செவ்வாய், 14 மே, 2013

இலங்கையில் தமிழர் சிக்கலுக்குத் தீர்வு காணக் குழு

இலங்கையில் தமிழர் சிக்கலுக்குத் தீர்வு காணக் குழு: தமிழ்த் தேசிய கூட்டணி அமைத்தது


இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்கள் எதிர்கொள்ளும் இனப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான வரைவு அறிக்கையை தயாரிப்பதற்காக 5 கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டணி (டிஎன்ஏ) ஒரு குழுவை அமைத்துள்ளது.
மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழு, இனப் பிரச்னைக்கான தீர்வுகளை உள்ளடக்கிய வரைவு அறிக்கையை தயாரிக்கும் என மன்னார் பகுதிக்கான பாதிரியார் ராயப்பு ஜோசப் கூறியுள்ளார். தமிழ் தேசிய கூட்டணியின் மூத்த தலைவர்களை கடந்த சனிக்கிழமை சந்தித்துப் பேசிய பாதிரியார், தமிழ் தேசிய கூட்டணியை அரசியல் கட்சியாக பதிவு செய்வது தொடர்பான கருத்து வேறுபாடுகளைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். எனினும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதுதொடர்பாக, டிஎன்ஏ-வின் உறுப்பு கட்சிகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான வரைவை தயாரிக்கும் பணி இலங்கை தமிழ் அரசு கட்சியின் (ஐடிஏகே) மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது. டிஎன்ஏ-வின் அடுத்த கூட்டம் வவுனியாவில் ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும். தமிழ் தேசிய கூட்டணி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாத நிலையில், ஐடிஏகே என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரதிநிதியாக செயல்பட்ட டிஎன்ஏ, இனப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது குறித்து அதிபர் மகிந்த ராஜபட்சவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. எனினும், இந்தப் பேச்சுவார்த்தை 2012ஆம் ஆண்டில் தடைபட்டது.
இனப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழுவில் சேருமாறு டிஎன்ஏவுக்கு ராஜபட்ச கோரிக்கை விடுத்தார். ஆனால் இந்த முயற்சி வீணானது எனக் கூறி அதை ஏற்க டிஎன்ஏ மறுத்து விட்டது.

1 கருத்து:

  1. A good decision.Something that was long over due. Better late than never.
    Hope the earlier mistake is not repeated. ITAK started with a demand for Federal constitution and their goal was Fedaralism. It was rejected. They should have started with separation and might have ended with federalism.

    In a bargain you must always ask for more. The other side will totally reject it. Ask the other side to submit AN ALTERNATIVE peoposal.

    The other side will start with the minimum. Now insist on a mediator before starting the "bargaining"

    பதிலளிநீக்கு