திங்கள், 24 டிசம்பர், 2012

இந்தியைத் தாங்கிப் பிடிக்கும் ஆளுநர் உரை

தவறான உரை. தமிழர்க்குத் தமிழ்தான் தேசியமொழி.   இந்தியாவில் பல தேசிய இனங்கள் இருக்கும பொழுது இந்தியை மட்டும் தேசிய மொழி எனக் கூறுவது தவறாகும்.   உரிமைக்குத் தமிழ் மொழி, உறவுக்கு அயல்மொழி என்பதே நாம் பின்பற்ற வேண்டிய கொள்கை. அந்த வகையில் நமக்கு ஆங்கிலம் தேவைதான். எனினும் தமிழுக்கு அடுத்தே அயல்மொழிகள்.  ஆளுநர் மொழி உணர்வுடன் விளையாடும் வகையில் தவறாகப் பேசக்கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


தாய்மொழியுடன் ஆங்கிலத்தையும் கற்க வேண்டும்: தமிழக ஆளுநர் யோசனை

தென் மாநில மக்கள் ஹிந்தியை தேசிய மொழியாக ஏற்று அதை படிக்கத்தொடங்கும் வரை மாணவர்கள் தங்கள் தாய்மொழியுடன் ஆங்கிலத்தையும் கற்க வேண்டும் என தமிழக ஆளுநர் ரோசய்யா தெரிவித்தார்.அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இது குறித்து அவர் பேசியதாவது: தென்னிந்திய மக்கள் ஹிந்தியை தேசிய மொழியாக ஏற்கும்வரை பிராந்திய மொழியுடன் அந்தந்த மாநிலங்களின் தாய்மொழிகளும் கற்பிக்கப்படும். எனவே, தெனனக மக்கள் அவரவர் தாய்மொழியுடன் ஆங்கிலத்தையும் கற்பதுதான் நல்லது.
1967-ம் ஆண்டு சி.என்.அண்ணாசதுரை அப்போதைய பிரதமரிடம் ஒரு வாக்குறுதியை பெற்றார். அதன்படி ஹிந்தியை தென்னிந்தியர்கள் தேசியமொழியாக ஏற்கும்வரை பிராந்திய மொழியுடன் ஆங்கிலமும் கற்பிக்கப்படும் என வாக்குறுதி தரப்பட்டது. எனவே, தென்னிந்திய மக்கள் ஆங்கிலமொழியை கட்டாயம் கற்க வேண்டும் என்றார்.
லோகாயுக்தா தலைவர் ஆர்.சுபாஷன் ரெட்டி பேசுகையில், மாணவர்கள் ஆங்கிலம் கற்பது அவசியம் என்றார். ஆங்கிலம் மற்றும் பிற சர்வதேச மொழிகள் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சனைனா சிங் பேசுகையில் சுமார் 3 மாத காலத்திற்குள் ஆங்கிலத்தை எளிதில் கற்றுவிட முடியும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக