புதன், 23 ஜனவரி, 2013

இந்துக் கோவில்களை இடிக்கிறது இலங்கை : கருணாநிதி



இந்து க் கோவில்களை இடிக்கிறது இலங்கை : தடுக்க கருணாநிதி கடிதம்


சென்னை: "தமிழ் கலாச்சாரத்தை அழிக்க, இலங்கை அரசு முயற்சிப்பதை, மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோருக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். அவரது கடித விவரம்:



இலங்கையில் தமிழ் மொழி, கலாச்சாரம், மதம் போன்றவைகளை அழிக்க, இலங்கை அரசு திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு செயல்படுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும். அங்குள்ள தமிழர்கள், ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்கின்றனர். கொல்லைப்புற வழியாக, மிகப்பெரிய கலாச்சாரத்தையும், பழமை வாய்ந்த மதத்தையும் அழிக்கும் முயற்சியில், இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.

இலங்கையில் உள்ள, 89 தமிழ் கிராமங்களுக்கு, சிங்கள பெயர் சூட்டுதல், மாவட்ட, நகர, கிராம எல்லைகளை மாற்றி அமைத்தல், 367 இந்து கோவில்கள் இடித்தல் போன்ற பணிகளில், இலங்கை அரசு ஈடுப்பட்டுள்ளது. உலகின், மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற முறையில், தமிழர்கள் மீதான இந்த கொடுமைகளை உடனடியாக தடுத்து நிறுத்தும், தார்மீக கடமை இந்தியாவுக்கு உள்ளது. இதற்கான, உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அந்த கடிதங்களில் கூறியுள்ளார்.



ராகுலுக்கு வாழ்த்து :


அகில இந்திய காங்கிரஸ் கட்சியின், துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட, உங்களை வாழ்த்துகிறேன். இளைஞரான நீங்கள், நாட்டின் கிராமப் பகுதிகளையும், விவசாயிகள் பற்றியும் நன்கு தெரிந்தவர். உங்கள் திறமையால், காங்கிரஸ், மேலும், புதிய வெளிச்சத்தை அடையும். - கருணாநிதி, தலைவர், தி.மு.க.,

1 கருத்து:

  1. பகுத்தறிவுவாதி இல்லை நாத்தீகவாதி கலைஞர் கருணாநிதி இந்துக் கோயில்களை இடிக்கப்பட்டதைக் கண்டித்து அறிக்கை விடுகிறார். ஆனால் இந்துக்கள் அல்லது இந்து முன்னணி, இந்து பரிஷத் போன்ற அமைப்புக்கள் மவுனம் சாதிக்கின்றன. ஒரு மசூதி இடிக்கப்பட்டால் உலகம் முழுதும் உள்ள முஸ்லிம்கள் கத்தியைத் தூக்குகிறார்கள். 47 இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவிக்கின்றன. இலங்கையில் உள்ள இந்துக்கோயில்கள் மட்டுமல்ல பாகிஸ்தான் மற்றும் கஷ்மீரில் உள்ள இந்துக் கோயில்களும் இடிக்கப்படுகின்றன. இந்துக்கள் அடித்து விரட்டப்படுகிறார்கள். கேட்பதற்கு ஆளில்லை. தமிழ்நாட்டில் உள்ள சைவ ஆதீனங்கள் என்ன செய்கின்றன?

    பதிலளிநீக்கு