புதன், 10 ஏப்ரல், 2013

சீன அரிய வகை தாமரைக் கிண்ணம்

சீனப்பேரரசர் காலத்து  அரிய  வகை தாமரை க் கிண்ணம் 52 கோடிக்கு ஏலம்
 
சீனப்பேரரசர் காலத்து அபூர்வ வகை தாமரை கிண்ணம் 52 கோடிக்கு ஏலம்
ஆங்காங், ஏப். 10-

ஹாங்காங் சோத்பி ஏல மையத்தில், 1662-1722 ஆண்டு காலத்தில் சீனாவை ஆண்ட பேரரசர் காங்ஜி பயன்படுத்திய அபூர்வ வகை சிகப்பு தாமரை கிண்ணம் ஏலத்துக்கு வந்தது.

இளம்சிகப்பு, மஞ்சள் மற்றும் உதா நிறத்துடன் வரையப்பட்ட அந்த தாமரை கிண்ணத்தை, ஹாங்காங் பீங்கான் பொருட்கள் விற்பனையாளர் 9.5 மில்லியன் டாலருக்கு (சுமார் 52 கோடிக்கு) ஏலம் எடுத்தார்.

கடந்த வருடம் இதுபோன்று பூ வடிவிலான அரசர் காலத்து வண்ணக்கிண்ணமும் 27 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக