மாணிக்கவாசகம் பள்ளி, விருதுவிழா05 : manikkavasakampalli_virudhuvizhaa05

பள்ளி மாணவர்கள் அனைவருக்கும்

விருது வழங்கும் விழா

 தேவகோட்டை: பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் விருது வழங்கும் விழா  பங்குனி 25,   2047 / ஏப்பிரல் 07, 2016 அன்று நடைபெற்றது.
 விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். கமுதி நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரித் தாளாளர் அகமது யாசின் முன்னிலைவகித்தார்.
  விசாலயன்கோட்டை சேது பாசுகரா வேளாண்மைக் கல்லூரித் தாளாளர் சேதுகுமணன் சிறப்புரையில்,  8ஆம் வகுப்பு மாணவி தனம்,  7ஆம் வகுப்புமாணவி தனலெட்சுமி ஆகியோரின் கல்வியின் சிறப்புகளைப் பாராட்டி, உயர்கல்விவரையிலான படிப்புச் செலவை,  தான் முழுவதுமாக ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்தார். பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் அவரது கல்லூரியில் மரம் நட்டதைப் பாராட்டி விருது வழங்கினார்.
  விழாவில் ஏராளமான   பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழாவில் விருதை பெற்றுக்கொண்டு பேசிய மாணவிகள் தனலெட்சுமி, தனம், இராசேசுவரி,பரமேசுவரி, செயசிரீ மற்றும் மாணவர்கள் இயோகேசுவரன், கண்ணதாசன், முனீகவரன், செகதீசுவரன், இராசேசு ஆகியோர் நடுநிலைப்பள்ளியில்  படிக்கும்போதே விருது பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் ,அனைவருக்கும் விருது கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும் தெரிவித்தனர்.
   விழாநிகழ்ச்சியை ஆசிரியை செல்வ மீனாள் தொகுத்து வழங்கினார். ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.
   அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி அளவில் அனைத்து மாணவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது அளவுகடந்த மகிழ்ச்சியைத் தருவதாகப் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]