சனி, 21 செப்டம்பர், 2013

அக்டோபர் 9-இல் செம்மொழித் தமிழ் விருதுகள்

இம்முறையாவது செம்மொழி விருது விழாவினைத் தமிழில் நடத்த வேண்டும். தமிழுக்கானவிருதுகளைத் தமிழில் வழங்காமை தமிழை இழிவுபடுத்துவது என்பதை உரியவர்கள் உணரவேண்டும். விட்டுப்போன் விருதுகளையும் மூத்த அறிஞர்களுக்கான வாழ்நாள் விருதுகளையும் வழங்க வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

ஐராவதம் மகாதேவன், தமிழண்ணலுக்கு அக்டோபர் 9-இல் குடியரசுத் தலைவரின் செம்மொழித் தமிழ் விருதுகள்


கல்வெட்டியல் ஆராய்ச்சியாளரும் தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான ஐராவதம் மகாதேவன், தமிழ் அறிஞர் தமிழண்ணல் ஆகியோருக்கு அக்டோபர் 9-ஆம் தேதி செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தொல்காப்பியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
செக். குடியரசைச் சேர்ந்த அறிஞர் ஜரோஸ்லாவ் வசேக், இங்கிலாந்தைச் சேர்ந்த அறிஞர் ஜான் ரால்ஸ்டன் மார் ஆகியோருக்கு குறள் பீட விருது வழங்கப்பட உள்ளது.
இதே போன்று 10 பேருக்கு இளம் அறிஞர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
புது தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த விருதுகளை வழங்க உள்ளார்.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் குடியரசுத் தலைவர் செம்மொழி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக