புதன், 10 ஏப்ரல், 2013

எப்போதும் நீர் பாய்ச்சலாம்!






எப்போதும் நீர் பாய்ச்சலாம்!

மண்ணின் ஈரப் பதத்திற்கு ஏற்ப, தானியங்கி முறையில் நீர் இறைக்கும் இயந்திரம் கண்டுபிடித்த, மாணவன் சதீஷ் குமார்: நான், புதுக்கோட்டையின், சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில், "எலெக்ட்ரிக்கல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ்' படிக்கிறேன். கல்லூரியில், ஆண்டுதோறும் பொறியாளர் தினத்தன்று, அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சிநடைபெறும்.இதற்காக, இருநண்பர்களுடன் இணைந்து, புது கருவி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். விவசாயம் தொடர்பாக சிந்தித்த போது, இரவு நேரத்திலும் விழித்திருந்து, பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கான மாற்று உபாயத்தைக் கண்டுபிடிக்கமுனைந்தோம்.பயிர்களுக்கு நீர் தேவையான போது, தானாகவே நீர் பாய்ச்சும் இயந்திரம் இருந்தால், நன்றாக இருக்கும் என்ற சிந்தனையில் தோன்றியதே, தானியங்கி முறையில் நீர் இறைக்கும் இயந்திரம்.நீர் இறைக்கும் மின் மோட்டருக்கும், "மைக்ரோ கன்ட்ரோலர்' எனும், நுண் கட்டுப்பாட்டு தகட்டுக்கும் தேவையான மின்சாரம், "டிரான்ஸ்பார்மர்' எனும், மின்மாற்றியால் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

நுண் கட்டுப்பாட்டு தகட்டில் பொருத்தப்பட்டுள்ள, இரு, "எலெக்ட்ரோடு'கள் மண்ணிற்குள் புதைக்கப்பட்டு, ஈரப்பதத்தை அறிய உதவுகின்றன.நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிரைப் பொறுத்து, அதற்கு தேவையான மண்ணின் ஈரப் பதத்தை, நிர்ணயித்தால் மட்டும் போதும். மண்ணின் ஈரப் பதம் குறையும் போது, தானாக மோட்டார் இயக்கப்பட்டு, பயிருக்கு தேவையான நீர், நிலத்திற்கு பாய்ச்சப்படுகிறது.மண், அதிக ஈரப்பதத்தை அடைந்ததும், மோட்டார் தானாக நிறுத்தப்படுகிறது. எளிதில் கிடைக்கும் பொருட்களை வைத்தே, இந்தஇயந்திரத்தை தயாரித்தோம். தற்போது,தர்மபுரியில் உள்ள ஒரு தொழில்நுட்பகல்லூரியில், தேசிய அளவில் நடைபெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில்பங்குபெற்று, இரண்டாம் பரிசு பெற்று உள்ளோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக