புதன், 24 ஜூலை, 2013

மருத்துவத்திலும் இழப்பீடு பெறலாம்!

மருத்துவத்திலும் இழப்பீடு  பெறலாம்!


"மருத்துவ ச் சிகிச்சை கவன க் குறைபாட்டை எதிர்த்து, நஷ்டஈடு பெறும் நடைமுறைகளை கூறும், நீதிபதி இரத்தினவேலு: நான், காஞ்சி
புரம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றுகிறேன். மருத்துவரின் சிகிச்சை பயனளிக்கவில்லை என்பதால், அவர் மீது வழக்கு தொடர்வது சாத்தியமில்லை. அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால், எந்த மருத்துவரும் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியாது.
ஆனால், "மெடிக்கல் நெக்லிஜன்ஸ்' என்றழைக்கப்படும், மருத்துவ சிகிச்சையில் குறைபாடு இருந்தால், வழக்கு தொடரலாம். பிளட் மற்றும் யூரின் டெஸ்ட், ஸ்கேன், இ.சி.ஜி., என, பல பரிசோதனைகள் செய்து, அதன் அடிப்படையில் தான், நோயாளிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
மேலும், இந்த மருத்துவர் மூலம், இந்த ஆபரேஷன் செய்ய போகிறோம். ஆபரேஷன் செய்தால் என்ன பயன், செய்ய தவறினால் என்ன தீங்கு ஏற்படும், வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் எத்தனை சதவீதம் என, ஒரு ரிப்போர்ட்டாக நோயாளி அல்லது உரியவரிடம், தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது மருத்துவ விதி.
இதை பின்பற்றாமல் செய்யப்படும் எல்லா சிகிச்சைகளுமே, "மருத்துவ சிகிச்சை கவனக் குறைபாடு' என்ற வரையறைக்குள் வரும். ஒரு பொருளை பணம் கொடுத்து வாங்கினால் தான், நீங்கள் நுகர்வோர். அதனால், இலவச சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர்கள், நுகர்வோர் நீதிமன்றத்தை நாடாமல், தகுந்த ஆதாரங்களோடு, சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பயன் பெறலாம்.
நுகர்வோர் நீதிமன்றத்தில், 45 நாட்களுக்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால், பணம் கொடுத்து சிகிச்சை பெற்ற நுகர்வோர்க்கு, விரைவிலேயே நீதி கிடைத்துவிடும்.
ஒரு தனியார் மருத்துவமனையில், குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணிற்கு, மீண்டும் குழந்தை பிறந்தது என்றால், அது மருத்துவ சிகிச்சை கவனக் குறைபாடு. பாதிக்கப்பட்ட பெண்ணிடம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான, "ரிப்போர்ட்' இருந்தாலே, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நஷ்டஈடு பெற முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக