திங்கள், 8 ஏப்ரல், 2013

"அம்மா' திட்டத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் விளக்கம்




"அம்மா' திட்டத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் விளக்கம் 


தமிழக அரசின், "அம்மா' திட்டத்துக்கு, வருவாய்த் துறை புது விளக்கம் கொடுத்துள்ளது. எதிர்க்கட்சியினர், கேள்வி எதுவும் எழுப்பிவிடக்கூடாது என்பதற்காகவே, ஆங்கிலத்தில் அதற்கான வாசக விளக்கம் தரப்பட்டிருக்கிறதோ என, எண்ணத் தோன்றுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், இலவச வீட்டு மனைப்பட்டா, உதவித்தொகை, நலத்திட்ட உதவி, ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக, கலெக்டர் அலுவலகத்துக்கும், தாலுகா அலுவலகத்துக்கும் தொலை தூரங்களில் இருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவர்களுடைய சிரமத்தை போக்கும் வகையில், முதல்வரின் பிறந்த நாளையொட்டி, வருவாய்த் துறை சார்பில், அம்மா திட்டம் துவக்கப்பட்டது. அதிகாரிகளை தேடி மக்கள் வருவதைத் தவிர்த்து, மக்களை தேடி அதிகாரிகள் நேரடியாக வந்து மனுக்கள் பெறுவதே இத்திட்டத்தின் நோக்கம்.ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, வாரம் தோறும் செவ்வாய் கிழமையன்று, தாசில்தார், ஆர்.ஐ., - வி.ஏ.ஓ., மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அங்கு செல்வர். அக்கிராம மக்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே தகவல் அளிக்கப்படும்.அங்கு செல்லும் அதிகாரிகள், மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, சாதி, இருப்பிடம், வருமானச் சான்றிதழ், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், நிலப்பட்டா உள்ளிட்ட, 10 வகையான மனுக்களை பெறுவர். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இந்த திட்டம், முதல்வரை, அவருடைய கட்சியினர் அன்புடன் அழைக்கும், "அம்மா' என்ற பெயரில் உருவாக்கப்பட்டு உள்ளது.

எதிர்க்கட்சியினர், அ.தி.மு.க., அரசை கிண்டலடிக்கக்கூடாது என்ற நோக்கில், தற்போது, அம்மா என்பதற்கான ஆங்கில வாசகம் உருவாக்கப்பட்டு உள்ளது."அம்மா' என்பதற்கு (Assured Maximum Service to Marginal People in All villages) என்று விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது. முதல்வர் பெயரில், அந்த திட்டம் இல்லை, மக்களை தேடி வருவாய்த் துறை செல்னர்.
வதற்காகவே இத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் கூறுகின்றனர்.இதுகுறித்து, வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, "எந்த பெயரில் இருந்தால் என்ன, மக்களுக்கு உண்டான சேவைகள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதே, எங்களுடைய நோக்கம்' என்றார்.
"மத்தியில் அதிக ஆண்டுகள் ஆட்சி புரியும் காங்கிரஸ் முன்னணி திட்டங்களுக்கு காந்தி, இந்திரா, ராஜிவ் என்று பெயர் சூட்டுவது போல, இதுவும் இருக்கட்டுமே' என, பொதுமக்கள் பலரும் தெரிவித்த
- நமது செய்தியாளர், தினமலர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக