சனி, 16 பிப்ரவரி, 2013

மொரீசியசு நாட்டில் முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப்பள்ளி

மொரீசியசு, பிப்.15- முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப்பள்ளி என்னும் பெயரில் அமைந்த இப்பள்ளி மாரியம்மன் கோயில் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் தொடங்கப் பட்டுள்ளது.        மொரீசியசு நாட்டில் முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப்பள்ளி 3.2.2013 அன்று மிகச் சிறப்பாக நடந்ததாக நண்பர்  கேசவன் சொர்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார்

அந்நாட்டின் முன்னோடித் தமிழறிஞர் அருணா சலம் புட்பரத்தினம் அவர்கள் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் தமிழ்ப்பணியையும் சிறப்பையும் தமது பொழிவில் விரித்துரைத்துள் ளார். கேசவன் சொர்ணம் பள்ளிக்கு இலக்குவனார் அவர்களின் பெயரை வைத்ததன் காரணத்தையும் பொருத்தத்தையும் விளக்கினார். செமன் தமிழ்ப் பள்ளியின் இன்றியமையாமையைக் கூறினார்.
மொரீசியசு நாட்டின் தமிழ்க்கோயில்கள் கூட்டமைப்பின் தலைவர் மேனன் மருதை அவர்கள் இந்த நன்முயற்சியைப் பாராட்டினார்.இன்றைய தலைமுறை கிரியோல் மொழி பேசி வருகிறது. தமிழ்ப்பள்ளி செயற்பட்டுச் சில ஆண்டுகளுக்குப் பின் இந்த நிலை மாறிவிடும்.

- விடுதலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக