திங்கள், 8 டிசம்பர், 2014

தேனியில் பேணுகையில்லாப் பொதுப்பணித்துறை கட்டடங்கள்

56pwdguesthouse

தேனி மாவட்டத்தில் பேணுகையற்ற

பொதுப்பணித்துறை கட்டடங்கள்

தேனிமாவட்டத்தில்; பொதுப்பணித்துறைக்குச் சொந்தமாக அரசு கட்டடங்கள் மிகுதியாக உள்ளன.
வைகை அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், சிறப்பு விருந்தினர்கள், அமைச்சர்கள், அரசு உயர்அதிகாரிகள் தங்குவதற்குத் தங்கும் விடுதிகள் ஏராளமாக கட்டப்பட்டுள்ளன. இக்கட்டடங்கள் வைகை அணையில் உள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான கட்டடங்கள் ஆகும். ஒவ்வொரு கட்டடங்களிலும் விருந்தினர்கள் தங்குவதற்கு அனைத்து வசதிகளும் இயற்கை எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர இக்கட்டடங்களில் இருந்து மேற்குமலைத்தொடர்ச்சியை கண்டு களிப்பதற்கும் வைகை அணை பார்த்து களிப்பதற்கும் ஏற்ற வகையில் இவை கட்டப்பட்டுள்ளன.
இவ்வாறாக கட்டப்பட்ட கட்டடங்கள் தற்பொழுது பேணப்படாமல் பாழடைந்து வருகின்றன. இதனால் வைகைஅணைக்குச் சுற்றுலா வருபவர்கள் தனியார் விடுதிகளில் தங்குவதற்குச் செல்கின்றனர்.
எனவே பேணப்படாமல் இருக்கும் கட்டடங்களைப் பொதுப்பணித்துறையினர் சீரமைக்கவேண்டும் எனச் சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
56vaigaianeesu_name




அகரமுதல 56

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக