ஐ.நா.போட்டி-பரிசாளர் காவியா, தேவகோட்டை02 :devakottai_u.n.o._02

ஐக்கிய நாடுகள் அவை நடத்திய போட்டியில்

மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி 

தேவகோட்டை :
  மாநில அளவில்  ஐக்கிய நாடுகள் அவை சென்னை அக்கினி கல்வி நிறுவனம் இணைந்த  மாநில அளவில் ஆற்றல் சேமிப்புப்போட்டி  நடத்தின.  இப்போட்டியில் தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசுஉதவிபெறும் நடுநிலைப் பள்ளி  பங்கேற்றது.  இப்பள்ளி மாணவி காவியா மாநில  அளவிலான இரண்டாம் பரிசினை வென்றார்.                                                      
  ஐக்கிய நாடுகள் அவையின் இந்தியாவிற்கான தேசியத் தகவல் அலுவலர் இராசீவு சந்திரன், அக்கினி கல்வி நிறுவனங்களின் செயல்  இயக்குநர் அக்கினீசுவர் மாணவி காவியாவுக்கு சென்னையில் நடைபெற்ற விழாவில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ், பதக்கம், கோப்பை ஆகியவற்றை வழங்கினார்கள். மேலும் மாநில அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பங்கு பெற்றதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.
  மாணவியின் தாயார் கூலி வேலை செய்து வருவதால் சென்னை அழைத்துச் செல்ல இயலாத நிலையில் பள்ளி ஆசிரியை முத்து மீனாள் போட்டிக்கு  மாணவியை சென்னை அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவி சென்னை செல்வது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பரிசு பெற்ற மாணவிக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
 பள்ளித்தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம்,  ஆசிரிய ஆசிரியைகள் வெற்றி பெற்ற மாணவியைப் பாராட்டினார்கள்.
ஐ.நா.போட்டி-பரிசாளர் காவியா, தேவகோட்டை01 : devakottai_u.n.o._01 ஐ.நா.போட்டி-பரிசாளர் காவியா, தேவகோட்டை03 : devakottai_u.n.o._03