புதன், 24 ஜூலை, 2013

காரைக்குடியில் நூல் ஆலயம்



காரைக்குடியில் நூல் ஆலயம் மற்றும் பழைய பொருட்கள் சேகரிப்பு.

 
 
 
 
 
Karuannam Annam
Jul 21 (3 days ago)

to mintamil, vallamai, தமிழ், muththamiz, houstontamil
இரண்டு நாட்களுக்கு முன் காரைக்குடி சிரீ வித்யா இராசகோபாலன் அவர்களது தனிநபர் நூல்சேகரிப்பு வீட்டிற்குச் சென்றேன்.
இரண்டு தள வீடு கட்டி வீடு முழுவதும் நூல்கள். 40 ஆண்டு சேகரிப்பு.
ஏறத்தாழ இருபதினாயிரம் நூல்கள்.அடுக்கிவைத்துள்ளார்.

செட்டி நாட்டு மரபு பழைய பொருட்கள், மற்ற பழைய பொருட்கள் சேகரிப்பில் ஆர்வம் பணி நிறைவுக்குப் பின் ஏற்பட்டு  Hall, இரண்டு அறைகள் முழுக்க அரிய பொருட்கள் சேகரித்துவைத்துள்ளார்..
தான் அடுத்துள்ள சிறிய வீட்டில் வசித்துவருகிறார். CECRI யில் இணை இயக்குநராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர். வைணவப் பெருந்தகை. சிகை வளர்த்து அம்சமாகத் திகழ்கிறார். குழந்தை போன்ற ஆர்வத்துடன் நூல்களையும், பொருட்களையும் காட்டுகிறார்.

நூலகத்தில் 1812ல் பதிப்பக்கப்பட்ட திருக்குறள், நாலடியார், சங்க இலக்கியம் முழுத்தொகுதி, மகாபாரதமும் வால்மீகி இராமாயணமும் வடமொழி மூலம் - அடி நேர் தமிழ் உரையுடன்  பலதொகுதிகள், உவேசா நூல்கள், சித்திரம்,சிற்பம் கலைநயத்தைச் சித்தரிக்கும் நூல்கள், விஞ்ஞானம் மருத்துவம், தலபுராணம் என்று அரிய சேகரிப்புக்கள் உள்ளன.
அச்சில்லாமல் பெயிண்டால் வரையப்பட்ட தாவரம், விலங்கின் வரலாறு புத்தகமும் 3D டைனோசர் புத்தகமும் வெறெங்கும் காணமுடியாதவை.
பழம்பொருட்களில் பாக்குவெட்டிகள், செய்கோன் சித்திர வேலைப்பாடு மரவைகள், மரப்பாச்சிப் பொம்மைகள், எழுத்தாணிகள், தந்தம் கொம்புகளால் உருவான பொருட்கள், சிறுவர் விளையாட்டுப் பொருட்கள், உலோகம்,மரம்,பளிங்குப் பொருட்கள், ஜப்பானிய மரஉறை வாள் என விரிகிறது.
நான் கூறியுள்ளது நூறில் ஒன்றுதான்.
வேறொரு சிறப்பு அம்சம் நூல்கள் அகில உலக தசமப் பகுப்பாய்வின்படி அடுக்கப்பட்டுள்ளன, எந்தத் துறை சார்ந்த புத்தகத்தையும் இரண்டு நிமிடத்தில் எடுத்துவிடலாமென்றார்.

காரைக்குடிக்கு வருபவர்கள் பார்க்க வேண்டிய இடங்களில் அவரது இல்லமும் குறிப்பிட்ட இடமாக அமையுமென்பது உறுதி.

முகவரி:
சிரீ வித்யா இராசகோபாலன்,
38, சிதம்பர அக்ரகாரம், முத்துப்பட்டிணம்
காரைக்குடி 1
தொடர்பு எண்ணுக்குத் தனி மடலில் தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மிக்க அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
 
நண்பர் திருசிரீ வித்யா இராசகோபாலன் பற்றிய மேலும் விவரங்களுக்கு நண்பர்கள் கீழ்க்கண்ட சுட்டிகளைச் சொடுக்கி அறியலாம்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
 (தமிழ் மன்றச் செய்தி)
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக