திங்கள், 29 ஜூலை, 2013

நான்காண்டுகளில் 555 போலிச் சூழடைப்புக் கொலைகள்

நான்காண்டுகளில் 555 போலி "என்கவுன்டர்'கள்

புதுடில்லி:கடந்த, 2009ம் ஆண்டிலிருந்து, 2013 வரை, நாடு முழுவதும், 555 போலி என்கவுன்டர்கள் நடைபெற்றுள்ளதாக, புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.

போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்கும் குற்றவாளிகள் மற்றும் குற்றவாளிகளை கைது செய்யப் போகும் போது, அவர்களுடன் ஏற்படும் சண்டையின் போது, கொல்லப்படும் குற்றவாளிகள் மீது போலீசார் மேற்கொள்ளும் நடவடிக்கை, "என்கவுன்டர்' என அழைக்கப்படுகிறது.ஆனால், உண்மையான காரணங்கள் இல்லாமல், தவறான நோக்கத்தில், குற்றவாளிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொல்வதை, போலி என்கவுன்டர் என, பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில், கடந்த நான்காண்டுகளில், நாடு முழுவதும், 555 போலி என்கவுன்டர்கள், போலீசாரால் நிகழ்த்தப்பட்டுள்ளதாக, தேசிய மனித உரிமை கமிஷனுக்கு கிடைத்த புகார்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவற்றில், அதிகப்படியாக, உத்தர பிரதேசத்தில் மட்டும், 138 என்கவுன்டர்கள் நடந்துள்ளன. இரண்டாவது இடத்தை பெற்றுள்ள மணிப்பூர் மாநிலத்தில், 62 என்கவுன்டர்கள் நிகழ்ந்துள்ளன. மேலும், அசாமில் 52, மேற்கு வங்கத்தில் 35, ஜார்க்கண்டில் 30, சத்தீஸ்கரில் 29 என்கவுன்டர்கள் நடந்துள்ளன.சந்தேகத்திற்கு இடமான என்கவுன்டர்களில், 201 வழக்குகளில், 11.43 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க, தேசிய மனித உரிமை கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக