வியாழன், 25 ஏப்ரல், 2013

கண்ணீரைத் துடையுங்கள்!

கண்ணீரைத் துடையுங்கள்!

மழலையர் துவக்கப் பள்ளியை நடத்த, இலவசமாக, செருப்புக்கு பாலிஷ் போடும் கல்லூரி ப் பேராசிரியர், செல்வகுமார்: நான், தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றுகிறேன். அப்பா, ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர். தாத்தா, திருவாரூர் கோவிலில் வேதம் ஓதுபவர். ஆதரவற்ற குழந்தைகளுக்காக மழலையர் பள்ளியை துவக்கி, முற்றிலும் இலவசமாக கற்று தர எண்ணி, என் மனைவியிடம் தெரிவித்த போது, அவரும் அதற்கு ஆதரவு தெரிவித்தார்.சென்னை, பாடியநல்லூரின், மருது பாண்டிய நகரில், "மதர் தெரசா மழலையர் தொடக்க பள்ளி'யை, ஒன்பது ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்தேன். இங்கு, 100க்கும் மேற்பட்ட அனாதை மற்றும் ஆதரவற்றக் குழந்தைகளுக்கு இலவச கல்வியும், ஏழைக் குழந்தைகளிடம் மிகக் குறைந்த கட்டணம் என, எல்.கே.ஜி., முதல் 5ம் வகுப்பு வரை கற்று தருகிறோம். குழந்தைகள் பாதுகாப்பாக சென்று வர, இலவச வாகன வசதியும் செய்து தந்துள்ளோம்.பள்ளியின் நிர்வாக செலவுக்கு தேவையான நிதியை, பொது மக்களின் செருப்பை துடைத்து, "பாலிஷ்' போடுவதன் மூலம் சேர்க்கிறேன். கல்லூரி வேலை நாட்கள் போக, மீதமுள்ள சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ஊர் ஊராக சென்று, இப்பணியில் ஈடுபடுவேன்.ஒரு பேராசிரியராக, கல்லூரிக்கு எப்படி செல்வேனோ, அதுபோலவே, சுத்தமான ஆடை உடுத்தியே நிதி சேகரிப்பில் ஈடுபடுவேன். "அன்புக் குழந்தைகளின் கல்விக்காக நான், உங்களின் செருப்பினைத் துடைக்கிறேன்; நீங்கள் அவர்களின் கண்ணீரைத் துடையுங்கள்' என்ற வாசகம் அடங்கிய பிளக்ஸ் பேனரை, சாலையோரத்தின் நடைபாதையில் வைத்து, அதன் அடியில் அமர்ந்தே, செருப்புக்கு பாலிஷ் போடும் பணியை செய்கிறேன்.
என்னிடம் செருப்புக்கு பாலிஷ் போடும் நபர்களிடம், "இவ்வளவு தாருங்கள்' என, குறிப்பிடாமல், அவர்கள் தரும் நிதியை வாங்கிக் கொள்வேன். 10, 50, 100 எனவும், சிலர், 500 ரூபாயும் தருவர். ஜாதி, மத, ஏற்றதாழ்வின்றி, அனைவரும் சமம் என்பதே, என் ஜாதி, என் மதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக