செவ்வாய், 29 ஜூலை, 2014

மனத்தை அகலப்படுத்தும் இலக்கியங்களே மடல்கள்-கவிஞர் மு.முருகேசு

மனத்தை அகலப்படுத்தும் இலக்கியங்களே மடல்கள்-கவிஞர் மு.முருகேசு


    ???????????????????????????????
[கவிஞர் மு.முருகேசு வெளியிட, தொழிலதிபர் இரா.சிவக்குமார் பெற்றுக்கொண்ட போது எடுத்த படம். அருகில், நூலாசிரியர் புதுவை ஓவியர் பாரதிவாணர் சிவா, தலைமையாசிரியர் பெ.சுப்பிரமணியன், அரிமா சங்கத் தலைவர் மு.சண்முகம் ஆகியோர் உள்ளனர்.]
அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரில் புதுவை ஓவியர் பாரதிவாணர் சிவா தொகுத்த மடல் இலக்கிய நூல் வெளியீட்டு விழா இன்று (ஆடி 11 2045, சூலை 27,2014) நடைபெற்றது. இவ்விழாவில், “அறிவியல் தொழில் நுட்பம் எவ்வளவு வசதிகளைத் தந்தாலும், மடல் எழுதுகிற ஒரு மன நிறைவை வேறெந்த செயலும் தந்துவிடாது” என்று அகநி வெளியீட்டின் இயக்குநரும் கவிஞருமான மு.முருகேசு பேசினார்.
  இவ்விழாவிற்கு, பெரணமல்லூர் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் பெ.சுப்பிரமணியன் தலைமையேற்றார். மருதாடு இ.லட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
   புதுவை பாரதிவாணர் சிவா தொகுத்த மடல்(கடித) இலக்கிய நூலான ‘பதிவுகள்’ நூலை அகநி வெளியீட்டகத்தின் இயக்குநர் கவிஞர் மு.முருகேசு வெளியிட, தொழிலதிபர் இரா.சிவக்குமார் பெற்றுக் கொண்டார். நூலின் சிறப்புப் படிகளை செய்யாறு அரிமா சங்கத் தலைவர் மு.சண்முகம், மாநிலக் கருத்தாளர் வெம்பாக்கம் இரத்தினக்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
   நூலை வெளியிட்ட கவிஞர் மு.முருகேசு பேசும்போது, மனித மனங்களை இணைக்கிற தகவல் தொடர்பு ஊடகமா கடிதங்கள் விளங்கின. அன்பையும் நட்பையும் காதலையும் பரிமாறிக் கொள்வதில் கடிதங்களுக்கு மிக முக்கிய பங்குண்டு. தூரங்களைச் சுருக்கி, மனித மனங்களை விசாலப்படுத்தியவை கடிதங்களே. இன்றைக்கு அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியில் அலைபேசி குறுஞ்செய்திகள், கணினி மூலமாக மின்னஞ்சல் எனத் தகவல் தொடர்பு வசதிகள் பெருகிவிட்டன.கடிதம் எழுதுகிற கலையே இப்போது குறைந்து விட்டது.
       இலக்கிய வடிவங்களில் கடித இலக்கியத்திற்கும் மிக முக்கிய பங்குண்டு.சவகர்லால் நேரு தன் மகள் இந்திராவிற்கு எழுதிய கடிதங்கள், பேரறிஞர் அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள் முதலினயன சமூகத்தின் அழியா சாட்சிகளாய் இன்றைக்கும் வாசிக்க கிடைக்கின்றன. இரசிகமணி டி.கே.சி., எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமி,கி. இராசநாராயணன் ஆகியோர் மடல்கள் வழியே இலக்கியத்தை வளர்த்தெடுத்தனர். தன் கடைசி காலம்வரை எழுத்தாளர்கள் வல்லிக்கண்ணனும், தி.க.சிவசங்கரனும் தமிழகம் முழுவதுமுள்ள இளைய படைப்பாளர்கள், சிற்றிதழ் ஆசிரியர்களுக்கு அஞ்சலட்டை வழியே வாழ்த்துகளையும், திறனாய்வுகளையும் எழுதி ஊக்குவித்தனர். மடல்கள், நாட்குறிப்புகளின் வழியேதான் நமது சில வரலாற்றுச் செய்திகளை நாம் அழிந்துவிடாமல் கிடைக்கப் பெற்றோம்.
     இன்றைக்கு வருகிற மடல்களை படித்தவுடன் கிழித்துவிடும் காலச்சூழலில், கால்நூற்றாண்டு காலக் கடிதங்களைத் தொகுத்து நூலாக்கியிருக்கும் புதுவை ஓவியர் பாரதிவாணர் சிவாவின் இப்பணியை தமிழிலக்கிய உலகம் பாராட்டி வரவேற்க வேண்டும். ” என்று குறிப்பிட்டார்.
       கவிஞர் புதுவை ஓவியர் பாரதிவாணர் சிவா ஏற்புரையில், “நான் சிற்றிதழ் ஆசிரியனாக இருக்கையிலேயே எனக்கு   மடல்கள் எழுதி ஊக்கப்படுத்தியவர்கள் எழுத்தாளர்கள் பூவண்ணன், வல்லிக்கண்ணன் இருவரும்தான். இப்படியான பெருமக்களின் பாராட்டினால் எனது இலக்கியப் பயணத்தைத் தொடர்ந்த நான், எனக்கு வரும் எந்த ஒரு மடலையும் படித்த பின் தூக்கிப் போட்டுவிடாமல்,சேகரித்து வைத்தேன். மறைந்த பின்னும் தன் எழுத்துகள் வழியே படைப்பாளர்கள் வாழ்வதைப் போலவே, இதிலுள்ள மடல்கள் மூலமாகப் பலப்பல சமூக நிகழ்வுகள் என் மனத்தில் நீங்காமல் இடம்பிடித்ததுள்ளன” என்றார்.
     நிறைவாக, செம்பூர் வி.கல்பனா நன்றி கூறினார்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக