வியாழன், 2 மே, 2013

மாணவர்களும் சம்பாதிக்கலாம்!




மாணவர்களும் சம்பாதிக்கலாம்!

"பார்ட் டைம்' எனும் பகுதி நேர வேலையில், 150 கோடி சம்பாதித்த, 17 வயது சிறுவன் நிக்: நான், இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவன். என் பெற்றோர், ஒன்பது வயதிலேயே கணினி வாங்கி தந்தனர். அதில் படம் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது என, ஆரம்பத்தில் மற்ற குழந்தைகளை போலவே இருந்தேன். ஆர்வ மிகுதியால் கணினி தொடர்பான, "சாப்ட்வேர் புரோகிராம்'களை எழுத ஆரம்பித்த போது, எனக்கு, 15 வயது. விளையாட்டாக, "ட்ரிம்மிட்' என்ற சாப்ட்வேரை எழுதி, இணையத்தில் வெளியிட்டேன். அதை பயன்படுத்திய பலர், சிறப்பாக உள்ளதாக பாராட்டினர். சிலர், அதில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டினர். பாராட்டுக்கு முக்கியத்துவம் தராமல், சுட்டிக் காட்டப்பட்ட தவறுகளை திருத்தி, "சம்லி' என்ற புதிய புரோகிராமை வெளியிட்டேன். என் புதிய வெளியீட்டை பார்த்த பலரும், சிறப்பாக உள்ளதாக பாராட்டினர். யாஹூ நிறுவனம், என் சம்லி சாப்ட்வேரின் பயன்பாடுகளை அறிந்து, அதை விலைக்கு வாங்க முற்பட்டது. அதை, 150 கோடிக்கு விற்ற போது, எனக்கு, 17 வயது. பள்ளியில் படித்தபடி, சும்மா ஓய்வு நேரத்தில் பகுதி நேர வேலையாக எழுதியதே, இந்த சாப்ட்வேர். இங்கிலாந்தில், மாணவர்கள் பள்ளியில் படிக்கும் போதே, பகுதி நேரமாகவோ அல்லது நண்பர்களுடன் இணைந் தோ, சுயமாக தொழில் துவங்குவது வழக்கம். பெற்றோரும் இதற்கு தடை விதிக்காமல், இதுவும் ஒருவகையான படிப்பு என்ற மனநிலையில் இருப்பர். சிலர், பகுதிநேர பணியின் ஆர்வமிகுதியால் படிப்பை நிறுத்தி, முழுநேரத் தொழிலாக செய்கின்றனர். இதனால், பலர் ஜெயித்து தங்கள் வாழ்க்கையில் முன்னேறியுள்ளனர். முயற்சிகள் தோற்றாலும் பிரச்னையில்லை; மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர, இங்கிலாந்தின் கல்வி முறை உதவுகிறது. மைக்ரோசாப்ட், ஆப்பிள், யாஹூ, கூகுள், பேஸ்புக் போன்ற கணினி துறையில் சிறந்த நிறுவனங்கள், என்னைப் போன்ற மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டவை என்பதால், பகுதி நேர வேலையிலும் மாணவர்கள் சாதிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக