புதன், 3 ஏப்ரல், 2013

கல்லூரிகளில் பேசா அமைதிப் போராட்டம்






கல்லூரிகளில்   பேசா அமைதிப் போராட்டம்: மாணவர் கூட்டமைப்பு அறிவிப்பு



சென்னை: ஐ.நா., சபையில் தீர்மானம் நிறைவேறும் வரை, கல்லூரிகளில், தினமும் மவுன போராட்டத்தை நடத்த உள்ளதாக, மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைக்கான மாணவர் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ஜோ பிரிட்டோ: கல்லூரிகள் இன்று திறக்க உள்ள நிலையில், எங்களின் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுத்துள்ளோம். தினமும் கல்லூரியில், காலை, 11:00 மணி முதல், 11:02 மணி வரை, மவுன புரட்சி போராட்டத்தை மேற்கொள்ள உள்ளோம். அப்போது, மாணவர்கள் எங்கிருந்தாலும், இரு நிமிடங்கள் அமைதி காப்போம். ஐ.நா., பதிலளிக்கும் வரை, எங்களின் போராட்டம் தொடரும். முதல் கட்டமாக, தமிழகம் முழுவதும் நடக்கும் போராட்டத்திற்கு, பின், உலக மாணவர்களையும் இணைக்க திட்டமிட்டுள்ளோம்.

தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாரிமைந்தன் கூறியதாவது: அரசு, கல்லூரிகளை திறந்தாலும், மாணவர்கள் போராட்டம் தொடருவதை தெரிவிக்கும் வகையில், கறுப்பு பேட்ஜ் அணிந்து கல்லூரிக்குச் செல்வோம். தேர்வுகள் முடிந்த பின், எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம்.

தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் இளையராஜா: கல்லூரிகளை, அரசு திறந்துள்ளதை வரவேற்கிறோம். கல்லூரிகள் வகுப்புகள் முடிந்த பின், மாலையில் போராட்டம் தொடரும். தேர்வுகள் பாதிக்கப்படாத வகையில், எங்கள் போராட்டம் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக