tholkappiya aaraaychi  mun attai

இந்திய வரலாறு குமரிநாட்டிலிருந்தே தொடங்கப் பெறுதல் வேண்டும்.

தமிழகம் மிகவும் தொன்மை வாய்ந்த வரலாற்றினையுடையது. ஆனால் வரலாற்றாசிரியர்கள் தமிழகத் தொன்மையை நன்கு ஆராய்ந்து வரையறுத்து எழுதுவதில் கருத்துச் செலுத்திலர். இந்திய வரலாற்றாசிரியர்களில் பெரும்பான்மையினர் தமிழகத்தைப் பற்றிய நினைவே கொண்டிலர். வட இந்தியாவிலும் தென்னிந்தியாவே மிகவும் தொன்மை வாய்ந்தது. வரலாறு மிகத் தொன்மையான காலத்திலிருந்தே எழுதப்பெறுவது மரபென்றால் இந்திய வரலாறு குமரி நாட்டிலிருந்தே தொடங்கப் பெறுதல் வேண்டும். குமரி ஆறும் குமரி மலையும், பனி மலையினும் கங்கையாற்றினும் மிக மிகத் தொன்மை வாய்ந்தனவாகும். “மன்பதை முதலில் தோன்றிய இடமே குமரி நாடாகும்.” என்பது வரலாற்றாசிரியர் சிலரின் உறுதியான கொள்கையாகும்.
– செந்தமிழ் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
– தொல்காப்பிய ஆராய்ச்சி