ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

அகரமுதல இணைய இதழ் 13 கதை, கவிதை, செய்திகள் சில - Akaramuthala issue 13 some topics




கிகாலி : (உ)ருவாண்டா குடியரசு ஆப்பிரிக்காவின் நடுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். (உ)ருவண்டா தமிழ்ச் சங்கம் சார்பில் பிப்பிரவரி முதல்  நாளன்று (உ)ருவண்டாவில் பொங்கல் விழா  மிகவும் உற்சாகமாகவும் எழுச்சியுடனும் கொண்டாடப்பட்டது. அன்றைய  நாளில் (உ)ருவண்டா தமிழ்ச் சங்கத்தின் இணையத்தளமும் தொடக்கி வைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன்  தொடங்கிய பொங்கல் விழாவில் குழந்தைகள்பெண்கள், இளைஞர்கள் ...


அன்புடையீர், வணக்கம், தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தமிழ் ஒருங்குறி தொடர்பாக 'ஒருங்குறியில் தமிழ் - தேவைகளும் தீர்வுகளும்' என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு, 05.03.2014, புதன்கிழமை அன்று, த.இ.க. கலையரங்கில் நடைபெறும். கீழ்கண்டுள்ள தலைப்புகளில் கருத்துரைகளும் கலந்துரையாடலும் நடைபெறும். 1.      தமிழ் பின்னம் பெயரிடல், வரிவடிவம் தொடர்பாக. 2.      ஒருங்குறி எழுத்துருக்களும், விசைப்பலகையும் - பயன்பாடு 3.      ' ஓர் இந்தியா -ஓர் எழுத்துரு' - ...


கோலாலம்பூர்: மலேசியாவில்  தலைமையாளர் அலுவலகத்தில் துணை அமைச்சராக இருக்கும் பெர்சாத்துவான்  இண்டுராப்பு மலேசியா (பிஎச்எம்) தலைவர் பி. வேதமூர்த்திபதவி விலகியுள்ளார். நாடாளுமன்ற மேலவைப் பதவி, துணை அமைச்சர் பதவி ஆகிய இரண்டிலும் இருந்து நேற்று வேதமூர்த்தி விலகியதாக அறியப்படுகிறது. 'சியு டெய்லி' என்னும் செய்தியமைப்பின் கூற்றுப்படி, வேதமூர்த்தி அவரதுதவிலகல் மடலைத் தலைமைளார் நசிப்பிடம் நேரடியாக 10.02.14 அன்று அளித்துள்ளார்..


குவைத் வளைகுடா வானம்பாடியின் திங்கள் சிறப்புக்கூட்டம் மங்கப் சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் அரங்கில் மிக சிறப்பாக நடைபெற்றது. நிறுவனர் திரு.கா.சேது அவர்கள் தொடங்கி வைக்க திரு சுப்புராசு அவர்கள் தலைமை வகித்தார்கள். தாயகத்தில் இருந்து தமிழரின் சிறப்புகளை ஆராய்ந்து வரும் ஆராய்ச்சியாளர் தொலைபேசி வழியே பல அரிய தகவல்களைப் பகிர்ந்து சிறப்புரையாற்றினார். வழக்கம்போல் குவைத் கலைஞர்களின் பாடல்கள், கவிதைகள் என்று மேடையில் களைகட்டியது. மருத்துவர் ...

   திட்டச் செலவு 42 ஆயிரத்து 185 கோடி இலவசங்களுக்கு மட்டும் 48 ஆயிரம் கோடி   அரசின் மதுவகை விற்பனை இலக்கு  2014-15 இல், (23 ஆயிரம் கோடி  உரூபாயில் இருந்து)26 ஆயிரம் கோடி  உரூபாயாக உயரும்.     தமிழக அரசின் 2013 - 2014ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை  13.02.14 அன்று சட்ட மன்றத்தில் தமிழகநிதியமைச்சர் பன்னீர்செல்வம்  முன்வைத்தார்.  அவர் தெரிவித்த ...


  பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர்  மரு.இராமதாசு 10.02.14 திங்கள்கிழமையன்று வெளியிட்டார். தமிழகச் சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை  அளிக்கப்படுவதற்கு முன்பு பாமக சார்பில் நிழல் நிதிநிலை அறிக்கை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளன. கல்வி அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி, கட்டணமில்லாக் ...


சிறுமலையில் சிறு எறும்புப்புற்று ஒன்று இருந்தது.  அதில் சிற்றெறும்புகள் சிறு கூட்டமாய் வாழ்ந்தன.  அதில் சின்னா என்ற குட்டி எறும்புதான் சிறியது. அது ஒரு நாள் தன் சிறிய நண்பரைக் காணப் புறப்பட்டது. தன் சிறு புற்றைவிட்டு சின்னா வெளியில் வந்தது.  தன் சிறு கண்களை விரித்துப் பார்த்தது.  சிறு தூறல், சிறு புற்களில் பட்டுச் சிதறியது. வழியில் ...

பேராயக்கட்சி ஆட்சியல் உள்துறை அமைச்சராக இருந்தும் எளிமையால் பெயர் பெற்றவர் கக்கன்.  இவர் போன்ற உழைப்பாளிகளையும் ஈகையரையும் பேராயக் கட்சி புறக்கணித்தது. அவர்கள் கருத்துகளை ஒதுக்கித் தள்ளியது. இதனால் பேராயக் கட்சியான காங்.கில் பலர் மனப்  புழுக்கத்தில் உள்ளனர்.  அவர்களில் ஒரு பகுதியினர்  கக்கன் பெயரில் தமிழ் மாநிலக் காங்கிரசு என்ற கட்சியைத் தொடங்க உள்ளனர். ...


பேராசிரியர் பழ. கண்ணப்பன் அவர்கள் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் தனிய கணிதத்துறையில் (Pure Mathematics) 36 ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்று இருந்தவர் பிப்பிரவரி 13 அன்று இயற்கை எய்திவிட்டார்கள். வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பேராசிரியப் பணியில் சேர்ந்த முதலணித் தமிழர்களுள் ஒருவர்வாட்டர்லூ வட்டாரப் பகுதியில் முதன்முதலாகத் தமிழ்ப்பள்ளி  நடத்தியவர்களுள் ஒருவர்; பல இடங்களில் இருந்தும் தமிழார்வலர்களை அழைத்துக் கவியரங்கம் நடத்தியவர்; வாட்டர்லூ பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் மன்றத்தில் பொங்கல்விழா முதலானவற்றில்  ...

இனிமைத் தமிழில் இருக்கின்ற ' மை ' விகுதிக்       கனிவான மூவெழுத்துச் சொற்கள் எவையெனஎன் கருத்தாய்வில் முனைந்து பொருத்தத் தேடினேன்      திருத்தச் சொற்களைக் குருத்தாய்க் கூறுகிறேன். அண்மை யோடருமை அடிமை இம்மை இனிமை இருமை இளமை இறைமை இன்மை இலாமை யோடுஆளுமை ஆடுமை ஆண்மை ஆணுமை ஆடாமை ஆளாமை ஆணிமை ஆகாமை ஈகாமை உரிமை      உடைமை உண்மை உம்மை உவமை உறாமை ஊராமை ஊர்மை ஊதாமை      ...


  இலங்கைத் தீவில் சிங்கள அரசு நடத்தியது போர்க்குற்றமல்ல, அப்பட்டமான இனப்படுகொலை என்ற உண்மையை உலக நாடுகள் உணர வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2009 இல் போரின் உச்ச கட்டத்தின் போது, சிங்கள இராணுவத்தினர் ஈழத் தமிழ்ப் பெண்களை வதைத்துக் கொன்ற ...


திருச்சிராப்பள்ளியில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சன் 15.02.14 அன்று வந்தார்.  அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவதுஇந்தியாவின் வடக்கு எல்லையில் உள்ள சென்னை தமிழகத்தின் தலைநகரமாக இருப்பதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்குச் செல்லும் அனைவரும் 10 மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் பயணம் செய்து மிக  அல்லல்பட்டுச் சென்னை செல்ல வேண்டிய நிலை ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக