செவ்வாய், 14 மே, 2013

தமிழ்த்தாய்க்குச் சிலை - செ.

அமெரிக்க ிடலைத் தேவி சிலை போல உரூ. 100 கோடியில் மதுரையில் தமிழ்த்தாய்க்குச் சிலை - செ.


 Tn Govt Establish Massive Statue Mother Tamil In Madura
சென்னை: அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைப் போல மதுரையில் பிரமாண்ட அளவில் தமிழ்த் தாய்க்கு ரூ. 100 கோடி செலவில் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ்இந்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். அவர் கூறுகையில்,
துரையில் 100 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்த் தாய் சிலை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
பெருமை வாய்ந்த தமிழ் மொழியை சிறப்பிக்கும் வண்ணம், அமெரிக்கா நாட்டின் பெருமையையும் புகழையும் உலகளவில் பரப்பும் வகையில் அமைந்துள்ள சுதந்திர தேவி சிலையைப் போல, தமிழர்களின் நாகரீகம், பண்பாடு, இலக்கியச் செல்வங்கள், கட்டடக் கலைத் திறன் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துக் காட்டும் வகையில், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்த் தாய் சிலை அமைக்கப்படும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்த் தாய்ப் பூங்கா
மேலும், ஐவகை நிலங்களான குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை ஆகியவற்றின் மாதிரிகளை உருவாக்கி தமிழர்களின் தொன்மைச் சான்றுகளாய் விளங்கும் சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள மரம், செடி, கொடிகளுடன் தமிழ்த் தாய்ப் பூங்கா ஒன்றும் அங்கு உருவாக்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக