ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

தங்கச்சிற்றுருச்சிற்பி வெங்கடேசு...



தங்கச்சிற்றுருச்சிற்பி வெங்கடேசு...
 
ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு திறமை இருக்கத்தான் செய்யும்,அதை வெளிக்கொண்டு வந்து பாராட்டினால் போதும்,அவர் திறமையின் மிச்சத்தை காட்டுவார்,விரைவில் உச்சத்தை தொடுவார்.

அந்த வேலையைத்தான் நமது இணையதளத்தின் பொக்கிஷம் செய்து வருகிறது.
அந்த வரிசையில் வருகிறார் வெங்கடேஷ்.

கோவை சிங்கநல்லூரைச்சேர்ந்தவர்,வயது 27,ஏழாவது வரை படித்துள்ளார்.
அங்குள்ள தங்க நகை கடையில் நகை செய்யும் தொழிலாளியாக உள்ளார்,காலையில் ஒன்பது மணிக்கு வேலைக்குள் நுழைந்தால் இரவு பத்து மணி வரை வேலை,வேலைதான்.

வெங்கடேஷ்க்கு ஏதோ ஒரு வகையில் சாதனை செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது,அது பற்றிய சிந்தனையில் இருந்தபோது உடன் வேலை செய்பவர் பத்திரிகையில் வந்த ஒரு செய்தியை ஆச்சர்யத்துடன் படித்துள்ளார்.

செய்தியில் இருந்த ஆச்சர்யம் என்னவென்றால் ஒருவர் இரண்டு கிராம் எடையில் தங்கத்தில் சைக்கிள் செய்து சாதனை படைத்துள்ளார் என்பதுதான்.இதைப்படித்ததும் இதைவிட குறைவான எடையில் நாம் ஏன் சைக்கிள் செய்யக்கூடாது என்று முடிவு செசய்து 180 மில்லி கிராமில் ஒரு தங்க சைக்கிளை செய்துவிட்டார்.,இந்த சைக்கிளின் ஹேண்டில் பாரை திருப்பமுடியும்,பெடலை சுழற்ற முடியும்,சக்கரமும் சுற்றும்.
இவ்வளவு நுணுக்கமாக வெங்கடேஷ் உருவாக்கிய சைக்கிளை பார்த்து முதலில் பாராட்டியவர் இவரது முதலாளி அம்பிகாபதிதான்.இவர் தந்த ஊக்கத்தால் 150 மில்லியில் கிரிக்கெட் உலககோப்பை,கோணியம்மன் கோவில் தேர்,கிட்டார்,தாமரை பூ மற்றும் துப்பாக்கி.

ஊதினால் பறந்துவிடும் 170 மில்லிகிராம் எடையில் இவர் செய்துள்ள துப்பாக்கியை, நிஜ துப்பாக்கி போல மடக்கி திறக்கலாம்,குண்டு போடும் இடத்தை சுழற்றலாம்.
18 காரட் தங்கத்தை உபயோகித்து, இப்படி இவர் செய்யும் தங்க மினியேச்சசரின் மதிப்பு ஐநூறு ரூபாய்க்குள்தான்,ஆனால் இதன் பின்னணியில் உள்ள இவரது உழைப்பு மிகவும் பெரியது.ஒரு மினியேச்சர் செய்ய சமயத்தில் ஒரு நாள் கூட ஆகிவிடுமாம்.வேலை இல்லாத நாளில்,நேரத்தில் இது மாதிரி பொருட்களை இவர் உருவாக்குகிறார்.இவரது தங்க மினியேச்சர் அனைத்துமே நிச்சயம் கின்னஸ் ,மற்றும் சாதனை புத்தகங்களில் இடம் பெறக்கூடியதுதான்.,ஆனால் அதற்கு முதலில் பத்திரிகையில் இது பற்றிய செய்தி வரவேண்டும் என்பது முதல் விதி,நீங்கள் என் சாதனை கனவு,நனவாக வழிகாட்டுவீர்களா என்ற வெங்கடேஷ்க்கு தந்த பதில்தான் இந்த கட்டுரை.வெங்கடேஷின் தொடர்பு எண்:9943971200.

- எல்.முருகராசு
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக