வியாழன், 31 ஜனவரி, 2013

ரிசானாக்களின் உயிர்ப் பறிப்பால் மனித நேயங்கள் தண்டிக்கப்படுகின்றன.

இந்த இரக்கமே அற்ற அரக்கர் குலம் இருக்கும் உலகத்தில் நானும் வாழ்வதை நினைத்து வெக்கப் படுகிறேன் ....றிஷானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்று முன் அவளின் கடைசி ஆசை என்னவென்று கேட்டார்களாம் என்னிடம் கேட்டிருந்தால் சொல்லி இருப்பேன் நீதியற்ற இந்த உலகம் அழிய வேண்டும் என்று .....

இறுதி நேரத்திற்கு முன்பு றிஷானாவிடம் அவரது இறுதி ஆசை குறித்து வினவப்பட்டது இரண்டு "ரக் அத்' தொழ வேண்டும். தன்னிடம் இருந்த சிறு தொகை பணத்தை ஸதகா செய்யும் வகையில் தனது உறவினர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த இரு கோரிக்கைகளும் ஏற்கப்பட்டன.

தான் வறுமையில் வாடிய போதிலும் தனது இறுதி வாழ்வை தெரிந்திருந்தும் பிறருக்கு உதவி செய்ய அந்த பெண் முன்வந்த அந்தச் சம்பவம் அங்கு நின்ற பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் இன்னுமொரு கொடூரமும் நடந்துள்ளது.

றிஷானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது குறித்து மரணமடைந்த குழந்தையின் தாய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கல் நெஞ்சக்காரி சற்றும் மனக்கவலை கொள்ளாது அதனை தானும் பார்வையிட வேண்டுமெனக் கூறி சிறைச்சாலைக்கு வந்துள்ளாள்.

அவளின் முன்பாகவே றிஷானாவின் உயிர் பிரிந்தது. இந்த கல் நெஞ்சக்காரி ஓர் ஆசிரியை. பாவம் ரிஸானா...!

றிஷானாவின் இறுதி ஆசை;
"இரண்டு "ரக் அத்' தொழ வேண்டும். தன்னிடம் இருந்த சிறு தொகை பணத்தை ஸதகா செய்யும் வகையில் தனது உறவினர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும்....!''.

என்னை ஏழ்மையில் பிறக்கவைத்த சமூகம் குற்றவாளி இல்லை
என்னை வேலைக்கு அனுப்பிய பெற்றோரும் குற்றவாளி இல்லை
சிறுமியாகிய என்னை வயது மாற்றி அனுப்பிய ஏஜண்டும் குற்றவாளி அல்ல
தன் பிள்ளையை என்னை விட்டு பாலூட்ட சொன்ன தாயும் குற்றவாளி அல்ல
என் கையில் மூச்சுவிட மறுத்த அந்த குழந்தையும் குற்றவாளி அல்ல
எனது தரப்பை சொல்ல தடையாய் இருந்த நாடும் ,மொழியும் குற்றவாளி அல்ல
விபத்துக்கும் மரணத்துக்கு வித்யாசம் தெரியாத மத சட்டமும் குற்றவாளி அல்ல
என்னை மண்ணிக்காத அந்த பெற்றோர்ர்களும் குற்றவாளி அல்ல
என்னை சாவிலிருந்து தடுக்காத இந்த உலகமும் குற்றவாளி அல்லை
என் கொலையை நியாயபடுத்தும் இரக்கத்தின் காவலர்களும் குற்றவாளி அல்ல
இதை எல்லாம் வேடிக்கை பார்க்கும் குற்றவாளி அல்ல(ர்)
ஆம்.........................நான் தான் குற்றவாளி!
ஏனென்றால் இந்த கொடுமையான சாவிற்கான தவறை
இதுவரை யாரும் செய்த்தில்லை.
என்னை கொலை செய்த்து அவர்கள் மட்டுமில்லை
வேடிக்கை பார்த்த நீங்களும்தான்

என் தலை உருண்ட இட்த்தில் நாளை
உங்கள் மகள்,சகோதரி,தாய்,நன்பர்,மனைவி
தலைகள் இருந்தாலும்
வேடிக்கை மட்டும் பாருங்கள்!
நபீஸா.
Photo: இந்த இரக்கமே அற்ற  அரக்கர் குலம் இருக்கும் உலகத்தில்  நானும் வாழ்வதை நினைத்து வெக்கப் படுகிறேன் ....றிஷானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்று முன் அவளின் கடைசி ஆசை என்னவென்று கேட்டார்களாம் என்னிடம் கேட்டிருந்தால் சொல்லி இருப்பேன் நீதியற்ற இந்த உலகம் அழிய வேண்டும் என்று .....

இறுதி நேரத்திற்கு முன்பு றிஷானாவிடம் அவரது இறுதி ஆசை குறித்து வினவப்பட்டது இரண்டு "ரக் அத்' தொழ வேண்டும். தன்னிடம் இருந்த சிறு தொகை பணத்தை ஸதகா செய்யும் வகையில் தனது உறவினர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த இரு கோரிக்கைகளும் ஏற்கப்பட்டன.

தான் வறுமையில் வாடிய போதிலும் தனது இறுதி வாழ்வை தெரிந்திருந்தும் பிறருக்கு உதவி செய்ய அந்த பெண் முன்வந்த அந்தச் சம்பவம் அங்கு நின்ற பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் இன்னுமொரு கொடூரமும் நடந்துள்ளது.

றிஷானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது குறித்து மரணமடைந்த குழந்தையின் தாய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கல் நெஞ்சக்காரி சற்றும் மனக்கவலை கொள்ளாது அதனை தானும் பார்வையிட வேண்டுமெனக் கூறி சிறைச்சாலைக்கு வந்துள்ளாள். 

அவளின் முன்பாகவே றிஷானாவின் உயிர் பிரிந்தது. இந்த கல் நெஞ்சக்காரி ஓர் ஆசிரியை. பாவம் ரிஸானா...!

றிஷானாவின் இறுதி ஆசை;
"இரண்டு "ரக் அத்' தொழ வேண்டும். தன்னிடம் இருந்த சிறு தொகை பணத்தை ஸதகா செய்யும் வகையில் தனது உறவினர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும்....!''.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக