ஞாயிறு, 4 மே, 2014

13 ஆவது தமிழ் இணைய மாநாடு – கட்டுரைகள் பற்றியஅறிவிப்பு

13 ஆவது தமிழ் இணைய மாநாடு – கட்டுரைகள் பற்றியஅறிவிப்பு

uthamam-13-conference-muthirai01
13 ஆவது தமிழ் இணைய மாநாடு
கட்டுரைகள், ஆய்வுச்சுருக்கங்கள்
அனுப்புவதற்கான அறிவிப்பு

 உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) நடத்தும் 13 ஆவது  தமிழ் இணைய
மாநாடு 2014 புதுச்சேரியில் செப்டம்பர் மாதம் 19-21  நாள்களில்  நடைபெற உள்ளன.

புதுவை பல்கலைக்கழகம், புதுவை தமிழ்ச் சங்கம், புதுவை மொழியியல்
மற்றும் பண்பாட்டு நிறுவனம், பல்லவன் கல்வி நிறுவனங்கள், இந்திய மொழிகளுக்கான
மத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன்  இணைந்து உத்தமம் இம்மாநாட்டை நடத்த உள்ளது.



 2014 மாநாட்டிற்குத் தமிழ் மொழியில் இயல்மொழிப் பகுப்பாய்வு
முதன்மைத் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ் வரும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில்  கட்டுரைச் சுருக்கத்தை அனுப்ப வேண்டும்.


இயல்மொழிப் பகுப்பாய்வு – தமிழ்ச் சொல்லாளர்(சொற்பிழை திருத்தி,
    சந்திப்பிழை திருத்தி…) ஒளியெழுத்துணரி, இயந்திர மொழிபெயர்ப்பு, தமிழ் எழுத்துரு 
   பகுப்பான்கள், தமிழ்ப் பேச்சுப் பகுப்பாய்வு, தேடுபொறிகள், தமிழ்த்திறனாய்வு நிரல்கள்,
    இலக்கணத் திருத்திகள், மின்னகராதி அமைத்தல்…
கையடக்கக் கணினிகளில் தமிழ்ப் பயன்பாடும் அவற்றின் செயலிகளைத் தரப்படுத்தல்,
    இக்கருவிகளில் பயன்படுத்தத் தேவையான தமிழ்க் கணினி குறுஞ்செயலிகள் 
     (முக்கியமாக ஆப்பிள், ஆண்ட்ராய்டு, விண்டோசு)
திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கம்.
•  கணினி மற்றும் இணையவழி தமிழ்க் கல்வி கற்றல், கற்பித்தல்.
தமிழ் இணையம், தமிழ் வலைப்பூக்கள், விக்கிபீடியா, சமூக இணையதளங்கள்
தமிழ் மின்நூலகங்கள், மின்பதிப்புகள், இணைய, கணினிவழி தமிழ் நூல்கள் ஆய்வு,
    கையடக்க மின்படிப்பான்களில் தமிழ் நூல்கள்….
தமிழ் மின்வணிகம் மற்றும் பிற தமிழ்ப் பயன்பாட்டு நோக்குடன் தயாரிக்கப்-பட்ட 
   கணினி மென்பொருள்கள்.


மாநாட்டு ஆய்வரங்குகளில் கட்டுரை படைக்க விரும்புவோர் தாங்கள் படைக்க இருக்கும்
கட்டுரையின் சுருக்கத்தை  ஏ4 தாள் அளவில் 1-2 பக்கங்களில் சூன் 30ஆம்  நாளுக்குள் cpc2014@infitt.org   என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


கட்டுரைச் சுருக்கம், கட்டுரை தமிழ் ஒருங்குறியில் மட்டுமே பெற்றுக்கொள்ள
இயலும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். கட்டுரைச் சுருக்கம் ஆங்கிலத்திலோ
 தமிழிலோ தமிழும் ஆங்கிலமும் கலந்தோ  இருக்கலாம்.




தேர்வு செய்யப்பட்ட
கட்டுரைச் சுருக்கங்களின் விவரம் அதற்கான ஆசிரியர்களுக்கு  சூலை 31ஆம் நாளுக்குள்
உறுதிப்படுத்தப்படும்.  கட்டுரை  ஆய்விற்குத் தேவையெனில் ஆய்வுக்குழு கட்டுரை
ஆசிரியர்களிடம் முழுக்கட்டுரையை அனுப்பிக்க கேட்கலாம். 


தேர்வு செய்யப்பட்ட கட்டுரைச் சுருக்கங்களின் முழுக்கட்டுரைகள் 4-6 பக்கங்களுக்கு
மிகாமல் எங்களுக்கு உரிய  நாளுக்குள் அனுப்ப வேண்டும்.



ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டுரையாளர்கள் எழுதும் கட்டுரையாளர்களுள் ஒருவரேனும்
மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரையை ஆய்வரங்குகளில் நேரிடையாகப் படைக்க வேண்டும்.
மாநாட்டில் பங்குபெறாமல் அல்லது ஒருவருக்காக வேறு ஒருவர் கட்டுரைகளைப்
படைக்க இயலாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறொம்.


மாநாட்டில் படைக்கப்படவுள்ள கட்டுரைகள் அச்சிட்ட மாநாட்டு மலராகவும் மின்பதிப்பாகக்
குறுந்தகடு வழியாகவும் வெளியிடப்படவுள்ளது.  இம்முறை மாநாட்டுக் கட்டுரைத்
தொகுப்பு நூலகங்களுக்கான பன்னாட்டு தொடர் திரவு(ISSN) எண்ணுடன் வெளியிடுவதற்கான
ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.  இவ்வாறான எண்ணுடன் வெளியிடப்படும் புத்தகங்கள் 
உலகின் முக்கிய/பெரிய  நூலகங்களில் தக்க முறையில் நூல்கள் பட்டியலில் உள்ளிடப்பட்டு
ஆய்வுக் கட்டுரைகளில் தரமான முறையில் கூர்வு செய்யப் பயனுள்ளதாக இருக்கும்.


தமிழ் இணைய மாநாடு 2014இல் கட்டுரையைப் படைப்பது பற்றி உங்களுக்கு ஏதாவது
கேள்விகள் இருப்பின் அவற்றை cpc2014@infitt.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல்
அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

முனைவர் கு. கல்யாண சுந்தரம்
தலைவர், மாநாட்டு நிகழ்ச்சிகள் குழு


uthamam-conference-13-01




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக