புதன், 24 ஜூலை, 2013

தமிழ் பேசுபவர்களுடன் மட்டும்தான் பணியாற்ற வேண்டும்: இயககுநர்கள் சங்கம்

பிற மொழியினருக்கு எதிரான தீர்மானம் இல்லை. தமிழ் த்திரை உலகில் பணியாற்றுவோர் தமிழ் அறிந்தவர்களாக இருக்க வேண்டும். அல்லது தமிழை அறிந்து கொண்டு பணியாற்ற வேண்டும் என்பது நல்ல முடிவு. பலரும் பல ஆண்டுகளாக வற்புறுத்தி வந்த கருத்து. அவ்வாறிருக்க < ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டுமாம். >எனக் கிண்டல் தொனியில் தினமணி குறிப்பிடலாமா? இவ்வாறு எழுதும் செய்தியாளர்கள் தினமணிக்கு இழுக்கு தேடுபவர்கள் என்பதை உணர்க! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

தமிழ் பேசுபவர்களுடன் மட்டும்தான் இயக்குநர்கள் பணியாற்ற வேண்டும்: இயககுநர்கள் சங்கம் தடாலடி


தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்தது. இதனையொட்டி சென்னையில் பத்திரிகையாளர்ர் சந்திப்புக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் சங்க தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் வி.சேகர், நிர்வாகிகள் சண்முக சுந்தரம், ராமதாஸ், டி.பி.கஜேந்திரன், உள்பட பலர் கலந்துகொண்டனர். கடந்த ஒரு மாதத்தில் புதிய நிர்வாகிகள் ஆற்றிய பணிகள் குறித்தும் இனி ஆற்றப் போகும் பணிகள் குறித்தும் அப்போது விரிவாக விளக்கப்பட்டது.
இதுபற்றி சங்கத் தலைவர் விக்ரமன் மேலும் கூறியதாவது: உதவி இயக்குனர்களுக்கு இனி மாதச் சம்பளம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒரு திரைப்படம் ரூ.2 கோடியில் பட்ஜெட் என்றால், அதற்கு ஒரு தொகை சம்பளமாகவும், ரூ.5 கோடி பட்ஜெட் என்றால், அதற்கு ஒரு தொகை சம்பளமும், ரூ.10 கோடிக்கு ஒரு தொகையும், ரூ.10 கோடிக்கு மேல் பட்ஜெட் கொண்ட படங்களுக்கு ஒரு தொகை சம்பளமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல இயக்குனர்கள் உதவி இயக்குனர்களுக்கு சம்பளம் வழங்கினாலும், ஒரு சிலர் உதவி இயக்குனர்களுக்கு தயாரிப்பாளர்கள் வழங்கும் சம்பளத்தையும் சேர்த்து எடுத்துக்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதையடுத்து, இனி சம்பளம் விஷயத்தில் உதவி இயக்குனர்களுக்கும், படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் நேரிடையாக ஒப்பந்தம் செய்யப்பட்டு. ஒரு படத்தில் ஓரு உதவி இயக்குனருக்கு ஒரு தொகை சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டு, அந்த தொகையை, அந்த படம் எத்தனை மாதங்களாக படப்பிடிப்பு நடைபெறுகிறதோ அத்தனை மாதமும் மாதச் சம்பளமாக பிரித்து வழங்கப்படும்.
இந்த சம்பள முடிவுக்கு, தற்பொதைய தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் எஸ்.ஏ.சந்திரசேகர், கலைப்பு எஸ்.தாணு ஆகியோர் ஒப்புதல் அளித்து, தமிழ்நாடு தொழிலாளர்கள் நல ஆணையர் முன்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். சம்பளம் எவ்வளவு தொகை என்பதை சங்க செயற்குழுவின் பேசி அறிவிப்பதாக தலைவர் விக்ரமன் தெரிவித்தார்.
அதேபோல ஒரு படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என்று யாராக இருந்தாலும், அவர்கள் எந்த மொழியோ, எந்த மாநிலமோ ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டுமாம். அப்படி கற்றுக்கொண்டு தமிழ் பேசுபவர்களுடன் மட்டும் தான் இயக்குனர்கள் பணியாற்ற வேண்டும் என்றும், தமிழை கற்றுக்கொள்ளாதவர்களுடன் பணியாற்றக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக