செவ்வாய், 12 மார்ச், 2013

ஊதா நிறத்தில் நெல்!


ஊதா நிறத்தில் நெல்!

அதிக மகசூல் மற்றும் லாபம் தரும், "ஊதா நிற'த்திலான புது ரக நெல்லை கண்டுபிடித்து உள்ள புஷ்பம்:


நான், பரமக்குடியிலிருந்து, 31 கி.மீ., தொலைவில், முதுகுளத்தூரின் கீழமானாங்கரை கிராமத்தை சேர்ந்தவள். சொந்தமான, 3 ஏக்கர் நிலத்தில், 20 ஆண்டுகளாக விவசாயம் செய்கிறேன். ஒரு முறை சாதாரண, "ஆடுதுறை' ரக விதை நெல்லை வாங்கி, நாற்று நட்டு பயிரிட்டேன்.

பச்சை நிற பயிர்களுக்கு நடுவில், கத்தரி ஊதா நிறத்தில், நெல் மணிகளோடு, ஒரு பயிர் இருந்தது வியப்பை ஏற்படுத்தியது. புது ரகம் என்பதால், கவனத்தோடு பாதுகாத்தேன்.

ஆரம்பத்தில் ஊதா நிறத்தில் இருந்த நெற்பயிர், அறுவடையின் போது ரோஸ் நிறத்தில் மாறியது. அந்த நெற்கதிரில் இருந்த, 100 நெல் மணிகளும் நீளமாகவும், அடர்த்தியாகவும், "பாசுமதி' ரகம் போல் காட்சிஅளித்தது.

அறுவடை செய்த, 100 ஊதா நெல்லையும் விதை நெல்லாக்கி, மீண்டும் மீண்டும் பயிரிட்டேன். ஊதா நிற விதை நெல்லை, நாற்று விடாமல் நேரடியாக நிலங்களில் பயிரிடலாம். இரண்டு ஆண்டுகளில், 1 ஏக்கருக்கு தேவையான விதை நெல் கிடைத்தது. முதுகுளத்தூர் வேளாண் அதிகாரிகள் இதற்கு, "சின்னார்' என, பெயரிட்டுள்ளனர்.

அருகில் உள்ள மரபியல் அதிகாரிகளும், பேராசிரியர்களும் ஊதா நிற நெல்லைப் பற்றி ஆராய்ச்சி செய்கின்றனர். ஊதா நிற நெல்லுக்கு, ஆமதாபாத்தில் உள்ள, "தேசியக் கண்டுபிடிப்பு நிறுவனம்' என்னிடம் காப்புரிமை வழங்கி உள்ளது.

ஊதா நெல்லால் மற்ற விவசாயிகளும் பயனடைய, பணத்திற்கு விற்காமல், அவர்கள் வைத்திருக்கும் நெல்லை வாங்கி, இதை பதிலாக தருவேன். நெற்பயிரின் தடிமன் காரணமாக, அதிக காற்று வீசினாலும், பயிர்கள் சாய்வது இல்லை. பயிரிட்ட, மூன்று மாதங்களில் அறுவடை செய்யலாம்.

சாதாரண ரக நெல்லாக இருந்தாலும், ஒரு மூட்டை, 1,200 ரூபாய்க்கு விற்கிறோம். அனைத்து செலவுகள் போக, ஒரு ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும்.

என் கண்டுபிடிப்பிற்கு, சமீபத்தில் ஜனாதிபதியிடமிருந்து விருதும் கிடைத்துள்ளது. தொடர்புக்கு: 97508 45600.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக