
வைகோ,  மன்மோகன் சிங்கை சந்தித்த பின்பு   கூறியுள்ள கருத்துக்கள் எமது ஆழ்ந்த சிந்தனைக்குரியவை.  இலங்கை மீது பொருளாதாரத் தடையை விதிக்கும் படி மன்மோகன் சிங்கிற்கு வைகோ விடுத்த வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. காரணம் இந்தியா இலங்கை மீது பொருளாதார தடை விதித்தால் சீனாவின் கட்டுப்பாட்டிற்குள்  இலங்கை வந்துவிடும் என்று அச்சம் தெரிவித்தார் . ஆனால் ஸ்ரீலங்கா ஏற்கனவே சீனாவின் கட்டுப்பாட்டில் இயங்குவது உலகம் அறிந்த செய்தி. தன் எதிரியான தமிழனை அழிக்க இந்தியா தனது மூக்கை அறுக்க முடிவு செய்துள்ளது. எனினும் தமிழகத்தின் விழிப்புணர்ச்சி டெல்கியை  மீளச் சிந்திக்க வைக்கும் என்பது எமது  நம்பிக்கை. 
நல்லதை எதிர்பார்ப்போம். ஆனால் எதற்கும் ஆயத்தமாக இருப்போம்.   ஏதோ என் உள்ளொளி சொல்கிறது ஐ. நா. மன்றத்தில் தென் சூடானை அடுத்து 194வது நாடாக தமிழீழம் மலரப்போவது உறுதி. உலகில் எந்த சக்தியும் இதனை தடுக்க முடியாது. நம்புங்கள் நம்புங்கள் நாளை தமிழீழம் மலரும். 
மா. க. ஈழவேந்தன்


Short URL: http://meenakam.com/?p=32428
Share/Bookmark

S.M.krishna acts about eezham in parliament


பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை முதன்மையானதல்ல! ஏனெனில் காரணமே நாங்கள்தானே! பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொடூரமாகக் கொன்று விட்டு எஞ்சியவர்களுக்கு உதவுவது போல்நடித்தால் போதும் என்ற கொள்கையை உருவாக்கி  வருகிறோம்!  எனவேதான் அறிக்கையை வாசிக்காமல் விட்டுவிட்டேன்! அவைத்தலைவர்  மீராகுமாரியும் எங்கள்பக்கம்தான். சிரித்த முகச் சிங்காரி சிங்களர்களுக்காகச் சினந்ததில் இருந்தே புரிந்து கொண்டிருக் கவேண்டாவா? என்றும் கிருட்டிணா தெரிவித்ததாக நம்பகமானச் செய்திவந்துள்ளது. ஒளிபரப்பபை மறுக்கமுடியாமல் மழுப்பும் வேடிக்கை! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!    மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

 இலங்கை தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு அவசியம்

புதுடில்லி: "இலங்கையில் போரின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து, " சேனல் 4' ஒளிபரப்பிய காட்சிகள் குறித்து தெரியும். அது இப்போது முக்கியமல்ல. தற்போது அங்கிருக்கும் தமிழர்களுக்குத் தேவையான புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதே முக்கியம். தமிழர்கள் பிரச்னைக்கு, அரசியல் தீர்வு தான் மிகச்சிறந்த தீர்வு' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. பார்லிமென்டில் இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து, வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நேற்று ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். நேற்று முன்தினம் பாகிஸ்தான் பிரச்னை குறித்து, அறிக்கை தாக்கல் செய்த போது, அதை முழுவதையும் படித்தார். ஆனால், நேற்று இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்த அறிக்கையை, சபையில் முழுவதுமாகப் படிக்கவில்லை. மாறாக, வெறும் தாக்கல் மட்டுமே செய்யும்படி சபாநாயகர் உத்தரவிட்டதால், அதை ஏற்று தாக்கல் மட்டுமே செய்தார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை அரசாங்கத்திற்கும், அங்குள்ள தமிழர்களின் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழ் பிரதிநிதிகளுடன் நடத்தும் அந்த பேச்சுவார்த்தை, மிகுந்த ஒரு கட்டமைப்புடன் நடைபெற்று வருகிறது. இது போற்றத்தக்கது. அந்த பேச்சுவார்த்தையை இந்தியா ஆதரிக்கிறது. பேச்சுவார்த்தை நல்லதொரு திசையை நோக்கிப் பயணிக்க வேண்டுமென்பதற்காக, இந்தியா அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக உள்ளது. தமிழர்களின் பிரச்னைக்கு, அரசியல் தீர்வு தான் ஒரே வழி என, இந்தியா கருதுகிறது. அதைநோக்கி அமைந்த நடவடிக்கைகளை, இந்தியா எப்போதும் ஆதரித்தே வந்துள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் கலை, அறிவியல் பண்பாட்டுத் தளங்களில், மிகுந்த தொடர்பும் நட்பும் பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இப்போது இந்த உறவு, நல்ல நிலையை எட்டியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான, தொழில் வர்த்தக உறவுகளும் மேம்பட்டு வருகின்றன.
இலங்கை என்பது, பயங்கரவாதத்திற்காகப் பலியான நாடு என்றுகூட சொல்லலாம். கடந்த 30 ஆண்டுகளாகவே, அங்குள்ளவர்கள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயுதப் போராட்டக்காரர்களுடன் போராடியே வந்த நாடு. போரினால் வீடிழந்து தவிக்கும் தமிழர்களுக்கு, வீடு கட்டித் தருவதற்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்தது. புனரமைப்பு நடவடிக்கைகள் அனைத்தையும், இந்தியா மிகுந்த வேகத்துடன் செய்திட, ஒத்துழைப்பையும் அளித்தது. அதோடு மட்டுமல்லாது, புனரமைப்பு நடவடிக்கைகளுக்காகவே 500 கோடி ரூபாய் வரை, அந்நாட்டு அரசாங்கத்திற்கு இந்தியா வழங்கியது. இலங்கையில் போரின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து, "சேனல் 4' ஒளிபரப்பிய காட்சிகள் குறித்து தெரியும். அது இப்போது முக்கியமல்ல. தற்போது அங்கிருக்கும் தமிழர்களுக்குத் தேவையான, புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதே முக்கியம். தமிழர்கள் பிரச்னைக்கு அரசியல் தீர்வுதான் மிகச்சிறந்த தீர்வு. போரினால் பாதிக்கப்பட்ட, 2 லட்சத்து 90 ஆயிரம் பேர், முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் திரும்பவும், அவரவர் இருப்பிடங்களிலேயே, குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். தற்போதுள்ள நிலவரப்படி, 10 ஆயிரம் பேர் வரை மட்டுமே முகாம்களில் உள்ளனர். அவர்களும் விரைவில் மீள் குடியமர்த்தப்படுவார்கள். போர்க்குற்றங்கள் குறித்து, ஐக்கியநாடுகள் சபையில் இயற்றப்பட்ட தீர்மானம் குறித்து, இந்தியாவுக்கு தெரியும். இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருவது குறைந்துள்ளது. சமீபகாலமாக, எந்தவொரு மீனவர் மீதும் தாக்குதல் நடத்தப்படவில்லை. தாக்குதல் நடத்தினால் , தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அந்நாட்டு அரசாங்கத்திடம், மத்திய அரசு மிகுந்த கண்டிப்புடன் கூறியுள்ளது. தற்போதுள்ள நிலவரப்படி, 104 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் உள்ளனர். இலங்கை அரசாங்கத்திடம், ஒரு இந்திய மீனவர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெட்கக்கேடு! எங்கோ நடைபெறும் தாக்குதல்குறித்துப்பேசி மனிதநேயராக நடிக்கத் தெரிகிறது. தனக்கு அடுத்து உள்ள நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு நடைபெற்ற , நடைபெறும் இனப்படு கொலைகள் குறித்து வாயைத்திறக்க முடியவில்லை! 
வேதனையுடன்   
இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!    மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

பொதுமக்கள் மீது தாக்குதல்: 
சிரியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்

First Published : 05 Aug 2011 02:00:58 AM IST


நியூயார்க், ஆக. 4: பொதுமக்கள் மீது தாக்குல் நடத்திவரும் சிரியா அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்தது.  அந்த சபையில் பேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதருமான ஹர்தீப்சிங் புரி, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  சிரியாவில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு ராணுவத்தை ஏவி விட்டுள்ளது. கிளர்ச்சி நடத்திவரும் பொதுமக்கள் மீது ராணுவம் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. ஹேமா நகரில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ராணுவ டாங்கிகள், பெரிய இயந்திர துப்பாக்கிகள் மற்றும் கடுமையான ஆயுதங்களை சிரியா பயன்படுத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் இதுவரை 120 பேர் இறந்துள்ளனர்.  வியாழக்கிழமை நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் பதவியை சுழற்சி அடிப்படையில் இந்தியா அடைந்துள்ளது. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தலைமை உரையை ஹர்தீப்சிங் புரி வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது: சிரியா நாட்டு அரசாங்கம் மனித உரிமைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். போராட்டம் நடத்திவரும் மக்களின் கோரிக்கைகளை சர்வதேச சட்ட விதிகளுக்கு உட்பட்டு பரிசீலிக்க வேண்டும். பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.  சிரியாவில் நடைபெறும் கிளர்ச்சி, வன்முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அங்கு அமைதி திரும்பி மக்கள் அவர்களது அன்றாட பணிகள் இடையூறின்றி நடைபெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். இதற்கான முயற்சிகளை அந்நாடு எடுக்க வேண்டும். இதன்மூலம் சிரியா ஜனநாயக பாதைக்குத் திரும்ப வழி ஏற்படும் என்றார்.  சிரியாவில் மறுவாழ்வுப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்று கருத்துத் தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபை அதற்காக தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டது.  சிரியாவில் அதிகரித்துவரும் கிளர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். இதையடுத்து இந்த அறிக்கை கவுன்சில் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.

இலங்கைத் தூதர் மீது போர்க்குற்ற நடவடிக்கை: சுவிட்சர்லாந்திடம் வலியுறுத்தல்

இலங்கைத் தூதர் மீது போர்க்குற்ற நடவடிக்கை: சுவிட்சர்லாந்திடம் வலியுறுத்தல்
First Published : 05 Aug 2011 02:01:22 AM IST


ஜெனீவா, ஆக.4: இலங்கை ராணுவ முன்னாள் கமாண்டரும், அந்நாட்டின் ஜெர்மனிக்கான தூதருமான ஜகத் டையûஸ போர்க்குற்றவாளியாக அறிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுவிட்சர்லாந்து அரசிடம் இரு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.  இலங்கையில் நடந்தப் போரில் சுமார் 1 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்தப் போரில் முக்கிய பங்காற்றியவர் அந்நாட்டின் முன்னாள் ராணுவக் காமாண்டர் ஜகத் டையஸ். இவர் இப்போது ஜெர்மனியின் துணைத் தூதராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு சுவிட்சர்லாந்து, வாட்டிகன் நாடுகளுடன் தூதரக உறவை வலுப்படுத்தும் அங்கீகாரமும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் படுகொலையில் ஜகத் டையஸýக்கும் பங்கு உண்டு. அவரைப் போர்க்குற்றவாளியாக அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுவிட்சர்லாந்திடம் அச்சுறுத்தப்பட்ட மக்களின் நல அமைப்பு, டிஆர்ஐஏஎல் என்ற இரு அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன.

இலங்கைச் சிக்கல் குறித்த அறிக்கையைத் தேடிய அமைச்சர்: எதிர்க்கட்சிகள் கண்டனம்

பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் உயிர்களைப் பறித்துத் தொலைத்தவர்களுக்கு அறிக்கையைத் தொலைத்தல் மிகவும் எளிய செயலதானே! காலம் ஒரு நாள் மாறும்! கொலைக்குற்றவாளிகளுக்கும் உடந்தையர்களுக்கும் கடுந்தண்டனை தரும்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!    மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


இலங்கைப் பிரச்னை குறித்த அறிக்கையை தேடிய அமைச்சர்: எதிர்க்கட்சிகள் கண்டனம்
First Published : 05 Aug 2011 03:52:17 AM IST


புது தில்லி, ஆக. 4: மக்களவையில் தாக்கல் செய்ய வேண்டிய இலங்கைப் பிரச்னை தொடர்பான அறிக்கையை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தேடிக் கொண்டிருந்ததால் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.  மக்களவையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் தாக்கல் செய்ய வேண்டிய நிலைக்குழுக்களின் அறிக்கைகளையும், அமைச்சர்கள் தங்களது துறைகள் தொடர்பான அறிக்கைகளையும் தாக்கல் செய்யுமாறு அவைத் தலைவர் மீரா குமார் கேட்டுக் கொண்டார்.அப்போது வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை அழைத்து, இலங்கைப் பிரச்னை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.அப்போது அமைச்சர் அவையில் இல்லை. சிறிது நேரம் கழித்து அவைக்கு வந்த அவர், இலங்கைப் பிரச்னை தொடர்பான அறிக்கையைத் தேட தொடங்கினார். நீண்ட நேரம் அவர் தேடியதால், அவருக்கு உதவும் வகையில் மக்களவைச் செயலரின் உதவியாளர், அமைச்சர் கிருஷ்ணாவுக்கு அருகில் வந்து உதவ முயன்றார்.  இதனிடையே அமைச்சரின் உதவியாளர் அந்த அறிக்கையை அமைச்சருக்கு அனுப்பி வைத்தார். இதனால் ஏற்பட்ட கால தாமதத்துக்கு, எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து குரல் எழுப்பினர்.இந்த அமளிக்கிடையே, அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கைப் பிரச்னை குறித்த அறிக்கையைப் படிக்கத் தொடங்கினார். பின்னர், வெளியுறவுத் துறை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி அமைச்சரை மக்களவைத் தலைவர் கேட்டுக் கொண்டார்.  அதற்கு, தம்பிதுரை தலைமையிலான அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அவர்களை இருக்கையில் அமரும்படி மக்களவைத் தலைவர் கேட்டுக் கொண்டதன்பேரில், அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமைதி காத்தனர்.  ஆனால், திமுக சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் ஆட்சேபக் குரல் எழுப்பினர். இதனால், மக்களவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இலங்கையில் மனித உரிமை மீறல்: மக்களவையில் அமைச்சர் விளக்கம்

பாவம்! இனப்படுகொலைக்குத் தூண்டுதலாக இருந்தவர்கள் எப்படி அது குறித்து அவர்களிடம் பேசியிருக்க முடியும்! இருக்கட்டும்! இருக்கட்டும்! இறைவன் பார்த்துக் கொண்டுள்ளான். வட்டியும் முதலுமாக இரு சாராருக்கும் தண்டனைகள் தருவான். என்றாலும் நாம் வாளாவிருக்கக்கூடாது. இனப்படுகொலை புரிந்த மனிதநேயமற்ற  கொடும்பிறவிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும் வகையில் பரப்புரையைத் தொடர வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!    மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இலங்கையில் மனித உரிமை மீறல்: மக்களவையில் அமைச்சர் விளக்கம்

First Published : 05 Aug 2011 04:00:47 AM IST


புது தில்லி, ஆக. 4: இலங்கையில் போரின்போது மனித உரிமை மீறப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து மக்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம் அளித்தார்.  இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து விசாரித்த ஐ.நா. குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு விட்டதா என்று மக்களவையில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்பி மாணிக்க தாக்குர் கேள்வி எழுப்பி இருந்தார்.  அதற்கு மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பிரிணீத் கௌர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் விவரம்:  இலங்கை அரசின் நம்பகத்தன்மை மீதான ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலரின் வல்லுநர்கள் குழுவின் அறிக்கை 26.4.2011 வெளியிடப்பட்டது.  இலங்கைப் போரின்போது கடைசியாக நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து அறிந்திடும்  வகையில் ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் மூலம் அந்தக் குழு ஏற்படுத்தப்பட்டது. இந்த அறிக்கையின் மீது சில நாடுகள் மூலம் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் கேள்வி எழுப்பியுள்ளன.  தில்லிக்கு கடந்த மே மாதம் வந்த இலங்கை வெளியுறவு அமைச்சரிடமும், கொழும்பில் இந்த ஆண்டு ஜூனில் நடைபெற்ற "டிராய்கா' கூட்டத்தின்போதும் ஐ.நா. குழு அறிக்கையின் மீதான இலங்கை அரசின் கருத்துகளை இந்தியா கேட்டறிந்தது.  இந்தியாவுக்கு இந்த ஆண்டு மே மாதம் இலங்கை வெளியுறவு அமைச்சர் வந்திருந்தபோது, இந்திய வெளியுறவு அமைச்சர் சேர்ந்து கூட்டாக வெளியிடப்பட்ட அறிக்கையில் ""பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மனிதாபிமான குறைகளைத் தீர்க்க வேண்டும்; பாதிக்கப்பட்ட பகுதிகளில் சகஜநிலையைக் கொண்டு வர வேண்டும்; மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான புகாரின் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்; அவசரநிலை சட்டத்தை முன்கூட்டிய வாபஸ் பெறுதல், முகாம்களில் உள்ளவர்கள் அவர்கள் வசிப்பிடங்களுக்குத் திருப்பி அனுப்பப்படுதல் உள்பட, மீள்குடியேற்றம் மற்றும் நம்பகமான மறுசமரசம் ஆகியவற்றை உறுதிப்படுத்த இலங்கை அரசால் விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது'' என்று அமைச்சர் தெரிவித்தார்.

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

இலங்கை இதழ் ஆசிரியர் மீது தாக்குதல்: சீமான் கண்டனம்

இலங்கை பத்திரிகை ஆசிரியர் மீது தாக்குதல்: சீமான் கண்டனம்

First Published : 04 Aug 2011 10:55:03 AM IST


சென்னை, ஆக. 4: இலங்கையில் உதயன் பத்திரிகை செய்தி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழர்களின் நலனுக்காக செயல்பட்டு வரும் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் கடந்த வெள்ளிக் கிழமை அலுவலகத்தில் பணி முடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பிய பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.தற்பொழுது உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் பத்திரிகை சுதந்திரத்தின் குரல் வளை முழுவதுமாக நெரிக்கப்பட்டுள்ளது. இவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. ராஜபட்சவின் ஆட்சியில் தமிழர்களின் உரிமைக்காகவும் அவர்களின் குரலை யார் எதிரொலித்தாலும் எந்த வழியில் எவர் ஒருவர் போராடினாலும் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் உயிருக்கு சிறிதும் பாதுகாப்பு கிடையாது என்பது மற்றுமொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தனக்கு ஏற்பட்ட படுதோல்வி பொறுக்க முடியாமல் ஆளும் தரப்பு இத்தாக்குதல் மூலம் வஞ்சம் தீர்க்கப் பார்க்கிறது.   இதுவரை உண்மைகளை வெளிக்கொண்டு வந்த எத்தனையோ பத்திரிகையாளர்கள் ராஜபட்சவின் ஆட்சியில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை வெறித்தாக்குதலுக்கு இரையாகி உள்ளனர். அவர்களின் உடைமைகள் அழிக்கப்பட்டன. ஆனால் சிங்கள இனவெறி அரசோ உலகின் பார்வையில் இருந்து தப்பிப்பதற்காக விசாரணை என்ற பெயரில் சிலரைக் கைது செய்து நாடகமாடியிருக்கிறது என சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தில் நூறாயிரம் கைம்பெண்கள் - பிரிட்டோ செவ்வி

ஈழத்தில் ஒரு லட்சம் விதவைகள். போர் நடந்த இடத்தை பார்வையிட்டு திரும்பிய பிரிட்டோ பேட்டி
 
ஈழத்தில் போர் நடந்து இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டது. முகாம்களில் இன்னமும் அடைபட்டுக் கிடக்கும் மக்கள் ஒருபுறம், முகாமில் இருந்து வெளியேறியும்  பிழைக்க வழியற்று துன்புறும் மக்கள் மறுபுறம் என அவலத்தில் நகர்கிறது ஈழத்தின் பொழுதுகள். வீட்டின் ஆண்களை போர் தின்றுவிட, விதவையான பெண்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்தைத் தாண்டுவதுதான் இதில் ஜீரணிக்க முடியாத துயரம்.‘‘பிழைக்கும் வழியற்று, அந்தப் பெண்களில் பலர் பாலியல் தொழிலுக்கும்தள்ளப்பட்டு விட்டனர்’’ என்று ஆதங்கப்படுகிறார் மனித உரிமை ஆர்வலரும்,வழக்கறிஞருமான  பிரிட்டோ.  ஈழத்தில் போர் நடைபெற்ற இடங் களுக்குச் சென்று திரும்பியிருக்கும் அவரை சந்தித்தோம்.‘‘போர் முடிந்துவிட்டாலும் தமிழர் பகுதியில் 300 மீட்டருக்கு ஒரு செக் போஸ்டை ராணுவம் அமைத்திருக்கிறது.அனைத்தும் ராணுவ கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது. சுமார் இரண்டு லட்சம் ராணுவ வீரர்கள் இன்னமும் போருக்குத் தயாரான நிலையிலேயே காணப்படுகின்றனர். ஆனையிறவு, கிளிநொச்சி உள்ளிட்ட பல இடங்களில்  சிங்கள ராணுவம் போர் நினைவுச் சின்னங்களை அமைத்து, சுற்றுலாத் தலமாக மாற்றியிருக்கிறது. அவர்களுடன் தமிழ் மக்கள் இணைந்து வாழ்வது வாய்ப்பில்லை.வல்வெட்டித் துறையில் பிரபாகரனின் வீட்டை இடித்து தரைமட்டமாக்கியிருக்கிறது சிங்கள ராணுவம்.ஈழத்தின் எந்தப் பகுதியிலும் தமிழர்கள் நான்கு பேர் கூடிநின்று பேசக்கூட பயப்படுகிறார்கள். தங்களின் துயரங்களைப் பேசி என்ன ஆகப்போகிறது என்ற ஆதங்கத்தையும் என்னிடம் பேசிய தமிழர்களிடம் பார்த்தேன். அவர்களின் ஆழ் மனதில் சிங்கள மற்றும் இந்திய எதிர்ப்பு இழையோடுவதைக் காண முடிந்தது’’ என்று சொன்ன பிரிட்டோ அங்குள்ள பெண்கள் குறித்தும் வேதனையோடு  பேசினார்.
‘‘ஈழத்தில்  ஜீரணிக்கவே முடியாதது  தமிழ்ப் பெண்களின் நிலைதான். எந்த ஊருக்குச் சென்றாலும் பாதிப் பெண்களாவது அங்கு விதவைகளாய் இருக்கிறார்கள்.இளை ஞர்களைக் காணவே முடியவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அல்லப்பெட்டி கிராமத்தில் 250 குடும்பங்கள் வசிக்கின்றன. அந்த கிராமத்தில் மட்டும் 70 இளைஞர்களைக் காணவில்லை என்றார்கள் மக்கள்.

போரில் பெரும்பாலான ஆண்கள் கொல்லப்பட்டு விட,அவர்களின் மனைவிகள் சிறு குழந்தைகளோடு பெரும் துன்பங்களை அனுபவிக்கிறார்கள். சிங்கள அரசு
கணக்கெடுப்பின்படி 89 ஆயிரம் இளம் விதவைகள் ஈழத்தில் இருப்பதாக ‘டெய்லி மிரர்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் 40 ஆயிரம் பேரும், திரிகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளில் 49 ஆயிரம் பேரும் இளம் விதவைகள் என அந்தச் செய்தி சொல் கிறது.அதில் எட்டாயிரம் பேர் மூன்று குழந்தைகளுக்குத் தாய் என்கிற புள்ளி விவரத்தையும் அரசே கொடுத்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான விதவைப் பெண்கள் இருக்கிறார்கள் என உறுதியாக சொல்ல முடியும்.என்னுடைய பயணத்தில் பல்வேறு இடங்களில் அந்தப் பெண்களை சந்தித்துப்  பேசினேன்.

பருத்தித்துறையைச் சேர்ந்த 33 வயது விதவை கயல்விழி, 2006-ம் ஆண்டு தனது கணவர், மகன், மகள் ஆகியோருடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். தி டீரென அங்கு வந்த சிங்கள ராணுவத்தினர், எதுவும் விசாரிக்காமல் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது கணவர் மற்றும் இரண்டரை வயது மகளை சுட்டுக் கொன்றிருக் கிறார்கள். ‘எனக்கு அதிர்ச்சியில் என்ன பண்றதுன்னே தெரியலை. கடலில் விழுந்து செத்துப் போயிடலாம்
என்று நினைத்தேன். என் மகனைக் கொல்ல மனம் வரலை.  நானும் இறந்து போனா அவனை யாரு வளர்க்கிறது. அதனால்  உயிர் வாழறேன்’ என்று அந்தப் பெண் கதறி அழுதபோது என்னால் ஒரு ஆறுதலும் சொல்ல  முடியவில்லை.

அழுக்கு உடல், கிழிந்த உடை,  ஒட்டிய வயிறுடன் பக்கத்தில் விளையாடிக்
கொண்டிருந்த கயல்விழியின் ஒன்பது வயது மகன் முகத்திலும் சிரிப்பு நிரந்தரமாக தொலைந்து  போயிருந்தது’’ என்று கண்கலங்குகிறார் பிரிட்டோ.

சற்று நிதானித்து தொடர்ந்தார். ‘‘38 வயதில் இன்னொரு பெண்ணைப் பார்த்தேன்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், அவரது கணவரையும், மகனையும் சிங்கள ராணுவம் பிடித்துக் கொண்டு போய்விட்டதாம். இன்றுவரை அவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கூலி வேலை பார்த்து பண த்தை சேமித்து கொழும்பு, வெளிக்கடை என்று ஒவ்வொரு சிறைச்சாலையாய் போய்த் தேடுவதும், மீண்டும் வந்து வேலை செய்வதும், மீண்டும் தேடுவதும் என  தொடர்கிறது அந்தப் பெண்ணின் வாழ்க்கை.  சிங்களம் தெரியாததால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
‘போருக்குப் பிறகு கூலி வேலை கூட சரியாக  கிடைக்காததால் சிறைச்சாலைகளுக்குச் சென்று தேடக்கூட பணமில்லையே’ எனக் கதறினார் அந்தப் பெண். இருபத்தைந்து வயது இளம்பெண் யாழினி. கணவரையும் மகனையும் ராணுவம் காவு வாங்கி விட, போகிற வருகிற அனைவரிடமும், இருவரின் போட்டோக்களையும்  வைத்துக்கொண்டு ‘இதுதான் எனது கணவர், இதுதான் எனது மகன்.எங்கேயும் பார்த்தீர்களா’ என்று அரைப்பைத்தியமாய் சுற்றிக் கொண்டிருக்கிறார். இருவரும் இறந்து  விட்டார்கள் என்பதைக் கூட அந்தப் பெண்ணால் இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.குடும்பத்தில் அனைவரையும் இழந்து வயதான பெண்கள் அனுபவிக்கும் கொடுமையும் எளிதாக சொல்லிவிட முடியாது. அறுபது வயதுப் பெண் அவர். கடைசிகட்ட யுத் தத்தின்போது புலிகளின் அழைப்பை ஏற்று கிளிநொச்சியிலிருந்து தனது கணவர், மகன், மகள், பேரக்குழந்தைகளுடன் புறப்பட்டிருக்கிறார். ‘பரந்தனை என்கிற இடத்தை  அடைந்தபோது நான் மட்டும்தான் மிஞ்சினேன்’என்று கதறி அழுத அவரை எப்படி சமாதானப்படுத்துவது என்றே எனக்குத் தெரியவில்லை.

ராணுவ வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பிறந்த பெண்கள், இனக்கலப்புக்காக கட்டாயமாக கருவுற வற்புறுத்தப்பட்ட பெண்களையும் கூட சந்தித்தேன்.தனக்கு நேர்ந்த இழப்புகளை தாங்கிக் கொண்டு உயிரோடு இருப்பவர்களையாவது காப்பாற்றுவோம் என்றால் அதற்கும் அந்தப் பெண்களுக்கு அங்கு வழியில்லை. பாதிக்கப்பட்டோர் மறுவாழ்விற்கான எந்தப் பணிகளையும் இலங்கை அரசு செய்யாததால்
வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது.
எனவே, இளம்பெண்களில் பலர் பாலியல் தொழிலுக்கு வலுக்கட்டாயமாக
தள்ளப்பட்டிருக்கிறார்கள்.  குறிப்பாக, அங்கு ரோடு போடுவதற்காக வந்திருக்கும் சீனர்களும்,  கொரியர்களும் இந்தப் பெண்களை தங்களது பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். தவிர, பல விதவைப் பெண்களைக் குறிவைக்கும் புரோக்கர்கள்  அவர்களுக்கு நல்ல வேலை வாங்கித் தருகிறேன் என்று ஏமாற்றி கொழும்புவிற்கு அழைத்துச் சென்று, பாலியல் தொழிலில் தள்ளுவதை தமிழ் அரசியல்வாதிகளே என் னிடம் பேசி வருத்தப்பட்டார்கள்.

உலகுக்கே கலாசாரத்தைச் சொன்ன தமிழர்கள் ராஜபக்ஷே என்கிற கொடுங்கோலனால் பெரும் கலாசார சீரழிவிற்கு உள்ளாகியிருக்கிறார்கள். எல்லா விதவைப் பெண் களுமே தொழில் ஏதுமின்றி, வாழ வழியின்றி விரக்தியான மனநிலையிலேயே இருக்கிறார்கள். அவர்களுக்கு தற்போது நல்ல கவுன்சலிங் தேவை. அதற்கு பன்னாட்டு  தொண்டு நிறுவனங்களையாவது இலங்கை அரசு அனுமதிக்கலாம்’’ என்று இயலாமையோடும், வேதனையோடும் சொல்லி முடித்தார் பிரிட்டோ.

ஈழத்தமிழர்களின் கனவான தனி ஈழம் விரைவில் சாத்தியமாகலாம். தெற்கு சூடான் அந்த நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. ஆனால் அமையப் போகும் ஈழத்தில் வாழ்வதற்கு அந்த மக்கள் உயிரோடு இருப்பது இன்னமும் அவசியம் இல்லையா?

புரசைவாக்கம் பகுதியில்சிங்களக் காடையர்கள் விரட்டப்பட்டனர்


புரசைவாக்கம் பகுதியில் சிங்கள் கொடி பதித்த பனியன்களும் கொடிகளையும் எந்தி சென்ற சிங்கள் காடையர்களை. புரசைவாக்கம் பொதுமக்கள் அடித்து விரட்டினர். அவர்கள் கொண்டு வந்த சிங்கள கொடியையும் எரித்தனர் 


இன்று03.08.2011 இலங்கை சிங்களவர்கள் 50 பேர்,சென்னையில் ஊர்வலமாக சென்றனர்.சென்னை
பெரியமேட்டில் இருந்து புரசைவாக்கம் வரை சிலர் சிங்கள கொடிஎந்தியும், 10 மேலான
நபர்கள் இலங்கை சின்னமுடைய டி-சர்ட்டுகள் அணிந்தும் நடந்து சென்றனர்.பிறகு
சென்ட்ரல் பகுதியில் உள்ள AGP விடுதியில் நுழைந்தனர், அவர்கள் அந்த விடுதியில்
தான் தங்கி இருக்கின்றார்கள் என்பதனை அறிந்த சில தமிழ் உணர்வாளர்கள் அந்த
விடுதியினுள் நுழைந்தனர்.அ...வர்கள் உள்ளே நுழையும் நேரும் முன்பே பல
சிங்களவர்கள் வாடகை ஊர்திகளில் வெளியில் சென்றுவிட்டனர்.
உள்ளே நுழைந்த தமிழ் உணர்வாளர்கள், அந்த விடுதியின் மேலாளரிடம் சிங்களவர்கள்
இருந்கின்றனரா என கேட்டுக்கொண்டு இருக்கும் சமயம், அங்கே வந்த 3 சிங்களவர்கள்
கண்டனர்.அவர்களின் டி- சர்ட்டுகள் அவிழ்க்கப்பட்டு, சாலையில் தீயிட்டு
கொளுத்தப்பட்டன.மேலும் அந்த சிங்களவர்களுக்கு அடி உதய் விழுந்தது,சிங்களவர்களை
தங்க அனுமதித்த விடுதியினரை கண்டித்துவிட்டு விடுதியின் கண்ணாடி,கதவுகள்
உடைக்கப்பட்டன.வெளியேறிய உணர்வாளர்கள் , AGP விடுதியின் அருகில் இருந்த சில
விடுதிகளுக்கும் சிங்களவனை தங்க அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்த
வெளியேறினர்.
AGP விடுதி ஒரு வடநாடுக்காரனால் நடத்தப்படுகிறது.இதை அந்த விடுதியின் நிர்வாகம்
மறைக்க நினைத்து , புகார் அளிக்கவில்லை.ஆனால் சிங்களவன் தன்
கொடியோடு,கொல்லப்பட்ட தமிழர்களின் தாய்நிலத்தில் சுதந்திரமாக உளறவிடுவது,
தமிழர்களுக்கு வெட்கமளிக்கும் செயலாகும்.

இலங்கையில் தற்போதைய நிலை நீடித்தால் 194 ஆவது நாடு உருவாவதைத் தடுக்க முடியாது!– விசயதாச இராசபட்ச

இலங்கையில் தற்போதைய நிலை நீடித்தால் 194வது நாடு உருவாவதை தடுக்க முடியாது!– விஜயதாச ராஜபக்ஷ


இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை நீடித்தால் 194 வது  நாடு உருவாவதனை தடுக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் அதிகரித்துள்ளது.
அரசியல்வாதிகளினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேராசிரியர் நந்ததாச கோதகொடவின் நினைவுப் பேருரையில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட கால சமூக ஒன்றுமை நோக்கிய எதிர்கால பயணம் என்ற தொனிப்பொருளில் அவர் உரையாற்றியுள்ளார்.
சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்கள் நீடிக்குமாயின் நாடு பிளவுபட்டு 194வது நாடொன்று உதயமாவதனை எவாரும் தடுக்க முடியாது.
அல்லது சீனாவின் காலனித்துவ நாடாக இலங்கை மாற்றமடையும் எனவு அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தவறின்றி எழுதத் தூண்டுகோலாக இருக்கும் தினமணி மக்கள் முட்டாள்கள் அல்லர் எனச் சரியாக எழுதலாமே! நல்ல தமிழில் எழுதலாமே!  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

மக்கள் முட்டாள்களல்ல!

First Published : 04 Aug 2011 03:30:22 AM IST

விலைவாசி உயர்வு குறித்த விவாதம் சடங்காக மாறி விட்டது: தி.க.சீ.ளங்கோவன்

விலைவாசி உயர்வு குறித்த விவாதம் சடங்காக மாறி விட்டது: டி.கே.எஸ்.இளங்கோவன்

First Published : 04 Aug 2011 04:26:07 AM IST


புது தில்லி, ஆக. 3: நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் விலைவாசி உயர்வு குறித்த விவாதம் சடங்கு போல் ஆகிவிட்டது என்று மக்களவை திமுக உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.    மக்களவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்தபின் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்கா வாக்கெடுப்புடன் கூடிய தீர்மானத்தை மக்களவை விதிமுறை பிரிவு 184-ன் கீழ் கொண்டு வந்து விவாதத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.    இந்த விவாதத்தில் திமுக சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு உரையாற்றும் போது, தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அத்தியாவசிய பொருள்கள் கிடைக்கும் வகையில் பொது விநியோக திட்டம் (யூனிவர்சல் பிடிஎஸ்) சிறப்பாக செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். திமுக ஆட்சி காலத்தில் விவசாயிகள் நேரடியாகப் பயன் பெறும் வகையிலும், இடைத் தரகர்களை அறவே ஒழிக்கும் வகையிலும் உழவர் சந்தை தொடங்கி நடத்தப்பட்டு வந்ததையும் நினைவு கூர்ந்தார். அத்தியாவசியப் பொருள்களின் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.    விலைவாசி உயர்வு குறித்து ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்திலும் விவாதிக்கப் பட்டு வருவதாகவும், அந்த விவாதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முடிவுகளை அரசு செயல்படுத்துவதில்லை என்றும் தெரிவித்தார்.    எனவே அரசு இதை ஒரு சடங்காக மட்டும் கருதாமல் விலைவாசி உயர்வைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் அனைத்து தரப்பினருக்குமான பொது விநியோக திட்டம் மற்றும் உழவர் சந்தைகளை நாடு தழுவிய அளவில் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை பரிசுபெறும் நூலாசிரியர்கள்

கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை பரிசுபெறும் நூலாசிரியர்கள்

First Published : 04 Aug 2011 03:18:09 AM IST


நாமக்கல், ஆக. 3: 2011-ம் ஆண்டுக்கான நாமக்கல் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை இலக்கியப் பரிசுபெறும் நூல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பரிசுபெறும் நூலாசிரியர்களுக்கு அக்டோபர் 2-ம் தேதி நாமக்கல் செல்வம் கல்லூரியில் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும். இத்தகவலை கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளைத் தலைவர் பொ. செல்வராஜ், துணைத் தலைவர் சி.க. கருப்பண்ணன், செயலர் கா. பழநிச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.  பரிசு பெறும் நூல்கள்: முதன்மைப் பரிசு ரூ.50 ஆயிரம் (தமிழ்): "பனிநிலவு' நூலை எழுதிய லண்டனைச் சேர்ந்த வவுனியூர் இரா. உதயணனுக்கு வழங்கப்படுகிறது. பிறமொழியில் பரிசுபெறும் நூல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.  சிறப்புப் பரிசு ரூ.10 ஆயிரம் பெறும் வெளிநாடுகளைச் சேர்ந்த நூலாசிரியர்களும் அவர்களின் படைப்புகளும்: வி.ஜீவகுமாரன் (டென்மார்க்) - சங்கானைச் சண்டியன், நாகரத்தினம் கிருஷ்ணா (பிரான்ஸ்) -மாத்தகரி, சை.பீர்முகமது (மலேசியா) - பெண்குதிரை, நடேசன் (ஆஸ்திரேலியா) - வண்ணத்திகுளம், தெணியான் (இலங்கை) -ஒடுக்கப்பட்டவர்கள், கே. விஜயன் (இலங்கை) - மனநதியின் சிறுஅலைகள், சிவசுப்பிரமணியன் (இலங்கை) - சொந்தங்கள், தனபாலசிங்கம் (இலங்கை) - ஊருக்கு நல்லது சொல்வேன், கலைச்செல்வன் (இலங்கை) - மனிததர்மம், உபாலி லீலாரத்னா (இலங்கை) - கு.சி.பாவின் சுரங்கம், தாகம் நாவல்களின் சிங்கள மொழியாக்கம், புரவலர் ஹாசிம் உமர் (இலங்கை) -கொடைச்சிறப்பு.  இவைதவிர தமிழ்நாட்டைச் சேர்ந்த பரிசு பெறும் நூலாசிரியர்களும் அவர்களின் படைப்புகளும்: ஆர்.எஸ். ஜேக்கப் - பனையண்ணன், சுப்ரபாரதி மணியன் - சுப்ரபாரதி மணியன் கதைகள், ப.ஜீவகாருண்யன் - கவிச்சக்ரவர்த்தி, குறிஞ்சிவேலன் - முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள், மயிலை பாலு - தமிழ் மொழிபெயர்ப்புக்கான வாழ்நாள் சாதனை, லேனா தமிழ்வாணன் - ஒரு பக்கக் கட்டுரை 500, வெண்ணிலா - நீரில் அலையும் முகம், ஜீவபாரதி பூங்குருநல் அசோகன் - குமரமங்கலம் தியாக தீபங்கள், தில்லி டாக்டர் ஹெச். பாலசுப்ரமணியன் - தமிழ்-இந்தி இந்தி-தமிழ் மொழியாக்க வாழ்நாள் சாதனை, என்.சிவப்பிரகாசம் - ஊழல் எதிர்ப்பு சேவை.

இலங்கைத் தமிழருக்குத் தி.மு.க. ஆட்சிதான் அதிகம் செலவு செய்தது: கருணாநிதி

காலியான பெருங்காயக் குப்பியால் என்ன பயன்? ஈழத்தமிழர்களுக்கு இவ்வாறாகப் பண உதவி செய்யும் நிலைக்கு ஆளாக்கியதில் முதன்மைப் பங்கு யாருக்கு? கட்சி ஊர்வலத்தைப் பத்து மணிநேரம் நடத்தத் தெரிந்த தலைவர்களுக்கு ஈழத்தமிழர்கள் படுகொலைகளைத் தடுக்க நாட்டு மக்களை ஒன்றுகூட்டத் தெரியவில்லையே! தெலுங்கானாப் போராட்டத்தில் காங்.ஐயும்  ஈடுபடச் செய்து விட்டனர் தெலுங்கானா மக்கள்.  இங்கோ காங்.கிற்குக்கால் கை பிடித்து விட்டு உண்மையை உணர்த்தத் தவறிவிட்டு இனப்படுகொலைகளுக்குக் காரணமாக ஆகிவிட்டனர்.  காலம் கடந்த கால வரலாற்றைச் சொல்லிக் கொணடிருக்காது. எனவேதான் வால்மீகியை முனிவராகப் பார்க்கின்றதே தவிர கொள்ளைக்காரனாகப்  பார்க்கவில்லை. எட்டப்பனும் கருணாவும்  வஞ்சகர்களாகப் பார்க்கப்படுகின்றனரே தவிர முந்தைய ஈகையு்ம் வீரமும் போற்றப்படுவதில்லை. ஈழத்தமிழர் படுகொலைகளுக்குக் காரணமானவர்கள் அதற்கு முன்பு என்னதான் நல்ல செயல்கள் புரிந்திருந்தாலும் வரலாற்றில் இருந்து து‌டைத்து எறியப்படுவார்கள்! இஃது உறுதி! உறுதி! உறுதி!
 அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இலங்கைத் தமிழருக்கு தி.மு.க. ஆட்சிதான் அதிகம் செலவு செய்தது: கருணாநிதி
First Published : 04 Aug 2011 12:26:14 AM IST

சென்னை, ஆக. 3: இலங்கைத் தமிழர் நலனுக்காக அ.தி.மு.க. ஆட்சியைவிட தி.மு.க. ஆட்சியில்தான் நிறைய செலவு செய்யப்பட்டது என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.  இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் 5,544 பேருக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதன்படி அரசுக்கு மாதம் ரூ.55.44 லட்சம் செலவாகும்.  ஆனால் தி.மு.க. ஆட்சியில் இலங்கை தமிழ் மக்களுக்காக முதல்கட்டமாக 2008-ல் ரூ.10 கோடி மதிப்பில் பொருள்கள் கப்பல் மூலம் அனுப்பி அங்கு விநியோகிக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக 2009-ல் ரூ.6.45 கோடி மதிப்பிலான உணவுப் பொருள்கள், துணி வகைகள் அனுப்பி வைக்கப்பட்டன.  மூன்றாம் கட்டமாக ரூ.7.5 கோடி மதிப்புள்ள பொருள்கள் அனுப்பப்பட்டன. இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசு திரட்டிய நிதியில் எஞ்சிய ரூ.25 கோடி தமிழக அரசின் சார்பாக நிதி உதவியாக வழங்கப்பட்டது.  இதுபோல முகாம்களில் உள்ளோருக்கு வழங்கும் உதவித் தொகை உயர்வு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம் மூலம் உதவி, சமையல் பாத்திரங்கள் வழங்கியது, ஈமச் சடங்குக்கான உதவித் தொகை ரூ.100-ல் இருந்து ரூ.500 ஆகவும், பிறகு ரூ.2,500 ஆகவும் உயர்வு, முகாம்களுக்கான ஆண்டு செலவு 2008-09-ல் ரூ.48.58 கோடியாக உயர்வு ஆகியவை தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்டன.  அகதி முகாம்களை சீரமைக்க மத்திய அரசிடம் ரூ.16 கோடி நிதி கோரி அது கிடைக்காத நிலையில், தமிழக அரசின் சார்பில் ரூ.5 கோடி ஒதுக்கீடு, 2009-ல் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அகதி முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.12 கோடி ஒதுக்கீடு, பின்னர் மொத்தமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு ஆகியவை நடந்தன.  எனவே இவற்றை ஒப்பிட்டால் இலங்கைத் தமிழர் நலனுக்கு எந்த ஆட்சியில் அதிகம் செலவிடப்பட்டது எனத் தெரியும்.  நிலப் பறிப்பு விவகாரம்: அ.தி.மு.க.வினர் மீது வரும் நிலப் பறிப்பு புகார்கள் காவல் துறையினரால் சமரசம் செய்து வைக்கப்படுகின்றன.  ஆனால் நிலத்தை உண்மையாக விற்றவர்கள் தி.மு.க.வினர் மீது புகார் கொடுத்தால் அதைப் பெரிதுபடுத்தி வழக்குப் பதிவுசெய்து கைது செய்கிறார்கள்.  மண்ணெண்ணெய் விலை: ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் அவர்கள் செய்த சாதனைகளில் ஒன்றாக, ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விலை ரூ.11.40-ல் இருந்து ரூ.13.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  தரிசு நிலங்களை மீட்டு ஏழைகளுக்கு வழங்குவோம் என தமிழக மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் என்.வரதராஜன் கூறியுள்ளார். சிறுதாவூர் நிலம் தொடர்பாக நீதிபதி சிவசுப்ரமணியம் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் அந்த நிலத்தை மீட்டு தலித்துகளுக்கு வழங்க அவர் முன்வர வேண்டும்.  சன் தொலைக்காட்சி நிர்வாகி சக்சேனா மீது காவல் துறையினரே தன்னிச்சையாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது, புகார்தாரர்கள் கூறும் தகவல்களின் மூலம் தெரிகிறது. ஆட்சியாளர்களுக்குப் பிடிக்காதவர்கள் மீது இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பது இதன் மூலம் உண்மையாகிறது என கருணாநிதி கூறியுள்ளார்.
 

கருத்துரைகள்

This man will never reform. His crookedness is so imbibed in his blood that despite his daughter in jail, his party men going to jail everyday, he still thinks he can disturb the ruling party. The people in Tamil Nadu should condemn this man. It is unfortunate that he still claims to be a politician. Karunanidhi is an example of a bad politician that TN has seen post independence.
By chandru mani iyer
8/4/2011 1:49:00 PM
வாளு வாளுன்னு எதுக்குக் கத்துரே? நீ வாழ்ந்த காலத்துலே யாருக்கும் நல்லது செய்யலை. இனி மேலும் செய்யப் போறதுமில்லை. . ... அந்த அம்மா செஞ்சா அதைப் பத்தி எதுவும் நீ சொல்லவேண்டாம். அமுக்கிகிட்டு இரு. இன்னைக்கு எனக்கு ஒரு ஆசை வந்தது. அது என்ன என்றால் மீண்டும் ஒரு தடவை கண்ணதாசனின் "வனவாசம்" படிப்பதுதான். ஒன்னோட பெர்சனாலிட்டி அதன் மூலம் மீண்டும்.......மீண்டும் படித்து ரசிப்பதில் ஒரு சுகம். எத்தனை நூல்கள் நீ படித்தாலும் மீண்டும் ஒரு தடவை கொன்றைவேந்தன், ஆத்திசூடி படி. அப்பிடி நீ படித்தால் கொஞ்சம் பொய் பேசாமல்,புகார் சொல்லாமல் வாழலாம்.
By மோகன்
8/4/2011 12:48:00 PM
மூன்று மணி நேரம் சர்கும்வாரை உண்ணாவிரதம் இருந்ததும் ஒரு சர்தனை தான் கோடரிகாம்பே
By KOOPU
8/4/2011 12:25:00 PM
இன்னுமா உங்களை நம்புவோம் போய் பேரன் பேத்திகளுக்கு கதை சொல்லு எங்ககிட்ட வேண்டாம் இனதுரோகி.........கபட நாடகதாரி
By விஜய்
8/4/2011 11:21:00 AM
மகனே ! இந்திய மக்களின் பணத்தை , உழைப்பை மிக அதிகமாக கொள்ளை அடித்தது உன் குடும்பமும் , கட்சியும்தான் . இதில் அறிக்கை வேறு ! மகனே உன்னை , மனைவி இனைவியருடன் திகாரில் உடனே அடைக்க வேண்டும். இலங்கை மக்கள் சாவுக்கு காரணமான உன் குடும்பத்தை இறைவன் நிம்மதியாக வாழ விட மாட்டான் !
By S .பாலன்
8/4/2011 10:34:00 AM
அண்ணா நீங்க உண்மையாலுமே ஒரு மனித ஜென்மமா ? இல்ல மனிதமிருகமா ? உங்க வாழ்க்கையில் இலங்கை தமிழனுக்கு நெறைய நெறைய செஞ்சுடீங்க. அதுக்கே உங்க பரம்பரை இன்னும் அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கு . இனிமே போய்கிட்டு இருக்கிற உயிர்களாவது உங்க குடும்பத்துக்கு சாபம் விடாம இருக்கனும்ன தயவு செஞ்சு உங்க அரசியல் நாடக வசனங்களை இந்த விசயத்துல பேசாதீங்க நான் உங்க atthutha THALAI MURAIKKAGAVUM THAN SOLKIREN
By karur rajesh
8/4/2011 10:22:00 AM
செலவு செய்வதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. ஆனால்,செல்வு உரியவரை சென்று அடைந்ததா என்பதில் தான் பிரச்சினையே?
By karikalan
8/4/2011 10:18:00 AM
ஆறு மாதம் அமைதி யாக இருக்கமுடியாதா மக்கள் முட்டாள்கள் மீட்டும் உன்னை ஆட்சியில் அமர்த்துவர்
By avudaiappan
8/4/2011 10:02:00 AM
"Ilakkuvanar: கட்சி ஊர்வலத்தைப் பத்து மணிநேரம் நடத்தத் தெரிந்த தலைவர்களுக்கு ஈழத்தமிழர்கள் படுகொலைகளைத் தடுக்க நாட்டு மக்களை ஒன்றுகூட்டத் தெரியவில்லையே! " These words are very true. This traitor will be remembered in history for wrong reasons. 'Vekkam,manam,rosham,mariyadhai illadhavan'
By Karthik
8/4/2011 9:55:00 AM
கருணாநிதி அவர்களே தவளை தன் வாயால் கெடும் என்பார்கள். உங்கள் விழயத்தில் அது நடந்து விடும் என்று நினைக்கிறேன். தயாநிதி, கலாநிதி, இவர்களை எப்பொழுது மத்திய, மாநில அரசுகள் கைது செய்யப்போகிறது என்று சொல்லமுடியாத சூழ்நிலையில் கூட சச்சேனா வை பற்றி நீங்கள் வக்காலத்து வாங்குவது ஆச்சரியமாக உள்ளது. இதில் ஏதோ விழயமிருக்கிறது. தமிழக காவல் துறை இதை முதலில் கவனித்தால் நல்லது.
By ஹரிஹரக்ரிஷ்ணன்
8/4/2011 9:37:00 AM
ஸ்டாப் திஸ் நான் சென்ஸ்
By சுனில்
8/4/2011 9:00:00 AM
இந்த ஆளு திருந்த மாட்டானா? Media should start ignoring this guy. That would be the best possible alternative for the public.
By rvaruna
8/4/2011 7:14:00 AM
யோவ் பேமானி, அனுப்பிய பொருட்கள் எல்லாம் எங்கே போய்ச் சேர்ந்ததுன்னு தெரியுமா? மதிய அரசு அனுப்பிய டிராக்டர் எல்லாம் இராணுவத்துக்கும் சிங்கள மக்களுக்கும் தான் வழங்கப்பட்டது. அம்மா இந்தியாவில் எந்தவித உதவியும் இல்லாத அகதிகளுக்கு வழங்குகிறார். உனக்கு ஓய்வு கொடுத்தாங்க இன்னும் ஓய்வூதியம் கொடுக்கலை போலே, அதான் பினாத்திகிட்டே இருக்கிறே!
By வாடா மன்னாரு
8/4/2011 6:18:00 AM

புதன், 3 ஆகஸ்ட், 2011

பேரறிவாளனின் தூக்குத் தண்டனையை நீக்க வேண்டும்: வைகோ கோரிக்கை

பேரறிவாளனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: பிரதமரிடம் வைகோ நேரில் கோரிக்கை

பேரறிவாளனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்:
பிரதமரிடம் வைகோ நேரில் கோரிக்கை
 பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று நாடாளுமன்றக் கட்டடத்துக்கு உள்ளே இருக்கும் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.
அப்போது அவரிடம்,   ‘’முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரரறிவாளனுக்கு விதிக்கப்பட்டு உள்ள தூக்குத் தண்டனையை ரத்துச் செய்ய வேண்டும்.
இரண்டு பேட்டரி செல்களை வாங்கிக் கொடுத்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு.
ஏற்கனவே நளினிக்கு மரண தண்டனையை ரத்துச் செய்து உள்ளீர்கள். அதுபோல, பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்டு உள்ள மரண தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.
Short URL: http://meenakam.com/?p=32154

சென்ற பத்து ஆண்டுகளுக்கு முன்பு வேண்டும் என்றால் ஆங்கிலவழி படித்த அறிஞர்கள் வேப்பிலையின் சிறப்பை  வெளியிட்டு இருக்கலாம். ஆனால்,காலம் காலமாக நம் தமிழர்கள் வேப்பிலையின்சிறப்புகளை அறிந்துள்ளனர். அதற்கான பாடல்களும் உள்ளன. சித்த மருத்துவர்களிடம் கேட்டு அறிந்து கொள்க. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

தூக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டும்

இலங்கைத் தமிழர்படுகொலை தொடர்பில் தொடர்ந்து மெளனம் ஏன்? டி.இராசா

இலங்கைத் தமிழர் பிரச்னையில் தொடர்ந்து மெளனம் ஏன்? டி. ராஜா

First Published : 03 Aug 2011 02:46:22 AM IST


புது தில்லி, ஆக. 2: இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், அமெரிக்க அரசுகள் தமிழர்களுக் எதிராக இலங்கை அரசு செய்த கொடுமைகளைக் கண்டனம் செய்யும் போது இந்திய அரசு மட்டும் தொடர்ந்து மெüனம் சாதித்துவருவது ஏன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.அக்கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா தில்லியில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசும் போது "இலங்கையில் நடந்த அட்டூழியங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலுக்குத் தற்போது தலைமைப் பொறுப்பில் இந்தியா உள்ள நிலையில் அந்த அறிக்கையின் மீது மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?' என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

அதிகாரத்தினருக்குப் பத்ம விருதுகள் கிடையா: மத்திய அரசு முடிவு

கலைமாமணி முதலான விருதுகள் வழங்குவதில் இதே போன்ற முடிவைத்தமிழக அரசும் எடுக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
அதிகார வர்க்கத்தினருக்கு பத்ம விருதுகள் கிடையாது:
மத்திய அரசு முடிவு

First Published : 02 Aug 2011 05:39:46 PM IST


புதுதில்லி, ஆகஸ்ட் 2: இன்று மக்களவையில் ஏற்பட்ட விவாதத்தின்போது, அரசாங்க அதிகாரிகள், அரசு சார்ந்து இயங்குபவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பத்ம விருதுகளுக்கு அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியவர்களைப் பரிந்துரைப்பதில்லை என்ற முடிவினை அரசு எடுத்துள்ளதாக உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் இன்று தெரிவித்தார்.ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர், பத்ம விருதுகள் பெறுவதற்கான தகுதி வரம்பில் அரசு ஊழியராகப் பணிசெய்பவர்கள் வரமாட்டார்கள் என்றார்.அப்படி அரசு அதிகாரிகள், அரசுக் குழுக்கள், ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கி அவர்களின் பணிக்கு அங்கீகாரமும் ஊக்கமும் கொடுப்பதாக இருந்தால் அதற்கு, பிரதமரின் சிறப்பு விருது வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு பரிந்துரைப்போம் என்றார். இத்தகைய விருதுகள் 2007 முதல் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து மாநில, மத்திய அரசுப் பணியாளர்கள் இந்த விருதுக்கு தகுதியுடையவர்கள் ஆவர் என்றார் அவர்.  
கருத்துகள்

அதிகார வர்கங்களுக்கு மட்டுமல்ல அரசியல் சிபாரிசுகளுக்கும் கொடுக்க கூடாது.இதுவரை பெற்றவர்களில் பெரும்பகுதி அரசியல் வாதிகளின் அடிவருடிகளே.

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

ஈழத் தமிழ் அகதிகளை துன்புறுத்தப்படுவதைத் தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்

ஈழத் தமிழ் அகதிகளை துன்புறுத்தப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்

சீமான்
பதிவு செய்த நாள் : August 1, 2011



தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் இருந்து கனடாவிற்குத் தப்பி செல்லும் முயற்சியில் ஈடுபட்ட 186 ஈழத் தமிழ் அகதிகள் ஆந்திராவில் கைது செய்யப்பட்டு, இன்று காலை சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி அருகே அவர்களை ஆந்திர மாநில காவல் துறையினர் கைது செய்த பின்னர், தமிழக காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட, அவர்கள் துனி என்ற இடத்திற்குச் சென்று ஈழத் தமிழ் அகதிகளை தங்கள் பொறுப்பில் ஏற்றுக் கொண்டனர். அப்போது விசாரணை என்ற பெயரில் – அவர்கள் கனடாவிற்கு தப்பிச் செல்ல முற்பட்டற்காக அந்த அகதிகள் பலரை தமிழக காவல் துறையின் க்யூ பிரிவைச் சேர்ந்த இரண்டு காவல் அதிகாரிகள் கடுமையாக அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். அவர்களோடு இருந்தவர்கள் இந்த தகவல்களையெல்லாம் எனக்கு அழுதபடியே தெரிவித்தனர்.
இன்று காலை தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டவர்களை, அவர்கள் ஏற்கனவே இருந்த முகாமிற்கு மீண்டும் கொண்டு சென்று ஒப்படைக்கும் காவல் துறையினர், தங்களை மீண்டும் தாக்குவார்கள் என்ற அச்சம் அவர்களிடையே நிலவுகிறது. “எங்களை அடித்துத் துன்புறுத்தாமல் நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் அண்ணா” என்று கதறுகின்றனர். ‘முகாம்களுக்குத் திரும்பிய பிறகு உங்களுக்கு இருக்கிறது கச்சேரி’ என்று அவர்களிடம் க்யூ பிரிவு அதிகாரிகள் கூறியதே அவர்கள் இப்படி அச்சப்படக் காரணமாகும். எனவே இதில் தமிழக முதல்வர் தலையிட்டு, அவர்கள் துன்புறுத்தப்படாமல் பாதுகாக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாட்டிலுள்ள முகாம்களில் வாழ்ந்துவரும் ஈழத் தமிழ் அகதிகளை தமிழக காவல் துறையின் க்யூ பிரிவினர் பல ஆண்டுக் காலமாக தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் முகாம்களுக்கு வந்து மிரட்டுவது, விசாரணை என்ற பெயரில் இழிவு படுத்துவது, பெண்களிடம் விசாரணை என்ற பெயரில் இவர்கள், “அங்க ராஜபக்ச செஞ்சது போதாதா? நாங்களும் செய்யணுமா?” என்றெல்லாம் கேட்டு அவர்கள் மனதைக் காயப்படுத்தியுள்ளனர். இப்படியெல்லாம் அவர்களை துன்புறுத்த, இழிவுபடுத்த என்ன காரணம் இருக்கிறது? அவர்கள் விடுதலைக்காக போராடுவது குற்றம் என்று தமிழக காவல் துறையின் க்யூ பிரிவு கருதுகிறதா? இல்லை, உயிர் பிழைக்க தமிழ்நாட்டிற்கு தப்பி வந்தது குற்றம் என்று கூறுகிறதா? புரியவில்லை.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஈழத் தமிழ் மக்கள் கெளரவமாக வாழ அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று தமிழக முதல்வரால் உறுதியளிக்கப்பட்ட நிலையிலும், க்யூ பிரிவினரின் அச்சுறுத்தல் மட்டும் மாறாமல் தொடர்கிறது. “இங்கே வந்து இவ்வளவு அவமானப்படுவதை விட நாங்கள் அங்கேயே இருந்து செத்துத் தொலைத்திருக்கலாம்” என்று அவர்கள் நொந்து கூறுகிற அளவிற்கு அவர்களை க்யூ பிரிவினர் துன்புறுத்துகின்றனர்.
இலங்கையில் சிங்கள பெளத்த இனவெறி அரசால் துன்புறுத்தலுக்கு ஆளாகி, தப்பிப் பிழைத்து தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள நிலையில், இங்கும் அதே கொடுமை தொடர்கிறது என்றால், பிறகு ஏன் அவர்கள் இங்கிருந்து வேறு ஒரு நாட்டிற்குத் தப்பிச் செல்ல மாட்டார்கள்? ஈழத் தமிழினத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது தாய் தமிழகத்தின் கடமையல்லவா? எனவே இப்படிப்பட்ட துன்புறுத்தல்களுக்கு தமிழக முதல்வர் முற்றுப்புள்ளி வைத்திட உத்தரவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது.
இதேபோன்று ஐயத்தின் பேரில் ஈழத் தமிழர்கள் பல ஆண்டுக் காலம் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறப்பு முகாம்களிலும் இப்படிப்பட்ட கொடுமை நடக்கிறது. சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சட்டத்திற்குப் புறம்பாக சிறை வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை விடுவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியும், தமிழின கட்சிகளும், அமைப்புகளும் பல போராட்டங்களை நடத்திவிட்டன. ஆனால் இதற்கு முன்பு இருந்த அரசு சற்றும் கண்டுகொள்ளவில்லை. ஈழத் தமிழினத்தின் துயர் துடைக்க வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்கள், இங்குள்ள முகாம்களில் வாழும் தமிழர்கள் துன்புறுத்தப்படுவதை நிரந்தரமாகத் தடுக்க வேண்டும், சிறப்பு முகாம்களை உடனடியாக இழுத்து மூடி, அதில் சட்டத்திற்குப் புறம்பாக சிறைப்படுத்தப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்க வேண்டுமாய் நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது.