திங்கள், 25 மார்ச், 2013

ஈழத் தமி​ழ​ருக்கு ஆத​ர​வாகப் போராட்​டம் தொட​ரும்​: மாண​வர்​கள் அறி​விப்பு

ஈழத் தமி​ழ​ருக்கு ஆத​ர​வாகப்போராட்​டம் தொட​ரும்​:

 மாண​வர்​கள் அறி​விப்பு

இலங்​கைத் தமி​ழ​ருக்கு ஆத​ர​வாக தொடர்ந்து போராட்​டம் நடத்​து​வோம் என மாண​வர்​கள் அறி​வித்​துள்​ள​னர்.​ வாக்​கா​ளர் அடை​யாள அட்​டை​யைத் திருப்​பிக் கொடுப்​பது,​​ ரயி​லில் டிக்​கெட் இல்​லா​மல் பய​ணிப்​பது உள்​பட பல்​வேறு முறை​க​ளில் வலு​வான போராட்​டங்​கள் நடத்​தப்​ப​டும் என்​றும் அவர்​கள் தெரி​வித்​த​னர்.​ ​
இலங்​கை​யில் தமிழ் ஈழம் அமைய பொது​வாக்​கெ​டுப்பு நடத்த வேண்​டும்,​​ இலங்கை அதி​பர் ராஜ​பட்​சவை போர்க்​குற்​ற​வா​ளி​யாக அறி​விக்க வேண்​டும் என்​பன உள்​பட பல்​வேறு கோரிக்​கை​களை வலி​யு​றுத்தி தமி​ழ​கம் முழு​வ​தும் கல்​லூரி மாணவ,​மாண​வி​கள் போராட்​டம் நடத்தி வரு​கின்​ற​னர்.​ மாண​வர்​க​ளின் போராட்​டம் தீவி​ரம் அடைந்து வரு​கிற நிலை​யில் அடுத்த கட்ட போராட்​டம் குறித்து மாண​வர்​கள் கூட்​ட​மைப்பு சார்​பில் திருச்​சி​யில் சனிக்​கி​ழமை ஆலோ​சனை கூட்​டம் நடை​பெற்​றது.​ இதில்,​​ தமி​ழ​கம் முழு​வ​தும் இருந்து கலை மற்​றும் அறி​வி​யல் கல்​லூரி,​​ பொறி​யி​யல் கல்​லூரி,​​ சட்​டக் கல்​லூரி என மொத்​தம் 60 கல்​லூ​ரி​களை சேர்ந்த மாண​வர் பிர​நி​நி​தி​கள் கலந்து கொண்​ட​னர்.​ கூட்​டத்​தில் 10-க்கும் மேற்​பட்ட தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப்​பட்​டன.​ இந்த தீர்​மா​னங்​க​ளில் முக்​கி​ய​மா​னவை குறித்து மாண​வர் கூட்​ட​மைப்​பி​னர் சென்​னை​யில் கூறி​ய​தா​வது:​
இலங்​கைத் தமி​ழர்​க​ளுக்கு ஆத​ர​வாக மாண​வர்​கள் நடத்தி வரும் போராட்​டம் மேலும் தீவி​ர​ம​டை​யும்.​ அடுத்த கட்ட போராட்​டம் தற்​போது உள்​ள​தை​விட வலு​வா​ன​தாக இருக்​கும்.​ இதற்​காக மாண​வர்​கள் ஒன்​று​கூடி முக்​கிய முடி​வு​களை எடுத்​துள்​ளோம்.​ இலங்​கைத் தமி​ழர்​கள் விஷ​யத்​தி​லும்,​​ தமி​ழக மீன​வர்​கள் இலங்கை கடற்​ப​டை​யி​ன​ரால் சுட்​டுக்​கொல்​லப்​ப​டு​கிற சம்​ப​வத்​தி​லும் மத்​திய அரசு செவி​சாய்க்​கா​மல் மௌ​ன​மாக இருந்து வரு​கி​றது.​ இத​னைக் கண்​டித்து மாண​வர்​க​ளா​கிய நாங்​கள் வாக்​கா​ளர் அடை​யாள அட்​டையை அந்​தந்த மாவட்ட ஆட்​சி​ய​ரி​டம் ​ திருப்பி கொடுக்க உள்​ளோம்.​
தமி​ழ​கம் முழு​வ​தும் மொத்​தம் 1 கோடியே 65 லட்​சம் மாண​வர்​கள் உள்​ள​னர்.​ இவர்​கள் அனை​வ​ரும் வாக்​கா​ளர் அடை​யாள அட்​டையை திருப்பி கொடுப்​பார்​கள்.​ எப்​போது கொடுப்​போம் என்​பதை பின்​னர் அறி​விப்​போம்.​ எங்​க​ளோடு சேர்ந்து பெற்​றோர்​க​ளை​யும் வாக்​கா​ளர் அடை​யாள அட்​டையை கொடுக்க வலி​யு​றுத்​து​வோம்.​ இதே​போல மத்​திய அர​சுக்கு எதி​ராக ஒத்​து​ழை​யாமை இயக்க போராட்​டத்தை நடத்த உள்​ளோம்.​ மத்​திய அர​சுக்கு செலுத்த வேண்​டிய வரி​களை செலுத்​து​வ​தில்லை.​ ரயில்​க​ளில் டிக்​கெட் எடுக்​கப்​போ​வ​தில்லை.​
மேலும்,​​ தமி​ழக சட்​டப்​பே​ர​வை​யில் இலங்கை மீது பொரு​ளா​தார தடையை விதிக்​கக் கோரி நிறை​வேற்​றப்​பட்ட தீர்​மா​னத்தை மத்​திய அரசு கண்​டு​கொள்​ளா​மல் உள்​ளது.​ அத​னால் மாண​வர்​க​ளா​கிய நாங்​கள்,​​ சிங்​க​ளர்​க​ளின் பொருள்​களை வாங்​கு​வ​து​மில்லை,​​ விற்​ப​து​மில்லை என முடிவு எடுத்​துள்​ளோம் என்று தெரி​வித்​த​னர்.​
இதற்​கி​டையே,​​ சென்னை லயோலா கல்​லூரி மாண​வர்​களை உள்​ள​டக்​கிய தமி​ழீழ விடு​த​லைக்​கான மாண​வர் கூட்​ட​மைப்பு தங்​க​ளது அடுத்த கட்ட போராட்​டம் குறித்த அறி​விப்பை சென்​னை​யில் திங்​கள்​கி​ழமை வெளி​யி​டு​கின்​ற​னர்.​

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக