திங்கள், 29 ஜூலை, 2013

மூளைக்கு வேலை கொடுத்தேன்!

மூளைக்கு வேலை கொடுத்தேன்!


சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கான, இணையதளம் மூலம் இலவசமாக கணித ப் புதிர்களை வழங்கும், ஆசிரியர் சீதாலட்சுமி:நான், பி.எஸ்சி., கணிதம் படித்து, கணித ஆசிரியராக பணியாற்றினேன். திருமணம் ஆனதும், குடும்ப பொறுப்புகளால், பணியை ராஜினாமா செய்தேன். 9ம் வகுப்பு முதல் இன்ஜினியரிங் மாணவர்கள் வரை, வீட்டிலேயே கணக்கு, "டியூஷன்' சொல்லி தருகிறேன்.
மாணவர்கள், சில கணக்கு புதிர்களை தந்து, அதற்கு தீர்வு காண சொல்லுவர். நானும், அவர்கள் கூறிய புதிருக்கு, தீர்வு கண்டுபிடித்து தருவேன்.
இதனால், மற்றவர்களின் கணித ஆர்வத்தை தூண்ட, "நாம் ஏன் ஒரு, "வெப்சைட்' ஆரம்பித்து, அதில் கணிதம் தொடர்பான புதிர்களை, "அப்லோட்' செய்யக் கூடாது' என்ற எண்ணம் ஏற்பட்டது.
கணிதமும், கணினியும், எனக்கு நன்கு தெரிந்திருந்ததால், எப்படி வடிவமைத்தால் எளிதாக இருக்கும் என, கூர்ந்து கவனித்தேன். "ஜிம்னாசியம் பார் பிரைன்' என்ற வெப்சைட்டை ஆரம்பித்து, ஒவ்வொரு கணித புதிரையும், கணினியில் வடிவமைத்து, இணைய தளத்தில், "அப்லோட்' செய்தேன்.
எல்.கே.ஜி., குழந்தைகளை கவர, "கிட்ஸ் கார்னர்' பகுதியில், அதிக கிராபிக்சும், பெரியவர்களுக்கு சற்று கடினமானது என, அனைத்து தரப்பினரும் விரும்பி விளையாடி, மூளைக்கு வேலை கொடுக்கும் விதத்தில் அமைத்தேன்.
வெப்சைட்டுக்கு சென்றதும், முதலில் புதிர்களுக்கான பட்டியல் தெரியும். நாம் தேர்ந்தெடுத்த கணித புதிருக்கான விடையை யூகிக்க, அதற்கு கீழே உதவி குறிப்பு இருக்கும்.
அதன் மூலம் நாம் யூகித்த விடை, சரியானது தானா என்பதை தெரிந்து கொள்ள, விடையை, "கிளிக்' செய்தால், கார்ட்டூன் படங்கள் மூலம், விடை, அழகாக கணினியில் தெரியும்.
புதிருக்கான கேள்வி துவங்கி விடை கிடைக்கும் வரை, ஒவ்வொரு, "ஸ்டெப்'பாக பயணிக்கும் அனுபவம், சுவாரஸ்யமாக இருப்பதால், சோர்வோ, வெறுப்போ ஏற்படாது. 500 இலக்கு என்றாலும், 350 புதிர்கள் வரை, "அப்லோட்' செய்திருக்கிறேன்.
என் பணியை பாராட்டும் விதமாக என் வெப்சைட்டுக்கு, "அமெரிக்கன் லைப்ரரி அசோசியேஷன்' விருது வழங்கி, பாராட்டிஉள்ளது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக