அட்டை -மின்னூல்- (உ)ரூபி : attai_minnul_learn-ruby-in-tamil-cover
  “எளிய இனிய கணினி மொழி ‘(உ)ரூபி’ க்கு இதைவிடப் பொருத்தமான விளக்கத்தை அளித்திருக்க முடியாது. இன்று பெரும்பாலான இணையப் பயன்பாடுகள் ‘(உ)ரூபி’ ’யில் எழுதப்படுகின்றன. நிரலைச் சுருக்கமாக எழுதுவதே ‘(உ)ரூபி’ யின் ஆற்றல்வாய்ந்த இயல்புகளில் ஒன்றாகும். கணியன்(software)களை அதிவிரைவாகவும், எளிமையாகவும் ‘(உ)ரூபி’ யில் உருவாக்க முடியும். ‘(உ)ரூபி’ யின் அடிப்படையையும், பரவலாகப் பயன்படுத்தப்படும் சிறப்புகளையும் பிரியா இந்நூலில் விவரித்திருக்கிறார். ‘(உ)ரூபி’ யின் எளிமையும், இனிமையும் இந்நூலெங்கும் பரவியிருப்பது அவரது சிறப்பு.
“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;”
  பாரதியின் இக்கனவினை மெய்ப்பிக்கும் முயற்சியில் ‘கணியம்’ 2012 முதல் ஈடுபட்டிருக்கிறது. கட்டற்ற கணியன்களைப்பற்றிய தகவல்களையும், கணியன் உருவாக்க முறைகளப்பற்றியும் தொடர்கட்டுரைகள் ‘கணியம்’ இதழில், தமிழில் வெளியாகி வருகின்றன. இதில் ‘(உ)ரூபி’ என்ற நிரலாக்க மொழியைப் பற்றிய பதிவுகளைத் தொகுத்து இந்த மின்னூலை வெளியிடுகிறோம்.
ஆசிரியர் :  பிரியா சுந்தரமூர்த்தி priya.budsp@gmail.com
பதிப்பாசிரியர், பிழை திருத்தம், வடிவமைப்பு : இல. கலாராணி  lkalarani@gmail.com
அட்டைப்படம்: மனோசு குமார் – socrates1857@gmail.com
இந்த நூல்  பொதுமைப்படைப்பு(Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.) என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது .
இதன் மூலம்,
நீங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
திருத்தி எழுதி வெளியிடலாம்.
வணிக முறையிலும் யன்படுத்தலாம்.
ஆனால்,  மூலப் புத்தகம், ஆசிரியர், ‘கணியம்’ (www.kaniyam.com)பற்றிய விவரங்களைச் சேர்த்துத் தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். இதே உரிமையில் வெளியிட வேண்டும்.

பதிவிறக்க:

 http://www.kaniyam.com/learn-ruby-in-tamil-ebook/

உங்கள் கருத்துகளையும், பிழைதிருத்தங்களையும் editor@kaniyam.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்.
படிப்போம்! பகிர்வோம்!! பயன் பெறுவோம்!!!
‘கணியம்’ இதழைத் தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.
நன்றி,
இல. கலாராணி
lkalarani@gmail.com
முத்திரை-கணியம் இதழ் :muthirai_kaniyam