வியாழன், 2 மே, 2013

கலைஞர் குடும்பத்தினருக்குக் கணையாழிகள் பரிசுப் போட்டி


கருணாநிதி பிறந்த நாளையொட்டி
தமிழில் பெயர் சூட்டும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்:
 மா.சுப்பிரமணியன்

கலைஞர் குடும்பத்தினர் தாங்கள் நடத்தும் சன்  தொலைக்காட்சி முதலான தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் நைன்கிளெவுட் முதலான திரை நிறுவனங்களுக்கும்  சன்சைன் முதலான கல்விக்கூடங்களுக்கும்  சன்ரைசர் மட்டையாட்டக்குழு முதலான பிற அமைப்புகள், வணிக நிறுவனங்களுக்கும் உதயநிதி முதலான குடும்பத்தினருக்கும் உள்ள பெயர்களை மாற்றித் தமிழ்ப் பெயர் சூட்டினால் அவர்களுக்குத்  தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் கணையாழிகள் அணிவிக்கப் பெறும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்புக்கழகம் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கருணாநிதி பிறந்த நாளையொட்டி த் தமிழில் பெயர் சூட்டும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம்: மா.சுப்பிரமணியன்
சென்னை, மே. 2-

தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளரும், முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. பொருளாளரும், இளைஞர் அணிச் செயலாளருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில், கலைஞர் கருணாநிதியின் 96-வது பிறந்த நாளை நாடெங்கும் எழுச்சியோடு கொண்டாடுவது என்றும் அதனையொட்டி வீதிதோறும் கழகக் கொடியேற்று விழா, ஏழை எளியோர்க்கு நலத் திட்ட உதவிகள் வழங்குதல், கருத்தரங்கம், கவியரங்கம், மருத்துவ முகாம், ரத்த தானம், விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி தமிழகத்தின் புலவர் பெருமக்களும், கவிஞர் பெருமக்களும் பங்கேற்று தலைவர் கலைஞர் அவரின் பரிமாணங்களை அவரவர் நடையில் எழுதும் வண்ணம் மாபெரும் கவிதைப் போட்டி ஒன்றினை நடத்திட திட்ட மிடப்பட்டுள்ளது. போட்டிகான கவிதைகள், ‘‘வரலாறாய் வாழ்பவர்’’ என்கிற தலைப்பில் இரண்டு பக்கத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கவிதைகள் மரபுக் கவிதைகளாகவோ அல்லது புதுக்கவிதைகளாகவோ இருக்கலாம்.

தேர்வாகும் கவிதைக்கு முதல் பரிசாக ரூபாய் ஒரு லட்சமும் - இரண்டாம் பரிசாக ரூபாய் 50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூபாய் 25 ஆயிரமும் ஆறுதல் பரிசாக 10 கவிஞர்களுக்கு தலா ரூபாய் ஐந்தாயிரமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும். கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி தொடங்கி 10-ந்தேதிக்குள் விரிவாக்கப்பட்ட சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட 200 மாநகராட்சி வார்டுகளில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயரை சூட்டி அதற்கான சான்றுகளை 15-ந்தேதிக்குள்ளும், கவிதைப் போட்டியில் பங்கேற்க விரும்பு கவிஞர் பெருமக்கள், தங்களுடைய கவிதைகளை, வருகின்ற மே மாதம் 10-ந்தேதி தொடங்கி மே 25-ந்தேதிக்குள்ளும், ‘அன்பகம்‘, எண்.4 தொழிலாளர் குடியிருப்பு, கிண்டி, சென்னை-600032 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தமிழ் பெயர் சூட்டும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Thursday, May 02,2013 03:12 PM, Ilakkuvanar Thiruvalluvan said: 0 0
கலைஞர் குடும்பத்தினர் தாங்கள் நடத்தும் சன் தொலைக்காட்சி முதலான தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் நைன்கிளெவுட் முதலான திரை நிறுவனங்களுக்கும் சன்சைன் முதலான கல்விக்கூடங்களுக்கும் சன்ரைசர் மட்டையாட்டக்குழு முதலான பிற அமைப்புகள், வணிக நிறுவனங்களுக்கும் உதயநிதி முதலான குடும்பத்தினருக்கும் உள்ள பெயர்களை மாற்றித் தமிழ்ப் பெயர் சூட்டினால் அவர்களுக்குத் தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் கணையாழி அணிவிக்கப் பெறும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்புக்கழகம் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
Thursday, May 02,2013 02:41 PM, ஈன said: 0 0
எங்கிருந்து வந்தது இந்த தங்கம். விரைவில் அமலாப்பிரிவினர் இவரது மற்றும் நண்பர் உறவினர்கள் வீடுகளை முற்றுகை இடுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
Thursday, May 02,2013 02:03 PM, சன் ரைசெர்ஸ் said: 2 5
இவங்க குடும்ப கம்பெனி பெயர் எல்லாம் இப்படி இருக்கு -
Thursday, May 02,2013 01:58 PM, டீக்கடை பெஞ்சு said: 1 8
மை சைல்டு நேம் இஸ் "தமிழ் மகன்"..! தங்க மோதிரம் தருவீங்களா..?
On Thursday, May 02,2013 02:01 PM, சோமு said : 3 6
திமுக வுக்கு ஒட்டு போடணும் போடுவீங்களா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக