திங்கள், 2 டிசம்பர், 2013

அகரமுதல இணைய இதழ் மூன்றின் செய்திகள் akaramuthala issue 3


அன்புடையீர்
வணக்கம்.
அகரமுதல இணைய இதழ் மூன்றில் பின்வரும்  செய்திகள் இடம்  
பெற்றுள்ளன.
முழுமையாய்ப் படிக்கத் தளத்திற்குச் < http://www.akaramuthala.in/ >  செல்க!



  மொரிசியசின் பின்பேசின்(Beau Bassin)என்னும் நகரில் விடுதலைப்புலிகள் நினைவுத்தூண்  அமைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் துயர நினைவுநாளான மே 18, 2012 இல் திறக்கப்பட்டது இது. மொரிசியசிலுள்ள பியூபேசின் உரோசு குன்று (Beau Bassin Rose Hill) நகர் மன்றம் உலகத்தமிழர்களின் போற்றுதலுக்கும் உலக மனித நேயர்களின் பாராட்டுதலுக்கும் உரித்தாகியுள்ளது.  ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைகளாலும் போரிலும் தங்கள் இன்னுயிர் ...

தமிழ்ப்படநிலைய 6 ஆம் ஆண்டுத் தொடக்க விழா!!! தமிழ்ப்படநிலையத்தின் (Tamil Studio)  ஆறாம் ஆண்டுத் தொடக்க விழா, நவம்பர் 23, சனிக்கிழமை மாலை, சென்னையில் க.க.நகரில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இயக்குநர் இராம் பங்கேற்றார். தமிழ்ப்படநிலையத்தின் செயல்பாடுகள் வருமாறு:-   2008, நவம்பர் 23 ஆம்  நாள் குறும்பட / ஆவணப்படங்களுக்கான இணையத்தளமாகத்  தொடங்கப்பட்டது. பின்னர் அடுத்த ஆண்டே மாற்றுத் திரைப்படத்திற்கான ..

சென்னையில் நீந்திக் கடந்த நெருப்பாறு நூல் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ அவர்களினால் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள தூய அந்தோணியார் அரங்கத்தில் நடைபெற்ற அரவிந்த குமாரனின் நீந்திக் கடந்த நெருப்பாறுஎனும் நூலை கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வெளியிட,

- நீதிநாயகம் கே.சந்துரு இராசீவு கொலைவழக்கில் பேரறிவாளன் வாக்குமூலத்தைத் திருத்தியதாக மத்தியப் புலனாய்வுப் பணியகத்தின்(சி.பி.ஐ.) அப்போதைய கண்காணிப்பாளர் தியாகராசன் தெரிவித்துள்ளார். இது குறித்து நீதிநாயகம் கே.சந்துரு அதிர்ச்சியைத் தெரிவித்து மூவரையும் விடுதலை செய்யுமாறு பின்வருமாறு கருத்து தெரிவித்து வேண்டி உள்ளார்:

கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்திலுள்ள அட்டப்பாடி வனப்பகுதியில் குடிபோதையில் உறங்கி கொண்டிருந்த ஒருவரை மலைப்பாம்பு ஒன்று விழுங்கி விட்டது. வனப்பகுதி அருகே உள்ள இடத்தில் மது அருந்திவிட்டு மயக்கத்தில் அயர்ந்துவிட்டவரையே மலைப்பாம்பு  விழுங்கியுள்ளதாக ஊரினர் தெரிவித்துள்ளனர். பாம்பின் வயிற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டதாகவிம் தெரிவிக்கப்படுகிறது.

.
 உயிர்வலி ஆவணப்படவிழாவில் தோழர் கி.வெங்கட்ராமன்  உரை!   இராசீவு கொலை வழக்கில் தொடர்புபடுத்தப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் குறித்தும், மரண தண்டனை ஒழிப்பு குறித்தும் பேசுகின்றஉயிர்வலிஆவணப்படத்தின் வெளியீட்டு நிகழ்வும், நீதிபதி வீ.ஆர்.கிருட்டிணய்யர் அவர்களின் 99ஆவது பிறந்தநாள் விழாவும் விருதுகள் வழங்கும் விழாவும் 24.11.2013 சென்னையில் நடைபெற்றது. சென்னை பிட்டி.தியாகராயர் அரங்கில், மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில்
சீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு 1963-ஆம் ஆண்டு ஆகசுட்டுத் திங்கள் முதல் நாள்  தொடங்கியது. 1963-2013 ஆகசுட்டுஉடன் 50 ஆண்டுகள் நிறைவெய்துவதைச் சிறப்பாகக் கொண்டாடும்வகையில் சீன வானொலித் தமிழ் பிரிவு பல்வேறு போட்டிகளை நடத்தியது.  இந்தப் போட்டிகளில் உலக வாழ் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.  பொன்விழா கட்டுரைப் போட்டி, ஊடக போட்டிகள், பொது அறிவுப் போட்டி என்று நடத்தியது.   பொன்விழப் போட்டிக்கான முதல் பரிசை அமெரிக்கா வாழ் தமிழரான ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ பெற்றுள்ளார்.  பொன் விழா கட்டுரையின் ஊடகப் பரிசான சிறப்புப்
தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கைக் கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி! இராமதாசு கண்டனம்.   தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கைக் கடற்படையினருக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு  விலக்கிக் கொள்ள வேண்டும் என பாமாக நிறுவனர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள இந்திய கடற்படை கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கடல்சார் பாதுகாப்பு தொழில்நுட்ப படிப்பில் சிங்களக் கடற்படையினர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக