வியாழன், 5 செப்டம்பர், 2013

நெருங்கிய உறவுத் திருமணங்களைத் தவிருங்கள்!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_796406.jpg

நெருங்கிய உறவு த் திருமணங்களை த் தவிருங்கள்!

தன் சொந்த அத்தை மகனையே திருமணம் செய்ததால், ஏற்பட்ட பாதிப்புகளை பற்றி கூறும், "பெஸ்ட் நியூ லைப் ஷெல்டர்' அமைப்பின் கேத்தரீன்: குடியாத்தம் தான், என் சொந்த ஊர். நெருங்கிய உறவு முறையில், திருமணம் செய்யக் கூடாது என்ற விழிப்புணர்வு, குடும்பத்தினரிடம் இல்லை. இதனால், சொந்த அத்தை மகனுக்கே, என்னை திருமணம் செய்து வைத்தனர். முதல் குழந்தை நன்றாக இருந்தாலும், இரண்டாவதாக பிறந்த ஆண் குழந்தைக்கு, 11ம் மாதத்திலேயே, திடீரென கடுமையான ஜுரம் வந்தது.
மருத்துவமனையை அணுகினால், மூளைக்காய்ச்சல் நோய் பாதித்துள்ளதாக கூறினர். "உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும், குழந்தை மனவளர்ச்சி குன்றியவனாகவே இருப்பான். இனி எதுவும் செய்ய முடியாது' என, எல்லா டாக்டர்களும் கை விரித்தனர். மூளைக் காய்ச்சலுக்கான தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு, அப்போது என்னிடம் இல்லை. இனியாவது விழிப்புணர்வுடன் செயல்படுவோம் என்ற எண்ணத்தில், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பராமரிக்க, பாடங்கள் சொல்லி தர, சென்னையில் உள்ள, "பாலவிகார்' நிறுவனத்தில் பயிற்சி பெற்று, அனுபவத்திற்காக, சில பள்ளிகளில் வேலையும் செய்தேன். கடந்த, 2003ம் ஆண்டு, "பெஸ்ட் நியூ லைப் ஷெல்டர்' என்ற அமைப்பை ஆற்காட்டில் நிறுவி, மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பு பள்ளியை, கணவர் உதவியுடன், எங்கள் செலவில் ஆரம்பித்தேன். தற்போது, 35 மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் என, மொத்தம், 168 பேர், இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர். இங்கு பயிற்சி பெற்ற, ஆறு மாணவர்கள், தற்போது நார்மல் பள்ளியில் படிக்கின்றனர். மேலும், காலைக்கடன் போன்று, தங்களின் சுய தேவையை நிறைவேற்றும் அளவிற்கு, மற்ற மாணவர்களையும் முன்னேற்றியுள்ளேன். என் மகனுக்கு, சுயநினைவு இல்லாததால், இதுவரை என்னை அம்மா என, கூப்பிட்டதில்லை. ஆனால், மற்ற மாணவர்கள் என்னை அம்மா என, அழைப்பது மனதிற்கு ஆறுதலாக உள்ளது.
தொடர்புக்கு: 96296 70577.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக