சனி, 16 பிப்ரவரி, 2013

இலங்கை விவகாரம்:பன்னாட்டு விசாரணை தேவை: வைகோ

இலங்கை விவகாரம்:பன்னாட்டு விசாரணை தேவை: வைகோ



இலங்கைத் தமிழர் படுகொலை தொடர்பாக பன்னாட்டு விசாரணை தேவை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:-
ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் கூட்டம் வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற உள்ளது.இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர்களின் படுகொலை தொடர்பாக பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடைபெறுவதற்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.தீர்மானம் நிறைவேற்றி அவ்வாறு விசாரணை நடைபெற்றால்தான் இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும்.
தமிழர்கள் கொல்லப்படுவதற்கு அனைத்து உதவிகளையும் செய்து, உடந்தையாக செயல்பட்ட கூட்டுக் குற்றவாளியான இந்திய அரசு, இனிமேலாவது தமிழர்களுக்கு துரோகம் இழைக்காமல் இருக்க வேண்டும்.அதற்காக பன்னாட்டு விசாரணையை நடத்துவதற்கு மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக