ஞாயிறு, 2 நவம்பர், 2014

தேனிப் பகுதியில் கிணறுகள் தூர்வாரும் பணி தீவிரம்


தேனிப் பகுதியில் கிணறுகள் தூர்வாரும் பணி தீவிரம்

51_well01

தேனிப் பகுதியில் கிணறுகள் தூர்வாரும் பணி தீவிரம் அடைந்து வருகிறது.

தேவதானப்பட்டி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாகப் போதிய மழை பொழியவில்லை. இதனால் நீர்நிலைகள் கிணறுகள், குளங்கள், ஏரிகள், வாய்க்கால்கள் என அனைத்தும் காய்ந்து கிடந்தன. மேலும் நிலத்தடி நீர்மட்டம் மளமளவென சரியத்துவங்கியது. இதனால் பல கிணறுகள் நீரின்றி காய்ந்து போயின. சில கிணறுகள் மூடப்பட்டுவிட்டன.

தேவதானப்பட்டி பகுதியில் 10 அடி முதல் 20 அடிவரை தண்ணீர் தாராளமாக கிடைக்கும். நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்ததால் ஆழ்துளைக்கிணறுகள் 200 அடிவரை போடும் நிலை ஏற்பட்டது.
51-well02
இப்பொழுது அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பொழிந்துள்ளதாலும் இப்பகுதியில் உள்ள அணைகள் திறக்கப்பட்டதாலும் கிணறுகளில் ஊற்றுப் பெருகத் தொடங்கியுள்ளது. மேலும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்து தண்ணீர் சீக்கிரம் கிடைக்கும் அளவிற்கு வந்தது. இதனால் உழவர்கள், பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள கிணறுகளை மறுபயன்பாட்டிற்குத் தூர்வாருவதற்கு முயன்று வருகிறார்கள்.
கிணறுகளில் உள்ள மண், மணல், குப்பைகளை அகற்றித் தூர்வாரி மறுபயன்பாட்டிற்கு பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இதனால் தண்ணீர்ப் பற்றாக்குறை ஓரளவு சமாளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக