வியாழன், 4 ஜூலை, 2013

புதுச்சேரியில் சிலப்பதிகார விழா






_OMM3463.JPG 

 தனித்தமிழ்இயக்கம் புதுச்சேரியில் சிலப்பதிகார விழா ஒன்றை அதன் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் தலைமையில் நடத்தியது. த.தமிழ்த்தென்றல் அனைவரையும் வரவேற்றுப்பேசினார்.பாட்டரங்கத்

தி்ல் அரங்க.நடராசன், இரா.தேவதாசு,சு.சண்முகசுந்தரம்,முனைவர் கனகராசு,பேரா.கிருட்டினா முதலியோர் கலந்துகொண்டனர். சிலப்பதிகாரம் பெரிதும் வலியுறுத்துவது அரசியல் அறமா?பெண்மையின் திறமா என்னும் தலைப்பில் இரா.குழந்தைவேலனார் தலைமையில் நடந்த பட்டிமன்றத்தில் விசாலாட்சி, வெற்றிச்செல்விசண்முகம் ஆகியோர் பங்குகொண்டு தருக்கம் செய்தனர்.முன்னாள் நடுவண் அமைச்சர் க.வேங்கடபதி சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.பொறியியல் கல்லுாரித்தலைவர் செ.செயபால்,சட்டமன்ற உறுப்பினர் க.இலட்சுமிநாராயணன்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.கோ.அ.செகந்நாதன்,வை.பாலா (எ)பாலசுப்பிர மணியன்ஆகியோரின்பணிகளைப்பாராட்டி அவர்களுக்கு மக்கள் உரிமைப்போராளி என்னும் விருதைத் தனித்தமிழ் இயக்கம் சார்பாக முன்னாள் அமைச்சர் க.வேங்கடபதி வழங்கினார்.முன்னதாகத் தி.மு.க.மாநிலஅமைப்பாளர் மருத்துவர் எம்.எம்.எசு.சுப்பிரமணியன் திருவள்ளுவர் படத்தையும் ம.தி.மு.க அமைப்பாளர் ஏமாபாண்டுரங்கன் மறைமலையடிகள் படத்தையும் திறந்து வைத்துப் பேசினர்.வெல்லும் தூயதமிழ் ஆசிரியர் த.தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.புதுச்சேரி அரசு தமிழ் வளர்ச்சித்துறை அமைக்கவேண்டும்,சமச்சீர் கல்வியைமட்டுமே பின்பற்றவேண்டும் என்னும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக