ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

தமிழர்களின் சோகம் தொடர்கிறது - குற்றச்சாட்டு

இலங்கையில் தமிழர்களின் சோகம் தொடர்கிறது* ஐ.நா., மனித உரிமைகள் ஆணைய த் தலைவர் குற்றச்சாட்டு
http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_792984.jpg

கொழும்பு:""இலங்கையில், நான்கு ஆண்டுகளுக்கு முன் உள்நாட்டுப் போர் முடிந்திருந்தாலும், தமிழர்களின் சோகம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது,'' என, ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமைகள் ஆணைய தலைவர் நவநீதம் பிள்ளை தெரிவித்து உள்ளார்.

இலங்கையில், போரால் பாதித்த பகுதிகளில் நடக்கும், மறுவாழ்வு பணிகள் மற்றும் மனித உரிமைகள் சூழ்நிலையை பார்வையிட, கடந்த வாரம், நவநீதம் பிள்ளை அங்கு வந்தார்.

ஒரு வார சுற்றுப் பயணத்திற்குப் பின், கொழும்பில், நேற்று அவர் அளித்த பேட்டி: இலங்கையில், விடுதலை புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்த போர், முடிந்து நான்கு ஆண்டுகளாகிவிட்டன. இருப்பினும், தமிழர்களின் உரிமைகளைப் பொறுத்தவரை, இலங்கை அரசு, சர்வாதிகாரப் போக்குடனேயே செயல்படுகிறது. போர் முடிந்திருந்தாலும், தமிழர்களின் துயரம், இன்னும் தீர்ந்த பாடில்லை.போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடக்கும், மறு குடியமர்த்தல் மற்றும் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பணிகள், திருப்திகரமாக உள்ளன. நான் சந்தித்தவர்களில் பலர், பல்வேறு வகையில், தாங்கள் துன்புறுத்தப்பட்டதாகவும், பழி வாங்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.இலங்கையில், தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து, விமர்சனம் செய்வோர் மீது, அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுகிறது. இவற்றை, ஐ.நா., சபையின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.இலங்கையில், ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு உள்ளது. சட்டம் மற்றும் விதிகள் அழிக்கப்பட்டு உள்ளன. நான், விடுதலை புலிகளின் பெண்கள் பிரிவைச் சேர்ந்தவள் என, இலங்கை அமைச்சர்கள் மூவர், என் மீதே தனிப்பட்ட முறையில், அவதூறு கூறியுள்ளனர். இது, முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பானது.இவ்வாறு, நவநீதம் பிள்ளை கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக