வகுப்பறை02 - classroom02

நடுவண் அரசுக் கல்லூரிகளில்

170 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு

விண்ணப்பங்கள் வரவேற்பு



நடுவண் அரசுக் கல்லூரிகளில் நிரப்பப்பட உள்ள 170 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிட்டுள்ளது. இதற்கு தேசியத் தகுதித் தேர்வு (NET), மாநிலத் தகுதித் தேர்வு (SET) ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி – காலியிடங்கள் விவரம்:
பணி: அறிவியல் இளநிலை அலுவலர் (மின்னணுவியல்) [Junior Scientific Officers (Electronics)] – 02
அகவை (வயது) வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல்துறையில் மின்னணுவியல் – தொடர்பாடல் (communication) பிரிவில் இளங்கலைப் பொறியியல் (B.E) பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது, மின்னணுவியல், இயற்பியல் பாடப் பிரிவில் மின்னணுவியலை முதன்மைப் பாடமாக எடுத்து முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: அறிவியல் இளநிலை அலுவலர் (இயந்திரவியல்) [Junior Scientific Officer (Mechanical)] – 02
அகவை (வயது) வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல்துறையில் இயந்திரவியல் (Mechanical) பிரிவில் இளநிலைப் பொறியியல் (B.E) முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்: மாதம் உரூ.9,300 – 34,800 + தர ஊதியம் உரூ.4,800/-
பணி: உதவி இயக்குநர் (Assistant Director) – 01
ஊதியம்: மாதம் உரூ.15,600 – 39,100 + தர ஊதியம் உரூ.5,400/-
அகவை (வயது) வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கல்வி (Education), முதியோர் கல்வி (Adult Education) பிரிவில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: உதவி இயக்குநர் நிலை-02 (இயந்திரவியல்) [Assistant Director Grade II (Mechanical) – 06
ஊதியம்: மாதம் உரூ.9,300 – 34,800 + தர ஊதியம் உரூ.4,600/-
அகவை (வயது) வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல்துறையில் இயந்திரவியல் பிரிவில் இளங்கலைப் பொறியியல் (B.E) முடித்து 2 ஆண்டுகள் பணிப் பட்டறிவு (அனுபவம்) பெற்றிருக்க வேண்டும்.
பணி: உதவிப் பேராசிரியர் (தாவரவியல்) [Assistant Professor (Botany)] – 16
ஊதியம்: மாதம் உரூ.15,600 – 39,100 + தர ஊதியம் உரூ.6,000/-
அகவை (வயது) வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 55 விழுக்காடு மதிப்பெண்களுடன் தாவரவியல் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்று தேசியத் தகுதித் தேர்வு (NET)/ மாநில அளவுத் தகுதித் தேர்வு (SLET)/ மாநிலத் தகுதித் தேர்வு (SET) / தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: உதவிப் பேராசிரியர் (வேதியியல்) [Assistant Professor (Chemistry)] – 20
ஊதியம்: மாதம் உரூ.15,600 – 39,100 + தர ஊதியம் உரூ.6,000/-
அகவை (வயது) வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 55 விழுக்காடு மதிப்பெண்களுடன் வேதியியல் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்று தே.த.தே (NET) /மா.அ.த.தே (SLET)/ மா.த.தே (SET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
பணி: உதவிப் பேராசிரியர் (வணிகவியல்) [Assistant Professor (Commerce)] – 03
பணி: உதவிப் பேராசிரியர் (பொருளியல்) [Assistant Professor (Economics)] – 20
பணி: உதவிப் பேராசிரியர் (ஆங்கிலம்) [Assistant Professor (English)] – 29
பணி: உதவிப் பேராசிரியர் (பிரெஞ்சு) [Assistant Professor (French)] – 07
பணி: உதவிப் பேராசிரியர் (கணிதம்) [Assistant Professor (Mathematics)] – 15
பணி: உதவிப் பேராசிரியர் (இயற்பியல்) [Assistant Professor (Physics)] – 17
பணி: உதவிப் பேராசிரியர் (இந்தி) [Assistant Professor (Hindi)] – 05
பணி: உதவிப் பேராசிரியர் (வரலாறு) [Assistant Professor (History)] – 08
பணி: உதவிப் பேராசிரியர் (மனையியல்) [Assistant Professor (Home Science)] – 03
பணி: உதவிப் பேராசிரியர் (ஏரணம்/மெய்யியல்) [Assistant Professor (Logic/Philosophy)] – 01
பணி: உதவிப் பேராசிரியர் (மலையாளம்) [Assistant Professor (Malayalam)] – 01
பணி: உதவிப் பேராசிரியர் (அரசியல்) [Assistant Professor (Politics)] – 02
பணி: உதவிப் பேராசிரியர் (தமிழ்) [Assistant Professor (Tamil)] – 04
பணி: உதவிப் பேராசிரியர் (சுற்றுலா) [Assistant Professor (Tourism)] – 01
பணி: உதவிப் பேராசிரியர் (விலங்கியல்) [Assistant Professor (Zoology)] – 07
ஊதியம்: மாதம் உரூ.15,600 – 39,100 + தர ஊதியம் உரூ.6,000.
அகவை (வயது) வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: தொடர்புடைய பிரிவில் 55 விழுக்காடு மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்று தே.த.தே (NET)/மா.அ.த.தே (SLET)/மா.த.தே (SET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php என்கிற இணையப்பக்கத்தின் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
இணைய வழியில் விண்ணப்பித்த விண்ணப்ப அச்சுப் படியை (print out) அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Commissioner,
Union Public Service Commission,
DHOLPUR HOUSE,
SHAHJAHAN ROAD,
NEWDELHI- 110 069. புதுதில்லி
விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசி நாள்: 15.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsconline.nic.in என்கிற இணையத்தளத்தைப் பாருங்கள்!
தரவு:
பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - name_peyar-e.bhu.gnanaprakasan