வெள்ளி, 7 நவம்பர், 2014

தேனிப்பகுதியில் கூடுதலான கம்பிவடக் கட்டணம்

51cableTV01

தேனிப்பகுதியில் அரசு வரையறுத்த

கட்டணத்தை விடக்

கூடுதலான கம்பிவடக் கட்டணம்

தேனிப்பகுதியில் அரசு வரையறுத்த கட்டணத்தை விடக் கூடுதலாகக் கட்டணம் பெறுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
கடந்த தி.மு.க.ஆட்சியில் கம்பிவடக் கட்டணத்தைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப வரையறுத்து அடாவடியில் ஈடுபட்டனர். தமிழக அரசு, அதன் பின்னர் அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்தைத் தொடங்கி நுகர்வோர்களிடம் உரூ.70 மட்டுமே பெறவேண்டும் என வரையறுத்தது. அந்த அரசு அறிவிப்பு வந்தவுடன் அரசு வரையறுத்த கட்டணத்தைப் பெற்றனர். ஆனால், இப்பொழுது அரசு வரையறுத்த கட்டணத்தை விடப் பல மடங்கு அதிகமாகப் பெறுகின்றனர்.
மேலும் இந்தக் கம்பிவடத் தொலைக்காட்சிக்கான மின்சாரம் வீடுகளிலிருந்து எடுக்கப்படுகிறது. இதனால் அரசிற்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இவை தவிரக் கம்பிவடத் தொலைக்காட்சிக்கு ஒரு தெருவிற்கு ஒருமின்இழுப்புப்பெட்டிவைத்து அதற்காக வீட்டுப் பயன்பாட்டு மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
51cableTV02
எனவே மாவட்ட நிருவாகம் இச்சிக்கலில் தலையிட்டு அரசு வரையறுத்த கட்டணத்தை விட அதிகமாகப் பெறும் கம்பிவடநிறுவனத்தின் உரிமத்தை நீக்கவேண்டும் எனவும் அரசிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் விதமாக வீட்டு மின்சாரத்தைத் திருடும் கம்பிவட உரிமையாளர்களிடம் தண்டத்தொகை பெறவேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
51_vaigaianeesu


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக