ஞாயிறு, 12 மே, 2013

புற்றுநோய்க் கட்டிகளை க் கண்டுபிடிக்கும் நாய்கள்

புற்றுநோய்க் கட்டிகளை க் கண்டுபிடிக்கும் நாய்கள்

ஊட்டி:ஊட்டியில் நாய்களின் சாகசம் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.தென்னிந்திய கெனல் கிளப் சார்பில், நாய்கள் கண்காட்சி, ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நேற்று துவங்கியது. நாய்களின் கீழ்படிதல் குறித்த சோதனை நடத்தப்பட்டது. கோவை, நீலகிரி, நாமக்கல், சிவகங்கை, சத்யமங்கலம், புதுச்சேரி பகுதிகளில் இருந்து, 32 நாய்கள் பங்கேற்றன. போலீஸ் பயிற்சி மோப்ப நாய்கள், பயிற்சியாளரின் கட்டளைக்கு கீழ் படிந்தன. பல வெளிநாட்டு வகை நாய்களும் இடம் பெற்றுள்ளன. இன்று, இரண்டாவது நாள் கண்காட்சியில், சில அரிய வகை நாய்கள் இடம் பெறவுள்ளன.

கண்காட்சி பற்றி, தென்னிந்திய கெனல் கிளப் தலைவர், கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: இமாச்சலப் பிரதேசம், காஷ்மீர் போன்ற பனிமலை சூழ்ந்த பகுதியில் சிக்கிக் கொண்டவர்களை மோப்பம் பிடித்து, அவர்களை இழுத்து வரும் திறன் கொண்ட, "செயின்ட், பெர்னார்ட்' என்ற நாய்கள், காட்சியில் பங்கேற்க உள்ளன. தவிர, "பீகில்' என்ற நாய், தற்போது மேலை நாடுகளில், மருத்துவம் மற்றும் துப்பறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. மனித உடலில் மோப்பம் பிடித்து, கேன்சர் நோய் கிருமி கட்டி உள்ள இடத்தை, நாய்கள் துல்லியமாக சுட்டி காட்டுகின்றன.
இவை, சர்வதேச விமான நிலையங்களில், பயணிகள் கொண்டு வரும் சூட்கேஸ், பைகளை மோப்பம் பிடித்து, அதில் போதை பொருட்கள் உள்ளதா என்பதை, மிகத் துல்லியமாக கண்டுபிடித்து, போலீசாருக்கு, துப்புக் கொடுக்கின்றன. இவ்வகை நாய்கள் இந்த கண்காட்சியில் இடம் பெறவுள்ளன.இவ்வாறு, கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக