செவ்வாய், 27 மே, 2014

இதழாளர் பொன் முருகன் நினைவேந்தல் – படத்திறப்பு

இதழாளர் பொன் முருகன் நினைவேந்தல் – படத்திறப்பு

Ponmurugan_photo63
19.05.2014 அன்று பொன்.முருகனின் நினைவேந்தல் நிகழ்வு பெரும்புலவர் கி.த.பச்சையப்பனார் தலைமையில் சென்னை திருவல்லிக்கேணி சிவ இளங்கோ இல்லத்தில் நடைபெற்றது.
  அவ்வமயம், கவிஞானி அ. மறைமலையான் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் தலைவர் திரு. ஏ.எம். விக்கிரமராசா அவர்கள் பொன்முருகனின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார்.
  பேராசிரியர் மறைமலை இலக்குவனார், தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்கட்சித் தலைவர் திரு. பெ. மணியரசன், பாவலர் தமிழேந்தி(மா.பெ.பொ.கட்சி),  சங்கப்பலகைத் தலைவர் தஞ்சைத் தமிழ்ப்பித்தன் மூத்த இதழாளர் டி.எசு.எசு.மணி, பொன் முருகனின் தந்தை அன்றில் இறைஎழிலன் ஆகியோர் இரங்கலுரையாற்றினர். இதழாளர்கள், தமிழன்பர்கள், திரளாகக் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
திரு. மு. இசுமாயில் அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மேலும் பொன்முருகனின் இந்த மரணம் மருத்துவத்துறையில் பணியாற்றிய மருத்துவர்களின் கவனக்குறைவால் நிகழ்ந்தது என்பதை வலியுறுத்தி விரையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
  தங்களது இரங்கலுரையில், பொன்முருகனின் சலியாத உழைப்பும் தொண்டும் செய்தியாளர்களுக்குப்  பல்லாற்றானும் உதவிகள் அளித்துப் பலரது வாழ்க்கையில் ஒளியேற்றிய நிகழ்வுகளையும் நினைவுகூர்ந்தார்கள். தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் பொன்முருகனின் உழைப்பு அளவிடற்கரியது.
  இந்த உயிரிழப்புக்கு – கொலைக்குக் காரணமான மருத்துவர் மீதும் மருத்துவமனை நிருவாகத்தின்மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து வழக்குத் தொடரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பலராலும் வலியுறுத்தப்பட்டது.































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக