துபாய், இரகோ, பயிற்சிமுகாம்03 ;dubai_musiccamp03

துபாய் :  துபாய்   (இ)ரேஃகா இசை-நடனப் பயிற்சிப் பள்ளியில் ,

கோடைக் காலச் சிறப்புப் பயிற்சி முகாம் நடாத்தப்பட்டது.

  அதில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளின் இசை நடன நிகழ்ச்சி கடந்த 2 ஆம்  நாள் கல்ஃப்   முன்முறைப் பள்ளியில் நடை பெற்றது.
,,சிறுவர் சிறுமிகள் ஆடல் பாடலுடன் இசைக்கருவிகளையும் வாசித்து வந்திருந்தவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்கள். மேலும் இங்கு தொடர்ச்சியாகப் பயிலும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களில் சில பதிவிசை(கரோக்கி)யுடன் இணைந்து பாடல்களைப் பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தார்கள். மேலும் இந்தப் பள்ளியின் நடன ஆசிரியர்கள்  ஐதர்,  மற்றும்  இரேசுமி ஆகியோரின் நடனமும் இசை ஆசிரியர்கள் நௌசத்து, இரேணுகா பாடல்களும் பார்வையாளர்களுக்கு உற்சாகமளித்தன.
  மேலும் வீணாகிப் போகும் பொருட்களில் இருந்து மாணவர்கள் செய்த கைவினைப் பொருட்கள் கண்காட்சியும் ந்டைபெற்றது. அப்பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது என்று திருமதி.பிரியதர்சனி கொளசிக்கு அவர்கள் திறம்பட எடுத்துரைத்தார்.
  இரேணுகா, அரிதா ஆகிய இரண்டு பெண்மணிகள் நடத்தும் இந்தப்பள்ளியின் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த திரு. வஃகாபுதீன், வினு இராமச்சந்திரன், முதுவை இதயத்துல்லா, சையது மீரான்,  அமீது இயாசின் பாரூக்கு அலியார் ஆகியோர் கலந்த்து கொண்டனர், நிகழ்ச்சியின் சிறப்பு  அறிவிப்பாளார்களாக சங்கர்  மகாதேவன், பிரியதர்சனி இருந்தனர். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக முத்துலட்சுமி, பிரேம் இருந்தனர்.
  இந்நிகழ்ச்சியில்  ஒரு புதிய தமிழ்இசை இசைக்குழு ‘அந்தரா’ விசயபாசுகர் மற்றும் அணி,  அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்களும் நிகழ்ச்சியின் இறுதியில் பாடல்களைப் பாடி மக்களை உற்சாகப் படுத்தினர்.

வாழ்த்துக்களைத் தெரிவிக்க :
(Reha Music and Dance Institute) <rehauae@gmail.com>

-முதுவை இதயத்துல்லா